Posts

Showing posts with the label EDUCATION

SIR ,SYED, AHEMED, KHAN ,GREAT SCHOLAR OF EDUCATION FOUNDER OF ALIGARH UNIVERSITY 1817 OCTOBER 17 - 1898 MARCH 27

Image
  SIR SYED AHEMED  KHAN ,GREAT SCHOLAR OF EDUCATION  FOUNDER OF ALIGARH UNIVERSITY 1817 OCTOBER 17 - 1898 MARCH 27 சர் சையது அகமது கான். மேற்கத்திய அறிவியல் கல்விதான் இந்தியாவின் இன்றியமையாத தேவை என்று வலியுறுத்திய மிகச் சில இந்திய ஆளுமைகளில் ஒருவர். மே 24, 1877-ம் ஆண்டு தான் நிறுவிய, ‘முகம்மதன் ஆங்கிலோ ஓரியண்டல் காலேஜ்’ எனும் கல்லூரியின் வளர்ச்சிக்காகவே உடல் பொருள், ஆவியை தியாகம் செய்தவர். அந்தக் கல்லூரிதான் உத்தரப் பிரதேசத்தின் அலிகர் நகரில் இன்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமாக உருவெடுத்து நிற்கிறது. இந்தியாவின் பழமையான மத்தியப் பல்கலைக்கழகமான இதில், முஸ்லிம்களுக்கு மட்டும்தான் அனுமதி என பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். வட இந்தியாவின் மதநல்லிணக்கச் சின்னமான இங்கு 1881-ல் பட்டம் பெற்ற முதல் மாணவர் பாபு ஈஸ்வரி பிரசாத் என்ற இந்து. இங்கு முஸ்லிம்களுக்கென்று தனியாக இடஒதுக்கீடு குறித்து 1980-களில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடங்கிய வழக்கு தற்போது உச்ச நீதிமன்ற அமர்வின் நிலுவையில் உள்ளது. முஸ்லிம்கள் இடைக்கால நாகரிகம் மற்றும் கோட்பாடுகளில் இருந்து மாறாமல் இருந்த காலம் ...

MACAULAY EDUCATION IN INDIA , HIGHLY BENEFICIAL

Image
  MACAULAY EDUCATION IN INDIA , HIGHLY BENEFICIAL கிழக்கிந்திய வணிக்குழுவின் ஆட்சி, கல்வியைப் பொறுத்தவரை ஒருவித இரட்டை நிலைக்கொள்கையைப் பின்பற்றியது. நடைமுறையிலிருந்த கீழ்த்திசை கல்விமுறையை ஊக்குவிக்க மறுத்தது. மாறாக, ஆங்கில மொழிக்கும் மேலை நாட்டுக் கல்விக்கும் முக்கியத்துவம் அளித்தது. 1813 ஆம் ஆண்டு பட்டயச்சட்டம் இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்கென அரசு ஆண்டுக்கு ஒரு லட்சம் ஒதுக்க வகை செய்தது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் இயற்றப்பட்டபோதே இது குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது. சட்டம் இயற்றப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகியும் இது குறித்த புதிய விவாதங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. எனவே, கல்விக்கென அரசு சல்லிக்காசும் செலவிடவில்லை. அக்காலத்தில் பிரிட்டிஷ் அறிஞர்கள் இந்தியாவில் கல்வி வளர்ச்சி குறித்து இருவேறு கருத்துக்களை கொண்டிருந்தனர்.  LORD MACAULAY மெக்காலே பிரபு கீழ்த்திசைவாதிகள் (ஓரியண்டலிஸ்ட்) என்றழைக்கப்பட்ட குழுவினர் இந்திய மொழிகளும் கீழ்த்திசை பாடங்களும் வளர்க்கப்பட வேண்டும் என வாதிட்டனர். மற்றொரு பிரிவினரான ஆங்கிலவாதிகள் (ஆங்கிலிசிஸ்ட்) மேலை நாட்டு அறிவியலும் இலக்கியமும் ஆ...

MECCALAY EDUCATION IN BRITISH ERA TO MODI ERA

Image
  MECCALAY EDUCATION IN  BRITISH ERA TO  MODI ERA .மெக்காலே பிரபு  1813-ல் முதன்முறையாக இந்திய மக்களுக்குக் கல்வி அளிக்கும் பொறுப்பைத் தனது பணியாக ஏற்பதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. கல்வி சாசனம் (Charter Act of 1813) எனும் ஆவணத்தையும் வெளியிட்டது. அதற்காக அன்று உடனடியாக ரூ. 1 லட்சம் ஒதுக்கப்பட்டதும், அது கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டதும் வரலாறு. ஆங்கிலக் கல்வியே தனது கல்வி என இந்த ஆவணம் பகிரங்கமாக அறிவித்தது. கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்க்க, இந்திய மக்களுக்குச் சாதி, மதம் உள்ளிட்ட தகுதி தேவையில்லை. பிரிட்டிஷ் கல்வி நிறுவனக் கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்படும் என அதன் இரண்டாம் ஷரத்து குறிப்பிடுகிறது. சமஸ்கிருதம் மற்றும் அரபு மொழிகளில் புத்தகங்களை வெளியிடுவதற்கான ஆதரவை திரும்பப் பெற வேண்டும் என்று மக்காலே வாதிட்டார் 1834-ல் மெக்காலே இந்தியா வந்தார். அவருடன் ஆலோசனை நடத்திய கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபு, இந்தியக் கல்விக்கு – பொதுக் கற்பித்தல் முறை எனப் பெயரிட்டு, அவரையே அதன் தலைவராக்கினார். எண்ணத்திலும் அறிவாற்றலிலும் கலாச்சாரத்த...

FEMALE EDUCATION IN VIRUDHUNAGAR

Image
FEMALE EDUCATION IN VIRUDHUNAGAR விருதுநகர் பெண்களுக்கு கல்வி வழங்கிய மாங்கா மச்சி! *************************** மங்காவின் மச்சி வீடு என்ற பெயரே மருவி இப்பொழுது “மாங்கா மச்சி” என்று அழைக்கப்படுகிறது. மனிதருள் மாணிக்கமாம் திரு.திருவாலவாய நாடார் அவர்கள் “பெண்களே நாட்டின் கண்கள்” என்றுணர்ந்து, பெண்கள் கல்வி கற்றால் நாடே வளம் பெறும் என்பதை வலியுறுத்தி, வீடு வீடாகச் சென்று வாதிட்டபோது சாணி உருண்டையால் அடி வாங்க நேர்ந்தது. பெண்கள் படிக்க வேண்டும் என்ற வாசக அட்டையை தன் நெஞ்சிலும், முதுகிலும் தொங்க விட்டுக் கொண்டு வீதியில் நடந்து சென்றார். இதற்கு அவர் பெற்ற பரிசு, கேலியும் ஏளனமும். அன்னாரின் கடுமையான முயற்சிக்குப் பின் தன் மனைவி மங்கம்மாள் வாழ்ந்த இடத்திலேயே பள்ளியமைக்க விரும்பி, தன் வீட்டையே கொடுத்த கொடையாளர். மங்காவின் மச்சி வீடு என்ற பெயரே மருவி இப்பொழுது “மாங்கா மச்சி” என்று அழைக்கப்படுகிறது. பாக்கு வியாபாரத்திலே கிடைத்த பங்கை, பள்ளிக் கட்டிட நிதிக்கு அளித்தார். பள்ளி கட்டிடப் பணிக்கு வீதியில் கிடக்கின்ற கல்லையும், மண்ணையும் தன் தோளில் சுமந்து பணி செய்தார். தன் முயற்சியின் ...

FIRST EDUCATION FROM IRULAR CASTE

Image
FIRST EDUCATION  FROM  IRULAR CASTE இருளர் சமூகத்தின் முதல் ஒளி! சாதனைகள் அவ்வளவு எளிதாக யாருக்கும் கைகூடுவதில்லை. அதுவும் ஆண்களைவிடப் பெண்களின் வெற்றி மிக அவசியம். `இந்த உலகம் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும்தான்’ என சமதர்மம் பேசினாலும், ஒரு பெண்ணின் வளர்ச்சி அவ்வளவு எளிதாக நடந்துவிடுவதில்லை. கல்வியில் தொடங்கி வேலைவரை ஆணின் முகம், பெண்களை மறைத்தே வைத்துவிடுகிறது. எல்லா வாய்ப்புகளை யும் கைக்கொள்ளும் பெண்களுக்கே இதுதான் நிதர்சனம். அப்படி இருக்கையில் எந்த வசதியும் இன்றி, வாய்ப்புகள் மறுக்கப்படும் இடத்திலிருந்து ஒரு பெண் சாளரம் திறந்து, காற்றின் குளிர்ச்சியை உணர்கிறாள் என்றால், அது ஒட்டுமொத்தச் சமூகத்துக்கான வெற்றி. அப்படிப்பட்ட ஒரு பெண் மாணவி ரோஜா. பழங்குடி இருளர் சமுதாயத்தின் முதல் முனைவர் பட்டம் பெறப்போகிறவர். திண்டிவனம் அருகே மரூர் இருளர் குடியிருப்பைச் சார்ந்த ரோஜாவின் பெற்றோர் இருவருமே செங்கல் சூளையில் கூலிவேலை செய்பவர்கள். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பிஹெச்.டி சேர்ந்தி ருக்கிறார் ரோஜா. டெக்னாலஜி யுகத்தில், சோஷியல் மீடியாவில் இளைஞர்கள் குடிகொண்டிருக...

A Shepherd Girl In Morocco, Najat Vallaud-Belkacem, France's Education Minister!

Image
Once A Shepherd Girl In Morocco,  Najat Vallaud-Belkacem Is Now France's  Education Minister! ‘வாழ்க்கை என்பது பெரும் போராட்டம்தான்; அதற்காகப் போராடாமல் விட்டுவிட முடியுமா?’ என்பதை இளம் வயதிலேயே உணரத் தொடங்கியவர் நஜா வெலு பெல்காசம் (Najat Vallaud-Balkacem). இன்று ‘பிரான்ஸின் புதிய முகம்’ எனக் கொண்டாடப்படும் இவர் வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் ஒரு குக்கிராமத்தில் வறுமைப் பிடியில் வாடிய இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். அப்பா கட்டிடத் தொழிலாளர்; உடன் பிறந்தவர்கள் ஆறு பேர். இளந்தளிர் நஜா நான்கு வயதில் ஆடு மேய்க்க விடப்பட்டார். வறுமை வாழ்க்கை விளிம்புக்குத் தள்ள ஆப்பிரிக்காவை விட்டுப் புலம்பெயர்ந்து பிரான்ஸில் குடியேறும் நிலைக்கு நஜாவின் குடும்பம் தள்ளப்பட்டது. எதையும் சந்திப்பேன்! பிறந்த பூமியை, உறவினரை, நண்பர்களை, பழக்கப்பட்ட கலாச்சாரத்தை திடீரென்று உதறிவிட்டு முற்றிலும் அந்நியமான சூழலில் வாழ்க்கையைத் தொடங்குவது மிகப் பெரிய சவால்! பள்ளிப் பாடங்களைப் படிப்பது முதல் பிரெஞ்சு மொழியைப் பேசுவது அதன் கலாச்சாரத்தைப் பழகிக்கொள்வதுவரை திகைப்பும் தடுமாற்றமும்...

EDUCATION IN INDIA DURING THE BRITISH PERIOD

Image
EDUCATION IN INDIA  DURING THE BRITISH PERIOD Education is a powerful tool to unlock the golden door of freedom which can change the world. With the advent of British, their policies and measures breached the legacies of traditional schools of learning and this resulted in the need for creating class of subordinates. To achieve this goal, they instituted a number of acts to create an Indian canvas of English colour through the education system. Initially, British East India Company was not concerned with the development of education system because their prime motive was trading and profit-making. To rule in India, they planned to educate a small section of upper and middle classes to create a class “Indian in blood and colour but English in taste” who would act as interpreters between the Government and the masses. This was also called the “downward filtration theory”. The following steps and measures were taken by the British for the development of Education in In...