GUN POWDER PLAN TO KILL JAMES I
GUN POWDER PLAN TO KILL JAMES I ஜார்ஜ் குருக்சங்க் வரைந்த கை பாக்சின் படம். 1840இல் வெளியான கை பாக்சு புதினத்தில் வெளியானது கை பாக்சு (Guy Fawkes, /fɔːks/; ஏப்ரல் 13, 1570 – சனவரி 31, 1606),[a] அல்லது இசுப்பானியருக்காகப் போராடியபோது கைய்டொ பாக்சு (Guido Fawkes) 1605ஆம் ஆண்டில் தோல்வியில் முடிந்த வெடிமருந்து சதித்திட்டத்தை தீட்டிய ஆங்கில கத்தோலிக்க குழுவில் உறுப்பினராக இருந்தவர். பாக்சு பிறந்ததும் வளர்ந்ததும் யார்க்கிலாகும். பாக்சு எட்டு அகவையராக இருக்கும்போதே அவரது தந்தை இறந்தார்; அவரது அன்னை இரண்டாம் முறையாக திருமணம் செய்தவர் ஆங்கிலத் திருச்சபைக்கு எதிரான கத்தோலிக்கர். பாக்சும் கத்தோலிக்கராக மாற்றப்பட்டார். ஐரோப்பிய கண்டம் சென்று கத்தோலிக்க எசுப்பானியாவிற்கும் சீர்திருத்த டச்சுக்காரர்களுக்கும் இடையேயான எண்பதாண்டுப் போரில் எசுப்பானியர் அணியில் பங்கேற்றார். இங்கிலாந்தில் கத்தோலிக்கப் புரட்சிக்கு ஆதரவு நாடி எசுப்பானியாவிற்குச் சென்று தோல்வியுற்றார். அங்கு தாமசு வின்டூரை சந்தித்து இருவரும் இங்கிலாந்திற்குத் திரும்பினர். வின்டூர் பாக்சிற்கு இராபர்ட்டு கேட்சுபியை அறிமுகப்படுத்தினார். ...