CRUDE PETROLEUM - AMERICA HAS TAKEN RESERVES
CRUDE PETROLEUM - AMERICA HAS TAKEN RESERVES செளதி எண்ணெய் தாக்குதல்கள்: அமெரிக்கா ஏன் பாதாளத்தில் கச்சா எண்ணெய் சேமிக்கிறது? 19 செப்டம்பர் 2019 அமெரிக்காவின் லூசியானா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் பாதாள சுரங்கங்களில் பெருமளவு கச்சா எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. செளதி அரேபியாவில் முக்கிய கச்சா எண்ணெய் வளாகத்தின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பெருமளவு இருப்பில் இருந்து கச்சா எண்ணெயை வெளியில் எடுப்பது பற்றி அமெரிக்க அதிகாரிகள் பேசி வருகின்றனர்.கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோது, ''சந்தையில் போதிய அளவுக்கு எண்ணெய் கிடைக்கச் செய்வதற்கு'' இந்த கச்சா எண்ணெயைப் பயன்படுத்தலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் கூறியிருந்தார். டெக்சாஸ் மற்றும் லூசியானாவில் பாதாள குகைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 640 மில்லியனுக்கும் அதிகமான பேரல்கள் அளவிலான கச்சா எண்ணெய் பற்றித்தான் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முக்கியமான கையிருப்பை வைத்துக்கொள்ளும் வழக்கம் 1970களில் இருந்தே அமல் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச எரிசக்...