AISWARYA RAJINIKANT DHANUSH , DIRECTOR, PLAYBACK SINGER,DANCER, BORN 1982 JANUARY 1
AISWARYA RAJINIKANT DHANUSH , DIRECTOR, PLAYBACK SINGER,DANCER, BORN 1982 JANUARY 1 ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் (பிறப்பு 1 சனவரி 1982) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகி மற்றும் நடனமாடுபவர் ஆவார். இவர் நன்கறியப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகர் ரசினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுசின் மனைவியும் ஆவார். தனது கணவர் தனுஷ் நடித்த 3 (2012) திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு] சொந்த வாழ்க்கை[மூலத்தைத் தொகு] ஐசுவர்யா, நடிகர் ரசினிகாந்த் - லதா இணையருக்கு முதலாவது மகளாகப் பிறந்தார்.[1][2] இவரது இளைய சகோதரி சௌந்தர்யாவும் தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார்.[3] இவர், நடிகர் தனுசை திருமணம் செய்து கொண்டார்,[4] இவர்களுக்கு யாத்ரா (பிறப்பு 2006), லிங்கா (பிறப்பு 2010) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.[2][5] திரை வாழ்க்கை[மூலத்தைத் தொகு] விஜய் தொலைக்காட்சியின் நடனப் போட்டி நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியில் ஜீவா, சங்கீதா, ஆகியோருடன் இணைந்து நடுவராகப் பங்கேற்றார்.[6] 2003 ஆம் ஆண்டி...