ANITHA RATNAM ,DANCER BORN 1954 MAY 21
ANITHA RATNAM ,DANCER BORN 1954 MAY 21 அனிதா ரத்னம் (பிறப்பு: மே 21, 1954) தமிழகத்தைச் சேர்ந்த இந்தியப் பாரம்பரிய நடனக் கலைஞர், நடன ஆசிரியர். பரத நாட்டியத்தில் முதன்மை பயிற்சி பெற்ற இவர், கதகளி , மோகினியாட்டம் , களரிப்பயிற்று எனும் நடன மற்றும் போர்க் கலைகளிலும் முறையான பயிற்சி பெற்றுள்ளார். இக்கலைகள் ஒருங்கிணைந்த ஒரு தனிப்பட்ட நடன பாணியை உருவாக்கி, நியோ பாரத் நாட்டியம் எனப் பெயரிட்டுள்ளார். [1] [2] [3] . இவர் 40 ஆண்டுகளாக 15 நாடுகளில் தனது நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000), பாய்ஸ் (2003) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரின் பணி நடனம், நாடகம், பேசும் சொல், சடங்கு, தொல்லியல், நாடகவியல் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் போன்ற பல பிரிவுகளை எடுத்தாழ்கிறது. 1992 இல் சென்னையில் அமைக்கப்பட்ட "அரங்கம்" என்ற அறக்கட்டளையின் நிறுவனரும் மற்றும் இயக்குனரும் ஆவார். இவர் 1993 ஆம் ஆண்டில் "அரங்கம் நடன அரங்கம்" செயல்திறன் நிறுவனத்தையும் நிறுவின...