Posts

Showing posts with the label EDAPPADI

POLITICS IN KITCHEN

Image
கோலோச்சும் கிச்சன் கேபினட்! * கருணாநிதி முதல்வரான பிறகு, உள்நாட்டுப் பயணம் முதல் வெளிநாட்டுப் பயணம் வரை அவரின் மனைவி தயாளு அம்மாளை அழைத்துச்செல்லும் வழக்கத்தை ஆரம்பித்தார். அப்படிச் செல்லும் இடங்களில் கட்சி நிர்வாகிகளின் அறிமுகம் தயாளு அம்மாளுக்குக் கிடைக்க, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிலர் காரியம் சாதித்துக்கொள்ளும் வழக்கம் தி.மு.க-வில் ஆரம்பித்தது.* முதல்வராகக் கருணாநிதி இருந்த காலத்தில் மதிய உணவிற்கு அவர் போகும் இடம் சி.ஐ.டி காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீடு. ஆனால், காலை முதலே அந்த வீடு பரபரப்புடன் காணப்படும். அதற்குக் காரணம், மதியம் கருணாநிதி சாப்பிட வரும்போது தங்கள் கோரிக்கையை அவரிடம் சேர்க்க வேண்டும் என்று பலரும் பவ்யமாகக் கோரிக்கை வைத்துவிட்டு இடத்தைக் காலி செய்துவிடுவார்கள் என்பதுதான் * கோபாலபுரத்தில் கருணாநிதியோடு துரைமுருகன், ஆற்காட்டார் போன்றவர்களும் காலை டிபன் உண்ணும் பழக்கம் அப்போது இருந்தது. அந்த நேரத்தில் கருணாநிதியிடம் சொல்லத் தயங்கும் விஷயங்களைத் தயாளு அம்மாள் மூலம் மூத்த நிர்வாகிகள் சொல்லவைத்த சுவாரஸ்ய சம்பவங்கள் பலநேரங்களில் நடந்துள்ளது. இப்போது அதே...