Posts

Showing posts with the label /NACHIMUTHU

POLLACHI A.B.T HISTORY /NACHIMUTHU GOUNDAR

Image
POLLACHI A.B.T HISTORY /NACHIMUTHU GOUNDAR மூன்று தலைமுறைகளைக் கடந்து வெற்றிநடை போடும் A B T (ஏ.பி.டி) நிறுவனம் - ஓர் சிறப்பு பார்வை கொங்கு மண்டலத்தில் தொழிற் துறை வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் பலராக இருந்தாலும், அவர்களுக் கெல்லாம் தலைமகனாக விளங்கியவர் பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர். அன்றைக்கு அவர் ஆரம்பித்த ஏ.பி.டி. நிறுவனம் இன்று மூன்று தலைமுறைகளைக் கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது. இன்றைக்கு இருப்பது மாதிரி இல்லாமல், நூறு ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சிறிய ஊராகவே இருந்தது பொள்ளாச்சி. இந்த ஊரில் பழனி கவுண்டருக்கும் செல்லம்மாளுக்கும் செல்லக் குழந்தையாக 1902-ல் பிறந்தார் நாச்சிமுத்து. பழனி கவுண்டர், சுந்தரராஜ அய்யங்காருடன் இணைந்து குதிரை வண்டிப் போக்குவரத்தை நடத்தி வந்தார். பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு, பொள்ளாச்சியிலிருந்து பழநிக்கு ஆட்களையும், பொருட்களையும் ஏற்றிச் செல்வது இந்த குதிரை வண்டிப் போக்குவரத்தின் முக்கிய வேலை. பஸ்களும், ரயில்களும் வராத அந்த காலத்தில் மக்கள் நம்பி இருந்தது இந்த குதிரை வண்டிப் போக்குவரத்தைதான். அரசாங்கம் நடத்திய தபால் துறையும் இந்த குதிரை வண்டி...