FRIENDSHIP BETWEEN SIVAJI GANESAN AND B.R.BANDULU
FRIENDSHIP BETWEEN SIVAJI GANESAN AND B.R.BANDULU ” டேய் , என்னடா பாப்பான் இங்கே வர்றான். காரணமில்லாமல் பாப்பான் வர மாட்டானே டா.” சிவாஜி பி.ஆர்.பந்துலு தமிழகத்தின் சிசில் பி டிமிலி என்று அறியப்பட்ட இயக்குனர்.வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன்,கர்ணன் படங்களின் இயக்குனர். சிவாஜிக்கும் இவருக்குமான நட்பு வித்தியாசமானது . அந்த நெருக்கம் காரணமாக கொஞ்சம் ஓவராகவே சிவாஜியிடம் நடந்து கொள்வார். பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன்,பலே பாண்டியா படங்களுக்கு பிறகு- ஒரு ஸ்டுடியோவில் சிவாஜி ஒரு படப்பிடிப்பில் இருக்கிறார். மேக் அப்புடன் ஒரு மரத்தடியில்,சுற்றிலும் சில கைத்தடிகள் நிற்க,சிகரட்டை பற்றவைக்கும்போது பந்துலு காரில் வந்து இறங்குகிறார். சிவாஜி பார்க்கிறார். பக்கத்திலுள்ளவர்களிடம் கேட்கிறார் ” டேய் , என்னடா பாப்பான் இங்கே வர்றான். காரணமில்லாமல் பாப்பான் வர மாட்டானே டா.” சிவாஜி எப்போதும் எல்லோரையும் ஏகாரத்தில் தான் குறிப்பிடுவார்.அதோடு ஜாதியை குறிப்பிட்டே பேசுவார். பாப்பாரப்பய , யோவ் செட்டி , ரெட்டி எங்கேடா, வாய்யா நாயுடு ...