SILK SMITHA ,ACTRESS BORN 1960 DECEMBER 2 - 1996 SEPTEMBER 23
SILK SMITHA ,ACTRESS BORN 1960 DECEMBER 2 - 1996 SEPTEMBER 23 ‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில், ‘சிலுக்கு’ என்கின்ற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், தென்னிந்திய திரையுலகின் ‘கனவு கன்னியாக’ திகழ்ந்தார். ஒரு ஒப்பனைக் கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, சுமார் 17 வருடங்கள் இந்திய சினிமாத் துறையில் முத்திரைப் பதித்த அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சினிமா பயணத்தை விரிவாகக் காண்போம். பிறப்பு: டிசம்பர் 02, 1960 பிறப்பிடம்: ஏலூரு, ஆந்திரபிரதேசம் மாநிலம், இந்தியா பணி: திரைப்பட நடிகை இறப்பு: செப்டம்பர் 23, 1996 நாட்டுரிமை: இந்தியன் பிறப்பு ‘விஜயலட்சுமி’ என்ற இயற்பெயர்கொண்ட அவர், 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 02 தேதி இந்தியாவின் ஆந்திரபிரதேசம் மாநிலத்திலுள்ள “ஏலூரு” என்ற இடத்தில் ஒரு சாத...