OLIVER CROMWELL, MILTARY MAN CREATES CONSTITUTIONAL MONARCH
OLIVER CROMWELL, MILTARY LEADER CREATES CONSTITUTIONAL MONARCH ஆலிவர் கிராம்வெல் (Oliver Cromwell, ஒலிவர் குரொம்வெல், 25 ஏப்ரல் 1599 – 3 செப்டம்பர் 1658) இங்கிலாந்தின பெருந்திறமை வாய்ந்த எழுச்சியூட்டும் இராணுவத் தலைவராக விளங்கியவர். இங்கிலாந்து உள்நாட்டுப் போரின்போது நாடாளுமன்ற படைகளுக்குத் தலைமை தாங்கிப் போரிட்டு வெற்றி தேடித் தந்த செயல் வீரர். இவர் இங்கிலாந்தின் வரம்பற்ற முடியாட்சி முறையை மாற்றி நாடாளுமன்ற மக்களாட்சி அரச முறையாக அமைப்பதற்கு மூல காரணமாக இருந்தவர். இளமை[மூலத்தைத் தொகு] இங்கிலாந்திலுள்ள ஹன்டிங்டன் என்னும் ஊரில் 1599 ஆம் ஆண்டில் ஏப்ரல் 25 அன்று இராபர்ட் குரோம்வெல்- எலிசபெத் ஸ்டெவார்ட் என்பவருக்குக் குரோம்வெல் மகனாப் பிறந்தார். இவரின் குடும்பம் ஒரு வேளாண்மைக் குடும்பம் ஆகும். இவர் தனது கிராமத்தில் ஒரு சீமானாக வாழ்ந்து வந்தார். குரோம்வெல் பக்தி மிகுந்த ஆனால் கடுஞ்சீர்திருத்தச் சமயவாதியாகவும் (Purtian) விளங்கினார். கேம்பிரிட்ஜில் உள்ள சிட்னி சசெக்சு கல்லூரியில் சேர்ந்து சமயக் கல்வியைப் பயின்றார். ஆனால் இவருடைய தந்தை இறந்ததன் காரணமாக இவர் 1617-ல் பட்டம் பெற...