ELIZABETH BLACKWELL ,AMERICA`S FIRST DOCTOR ,GOT DEGREE ON 1849 JUNE 24
ELIZABETH BLACKWELL ,AMERICA`S FIRST DOCTOR ,GOT DEGREE ON 1849 JUNE 24 அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவர் Elizabeth Blackwell 1849 JUNE 24 அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவரும், பெண்களின் மருத்துவக் கல்விக்கான முன்னோடியுமான எலிசபெத் பிளாக்வெல் (Elizabeth Blackwell) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: l இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் (1821) பிறந்தார். தந்தை சர்க்கரை ஆலை உரிமையாளர். 1830-ல் குடும்பம் நியூயார்க் நகரில் குடியேறியது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், ஒஹியோவுக்கு இடம்பெ யர்ந்தனர். தந்தை 1838-ல் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். l குடும்ப செலவை சமாளிக்க, சகோதரிகளுடன் சேர்ந்து பள்ளிக்கூடம் தொடங்கினார் எலிசபெத். பள்ளியை வெற்றிகரமாக நடத்தமுடியாததால், டியூஷன் வகுப்புகள் எடுத்தார். சிறுகதைகள் எழுதினார். இசை கற்றார். மகளிர் உரிமை தொடர்பான போராட்டங்கள், பிரச்சாரங்களில் பங்கேற்றார். l இவரது தோழி ஒருவர் பிறப்புறுப்பு தொற்றுக்காக ஆண் டாக்டரிட...