Showing posts with label TANJORE. Show all posts
Showing posts with label TANJORE. Show all posts

Tuesday, 10 November 2020

TANJORE PERIYA KOVIL

 

TANJORE PERIYA KOVIL



சமீபத்திய தஞ்சை பயணத்தின் போது, பொறியாளர்

ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில்

கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்..

கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்..

கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள்.

பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல்.

இது ஒரு கல்லோ, அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்.. இந்த பிம்மாந்திர

கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்.. அந்த கல்லும் 80 டன்.. அந்த சதுரக்

கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம்

எட்டு நந்தி.. ஒவ்வொறு நந்தியின் எடை 10 டன்.

ஆக, எட்டு நந்தியின் எடை மொத்த எடை 80 டன்..

இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்..

இது என்ன விந்தை.. அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..?

நாம் ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது, கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால்

4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்..

பெரியகோவில் உயரம் 216 அடி.. முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்ட

கற்கோவில்.. கற்களின் எடையோ மிக மிக அதிகம்..

இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் எவ்வாறு

அமையும்.. குறைந்தது 50 அடி ஆழம், 50 அடி அகல

அஸ்திவாரம் வேண்டும்.. இந்த அளவு சாத்தியமே இல்லை.. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும்

புகை மண்டலமாகத்தான் இருக்கும்..

ஆனால் .. பெரியகோவிலின் அஸ்திவாரம் வெறும்

5 அடிதான்..


மேலும் ஒரு வியப்பு.. இது எப்படி சாத்தியம்..?

இங்குதான் நம்ம சோழ விஞ்ஞானிகளின் வியத்தகு

அறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது..

பெரியகோவில் கட்டுமானத்தை, அதாவது கற்கள்

இணைக்கப்பட்டதை.. இலகு பிணைப்பு என்கிறார்கள்.

அதாவது Loose joint என்கிறார்கள்.. அதாவது ஒவ்வொறு கல்லையும் இணைக்கும் போது,

ஒரு நூலளவு இடைவெளிவிட்டு அடுக்கினார்கள்..

எதற்க்காக..?

நமது கிராமத்தில் பயன்பட்ட கயிற்று கட்டிலை

நினைவில் கொள்ளுங்கள்.. கயிறுகளின் பினைப்பு

லூஸாகத்தான் இருக்கும்.. அதன் மேல் ஆட்கள் உட்காறும் போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும்.. கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது..

இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம் ..

லூஸாக கற்களை அடுக்கிக்கொண்டே சென்று,

அதன் உச்சியில் மிக பிரம்மாண்டமான எடையை

அழுத்தச் செய்வதன் மூலம், மொத்தகற்களும் இறுகி

மிக பலமான இணைப்பை பெறுகின்றன...

இதுதான் அந்த 240 டன் எடை கொண்ட,

ஸ்தூபி, சதுரக்கல் மற்றும் எட்டு நந்தி..

அஸ்திவாரம் கோவிலின் உச்சியில் இடம் பெற்ற

அதிசியம் இது..

எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது.

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்று

இருக்கும்..

*சூரியசந்திரர் இருக்கும் வரை இக்கோவிலும்* *இருக்கும்... என்ற நம் இராஜராஜ சோ ழ மன்னரின் நம்பிக்கை எந்த* *காலத்திலும் பொய்க்காது..*

Monday, 28 September 2020

OLD TANJORE 1940 -1980

 



1940 - 1980 ...

எங்கள் பழைய தஞ்சை ..



1930 - 1940 களில் ...மின்சக்தி வருகையால் வாழ்க்கை தரம் வெகுவாக 1940-50 களில் இருந்து மாற தொடங்கின ... முன்பு சொன்னது போல .... வசதி பெற்ற வீடுகளில் மெதுவாக குண்டு பல்பு லைட், பேன், மற்றும் ரேடியோ புக ஆரம்பித்தன .. மண்எண்ணெய் அரிக்கன் விளக்குகள்.. பனை விசிறிகள் போன இடம் தெரியவில்லை.


1930- 40 களில் சினிமா கொட்டைகைகள், டெலிபோன்கள் சேவை ஆரம்பித்தன ... 1930 - 1940களில் ட்ராமா கொட்டகைகள் மற்றும் சபாக்கள், சினிமா கொட்டைகளாக மாற்றப்பட்டன .. தஞ்சையின் முதல் சினிமா கொட்டகை "டவர் சினிமா" (பிறகு ஞானம் டாக்கீஸ் என பெயர் மாற்றம்) . ..


1950களில் எனக்கு தெரிந்த முதல் காசு ... பொத்த காசு காலணா .. பெரிய காலணா .. அரைணா... ஒரு அணா... நாலணா எட்டணா .. ஒரு ருபாய் காசு ..... (16 அணா = 1 ரூபாய்) ... காசுக்கு மதிப்பு இருந்த காலம் ... ஒரு முட்டை ஒரு அணா , கோழியின் விலை முக்கால் ரூபாய் ... ஒரு பவுன் தங்கத்தின் விலை ருபாய் 54/= ... ஆனால் ஒரு பவுண்ட் ஆஸ்திரேலியா திராட்சை ரூபாய் 20க்கு விற்கப்பட்டது ... உள்நாட்டில் அப்போது திராட்சை உற்பத்தி இல்லாத காலம் .. அப்போது ஒரு காலன் பெட்ரோல் சுமார் இரண்டு ரூபாயாக இருந்தது .. ஒரு காலன் என்றால் 4.5 லிட்டர் க்கு சமம்.





தங்கம்.. குண்டுமணி கணக்கில் எடை போடுவார்கள் ..

தானியம்/ அரிசி ... படி கணக்கில் .. சின்ன படி .. பெரிய படி.. மரக்கால் கணக்கிலும் அளப்பார்கள்....

மது பாட்டில்.. டானிக் .. மருந்து... அவுன்ஸ் கணக்கில் .. ஒரு அவுன்ஸ் 30 ml க்கு சமம்.

எண்ணெய்.. பால் ... சேர் கணக்கில் .. ஒரு சேர் சுமார் 170 ml க்கு சமம்

பெட்ரோல் ... காலன் கணக்கில்

எடை ... பவுண்ட் கணக்கில் .. ஒரு பவுண்ட்= 0.45 கிலோ.

அளவு ... அடி கணக்கில்


1958ஆம் ஆண்டு மெட்ரிக் முறை அறிமுகமானது ... மெதுவாக செல்லாமல் போனது அணா .. படி .. சேர் ..

அணா பைசாவானது ... படி மற்றும் சேர் .. லிட்டர் ஆனது ,

பெட்ரோலுக்கு காலனுக்கு பதிலாக லிட்டர் அளவு அறிமுகமானது ..

எடை ... பவுண்ட் கணக்கில் இருந்து கிலோகிராம் கணக்காக மாறியது ...

சாலைகளில் மைல் கற்கள் .. கிலோமீட்டர் கற்களாக மாறின

ஆனால் ... அடி ... மீட்டராக மாறினாலும் இன்றுவரை அடி கணக்கே உபயோகத்தில் இருக்கின்றது ... பாடத்திட்டங்களில் உள்ள கணக்கு பாடங்களும் மெட்ரிக் முறைக்கு மாற்றப்பட்டன ..


1962ல், காமராஜர் ஆட்சியில், கரூர் - திருச்சி - தஞ்சை - நாகை ஸ்டேட் ஹய்வே சிமெண்ட் ரோடாக மாறிய காலங்களில் கூட மைல் கற்கள் மற்றும் பர்லாங் கற்கள் தான் இருந்தன (8 பர்லாங் ஒரு மைல்) ... 1970களில் அவைகளும் கிலோமீட்டர் கற்களாக மாறின... இருந்தாலும் எங்கள் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை ... திருச்சி 32 மைல் , கும்பகோணம் 21 மைல் , நாகப்பட்டினம் 65 மைல் என்றுதான் வழக்கமாக கூறுவோம் ... ஒரு மைல் =1.6 கிலோமீட்டர் .


1970 வரை பவுண்ட் கணக்கில் தான் எடை போடுவார்கள் .... மெட்ரிக் முறைக்கு மாறுவதில் எங்களுக்கு அவ்வளவு சிரமம் ...கார்களில் பஸ்களில் மற்றும் மற்ற மோட்டார் வாகனங்களில் "மைல்ஸ் /பேர் ஹௌர்" (MpH - Miles Per Hour) ஸ்பீட் டயல் தான் இருந்தது 1970 வரை ... ஆனாலும் நாங்கள் இந்த இரண்டு அளவு முறைகளையும் கற்றோம்.

1940களில் இரண்டாம் உலகப்போரின் போது மில் துணிகளுக்கு பஞ்சம் ... ரேஷனில் தான் கிடைத்தது. கைத்தறி ஆடைகள் காப்பாற்றின. 1950களில் கூட, துணி வகைகள் கம்மியாக தான் கிடைக்கும் ... ரெடிமேட் ஆடைகள் சுத்தமாக கிடையாது ... 1960கள் வரை வயதானஆண்கள் பொதுவாக சட்டை போட மாட்டார்கள் ... நாலு முழ வேஷ்டி தோளில் ஒரு வெள்ளை துண்டு ... அவ்வளவு தான்... இந்த பழக்கம் இன்றும் கிராமங்களில் இருந்தாலும் ... அது தஞ்சையில் வெகுவாக குறைந்து போனது.

1950களில் வீடுகளில் விறகு அடுப்பு .. மண் சட்டிகளில் தான் சமையல்... வசதி படைத்தவர்கள் வெண்கல பாத்திரம், பித்தளை பாத்திரங்களில் ஈயம் பூசி சமையல் பண்ணுவார்கள் ..ஈயம் பூசுபவர்கள் வீடு வீடாக சென்று ஈயம் பூசி கொடுத்த காலம் .. அந்த காலகட்டத்தில் தான் அலுமினியம் மெதுவாக அறிமுகமானது ... பிறகு 1960 களில் எவர்சில்வர் பாத்திரங்கள் வெகுவாக அறிமுகம் ... அதற்கு பிறகு மண், வெண்கல பித்தளை பாத்திரங்கள் உபயோகம் கம்மியானது ... 1970க்கு பிறகு ஈயம் பூசுபவர்கள் காணாமல் போனார்கள் .. அதே கால கட்டத்தில் பிளாஸ்டிக் குடங்கள் ... பிளாஸ்டிக் உபயோக பொருட்கள் வெகுவாக அறிமுகம்.


1960-70 களில் செக்குகளில் எண்ணெய் ஆட்டும் பழக்கமும் போனது ...

வீடுகளில் அம்மிகல்-குழவி, ஆட்டுக்கல், உரல்-உலக்கை , திறுவை எல்லாம் போய் மிக்சி, கிரைண்டர் வீடுகளில் குடியேறியது. ... கேணி, கேணிக்கயிறு, பாதாளகரண்டி காணாமல் போய் போர்வெல் பம்புசெட் வந்தன ... அதன் காரணமாக வீட்டினிலேயே பைப் தண்ணி வர ஆரம்பித்து கூடவே பிளஸ் அவுட் கக்கூசும் அறிமுகமாயின ... இந்த காலகட்டத்தில் தான் காஸ் அடுப்புகள் அறிமுகம் ... விறகு அடுப்புக்கள் மெதுவாக விடைபெற ஆரம்பித்தன … அதே காலத்தில் தான் மர்பி, பிலிப்ஸ் ரேடியோ, டிரான்சிஸ்டர் வேகமாக அறிமுகம். ...


1950 களில் ஒரே ஒரு MBBS டாக்டர் தான் தஞ்சையில் இருந்தார் ... அவர் தான் டாக்டர் ராமநாதன் ... முதல் தனியார் ஆஸ்பத்திரி... பெட் வசதியுடன் கிளினிக் தொடங்கியவரும் அவரே .. (ராமநாதன் பஸ் ஸ்டாப் அருகில்) . 1964ல் தஞ்சை மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி தற்போது உள்ள வளாகத்தில் செயல்பட ஆரம்பித்தது ... மருத்துவ கல்லூரி தொடங்கியபின் 1970 களில் இருந்து நிறைய டாக்டர்கள் தஞ்சையில் குடியேறி ... தெற்கலங்கம் பகுதியில் நிறைய கிளினிக்குகள் உருவாக்கினார்கள் ... மருத்துவ வசதி கூட, கூட,.. தஞ்சை வாழ் மக்களின் வாழ்நாள் தரம் கூடியது ... சராசரி 45-50 வயதாக இருந்த வாழ்வுகாலம் ... 65 வயதாக ஆனது .. மக்கள் நீண்ட வாழ்வு பெற தொடங்கினர்.


14 ஜனவரி1969-ல் தான் “மதராஸ் ஸ்டேட்”, “தமிழ் நாடு” என்று முதலமைச்சர் C.N. அண்ணாதுரை அவர்களால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது .. 1969/1970ல் காலங்கள் மாற... "டாஞ்சூர்" என்ற அரசு பதிவு பெயரும், "தஞ்சாவூர்" ஆகா மாறியது ...


1947க்கு முன்னாள், வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் சிங்கப்பூர் , மலேயா , பர்மா, சிலோன் போன்ற நாடுகளுக்கு சென்று வேலை பார்க்க, நிரந்தரமாக தங்க சுலபமாக பெர்மிட் கிடைத்துவிடும் .. ஏனெனில் அவை யாவும் வெள்ளையர்களால் ஆட்சி புரிந்த நாடாகும். ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு கடினமாயிற்று . 1977 முதல் மத்தியில் ஜனதா ஆட்சியின் போது பாஸ்போர்ட் பெறும் வசதி எளிமையாக மாற்றப்பட்டு, மூன்று மாதத்தில் விண்ணப்பம் செய்த்தவர்கள் அனைவருக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டது ... அதற்கு முன் பாஸ்போர்ட் பெறுவது ஒரு சாதாரண காரியம் அல்ல ... இரண்டு வருடங்கள் கூட காத்திருக்க வேண்டிய சூழ்நிலை அப்போது இருந்தது ... சாமானியர்கள் பெறமுடியாத சூழ்நிலை இருந்ததது ... பாஸ்போர்ட் எளிதானபிறகு சிங்கப்பூர் , துபாய்,குவைத் மலேசியா போன்ற நாடுகளுக்கு சுலபமாக வேலைக்கு செல்ல முடிந்தது .. தஞ்சையிலும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து நிறைய பேர் வெளிநாடுகளுக்கு வேலை தேடி போக ஆரம்பித்தனர் ... கொத்தனார் சம்பளம்... ஆசாரி சம்பளம் எல்லாம் வெகுவாக ஏற ஆரம்பித்தன ... இதன் காரணமாக பணபுழக்கம் வெகுவாக உயர்ந்தது ... இந்த கால கட்டத்தில் தான் எங்கு பார்த்தாலும் பழைய நாட்டு ஓடு வீடுகளும், கீற்று கொட்டகை வீடுகளும் மறைந்து ... புது ஒட்டு வீடுகள் கட்டப்பட்டன ... விலைவாசியும் ஏற தொடங்கின.. 1970ல், 150 ரூபாய்க்கு விற்ற ஒரு பவுன் தங்கம் .. 1980ல் ரூபாய் 1000 த்தை தாண்டியது !!

1977 வரை சைக்களில் டபுள்ஸ் போனால் போலீஸ் அபராதம் .. சைக்கிளில் லைட் இல்லை என்றால் அபராதம் .. சைக்களுக்கு லைசன்ஸ் வாங்க வேண்டிய காலம் .. தஞ்சையில் முனிசிபாலிட்டி ஊழியர்கள் சைக்கிள் லைசன்ஸ் செக் செய்து ... இல்லை என்றல் சைக்கிளை பிடுங்கி வைத்துவிடுவார்கள் .. லைசன்ஸ் வாங்கிய பிறகு தான் விடுவிப்பார்கள். 1977ல் எம். ஜி. ஆர். ஆட்சிக்கு வந்தபின் இவைகள் ஒழிக்கப்பட்டன.

1975 வரை தெரு முனைகளில் கிழக்கேயிருந்து வந்த இரட்டை மாட்டு வைக்கோல் வண்டிகள், மேற்கேயிருந்து வந்த விறகு வண்டிகள் ஆங்காங்கே நிற்கும். ... தஞ்சை பூக்கார தெரு வியாகுல மாதா கோவில் கிரௌண்டில் வாரத்திற்கு ஒரு முறை வைக்கோல் வண்டிகளும் விறகு வண்டிகளும் நின்ற காலம் ... திருவிழா கூட்டம் போல ஜனங்கள் இவைகளை வாங்கிய காலம் ...சிறுபிள்ளையாக நாங்கள் கண்ட காட்சிகள் ... இன்றும் மனதில் பதிந்து படமாக காட்சியளிக்கிறது ... இப்போது வீட்டில் பசுமாடுகள் வளர்ப்பதும் இல்லை ... விறகு அடுப்பில் சமைப்பதும் இல்லை ... வைக்கோல் வண்டிகளும் விறகு வண்டிகளும் காணாமல் போயின....


புலி வேஷம் ...

குடுகுடுப்பை காரன் ..

பூம் பூம் மாடு ...

மார்கழி விடியற்காலையில் சங்கு ஊதுபவர்கள் ..

பாம்பாட்டிகள்...

குறவர்கள் ... அவர்கள் விற்ற பாசி மாலை மற்றும் மாட்டு கொம்பில் செய்த சீப்பு ... போன்ற காலாச்சாரங்கள் 1970களில் இருந்து எங்கே போனது என்று தெரியவில்லை.

தஞ்சை லோ பிரிட்ஜில் இருந்து நாஞ்சிக்கோட்டை ரோடு மற்றும் பூச்சந்தை-விளார் ரோடு பிரியும் சந்திப்பில் மற்றும் நாகபட்டினம் - திருச்சி ரோட்டின் நடுவே முக்கோண வடிவில் ஒரு குட்டி மைதானம் இருந்தது ... அங்கு தான் வண்டி மாடுகளுக்கு லாடம் அடிப்பார்கள் ... பயணிகள் செல்லக்கூடிய வாடகை “ஒத்த மாட்டு வண்டி” களும் அங்கு நிற்கும்... 1970 முதல் அவைகளும் காணாமல் போயின ...


முதன்முதலில் 1862ல் இருந்து தஞ்சையில் ஓட ஆரம்பித்த “ஜிக்கு-புக்கு” கரி நீராவி ரயில் என்ஜின்கள், 1980களில் மறைய தொடங்கின .. 1990 களில் முழுமையாக காணாமல் போயின... ரயில்கள் முற்றிலும் டீசல் என்ஜின்களில் ஓட ஆரம்பித்தன....காலங்களும் வேகமாக ஓட ஆரம்பித்தன...


( தகவல் / எழுத்தாக்கம் : S.P.அந்தோணிசாமி M.A.,B.L.,, சேர்மன், பரிசுத்தம் பொறியியல் கல்லூரி,, தஞ்சாவூர் ::: Information/Article Compiled & written by: S.P.Anthonisamy, Chairman, Parisutham Institute of Technology & Science, Thanjavur)


நன்றி திரு Sp Anthonisamy Spy

.

Thursday, 24 September 2020

SAROFOJI KING OF TANJORE 1777 SEPTEMBER 24 - 1832 MARCH 7

 



SAROFOJI KING OF TANJORE 

1777 SEPTEMBER 24 - 1832 MARCH 7

.இரண்டாம் சரபோஜி (மராத்தி: सर्फोजी) (செப்டம்பர் 24, 1777 - மார்ச் 7, 1832),



அல்லது சரபோஜி மாமன்னர், போன்ஸ்லே பரம்பரையைச் சேர்ந்த தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் மன்னர்களுள் ஒருவராவார். இவர் இராச்சியத்தின் கடைசி சுதந்திர மன்னன் ஆவார். இவர் தஞ்சையின் பிரபலமான சரசுவதி மகால் நூலகத்தை அமைத்தார்.


ஆவணக்குறிப்புகள்[தொகு]

கிளாடியசு புக்கானன்(Dr.Claudius Buchanan), ஆயர் மிடில்ட்டன் (Bishop Middleton), ஆயர் இபர் (Bishop Heber), வாலன்சியா (Lord Valentia) முதலிய வெளிநாட்டவர்கள் தம் குறிப்புகளில் இவரைப் புகழ்ந்துள்ளனர்.


சரபோசி அழகிய தோற்றமும், வீரமும், நேர்மையும், ஒழுக்கமும் உடையவராக திகழ்ந்தார். கல்வியிலும், கலையிலும் காலத்தைச் செலுத்தி வாழ்க்கையைப் புனிதமாக நடத்தினார்.

பிரெஞ்சு, செருமன், கிரேக்கம்,இலத்தீன், வடமொழி தெலுங்கு, தமிழ் முதலிய மொழிகளில் பற்றுடையவரானார்.

1805-இல் தேவநாகரி எழுத்தில் இயங்கவல்ல ஓர் அச்சகத்தைத் தஞ்சையில் முதலில் ஏற்படுத்தினார். பிறகு, ஆங்கில அச்சகத்தை நிறுவினார்.

சாளுவநாயகப்பட்டினத்தில் மனோரதம் என்ற அழகிய கோபுரத்தை அமைத்தார். இக்கோபுரத்தை நெப்போலியனை, ஆங்கிலேயர் வென்றதன் நினைவாகக் கட்டினார்.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு பல அணிகலன்களையும், வெள்ளிப் பாத்திரங்களையும் அளித்தார். பல திருப்பணிகள் செய்தார்.

பல அன்ன சத்திரங்கள் அமைத்தார். இவைகளில் புகழ்பெற்றது ஒரத்தநாடு சத்திரமாகும். முக்தாம்பாள் சத்திரம் ஒரத்தநாட்டில் உள்ளது. இதனை முக்தாம்பாள்புரம் என்பர்.

அரசப்பதவி[தொகு]

மராத்திய அரசர் துல்சாசி வாரிசின்றி இருந்ததால், அவர் இறக்கும் முன் அவருடைய தத்து எடுத்த மகனான சரபோசி பட்டம் பெறவும், அம்மகனுகுக் காப்பாளராக அமரசிங்கும், சுவார்ட்சு பாதிரியார் (Rev.Schwartz) ஆசிரியராகக் கல்வி கற்பித்து வளர்க்கவும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அமரசிங் தனக்கே பட்டம் கிடைக்க வேண்டுமென்று சூழ்ச்சி செய்தார். அதனை ஏற்ற ஆங்கில அரசாங்கம் அமரசிங்கையே அரசராக்கியது. ஆட்சிக்கு வந்த அமரசிங்கோ, ஆட்சி செலுத்தாமல், சரபோசியையும், அரசகுடும்பத் தேவிமார்களையும் பல பொய்க் குற்றங்களுக்கு ஆளாக்கித் துன்புறுத்தினார். அவர்களைக் கொல்லவும் சதி செய்தார். இதிலிருந்து சரபோசி, அப்பாதிரியாரின் உதவியுடன் தப்பி, அப்பாதிரியாராலேயே அரசுரிமையைப் பெற்றார். 1798 இல் பட்டம் பெற்றதும், தமக்கு இருந்த அதிகாரமின்மையை அறிந்து கொண்டார். பதவியும், கௌரவமும், ஆங்கில அரசாங்கம் அளிக்கும் ஓய்வூதியமும் கிடைத்தால் போதும் என்ற நிலையில் வாழ்ந்தார்.


ஒப்பந்தம்[தொகு]

1798 ஆம் ஆண்டு, ஆங்கில அரசு சரபோசியுடன், ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் முக்கிய உள்ளடக்கங்கள் வருமாறு:-

தஞ்சை நகரமும்,அதன் அருகிலுள்ள வல்லமும் சரபோசியிடம் இருக்கும். பிற பகுதிகள் ஆங்கிலேயர் ஆட்சி செய்யும் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்படும்.

அதற்கு ஆங்கில அரசாங்கம், சரபோசிக்கு ஆண்டுதோறும் ஒரு இலட்சம் வராகனும், எஞ்சிய வருமான்த்தில் ஐந்தில் ஒரு பங்கும் கொடுக்கும்

அமரசிங்கு குடும்பத்தாருக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ள ஓய்வுகாலச் சம்பளத்தொகையையும் ஆங்கிலேயர்களே கொடுப்பர்.

இவ்வாறாக அரசியல் ஆட்சி நிலையை அவர் இழந்தாலும், தன் ஆட்சி எல்லையில், தனக்கென ஒரு காவல் படையை வைத்துக் கொள்ள, இவ்வொப்பந்தம் வழிவகுத்தது.


Image may contain: 1 person

Friday, 5 June 2020

TANJORE ,PRAHADEESWARAR TEMPLE - REVIEW ITS HISTORY



TANJORE ,PRAHADEESWARAR TEMPLE -
 REVIEW ITS HISTORY


தஞ்சை பெரிய கோவில் – ஒரு பொதுப் பார்வை

கல்லிலே உருவான இந்த அதிசயத்தைக் காணத்தான் கொங்கு மண்டலத்திலிருந்து 16 வருடங்களுக்கு முன்னால் நான் வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு வந்தது. கரையேறி மீன் விளையாடும் காவிரிக்கரையை இலக்கியங்களில் படித்துவிட்டு வற்றிய காவிரியைக் கண்டபோது எனக்கு மனம் திடுக்கிடத்தான் செய்தது. நுங்கும் நுரையுமாய்ப் பொங்கி வரும் காவிரியை மோகமுள்ளிலும் அம்மா வந்தாளிலும் வாசித்துவிட்டு ஒரு மணல் காட்டை தரிசித்தபோது திசைமாறி வந்துவிட்டோமோ என்னும் அன்றைய என் தவிப்பு, தவிப்பின் வடு இன்றளவும் மாறாமலிருக்கிறது. 



ஜானகிராமனின் கதைமாந்தனைப்போல படித்துறையில் ஆற அமர உட்கார்ந்து அகண்ட காவிரியில் லயிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம்தான் என் ஆதி நம்பிக்கை வறட்சி குதிரைகளின் குளம்படி ஓசை அசரீரியாய் கேட்க, ஒரு புராதன நகரத்துக்குள் புழங்கித் திரிபவனாயிருக்க வேண்டுமென்பதுதான் அன்றைய என் கனவாயிருந்தது. அதுதான் என்னைத் தஞ்சாவூருக்கு இழுத்து வந்தது.



தஞ்சாவூரின் எந்தப் புள்ளியிலிருந்து பார்த்தாலும் ராஜராஜேச்வரம் எனப்படும் பெரியகோவில் நம் கண்களுக்கு காட்சியளிக்குமென எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. நானும் பஸ்ஸை விட்டு இறங்கி பெட்டியும் கையுமாக அண்ணாந்து பார்த்தபடி நடக்கிறேன். வணிக வளாகங்களால் சூழப்பட்ட நகர்மயமாகியிருந்த சற்று படாடோபமான தஞ்சாவூரைத்தான் அன்றைக்கு என்னால் காண முடிந்தது. பிறகொரு கிடைத்ததற்கரிய சந்தர்ப்பம் வாய்த்தது. தஞ்சாவூரின் பல நூற்றாண்டு கால வரலாற்றையும், பெரியகோவிலின் உன்னதங்களையும், அவலங்களையும், அகண்ட காவிரியின் சுழிப்புகளையும் அதன் வற்றிய சோகச் சரிதத்தையும் தன் நெஞ்சிலே புதைத்து வைத்துத் திரிந்த ஒரு ஆன்மாவைச் சந்திக்க வாய்த்தது. அவர் பெயர் தஞ்சைப் பிரகாஷ். 



இலக்கியத்திலேயே இது ஒரு இருட்டடிக்கப்பட்ட பெயர். ஆனால் நான் அறிந்து கொள்ள துடித்த புராதனத் தஞ்சையின் வளம்மிக்க பக்கங்களை மட்டுமல்ல பெரியகோவிலின் நிஜமான பிம்பத்தை குறிப்பாக, ராஜராஜசோழனால் சிவதுரோகியாக்கப்பட்ட பாவப்பட்ட ஏழைக் கூட்டத்தை பிரகாஷ்தான் எங்களுக்குச் சொன்னார். அவர்களின் வழியே உடலில் சூடு போடப்பட்டு சோழ மண்டலத்தின் பல பாகங்களிலிருந்தும் இழுத்து வரப்பட்ட 400 பெண்கள் தளிச்சேரிப் பெண்டுகளாக தேவரடியார்களாக தாசிகளாக்கப்பட்ட வரலாற்றின் கறைபடிந்த இருள்பக்கங்களையும் கதைசொல்லி ரூபமெடுத்த அவருடைய வாய் வழியாகத்தான் கேட்க நேர்ந்தது.



பிரகாஷ் கடைசியாகத் தொடங்கி நடத்திய இலக்கிய அமைப்புக்குப் பெயர் தளி. தளி அமைப்பின் கூட்டங்கள் நடந்த இடம் அசல் தளிச்சேரி. இன்றைக்குப் பெரிய கோவிலின் உள்ளே நுழைகிறவர்களுக்கு அந்த தளிச்சேரி பசுமையான புல்வெளியாகக் காட்சியளிக்கலாம். ஆனால் பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில்தான் தளிச்சேரிப் பெண்டுகளின் வதைபடும் வாழ்க்கை நடந்திருக்கிறது. தளி என்றால் கோவில், சேரி என்றால் சேர்ந்து வாழுமிடம். 




தஞ்சாவூரிலிருந்த எரியூர் அரிகுலகேசரி ஈச்வரம், கடம்பூருக்கருகில் திவிலன்கோவில், திருவாரூரிலிருந்த பெரியதளி, பிரமீச்வரம், திருவாழனேரி, ஒலோகம மகாதேவீச்வரம், அருமொழி ஈச்வரம், உலகீச்வரம் போன்ற ஆலயங்களிலிருந்தும் அந்தப் பெண்கள் தஞ்சாவூருக்கு கட்டாயமாக அழைத்து வரப்பட்டனர். இவர்கள் ஒரு பாதி. 

மறுபாதியினர் ராஜராஜனால் விதிக்கப்பட்ட வரியைக் கட்ட முடியாமல் சிவதுரோகியாக்கப்பட்டவர்களின் குடும்பத்துப் பெண்கள் மற்றும் ராஜராஜனால் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டவர்களின் குடும்பத்துப் பெண்கள் . இவர்களில் அரசகுடும்பத்தினரும் அடக்கம். அலகிடுபவர்களாக, மெழுகிடுபவர்களாக, விளக்கேற்றுபவர்களாக, ஆடுமகளிராக அதற்கும் அப்பால் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள மேய்ச்சல் நிலமாகவும் அவர்கள் பாவிக்கப்பட்டுள்ளனர். 



ஒரு வகையில் இந்த தளிச்சேரியிலிருந்து தான் என்னுடைய இலக்கியப் பயணம் தொடங்கியது. இன்றைக்கு நவீனமான புல்வெளியாக்கப்பட்ட அந்த இடத்தில்தான் எங்கள் படைப்பரங்கம் நடைபெற்றது.

தஞ்சைப் பெரியகோவில் தன் விதானங்களை அகண்ட ஆகிருதியை படைப்பாளிகளுக்குத் திறந்து வைக்கிறது. இங்கே வழிபாட்டுக்காக வருகிறவர்களை விட தங்கள் மன அவசங்களுக்கு வடிகால் தேடி வருகிறவர்களே அதிகம். திறந்த வெளியும் செதுக்கப்பட்டுள்ள கலைச்சிற் பங்களும், பசும்புல் வெளியும், நெடிதுயர்ந்த கோபுரமும் நெஞ்சிலே பாரஞ்சுமந்து வருகிறவர்களை ஆசுவாசப்படுத்த ஆற்றுப்படுத்த வல்லவை என்பதை


ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த ஆகிருதியைச் சுற்றிவரும் பொழுது பத்தாம் நூற்றாண்டுப் புராதன நிழல் நம்மேல் கவிகிறது. கீழைச் சாளுக்கியரின் நிலமாயிருந்த வேங்கி நாடென்றழைக்கப்பட்ட இன்றைய ஆந்திரம், கங்கபாடி என்றழைக்கப்பட்ட இன்றைய மைசூர், நுளம்பர்களின் பிரதேசமாகயிருந்த பெங்களூர், பெல்லாரி உள்ளிட்ட பகுதிகள், குடகுநாடு, கேரளத்துக் கொல்லம், கலிங்கம், தென் இலங்கைத் தீவிலுள்ள ஈழம், மேலைச் சாளுக்கியர்களின் இரட்டபாடி என்னும் வடகர் நாடகம், மராட்டியம், லட்சத்தீவு, மாலத்தீவு, தென் தமிழகத்தின் பாண்டியநாடு யாவற்றையும் வெற்றிகண்டு அபய குலசேகரன், அரிதுர்க்கலங்கன், அருள் மொழி, அழகிய சோழன், ரணமுகபீமன், ராஜாச்ரயன், ரவிகுல மாணிக்கன், ராஜ கண்டியன், ராஜ சர்வக்ஞன், ராஜகேசரி வர்மன், 



ராஜமார்த்தாண்டன், ராஜேந்திர சிம்மன், ராஜவிநோதன், உத்தமசோழன், உத்துங்கதுங் கன், உய்யக்கொண்டான், உலகளந்தான், கேரளாந்தகன், சண்டபராக்ரமன், சத்ருபுஜங்கன், சிங்களாந்தகன், சிவபாதசேகரன், தெலிங்ககுல காலன், நிகரிலிசோழன், நித்யவினோதன், பண்டித சோழன், பாண்டிய குலாசனி, பெரிய பெருமாள், மும்முடிச்சோழன், மூர்த்த விக்கரமா பரணன், ஜனநாதன், ஜெயங்கொண்ட சோழன், சத்திரிய சிகாமணி, கீர்த்தி பராக்கிரமன், சோழ நாராயணன், தைலகுல காலன் என்று மூச்சுவாங்குமளவு தனக்கு நூற்றுக்கணக்கான பெயர்களைச் சூடிக்கொண்ட ராஜராஜனின் படைகளையும் போர்ப் பரணிகளையும் வரலாற்றுப் பரிச்சயமுள்ள படைப்பாளிகளால் உள்வாங்கிக் கொள்ள முடியும். 

நம்முடைய அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள், இலக்கியப் பீடங்கள் காரணமில்லாத புனைப்பெயர்களைச் சூடிக்கொள்வர். ராஜராஜன் சூடிக் கொண்டவை காரணப்பெயர்கள். பிறகு ஆன்மீகம் என்கிற பரவச நிலையை விடுத்து சற்றே நம் பகுத்தறிவின் சாளரத்தை மூடிவைத்துவிட்டு இங்குள்ள கலையழகை யெல்லாம் அதனதன் தொன்மத்துடன் பொருத்திப் பார்ப்போமானால் இன்னொரு மாறுபட்ட லோகத்துக்குள் நம்மால் சஞ்சரிக்க முடியும்.



மேம்போக்காக நுனிப்புல் மேய்கிற தன்மையுடன் கலைப்ரக்ஞையற்ற கண்களால் பெரியகோவிலைப் பார்க்கிறவர்களுக்கு எதுவும் அனுபவித்தறிய முடியாது. பெரியகோவில் கோபுரத்தின் குறுகிய படிக்கட்டுகளின் வழியே கருவறைக்கு மேலே உள்ள திருச்சுற்றில் சிவனின் 108 விதமான நடனத்தோற்றங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. 81 தோற்றங்கள் வரை செதுக்கப்பட்டு என்ன காரணத்தினாலோ 27 நிலைகள் செதுக்கத் தோதான நிலையில் விடப்பட்டுள்ளது. சிற்பங்கள் செதுக்கப்பட்ட பிறகு சிற்பிகளின் கண்களை ராஜராஜன் குருடாக்கி விட்ட தாகவும் ஒரு வதந்தி உண்டு.

பெரிய கோயிலில் வரையப்பட்டுள்ள அபூர்வமான ஓவியங்கள் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. 1930ஆம் ஆண்டுவரை உட்பிரகாரம் சுவர் வைத்து மூடப்பட்டிருந்த கோவில் இது. அந்த இருண்ட வழிகளுக்குள் யாரும் பயணித்துப் பார்க்க நினைத்த தில்லை. 1931ஆம் ஆண்டு பெரியகோவிலுக்கு யாத்திரை வந்த பேராசிரியர் எஸ்.கே.கோவிந்தசாமி என்பவர் உட்பிரகாரச்சுவரின் ஓட்டையிலிருந்து பறவை ஒன்று பறந்து சென்றதைக் கவனிக்கிறார். 

அந்தப்பேராசிரியரின் ஆய்வுமனம் அந்த க்ஷணத்தில் சிறகடித்துக் கிளம்புகிறது. பறவையின் வழிகாட்டுதலுடன் அவர் உட்பிரகாரத்தினுள் பிரவேசிக்க ஆயிரமாண்டு காலத்தொன்மை வாய்ந்த அரிய ஓவியங்கள் குறித்து உலகத்துக்குத் தெரிய வருகிறது. இன்றைக்கும் ஒப்பற்ற கலை வெளிப்பாடுகளை உலகுக்கு வெளிப்படுத்திய அந்தப் பெயர் தெரியாத சிறு பறவைக்குத்தான் காலம் நன்றி சொல்லிக் கொண்டி ருக்கிறது. பேராசிரியர் அடையாளப்படுத்தியபிறகு இந்திய தொல்லியல் துறை உள்ளே நுழைகிறது. சோழர்கால ஓவியங்களுக்கு மேல் நாயக்கர் கால ஓவியங்கள் படிந்திருக்கின்றன. இவையும் 400 ஆண்டுகாலப் பழமைவாய்ந்தவை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல 1000 ஆண்டு பழமைவாய்ந்த சோழர்கால ஓவியங்கள் தனியாகவும் 400 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த நாயக்கர்கால ஓவியங்கள் தனியாகவும் பிரித்தெடுக்கப்படுகின்றன.

சோழர்கால ஓவியங்களை ஆய்வு செய்தவர்கள் அவை ‘ப்ரெஸ்கோ ப்யூனோ’ அரிய வகையைச் சேர்ந்த அரிய ஓவியங்கள் என்று மதிப்பிட்டிருக்கின்றனர். இன்றைக்குப் பிரசித்தி பெற்ற அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்களை விட வரையப்பட்ட பாணிகளால் இந்த ஓவியங்கள் உயர்தரமானவை என்று இதற்குப் பொருள். பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னால் அரிய மூலிகைச் சாறுகளுடன் மரப்பிசின் கலந்து தயாரிக்கப்பட்ட வர்ணக்கலவைகளை இந்த ஓவியங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மட்டுமல்ல புராணக் காட்சிகள், போர்க்கோலங்கள், கடவுளர்கள், மன்னன் ராஜராஜன், அவனது மனைவியர், ராஜராஜனின் குருமார்கள், நடனமாதர்கள், சோழர்கால ஆண்கள், பெண்கள், கடல்வாழ் உயிரினங்கள் என்று பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தை இந்த ஓவியங்கள் துல்லிய மாகச் சித்தரிக்கின்றன.

ஆடல் மகளிர்களை அதற்குரிய வனப்புடன் தீட்டியிருக்கிற அதே தூரிகைகள் குடும்பப் பெண்கள் சமையலறையில் சமைப்பது உள்ளிட்ட பல காட்சிக்கோணங்களையும் பதிவு செய்திருப்பதும் சாமானிய மாந்தர்களும் இக்காட்சிப் புலத்துள் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய தாகும். ஆனால் இந்த ஓவிய மேளாவை நிகழ்த்திக்காட்டிய எந்த ஓவியனின் பெயரும் பதிவாகவில்லை என்பதுதான் ஆகத்துயரமாகும். ஓட்டைச் சுவரிலிருந்து வெளிப்பட்டு ஓவியங்களைக் காட்டித்தந்து சிறகடித்த அந்தப் பெயர் தெரியாச் சிறுபறவைக்கு காலம் நன்றி கூறுவதைப் போல, ஒரு காலகட்டத்தையே தங்கள் தூரிகைக் கரங்களால் வார்த்துத் தந்திருக்கிற அந்த ஓவியக் கலைஞர்களுக்கும் நாம் இந்த நேரத்தில் நன்றியறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

ராஜசிம்மன் என்கிற பல்லவ மன்னனால் காஞ்சிபுரத்தில் உருவாக்கப்பட்ட கச்சிப்பேட்டுப் பெரிய கோவிலைப் பார்த்த பிறகுதான் ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்ட நினைத்ததாகக் கூறுகிறவர்கள் உண்டு. இலங்கையை வெற்றிகொண்ட ராஜராஜன் அங்கிருந்த பௌத்தவிஹார்களின் காட்சிப் பொலிவில் மயங்கி, இவற்றையெல்லாங் கடந்த ஒரு கலைக் கோட்டத்தை உருவாக்க எண்ணிப் பல காலங்கள் பலவிதமாய் மனதில் அசைபோட்டு செயல்வடிவம் தந்தது தான் ராஜராஜேச்வரம் என்று அபிப்ராயப்படுகிறவர்களும் உண்டு.

எதிர்காலத்தில் உன் புகழ் போர்களின் மூலமாக மட்டுமே அறியப்படாமல் நீதிமான்களும், கல்வியாளர் களும், கலை விற்பன்னர்களும், மதியூக அரசியல் மேதாவிகளும் மட்டும் உன்னைப் பாராட்டாமல் சைவ சமயத்தாரும் உன்னைப் போற்றிப் பாட ‘தளிக்குளம்’ கோவில் பெரியகோவிலாக வேண்டும் என்று தமக்கை குந்தவை வேண்டிக்கேட்டுக் கொண்டதன் பேரில்தான் ராஜராஜன் பெரியகோவிலை நிறுவினான் என்று நிறுவுகிறவர்களும் உண்டு.

கட்டடக் கலை என்று பார்க்கும்போது பத்தாம் நூற்றாண்டில் கற்பனை செய்து பார்க்க முடியாத சாதனைதான் பெரியகோவில். இதற்கு சில நூற்றாண்டு களுக்குப் பிறகு மொகலாயர்களின் கட்டடக்கலை வியப்பூட்டும் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டதாக இருந்திருக்கிறது. ஆனால் உருவங்களைப் புறக்கணிக் கின்ற இஸ்லாமிய வேத அடிப்படையில் சிற்பம் போன்ற நுண்கலைகளுக்கு இடமில்லாமல், அவை சலவைக்கற் களால் எழுப்பப்பட்ட சன்னிதானங்களாகவே காட்சியளிக் கின்றன. 

என் பிள்ளைகளுக்கு எங்கோ தொலைவில் யமுனா நதி தீரத்திலிருக்கின்ற தாஜ்மஹாலைக் காட்டு வதைவிடவும் அருகிலிருக்கின்ற பெரியகோவில் என்கிற இந்த அதிசயத்தைக் காட்டுவதில் தான் மனம் மகிழ்ச்சி கொள்கிறது. 
நண்பர்களே! ராஜராஜனின் கலாரீதியான செயல்பாடுகளைக் கொண்டாடத்தான் வேண்டியிருக்கிறது. நட்டுவக்காரர்கள், பாட்டுக்காரர்கள், கானபாடிகள், வங்கியக்காரர்கள், பாடவியக்காரர்கள், வாத்தியக்காரர்கள், உடுக்கை வாசிப்போர், வீணை வாசிப்போர், ஆரியம்பாடுவோர், தமிழ் பாடுவோர், கூத்தர், கெட்டி மத்தளம் வாசிப்போர், கந்தர்வத் துறையார், சங்கு ஊதுவோர், பக்கவாத்தியர், உவச்சர்கள் என்று 17வகை யான கலைஞர்களை பெரியகோவிலுக்காக வென்றே பராமரித்துக் காபந்து செய்தவன் ராஜராஜன். சரி; கலை இவனாட்சியில் உச்சத்திலிருந்தது! ஒப்புக் கொள்வோம்! 

ஆனால் ஜனங்கள் என்ன நிலையிலிருந்தார்கள். மக்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்களென நாம் ஆய்ந்து பார்க்கையில் ராஜராஜனுக்குப் பின்னடைவுதான் என்கிற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது. இது ஒரு வரலாற்றுச் சோகம்தான்! 


ஒரு கோயிலுக்காக தன் சாம்ராஜ்யத்தின் பெரும் பகுதிச் செல்வமனைத்தையும் தாரைவார்த்த இந்தத் தஞ்சை மன்னன் தனதாட்சிக் காலத்தில் உழைக்கும் மக்களை, பாட்டாளி வர்க்கத்தை, கடைநிலைச் சமூகத்தை எந்த லட்சணத்தில் நடத்தினான் என்றும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. கலைகள் தேவைதான். கலைஞர்கள் போற்றி ஆராதிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் கற்களால் எழுப்பப்பட்ட கனவுக்கோட்டத்துக்குக் கீழே உழைப்பாளிகளின் உதிரம் சிந்தப்பட்டிருக்கிறது. ஆட்டுக்கறை, நல்லெருது, ஓடக்கூலி, ஈழம் பூட்சி, தரகுப்பட்டம், தறி உறை, மீன்பாட்டம், வட்டி நாழி, கண்ணாலக் காணம், வண்ணாரப்பாறை, குசக்காணம் என்று மீனவர்கள், உழவர்கள், சலவைத் தொழிலாளிகள், நெசவாளர்கள், தரகர்கள், ஆட்டிடையவர்கள், ஓடக்காரர்கள், கள் இறக்குவோர் உள்ளிட்ட உதிரிப்பாட்டாளி வர்க்கத்தினர் மேல் வரிச்சுமையை ஏற்றி வைத்தவன் ராஜ ராஜசோழன்.
 சனாதன தருமம் வேர்பிடிக்கவென்றே திட்டமிட்டு பார்ப்பனர் களுக்கு பொன்னையும் பொருளையும் அள்ளி வழங்கிவிட்டு குடிமக்களில் ஒருவன் திருமணம் செய்து கொண்டால் அதற்குரிய ‘கண்ணாலக் காணம்’ என்கிற வரியைப் பேரரசுக்குச் செலுத்த வேண்டுமென்று தீர்மானம் போட்டவன் ராஜராஜன். அவனுடைய கல்வி நிறுவனங் களிலே கற்பிக்கப்பட்டவை எல்லாம். மீமாமிசை, வியா கரணம், இதிகாசம், சிவதருமம் என்று வடமொழிக்குரிய இலக்கண இலக்கியங்கள்தான்! தமிழக வரலாற்றின் கரும்புள்ளிகளாகத் தேங்கிவிட்ட வலங்கை, இடங்கைக் குலங்களின் போராட்டங்கள் ராஜராஜன் காலத்து எச்சம்தான்!

இந்த அகண்ட ராஜேச்வரத்தின் கல்வெட்டுகளில்தான் தமிழகத்திலேயே முதன் முதலாக சமஸ்கிருத அட்சரங்கள் பொறிக்கப்பட்டன. ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல வரிசெலுத்த முடியாதவர்களை சிவதுரோகியாக்கி, அவர் களுடைய நிலங்களை விற்று, கோவில் நிர்வாகத்திடம் சேர்ப்பித்தது ராஜராஜனின் ஊர்சபை! பிறகு அந்த நிலங்கள் பிராமணர்களுக்குச் சொந்தமான பிரம்மதேயங்களாக, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கான சதுர்வேதி மங்கலங் களாக மாற்றம் பெறுகின்றன. இந்த ஊர்சபை நிர்வாகம் குறித்து பெரிய பாராட்டுகளை ராஜராஜனுக்கு வழங்குகின்ற இன்றைய நண்பர்கள், அந்த ஊர்சபையில் நிலம் வைத்திருப்பவன் மட்டுமே அங்கம் வகிக்க முடிந்தது என்கிற சங்கதியை வசதியாக மறந்துவிடுகின்றனர் அல்லது மறைக்கின்றனர்.

செழிப்பான தஞ்சாவூர் கிராமங்கள் ஒவ்வொன்றின் வளத்தையும் வாழ்வையும் உறிஞ்சித்தான் பெரிய கோவில் கோபுரம் நிமிர்ந்திருக்கிறது. ரூபாய்க்கு 10 வட்டி என்பது இந்தக் காலத்திலேயே கொடுமையாக இருக்கும் போது 12 சதவிகித வட்டிக்குப் பணம்கொடுத்து, அதை வசூலிக்க ஒரு குண்டர் படையையும் வைத்திருந்து லேவாதேவி வேலைபார்த்தவனாக ராஜராஜனுக்கு இன்னொரு மங்கிய முகம் உண்டு. நிலப்பிரபுத்துவம் என்கிறபொருளியியல் ஏற்பாடு ராஜராஜன் காலத்தில்தான் முழுவடிவம் பெற்றது. சொந்த நிலமுள்ளவனுக்குத்தான் அவன் காலத்தில் மதிப்பு. ஒருவன் கோவில் பண்டாரமாக விரும்பினால்கூட அவனிடம் குறிப்பிட்டளவு நிலம் வேண்டும்.

இன்னொரு விஷயம்; தளிச்சேரிப் பெண்களுக்கு ராஜராஜன் வீடு கொடுத்தான், நிலம் கொடுத்தான், ஊதியம் கொடுத்தான், எல்லாம் தந்து பராமரித்தான் என்கிற நண்பர்களிடம் நம்மால் கேட்க முடியும். அந்த 400 பெண்டுகளிடமும் உயர்சாதிப் பெண்களுக்கு விசேஷ சலுகைகளும், சிவதுரோகியாக்கப்பட்ட குடும்பங்களி லிருந்து வந்த ஏழைப்பெண்களுக்கு வேறுவிதமாகவும் பாரபட்சமான முறையையும்தான் காட்டினான்! மேலும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் யாவும் வளமான பூமி. தளிச்சேரிப் பெண்டுகளுக்கு தரிசு நிலம் இப்படியான பாகுபாடும் காட்டப்பட்டி ருக்கிறது.

ராஜராஜனைப் பொறுத்தவரையில் இந்த கோயில் கட்டுவது அவனுடைய இலக்காக இருந்திருக்கிறது. அதற்கான பொன்னையும் பொருளையும் தன்னுடைய கஜானாவிலிருந்து தாரை வார்த்ததுபோக மீதியை எப்படியெல்லாம் தேற்றுவது என்று யோசிக்கிறபோதுதான் அவனுடைய பொருளாதார மூளை குடிமக்களைச் சுரண்டு கின்ற யோசனையைச் சொல்லி யிருக்கிறது. அந்தக் கால கட்டத்துப் பெண் களின் கோபுர தற்கொலைகளும், மக்கள் கிளர்ச்சிகளும் பொற்கால ஆட்சியின் புகழ் பாடுகையில் மறைக்கப்படுகிறது.

குடவோலை முறை ஜனநாயகத்தைப் பற்றி பாடபுத்தகங்களில் எழுதி எழுதி மாய்ந்துவிட்டனர். ஆனால் சொத்து இருந்தவனுக்குத்தான் குடவோலையும் ஊர்சபையும் என்று நம் குழந்தைகளுக்கு யார் மறு கற்பித்தல் செய்வது? பண்பாடும் இலக்கியமும் வளர்க்கப்பட்ட சிந்தனை யாளர்கள் தோன்றியிருந்த களப்பிரர்களின் ஆட்சிக்காலம் ‘இருண்ட காலம்’ என்றுதான் நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்றுதான் வருணாசிரமம் வளர்க்கப்பட்ட சோழர்காலம் பொற்காலம் என்று நமக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.

ராஜராஜன் தன் குடிமக்கள் மீது விதிக்காத வரியே இல்லை. ஏழை விவசாயி ஒரு பயிருக்கு ஊடுபயிராக இன்னொரு பயிரை வளர்த்தால் கூட ‘ஊடு போக்கு வரி’ என்கிற பெயரில் வசூலித்த அந்த மன்னனை நாம் எப்படிக் கொண்டாடுவது? வரிக்கொடுமை தாங்கமாட்டாமல் தங்களை கோயிலுக்கு விற்றுக் கொண்ட 12 குடும்பங்களின் கதை செங்கல்பட்டு மாவட்ட கல்வெட்டுகளில் இன்றளவும் கண்ணீர்க்கதை போல காணக்கிடைக்கிறது.

எங்களடியாள் அங்காடியும் இவள் மகள்
பெருங்காடியும் இவள் மக்களும்
திருவக்கரை உடைய மாதேவர்க்கு 
தேவரடியாராக நீர் வார்த்துக் கொடுத்தோம்

என்கிற வரிகள் ஒப்புதலுக்குக் கொடுக்கப்பட்டவை. ஆனால் இதில் அவர்களுடைய துக்கமும் துயரமும் கையறு நிலையும் பேரோலமும் அடங்கியுள்ளதாகவே உணர முடிகிறது.



ஏழை, எளிய மக்களின் வாழ்விடங்களை பறைச்சேரி, கம்மாளச்சேரி, வண்ணாரச்சேரி என்றெல்லாம் பிரித்து உருவாக்கியதும் பறைச்சுடுகாடு, கம்மாளச்சுடுகாடு என்றெல்லாம் பிரித்ததும் ராஜராஜன் காலத்து கைங்கரியங்கள்தான். ஊடுபயிர் வளர்த்த ஏழை விவசாயிகளை ஊடுபோக்கு வரியால் பழிவாங்கிய மாமன்னன், நிலங்களை பிராமணர்களுக்குத் தாரை வார்க்கிறான். பிராமணர் குழுக்களுக்கு மொத்தமாக நிலம் வழங்கப்பட்டால் அது பிரமதேயம். தனியொரு பிராமணனுக்குத் தரப்பட்டால் அது ஏகபோக பிரமதேயம். இப்படி வேலிக்கணக்கில் ஏகபோக பிரமதேயம் பெற்ற பிராமணக் கதைமாந்தர்களை நீங்கள் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” போன்ற நாவல்களில்கூட வாசித்துணரலாம். மேலும் இதற்கான கூடுதல் ஆதாரங்களை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை போன்றவர்கள் சோழர்களைக் குறித்து எழுதிய நூல்களிலிருந்தும் கண்டடையலாம். சம்புவரை யர்கள், பழு வேட்டரையர்கள், மலையமான் களெனப் பல சிறு மன்னர்கள் சேர்ந்து செய்த ஆட்சியே சோழர் ஆட்சி என்றும் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் மூலமாக நமக்கு கூடுதல் தகவல் கிடைக்கிறது. ராஜராஜன் செய்தது இவர்களை எல்லாம் திறம்பட இணைத்ததுதான்.

ராஜராஜன் நிர்மாணித்த பெரிய கோவிலின் பெருமையெல்லாம் அதைக்கட்டிய கல் தச்சர்கள், சிற்பிகள், கடுமையான உடல் உழைப்பாளிகள் இவர்களுடைய வியர்வை யிலும், குருதியிலும், மதிநுட்பத்திலும் அடங்கி யிருக்கிறது.

இன்றைக்குப் ‘பொற்காலம்’ என்று புகழ் பாடுகின்ற இதே நம்முடைய மாநில அரசுதான் 1976-களிலும் இயங்கியது. மாநில அரசு நிறுவனமான தமிழ்நாடு பாடநூல் நிறு வனத்தின் சார்பில் கோ.தங்கவேலு என்பவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தயாரிக்கப்பட்ட “தமிழ் நில வரலாறு” என்னும் நூலில் சோழர்கால ஆட்சி ஏழை விவசாய, உழைக்கும் விளிம்புநிலை மக்களுக்கு எப்படியெல்லாம் பொல்லாத ஆட்சிக்காலமாக விளங்கியது என்று துல்லியமாக ஆராய்ந்து எழுதப்பட்டிருந்தது. 

அன்றைய திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு பிறிதொரு சனாதன ஆலோசகர் குழுவினரால் அந்த நூல் தடை செய்யப்பட்டது. பொல்லாத ஆட்சி பொற்காலம் ஆட்சியாவதும், பொற்காலம் இருண்ட காலமாவதும் இன்றைக்கு வரலாற்றைத் திரிக்கிறவர்களின் கைகளிலே இருக்கிறது. 

ஆனால் இன்றைக்குள்ள நம்முடைய ஆய்வாளர்கள் இந்த இருட்டடிப்புகளை வெளிச்சப்படுத்து கிறவர்களாகத் துணிச்சலுடன் இயங்கிக் கொண்டிருக் கிறார்கள். கலை போற்றி ஆராதிக்கப்பட்ட காலத்தை நாம் மதிப்புடன் பதிவு செய்கின்ற அதே நேரத்தில் ; ஏழை மக்களும், உழைப்பாளிகளும், பெண்களும் வதைபடும் வாழ்வில் உழன்ற காலத்தை பொற்காலம் என்று மதிப்பிடுவதும், உயரத் தூக்கிக் கொண்டாடி உண்மைக ளை மறைப்பதும் தமிழனின் உண்மையான வரலாறுக்கு, வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்கின்ற துரோகமாகும்!

(அக்டோபர் 31 - தஞ்சையில் தமுஎகச நடத்திய ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

Wednesday, 13 May 2020

TANJORE BALASARASWATHI CLASSICAL DANCER NOTABLY SHARP IN ABHINAYA BORN 1918 MAY 13 - 1984 FEBRUARY 9



TANJORE BALASARASWATHI CLASSICAL 
DANCER NOTABLY SHARP IN ABHINAYA BORN 1918 MAY 13 - 1984 FEBRUARY 9


தஞ்சாவூர் பாலசரஸ்வதி (T. Balasaraswati, மே 13, 1918 - பெப்ரவரி 9, 1984) தமிழ் நாட்டில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நாட்டிய ஆசிரியரும் ஆவார். இவரைப்போல கலைநுணுக்கம் சிறந்த நாட்டியம் யாருமே ஆடவில்லை என்னும் அளவுக்கு கலைநுணுக்க ஆர்வலர்கள் மிகப்பலராலும் போற்றப்பட்டவர்

வாழ்க்கைக் குறிப்பு
பாலசரசுவதியின் முன்னோர் தஞ்சை மராட்டியர்களுடைய அரசவைக் கலைஞர்களாக இருந்தவர்கள். இவரது மூதாதையர்களில் ஒருவரான பாப்பம்மாள் என்பவர் தஞ்சை அரசவையின் இசைக் கலைஞரும், நடனக் கலைஞருமாக இருந்தவர். புகழ் பெற்ற வீணை தனம்மாள் இவரது பாட்டியின் சகோதரியாவார். தாயார் ஐயம்மாள் ஒரு சிறந்த பாடகி. தந்தை கோவிந்தராஜுலுவும் ஓர் இசைக் கலைஞர் ஆவார்.[1]


பாலசரஸ்வதி, தனது மூன்று வயதிலேயே இவர்களது குடும்ப நண்பரும், பிரபலமான பரதநாட்டியக் கலைஞருமான மயிலாப்பூர் கௌரி அம்மாளிடம் நடனம் கற்க ஆரம்பித்தார். பின்னர் கந்தப்பா நட்டுவனாரிடம் நடனம் கற்க ஒழுங்கு செய்தவர் பிரபலமான வாய்ப்பாட்டுக் கலைஞர் அரியக்குடி இராமானுச ஐயங்கார் ஆவார். கந்தப்பா நட்டுவனாரின் தந்தை நெல்லையப்பா நட்டுவனார் பந்தனைநல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை போன்று தஞ்சை நாட்டிய சகோதரர் நால்வரின் மருகர் ஆவார்.கந்தப்பா நட்டுவனாரும் அவர்கள் பேணிவந்த நடனக்கலை மரபிலேயே அக்கலையை பாலசரசுவதிக்குப் புகட்டினார்.[1]

ஏழாம் வயதில் பாலசரஸ்வதியின் நடன அரங்கேற்றம் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நடைபெற்றது.[1] சிறு வயதிலேயே நடனத்தில் அவருக்கு இருந்த திறமை விமர்சகர்களாலும் ஏனையோராலும் போற்றப்பட்டதாகத் தெரிகிறது. ஐரோப்பார, கிழக்காசியா, வட அமேரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் பரத நாட்டியத்தை அரங்கேற்றினார். வெஸ்லின் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக் கழகக் கல்லூரி, வாசிங்டன் பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஒரே இந்தியப் பெண் இவர்தான். அன்னா கிசல் காஃப் என்னும் நடன விமர்சகர் இவரை உலகின் மிகச் சிறந்த நடனக் கலைஞர் என பாராட்டியுள்ளார்.[2] அமெரிக்காவின் ஈடிணையற்ற நடன பொக்கிஷங்கள்: முதல் நூறு பேர்’ என்ற புகழ்பெற்ற பட்டியலில் சேர்க்கப்பட்ட மேற்குலகைச் சேராத ஒரே கலைஞர் பாலசரஸ்வதிதான்.

வழிவழியாகக் கையளிக்கப்பட்ட பரதக் கலையை சாஸ்திரத்துக்கு உள்ளே அடைக்கும் முயற்சியை தொடர்ந்து பாலசரஸ்தி எதிர்த்தார், மேலும் இந்தக் கலையை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்கு மட்டுமே உரியதாக ஆக்கிய பிராமணிய ஆக்கிரமிப்பை எதிர்த்ததால், அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருக்கான அங்கீகாரங்கள் பெரிதாக இந்தியாவில் அளிக்கப்படவில்லை அவர் மறைவுக்குப் பிறகு இந்தப் புறக்கணிப்பானது தொடர்கிறது. என்று பாலசரஸ்தியின் மருமகனும் மிருதங்கக் கலைஞருமான டக்ளஸ் எம். நைட் குறிப்பிட்டுள்ளார்.[3]

பாலசரஸ்வதி வரலாற்றை ‘பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும்’ என்ற நூலை டக்ளஸ் எம். நைட் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார், இது தமிழிலும் வெளிவந்துள்ளது.


l நான்கு வயதாக இருந்தபோது, பிரபல நாட்டியக் கலைஞர் தஞ்சாவூர் கே.கந்தப்ப பிள்ளையிடம் தீவிர நடனப் பயிற்சி தொடங்கியது. இவரது கலைப் பயிற்சிக்கு தாய் உறுதுணையாக இருந்தார். நடன அரங்கேற்றம் 7 வயதில் காஞ்சிபுரம் கோயிலில் நடந்தது. வயதுக்கு மீறிய முகபாவனைகள், மிகவும் கடினமான நடன அசைவுகளை அனாயாசமாக செய்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார். ‘குழந்தை மேதை’ என்று புகழப்பட்டார்.

l அந்தக் காலத்தில் நடனம் ஆடுபவர்கள் பல இன்னல்களுக்கு ஆளானதால் பரதநாட்டியம் நசியும் கலையாக மாறியிருந்தது. ருக்மணி தேவி போன்றோரின் முயற்சியால் திரும்பவும் உயிர்பெற்ற பரத நாட்டியத்தின் முதல் தூணாக இவர் கருதப்பட்டார்.

l நடனக் கலைஞர்களுக்கு சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தார். கோயில்களில் மட்டுமே நடைபெற்றுவந்த நடனக் கலையை வெளி இடங்களிலும் பரவச் செய்தார்.

l இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பாரநாட்டியத்தின் புகழைப் பரவச் செய்தார். பாரம்பரிய நடனம், இசை ஆகிய இரண்டையும் கற்றுத் தேர்ந்து இரண்டிலும் புரட்சியை ஏற்படுத்தினார். இவரது நடனத்தால் கவரப்பட்ட பிரபல நடன இயக்குநர் உதய் ஷங்கர் இவரது நடனக் கலையை நாடு முழுவதும் பரவச் செய்வதார்.

l தனது குடும்பத்திலேயே தென்னிந்தியாவுக்கு வெளியே முதன்முதலாக கலை நிகழ்ச்சி நடத்தியவர் இவர்தான். முதலில் 1934-ல் கல்கத்தாவில் இவரது நிகழ்ச்சி நடைபெற்றது.

l ஷம்பு மஹராஜ், டேம் மார்கட் ஃபான்டெய்ன், மார்தா கிரஹாம் உள்ளிட்ட புகழ்பெற்ற சர்வதேச விமர்சகர்களின் கவனத்தையும் மரியாதையையும் பெற்றார். ‘உலகின் தலைசிறந்த நடனக் கலைஞர்’ என்று போற்றப்பட்டார்.

l 1960-களில் சர்வதேச அங்கீகாரம் பெறத் தொடங்கினார். ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா என உலகம் முழுவதும் இவரது நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு கலைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நடன ஆசிரியராகப் பணியாற்றவும், நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தவும் 1980களில் அமெரிக்கா சென்றார். சென்னை மியூசிக் அகாடமி தந்த ஊக்கத்தால் அந்த அமைப்புடன் இணைந்து நாட்டியப் பள்ளியை நிறுவினார்.

l இவரது நடனக் கலையால் ஈர்க்கப்பட்ட சத்யஜித் ரே இவரை வைத்து ‘பாலா’ என்ற குறும்படம் தயாரித்தார். நாட்டின் 2-வது உயரிய விருதான ‘பத்ம விபூஷண்’ இவருக்குக் கிடைத்தது. சென்னையில் உள்ள இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இவருக்கு சங்கீத கலாசிகாமணி விருதை வழங்கியது. சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள், பட்டங்களைப் பெற்றுள்ளார். உலக அளவில் பல கவுரவங்களைப் பெற்றார்.

l இந்தியாவில் பரத நாட்டியக் கலைக்கு புத்துயிர் அளித்து, பரதநாட்டியத்தில் தனி முத்திரை பதித்த பாலசரஸ்வதி 66 வயதில் (1984) மறைந்தார்.

பிரபல முற்போக்கு எழுத்தாளர் திரு. சாரு நிவேதிதாவின் விமரிசனத்தைத் தொடர்ந்து மீள் பதிவு.

ஐரோப்பாக் கண்டத்தில், காலக்கோட்டில், Renaissance period என்று சொல்லுவாரகள்; அக்காலகட்டத்தில் ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் பிறந்த பீதொவன், மொசார்ட், பாஷ்ச் போன்ற இசை மேதைகள் வாழ்ந்தார்கள். இத்தாலி போன்ற நாடுகளில் மைக்கேல் ஏஞ்சலோவும், ராஃபேய்ல் என்ற சிற்ப ஒவியக்கலைஞர்களும் வாழ்ந்தார்கள். இந்த மேதைகளின் ஊர்களின் எண்ணிக்கையையும், மேதைகளின் எண்ணிக்கையையும் விரல்விட்டு எண்ணலாம்.
ஆனால், தஞ்சை மண்ணில் கலைகளை வளர்த்த கிராமங்களின் எண்ணிக்கையையும் மேதைகளின் எண்ணிக்கையையும் கணக்கிட இயலாது. ஐயாயிரம் ஆண்டுகளாக இம்மண்ணில் வாழ்ந்த இசைக்கலைஞர்களின் பெயர்கள் எழுதிவைக்கப்படவில்லை. சிற்பிகளின், ஒவியக்கலைஞர்களின் பெயர்கள் எழுதிவைக்கப்படவில்லை. நூற்றைம்பது, இருநூறு ஆண்டுகளில் வாழ்ந்தவர்களின் பெயர்களை எழுதினால் அது நூற்றுக்கணக்கில் வரும். அதாவது குறைந்தபட்சம் ஒரு ஊருக்கு ஒரு இசைக்கலைஞன், ஒரு தவில் வித்துவான், ஒரு நாதஸ்வர வித்துவான், ஒரு நட்டுவனார், ஒரு நடனமணி கிடைப்பார்கள்.

ஒரு மணித்துளி சிந்தனையில் எனக்கு ஞாபகம் வந்த பெயர்கள், சீர்காழி முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை,அருனாசலக் கவிராயர்,தியாகராஜ பாகவதர்( மாயவரம்) குமாரி கமலா, தஞ்சாவூர் பாலசரஸ்வதி, ஊத்துக்காடு வேங்கட சுப்பையர், திருகோடிகாவல் கிருஷ்னையர், வேங்கடராமையர், மகாராஜபுரம் விஸ்வனாதையர், கோனேரிராஜபுரம், தஞ்சை மூர்த்தி, கிடப்பா பிள்ளை, பொன்னையா பிள்ளை, தஞ்சை நால்வர், மன்னார்குடி சின்னபக்கிரி, நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம், குளிக்கரை பிச்சையப்பா, திருவிடைமருதூர் வீருசாமி பிள்ளை, திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, குடந்தை சுந்தரேசன், திருமருகல் நடேசப் பிள்ளை, திருப்பாம்புறம் சாமினாத பிள்ளை, வழுவூர் ராமையா பிள்ளை. பந்தனல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தஞ்சை ஹேரம்பனாதன், திருவாரூர் ஞானம், கலியானசுந்தரம் பிள்ளை, திருச்சேறை, ஆண்டாங்கோயில், கும்பகோனம் பிடில் ராஜமானிக்கம் பிள்ளை. ஒரு நிமிட ஞாபகத்தில், ஒரு பொறியாளன் ஞாபகத்தில் இத்தனை பெயர்கள்.


பலநூறு ஆண்டுகளில் வாழ்ந்த மேதைகளின் பெயர்கள் பதியப்பட்டிருந்தால் அது எத்தனை ஆயிரங்கள் இருக்கும்.
இந்த எண்ணிக்கையை வைத்து ஒரு ஹெக்டேருக்கு எத்தனை மேதைகள் என்று கணக்கிடலாம். அதாவது ஒரு ஏக்கருக்கு எத்தனை கலம் என்பது போல்.
தஞ்சை மண்ணில் ஏர் பூட்டி கலப்பை கொண்டு உழுதால், பொன்னி அரிசி மாத்திரமா கிடைக்கிறது. கலப்பை மண்ணைக் கிளரும்போது, மண்ணுள்ளிருந்து, குமிண் சிரிப்பும் கொவ்வைச் செவ்வாயுங்கொண்ட ஆடவல்லான் வெளியே வருகிறான், நீலமேணி நெடியோன் வருகிறான், பங்கயச் செல்வி வருகிறாள், கால சம்ஹாரரும், கலியாணசுந்தரரும் வருகிறார்கள். இன்னும் சற்று ஆழமாக உழுதால் நாதஸ்வரம் வரும், குழல் வரும் யாழ் வரும் முழவு வரும். உழுது உழுது இசையை வளர்த்தவர்கள் தஞ்சாவூர்க்காரர்கள்.

மண்ணிலிருந்து நாதச்வரம் வருமென்பது வெறும் கற்பனையன்று. திருவையாறு அரசர் கல்லூரி, ஓய்வு பெற்ற தலைவர் முனைவர் செல்வ கணபதி அவர்களின் மாமா குஞ்சிதபாதம் பிள்ளை, திருவீழிமிழலையில் வாழ்கிறார். அவர் செய்யும் சீவாளி (Reed) யைத்தான் நாதஸ்வரத்தில் பொருத்தி ஊதி நாதமெழுப்ப பயண்படுத்துகிறார்கள். இந்த சீவாளி காவேரிப் படுகையில் விளையும் நாணலில் இருந்து செய்யப்படுவது. அவர் சொல்லுகிறார், “ திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கே இருக்கும் படுகையில் வளரும் நாணலில் செய்யும் சீவாளி நாதத்தைத் தருவதில்லை; வெறும் சத்த்த்தைத்தான் தரும். கிழக்கே இருக்கும் படுகை நாணலில்தான் நல்ல சீவாளி செய்ய இயலும்”. அதாவது நல்ல சீவாளிக்கு தஞ்சை மண்ணும் காவேரி தண்ணீரும் வேண்டும்.
அதுபோலவே, நாதச்வர குழல் செய்ய உதவும் ஆச்சாள் மரம் கொள்ளிடம் தென்கரையிலுள்ள ஆச்சாள்புரத்தில் அதிகமாகக் கிடைக்கிறது. இன்னும் ஒருசில குடும்பங்கள்தான் இந்த தொழிலில் இருக்கிறார்கள்.
இப்போது தெரிகிறதா, காவேரி நீரும் தஞ்சை மண்ணும் கொண்ட பூமியிலிருந்துதான் நாதஸ்வரம் //வருகிறது// என்று.
அதுபோலவே உலகம் முழுமைக்கும் வீணை தஞ்சாவூரிலிருந்துதான் (பலாமரம்) அனுப்பப்படுகிறது.

மேற்கண்ட உண்மைகளிலிருந்து பெறப்படுவது, (1) கலைஞர்கள் வாழுமிடங்களின் செறிவு உலகிலேயே தஞ்சையில்தான் அதிகம்; (2) அக்கலைஞர்களுக்கான கருவிகளின் உற்பத்திச் செறிவும் தஞ்சையில்தான் அதிகம். அது இயற்கையின் கொடையாக அமைந்திருக்கிறது.
எனவே, அகில உலகிற்கும் கலைகளின் தலைநகரம் தஞ்சாவூர்.


டக்ளஸ் எம்.நைட் ஜூனியர்

இன்று (பிப்ரவரி 9) பாலசரஸ்வதி நினைவு தினம்

இருபதாம் நூற்றாண்டின் மகத்தான நிகழ்த்துக் கலைஞர்கள், இசைக் கலைஞர்களில் ஒருவர் தஞ்சாவூர் பாலசரஸ்வதி (1918-1984). அவர் தேர்ச்சி பெற்றிருந்த பரதநாட்டியம் எனப்படும் நடனக் கலையின் தென்னிந்தியாவில் உருவான மரபுசார் கலை. இசை, நடனம், பிரத்யேகமான / தனித்துவமிக்க நாடகீய உத்திகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்ட கலை / ஒருங்கிணைக்கும் கலை இது. பாலசரஸ்வதியின் கலையும் வாழ்வும் மரபின் இதயத்தை / ஆதாரத்தை வரையறுத்தன. இன்று இந்தியாவின் செவ்வியல் நடன வகைகளில் ஒன்று எனச் சொல்லப்படும் பரதநாட்டியத்தை மறுஉருவாக்கம் செய்வதற்கான அடிப்படையாக இவரது வாழ்வும் கலையும் விளங்கின.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் மரபுசார் கலைஞருக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது. குறைந்தபட்சம், கலையின் புதிய மையங்களாக மாறிவந்த சென்னைபோன்ற நகரங்களில் இது நிகழ்ந்தது. நவீனமயமாக்கப்பட்ட பண்பாடும் தேசியப் பண்பும் பாலசரஸ்வதியின் உலகின் யதார்த்தத்தைப் புறக்கணித்தன. யதார்த்தம் புராணக் கதை வடிவில் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாறியது.



பாலசரஸ்வதியின் முக்கியத்துவத்தை இன்று புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நமது கண்ணோட்டத்தின் தளைகளிலிருந்து நாம் வெளியே வர வேண்டும். மேலும் பெரிய, வியப்புக்கு ஆட்படக்கூடிய கண்களின் வழியாக, மரபுசார் பரதநாட்டியத்தின் பாரம்பரியத்தைத் தழுவிக்கொண்ட உலகை நாம் காண வேண்டும்.

அண்மைக் காலத்தோடு ஒப்பிட்டால்கூட இந்தியாவின் சமகால யதார்த்தம் மாறுபட்டது. 1918இல், பாலசரஸ்வதி பிறந்தபோது இருந்த பண்பாட்டு, சமூக யதார்த்தங்கள் பெருமளவில் மாறுபட்டவை. எனவே அவற்றைத் துல்லியமாகப் புரிந்துகொள்வது கடினம். காலனியாதிக்கத்துக்கு ஆட்பட்ட, மிகவும் நைந்துபோயிருந்த, ஒன்றுக்கொன்று உறவாட முடியாதவை என்று தோற்றமளித்துக்கொண்டிருந்த பன்மைத்தன்மையைக் கொண்டிருந்த தேசமான இந்தியா தன்னைத் தானே மறுகண்டுபிடிப்பு செய்துகொள்ள வேண்டிய சூழலை எதிர்கொண்டது. ஒடுக்குமுறையையும் குழப்ப நிலையையும், தவறான கண்ணோட்டங்களையும் பொய்மையையும் புரட்டையும் வெற்றிகொண்டு, அதன் மூலம் சுய-அங்கீகரிப்பையும் பெருமிதத்தையும் அடையுமளவுக்கு முதிர்ச்சி அடைந்து இந்த மறுகண்டுபிடிப்பை இந்தியா எதிர்கொண்டது.



பாலசரஸ்வதியின் குடும்பம், கலையைப் பேணிவந்த, கலையையே தமது தொழிலாகக் கொண்ட நூற்றுக்கணக்கான குடும்பங்களில் மிகவும் புகழ்பெற்ற குடும்பம். 100 ஆண்டுகளுக்கு முன்பு நடன மரபை இந்தக் குடும்பங்கள் மட்டுமே பேணிவந்தன.

தங்களையும் தங்கள் பண்பாட்டையும் மறுவரையறை செய்துகொள்ள முயன்றவர்களில் ஒருவர் பாலசரஸ்வதி. ஆனால், அவர் தனது மரபுக்கு உண்மையாக இருந்தார். புராணிகத்தன்மை நிரம்பிய கடந்த காலத்தை மறுகட்டுமானம் செய்வதன் மூலம் இந்தியாவின் மகத்துவத்தை வரையறுக்கும் முயற்சியை அவர் ஏற்கவில்லை. கொடூரமான தாக்குதல்களையும் கலாச்சார ரீதியான ஒடுக்குமுறையையும் தாண்டித் தன் உயிரைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் கலையின் அமைப்பையும் அதன் நடைமுறையையும் தொடர்ந்து பேணிவருவதன் மூலம் அந்த மகத்துவத்தின் உருவமாகத் திகழ்ந்தார்.



பாலசரஸ்வதியின் கதை தாய்வழி மரபுக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒருங்கமைக்கப்பட்ட சமூக அமைப்பைப் பின்புலமாகக் கொண்டது. இந்த அமைப்பில் பெண்கள்தாம் குடும்பத் தலைவர்கள். இந்தியாவிலும் உலகின் பிற இடங்களிலும் உள்ள சில குடும்பங்களில் இந்த அமைப்பு இன்னமும் நடைமுறையில் உள்ளது. தேவதாசி என்று சில சமயம் அழைக்கப்பட்ட இந்தச் சமூகத்தினர், இன்று இந்தியாவில் பிரபலமாக இருக்கும் இசை, நடனம் முதலான பல்வேறு மரபுகளைத் தொன்றுதொட்டுப் பாதுகாத்துவருபவர்களாக அங்கீகாரம் பெற்றாலும், பொதுச் சமூகத்தில் முறையான விதத்தில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்ததில்லை.



பல விதமான பெண்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் குறிப்பிடுவதற்கு தேவதாசி என்னும் சொல் பயன்பட்டுவந்தது. 1901இல் மெட்ராஸ் பிரஸிடென்ஸியின் பிரிட்டிஷ் நிர்வாகம் வெளியிட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தேவதாசி என்னும் சொல் ஏழு விதமான பொருள்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. நடனமாடுதல், பாடுதல் ஆகியவற்றை நிகழ்த்துக் கலைகளாகப் பயின்றுவரும் பெண்களைக் குறிப்பது அவற்றில் ஒன்று. இசை வேளாளர் உள்ளிட்ட வேறு பெயர்களிலும் அந்தச் சமூகம் அறியப்பட்டிருந்தது. அச்சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் பிள்ளை, முதலியார் ஆகிய குடும்ப / சாதிப் பெயர்களைத் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் வைத்துக்கொள்ளும் வழக்கமும் இருந்தது.



இன்று தேவதாசி என்னும் சொல் பொறுப்பற்ற / விவரமற்ற முறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சில சமயம் தவறான பொருளிலும் இழிவுபடுத்தும் வகையிலும் பயன்படுத்தப்படுகிறது. தேவதாசிக் குடும்பங்களில் பெரும்பாலானவை வேளாண் தொழிலின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொண்டன. குடும்பத்தின் சில உறுப்பினர்களே இசை, நடனக் கலைஞர்களாக விளங்கினார்கள். தேவதாசிகளின் வரலாறு மிகவும் சிக்கலானது. இந்திய வரலாற்றில் பல்வேறு சமூக, சமூக-சமயப் பிரச்சினைகளோடு தொடர்புகொண்டது.



18ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் அரண்மனையில் இருந்த பாப்பம்மாள் என்னும் இசை, நடனக் கலைஞரின் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர் பாலசரஸ்வதி. இசையும் நடனமும் பாப்பம்மாளின் காலத்திலிருந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இடையறாமல் பயணித்துவந்தது. 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலசரஸ்வதியின் குடும்பத்தினர், பாப்பம்மாளின் எள்ளுப் பேத்தி வீணை தனம்மாளைத் தங்களது கலையின் ஊற்றுக்கண்ணாக அடையாளம் காண்கிறார்கள். 1867இல் பிறந்த தனம்மாளின் ரத்தத்திலேயே இசை ஊறியிருந்தது. அவர் குடும்பத்தின் தலைவராக இருந்தார்.

பாலசரஸ்வதியோடு உணர்வுபூர்வமாக ஈடுபாடு கொண்டவர்கள் உலகம் முழுவதிலும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அதற்கான தனித்த காரணம் இருக்கிறது. பாலசரஸ்வதியின் இயல்பு அப்படிப்பட்டது. எண்ணற்றவர்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் அவரது மகத்துவத்துக்கு ஒரு சான்று. பாலசரஸ்வதியுடன் நட்பு கொண்ட அனைவரும் அதைத் தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமான உறவாகவே கருதினார்கள். பிறருடன் உறவாடும்போது முன்னெச்சரிக்கையோடு நடந்துகொள்ள பாலசரஸ்வதிக்குத் தெரியாது. யாரையாவது நம்பிவிட்டால் அவரோடு முழுமையாக நட்புக் கொள்வதும் அவர் மிக எளிதில் தன்னை அணுக அனுமதிப்பதும் அவரது இயல்பு. பாலசரஸ்வதியின் இந்த பலவீனம் அவரைப் பாதித்துவிடாமல் காப்பாற்றுவதற்காக அவர் மகள் கடுமையாக முயற்சிசெய்தார். இந்த அளவுக்கு நெருக்கமாகப் பழகியதால் அவரை அறிந்தவர்கள் அனைவரும் பாலசரஸ்வதிக்கென்று உள்ள பார்வை, உள்ளுணர்வு ஆகியவற்றை அறிவார்கள்.



கற்றுத்தருவதிலும் பகிர்ந்துகொள்வதிலும் இந்தச் குடும்பத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு இருந்த அபாரமான ஆற்றல் இவர்களுடைய சிறந்த பண்புகளில் ஒன்று. தங்கள் கலை, கலை சார்ந்த அறிவு ஆகியவற்றுக்கு வளமூட்டுவதிலும் இவற்றைக் கற்றுத்தருவதிலும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பாலசரஸ்வதியும் அவரது குடும்பத்தினரும் அசாதாரண உழைப்பைச் செலுத்தினார்கள். இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பல கலைஞர்களிடத்தில் இந்தக் குடும்பத்தின் பாணி, அவர்கள் வசம் இருந்த கலைக் களஞ்சியம் / கலைத் தொகுப்பு ஆகியவற்றின் செல்வாக்கு / தாக்கம் இருக்கிறது.

பாலசரஸ்வதியின் தம்பி விஸ்வநாதன் முதல் முதலில் 1958இல் அமெரிக்காவுக்குச் சென்ற பிறகு அவரது குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் வட அமெரிக்கா, ஐரோப்பா, கிழக்கு ஆசியா ஆகிய இடங்களுக்குச் சென்று கற்பித்திருக்கிறார்கள். இந்தியாவின் நிகழ்த்துக் கலைகளைக் குறித்த உலகின் புரிந்துணர்வுக்கு இந்தக் குடும்பம் செலுத்தியிருக்கும் பங்களிப்பு அசாதாரணமானது. பாலசரஸ்வதியின் குடும்பத்தினரிடமிருந்து கற்றுக்கொண்ட எண்ணற்றவர்களில் நானும் ஒருவன். ஆனால், இந்தக் குடும்பத்தினருக்கு மறுக்கப்பட்ட உரிமைகள், பொதுச் சமூகத்தில் இவர்களுடைய நிலை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள எனக்குப் பல ஆண்டுகள் ஆயின. சமுதாயத்தில் அவருக்கு இன்று இருக்கும் மகத்தான படிமத்தை வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட பெரும் சிரமங்களின் பின்னணியில் வைத்தே மதிப்பிட வேண்டும் என்பதற்கான தேவையை இந்த நூலை எழுதும்போது நான் உணர்ந்தேன்.



இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் தென்னிந்திய நடன வரலாற்றில் பாலசரஸ்வதி அலாதியானதொரு இடத்தைப் பெற்றிருக்கிறார். மரபுசார் கலை மற்றும் சமூகத்தின் பிரதிநிதியாக அறியப்பெற்றிருக்கிறார். அவரது பங்களிப்பு இல்லையேல் இந்தக் கலையும் சமூகமும் கிட்டத்தட்ட மறைந்துபோயிருக்கும். இது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு அவர் தீவிரமான கலகக்காரர் என்பதும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த, முழுமையான நவீனக் கலைஞர் என்பதும் உண்மை.







.