Posts

Showing posts with the label MANNA DEY

MANNA DEY ,HINDI SINGER BORN 1919 ,MAY 1- 2013 OCTOBER 24

Image
  MANNA DEY ,HINDI SINGER BORN  1919 ,MAY 1- 2013 OCTOBER 24 மன்னா தே (Manna Dey, வங்காள: মান্না দে) என்று பெரிதும் அறியப்பட்ட,பிரபோத் சந்திர தே (1 மே, 1919 - 24 அக்டோபர் 2013), இந்தி மற்றும் வங்காள திரைப்படங்களில் 1950 - 1970 காலகட்டங்களில் மக்களால் மிகவும் விருப்பப்பட்ட பின்னணி பாடகராவார். தமது வாழ்நாளில் 3500 பாடல்களுக்கும் கூடுதலாக பாடல்களை பதிவு செய்துள்ளார். 2007ஆம் ஆண்டுக்கான தாதாசாஹெப் பால்கே விருது பெற்றவர்.பத்மஸ்ரீ.பத்மபூசண் விருதுகள் பெற்றவர். வாழ்க்கை வரலாறு பூர்ண சந்திர தே மற்றும் மகாமாயா தே தம்பதியினருக்கு பிறந்தார். தமது தந்தையின் உடன்பிறப்பான இசையாசிரியர் கே சி தேயின் தாக்கத்தால் இசையின்பால் ஆர்வமிக்கவரானார். இந்து பாபர் பாடசாலையில் துவக்கக் கல்வியும்,ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரி பள்ளியிலும் பின் கல்லூரியிலும் உயர்கல்வியும் பெற்றார்.[1] வித்யாசாகர் கல்லூரியில் பட்டப்படிப்பு மேற்கொண்டார். கே சி தே மற்றும் உசுதாது தாபீர் கான் இவர்களிடம் இந்துஸ்தானி இசையை முறையாக பயின்றார். கல்லூரிகளுக்கிடையேயான இசைப்போட்டிகளில் முதல் பரிசுகள் பெற்று வந்தார். 1942ஆம் ஆண்டு மும்பை சென்...