N.T.RAMARAO , THE LEGEND
N.T.RAMARAO , THE LEGEND என்டி.ராமா ராவ் ஒரு மகத்தான மனிதர் என்டி.ராமா ராவ் தனக்கென வித்தியாசமான கொள்கையை கொண்டவர் . ஒளிவு ,மறைவு ,சூது எதுவும் அறியாத மாபெரும் கலைஞர் . அவருடைய ரசிகர்கள் எம்ஜியார் ரசிகரைப்போல் திமிர் பிடித்தவர்கள் அல்ல .ராமராவ் சொன்னால் அப்படியே அசையாமல் தரையில் படுத்து கொள்ளும் அளவு பக்தி மிக்கவர்கள் .அப்போது திருலோக சந்தர் கூறினார் .நீங்கல்லாம் அரசியலுக்கு வந்தா நிச்சயமா முதல்வர் ஆயிடுவீங்க !(1968 ) என் டி ஆர் செட்டில் இருந்தா அந்த இடம் பயம் கலந்த மரியாதையுடன் இருக்கும் இடி போல பேசுவார் .அவர் நடிக்கும் போது யாரிடமும் அரட்டை அடிக்க மாட்டார் செல்வி ஜெயலலிதாவும் அப்படியே .இருவரும் எவர் மீதும் குறை ,புரளி ,புகார் கூறாதவர் என்று ஏவிஎம் சரவணன் கூறுகிறார் . ஒரு கால்சீட் என்பது காலை 9 டு இரவு9 .இரவு கால்சீட் இரவு 9 டு 12 மணிதான் .சரியாக உதவியாளர் 11.45 க்கு கொண்டுவந்த நாற்காலியை மடக்குவார் - இதான் சிக்னல்- சரியாக 40 கால்சீட் தான் குடுப்பேன் என்று கறாரான கூறி விடுவார் .ஏவிஎம் கேன்டீனில் அவல் கேசரியும் ,மிளகாய் பஜ்ஜியும் மெனு என்றால் எண்டிய...