SENTHAMARAI AND GOWSALYA SENTHAMARAI
SENTHAMARAI AND GOWSALYA SENTHAMARAI கௌசல்யா செந்தாமரை இவர் பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் காலஞ்சென்ற செந்தாமரையின் மனைவியாவார். 18.01.1946 இல் பிறந்த இவருக்குத் தற்போது 72 வயதாகும் இவர் இப்போதும் திரைப்படங்களிலும், சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்து ஜமாய்த்துக் கொண்டிருக்கிறார். இவர் செந்தாமரையின் சொந்த அத்தை மகளாவார். காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தான் இவர்களின் திருமணம் 1963 உறவினர்களில் சீர்திருத்த முறையில் இனிதே நடந்தேறியது. ’சுமைதாங்கி’ என்ற ஒரு நாடகத்தில் இரண்டு பேரும் அண்ணன் தங்கையாக இருவரும் நடித்தார்கள். அப்போது இவர்களுக்குக் காதலென பெரியோர்கள் எண்ணி திருமணம் செய்துவித்தனர். 29 வருடங்கள் இணை பிரியாத தம்பதியாக திகழ்ந்தனர். இத்தம்பதிக்கு ராஜலட்சுமி என்ற ஒரே மகள். இவரது கணவர் செந்தாமரை 1992-ஆம் ஆண்டில் அவரது 57-ஆவது வயதில் காலமாகிவிட்டார். 1961-இல் வெளிவந்த “திருடாதே” என்ற படத்தில் வெள்ளித்திரையில் அறிமுகமானார். ”ஜீ” தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `பூவே பூச்சூடவா‘ தொடரில் யுவராணியின் தாயாக வில...