Posts

Showing posts with the label KANADASAN - PART OF HIS LIFE

KANADASAN - PART OF HIS LIFE

Image
KANADASAN - PART OF HIS LIFE கண்ணதாசன் விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரிக்கு பேச வந்திருந்தார் 1973 வெள்ளிவிழா ஆண்டு . அவருடைய பெண்பார்க்கும் படலத்தை அவரே விவரிக்கின்றார் . மாலை சுமார் 5 மணி .காரைக்குடியில் பட்டுவேஷ்டி ,சட்டையில் சாரட் வண்டியில் உட்கார்ந்தேன் . மெதுவான வேகத்தில் நகரத்தார் தெரு வை சுற்றி வந்து கொண்டிருந்தது .ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கன்னிப்பெண்கள் வாசலில் வந்து நின்றனர் .ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அழகு . தெருவை சுற்றிவிட்டு வீட்டிற்கு திரும்பினேன் . என் சுவீகார தாயார் கேட்டார் .உனக்கு எந்த பெண்ணை பிடித்திருக்கிறது என்று .நான் சொன்னேன் .எல்லா பெண்களையும் பிடித்திருக்கிறது என்று . இது நடந்தது 1949 இல் 1950 இல் திருமணம் நடக்கிறது .மனைவி பெயர் பொன்னம்மாள் .மிகசிறந்த குணவதி . ஆனால் அவருக்கு காது கேட்காது .இது திரு மணத்திற்கு பின் தெரிய வருகிறது .இந்த குறையை ஒருநாளும் கவிஞர் சுட்டி காட்டியதில்லை . சாப்பிட்டால் இருவது இட்டலி சாப்பிடுவார் அல்லது பத்து தோசை . கவிஞர் சாப்பிட்டால் முகம் பூராவும் உணவு துணுக்குகள் இருக்குமாம் .அதை சுத்தமாக கழுவி துடைத்து அப்படியே தூங்க வை...