TRIANGLE OF KAMARAJ,INDHIRA GANDHI ,AND CHO
TRIANGLE OF KAMARAJ,INDHIRA GANDHI ,AND CHO பிரதமராக அன்று இருந்த இந்திராகாந்தியை நான் சந்தித்த நிகழ்வு எதிர்பாராத ஒன்றுதான். ‘துக்ளக்’கை துவக்கி அப்போது இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. இந்திராகாந்தியை நான் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த நேரம் அது. பிரஸ் இன்பர்மேஷன் பீரோ அதிகாரி “பிரதமரைச் சந்திக்க உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்கள். அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறோம்” என்று என்னிடம் சொன்னதும் எனக்கு ஆச்சரியம். “எனக்கு விருப்பம் தான். ஆனால் பிரதமர் சம்மதிப்பாரா?” “அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் அந்த அதிகாரி. பிரதமர் அலுவலகத்திற்கு என்னைக் கடிதம் எழுதச் சொன்னார். எனக்கு என்னவோ இதற்குப் பின்னால் ஏதோ ஒரு நோக்கம் இருப்பதாகத் தோன்றிக்கொண்டே இருந்தது. ஏனென்றால் காமராஜரின் ஸ்தாபன காங்கிரசும், இந்திரா காங்கிரசும் இணைவது தேவை என்று கருதிய நான் அது பற்றி எழுதி இருந்தேன். அது குறித்து காமராஜரிடமும் விவாதித்தேன். நீண்ட நேரத்திற்குப் பிறகு அகில இந்திய ரீதியில் இணைப்பு என்றால் தான் ஒப்புக்கொள்ள முடியும். தமிழ்நாட்டில் மட்டும்தான் என்றால் தன்னால் ஏற்க முடியாது என்று...