SPUTNIK 1 -SPACE TRAVEL BY RUSSIA
SPUTNIK 1 -SPACE TRAVEL BY RUSSIA விண்ணை தொட்ட லைக்கா! விண்வெளியில் சஞ்சரித்த லைக்கா எனும் நாய் பற்றி எழுதியுள்ளேன். ரஷ்யாவைப் பற்றி எதிர்மறை விமர்சனம் வரும் இந்நாட்களில் இக் கட்டுரை இந்திய – ரஷ்ய உறவில் ஒரு புதுத்தென்றலை வீசிச்செல்லும் என்பது என் எண்ணம். பக்கச் சார்பற்று இக்கட்டுரையைப் புனைந் துள்ளேன். விண்வெளி ஆதிக்கத்திற்கு ரஷ்யா செய்த சேவை உலகு மறக்க முடியாதது. கட்டுரையை மேலே படியுங்கள். 1957ம் ஆண்டு….. அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் விண்ணாதிக்கத்தில் போட்டிப் போட்ட காலம் அது. இரு வல்லரசுகளும் விண்ணை ஆள விஞ்ஞான வளர்ச்சியின் துணைகொண்டு பல மில்லியன் பணத்தைக் கொட்டித் தீர்த்த நாட்கள் அவை. சோவியத் ஒன்றியம் எனும் கட்டமைப்பின் கீழ் ருஷ்ய நாடுகள் கூட்டுக் குடும்பம் நடத்திய ஐம்பதுகள். விண்வெளியில் முதல் மானுடனை யார் அனுப்புவது எனும் பனிப்போர் உக்கிரமடைந்திருந்தது. 83 கிலோ எடையுள்ள ஸ்புட்னிக் 1 எனும் விண் கோளை அக்டோபர் 1957ல் சோவியத் ஒன்றியம் விண்ணுக்கு அனுப்பி யிருந்தது. அது உலகை மூன்று வாரங்களுக்கு வெற்றிகரமாக வலம் வந்து மின்கலங்கள் சக்தியிழந்ததனால் ‘...