Posts

Showing posts with the label SENTHILNATHAN

RASIGAMANI ,KANAGA SENTHILNATHAN EELAM WRITER NOVEMBER 5,1916 - NOVEMBER 16,1977

Image
 RASIGAMANI ,KANAGA SENTHILNATHAN EELAM WRITER  NOVEMBER 5,1916 - NOVEMBER 16,1977 .இரசிகமணி கனக செந்திநாதன் (நவம்பர் 5, 1916 - நவம்பர் 16, 1977)[1] ஈழத்து எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் எனப் பல்துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டியவர். தன் கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். கரவைக்கவி கந்தப்பனார் என்ற புனைபெயரில் ஈழத்துப் பேனாமன்னர்களை அறிமுகம் செய்தவர். "நடமாடும் நூல்நிலையம்" என ஈழத்து இலக்கிய உலகில் பேசப்பட்டவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். வாழ்க்கைச் சுருக்கம் கனக செந்திநாதனின் இயற்பெயர் திருச்செவ்வேழ். இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம், குரும்பசிட்டி ஊரில் கனகசபை, பொன்னம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். ஆரம்பத்தில் குரும்பசிட்டி மகாதேவா வித்தியாசாலையிலும், பின்னர் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையிலும் கல்வி கற்றார். இளமையிலேயே தந்தையை இழந்த கனக செந்திநாதன், 1937 - 38ல் திருநெல்வேலி சைவ ஆசிரிய கலாசாலையில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மாணவராகப் படித்து வெளியேறி ஆசிரியராகப் பணியாற்றினார்.[2] எழுத்துலகில் சிறுகதை, நாவல், நாடகம், விமர...