Posts

Showing posts with the label AUGUST 27

M.M.DHANDAPANI DESIGAR BORN 1908 AUGUST 27 - 1972 JUNE 26

Image
M.M.DHANDAPANI DESIGAR   BORN 1908 AUGUST 27 - 1972 JUNE 26 எம்.எம்.தண்டபாணி தேசிகர் (பிறப்பு: ஆகத்து 27, 1908 தமிழிசை உலகிலும், திரைப்படங்கள் மூலம் அழியாத புகழ் வாய்ந்த பல தமிழ்ப் பாடல்களைப் பாடியும் புகழ் பெற்று விளங்கியவர் எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்கள். மதுரை முத்தையா தண்டபாணி தேசிகர் என்பது இவருடைய முழுப் பெயர். இவருடைய பன்முகப் பெருமைகள் தமிழிசை, திரைப்படங்கள், பாடலாசிரியர் போன்ற பல வகைகளிலும் வெளிப்பட்டு மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றவர். இவருடைய பாடல்களைப் பாடாத தமிழ் இசை மேடைகளே இல்லையெனலாம். "தாமரைப் பூத்த தடாகமடி" என்கிற பாட்டைப் பாடிய இவரை ஒரு காலத்தில் தமிழிசை மேடைகளில் நினைவுகூராதவர்களே இல்லை. தஞ்சை மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள திருச்செங்காட்டாங்குடி என்பது இவர் பிறந்த ஊர். இந்த ஊரின் பெயரைச் சொன்னதும் பிள்ளைக் கறி சமைத்த சிறுத்தொண்டரின் நினைவு வரவேண்டுமே! கல்கியின் "சிவகாமியின் சபதம்" நெடுங்கதையில் பல்லவ மன்னன் நரசிம்ம பல்லவன் வாதாபி மீது படையெடுத்து முற்றுகையிட்ட போது, அவன் படையில் தளபதியாக இருந்த சிறுத்தொண்டர் அந்தக் கோட்டை வாயிலில...

ROWLAND HILL , MODERN POSTAL INTRODUCER PASTING STAMPS ON COVER BORN 1795 DECEMBER 3- 1879 AUGUST 27

Image
ROWLAND HILL , MODERN POSTAL INTRODUCER PASTING STAMPS ON COVER BORN 1795 DECEMBER 3- 1879 AUGUST 27 ரோலண்ட் ஹில் (Rowland Hill, டிசம்பர் 3, 1795 - ஆகஸ்ட் 27, 1879), நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இவர் இங்கிலாந்தின் வோசெஸ்டர்ஷயரிலுள்ள கிடெர்மின்ஸ்டெர் என்னுமிடத்தில் பிறந்தவர். ரோலண்ட் ஹில், சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 1837 ஆம் ஆண்டு, தனது 42 ஆவது வயதில் "தபால் அலுவலகச் சீர்திருத்தம்: இதன் முக்கியத்துவமும் நடைமுறைச் சாத்தியமும்" ("Post Office Reform: its Importance and Practicability") என்ற அவரது பிரபலமான பிரசுரத்தை வெளியிட்டார். இப் பிரசுரத்தில் அவர் அதிகாரப்பூர்வ, முன்னரே அச்சடிக்கப்பட்ட கடித உறைகளையும், ஒட்டத்தக்க தபால்தலைகளையும் வெளியிடவேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டினார். பிரித்தானியத் தீவுகளுக்குள் எந்த இடத்துக்கும் அரை அவுன்ஸ் நிறையுள்ள தபாலை அனுப்புவதற்குக் குறைந்த சீரான கட்டணமான ஒரு பென்னியை அறவிடவேண்டுமெனவும் அவர் ஆலோசனை வழங்கினார். இதற்கு முன்னர் தபால் விநியோகம் செய்யப்பட வேண்டிய தூரத்தையும், கடிதத்த...

MARGARET BOURKE- WHITE - LIFE MAGAZINE FIRST FEMALE REPORTER/PHOTOGRAPHER BORN 1904 JUNE 14-1971 AUGUST 27

Image
MARGARET BOURKE- WHITE - LIFE MAGAZINE  FIRST FEMALE REPORTER/PHOTOGRAPHER BORN  1904 JUNE 14-1971 AUGUST 27 ”லைஃப்” பத்திரிகை. மார்கரெட் புருக் ஒயிட் (Margaret Bourke-White) என்ற பெண் புகைப்படப் பத்திரிகை யாளரை இந்தியாவுக்கு....... நூறு ரூபாய் காமிராவும்.. காந்தி புகைப்படமும்...! -  காந்தியின் வாழ்க்கையைச் சித்திரமாக ஆவணம் செய்தது, எப்போதுமே அவரது அருகாமையில் இருந்த அவரது பேரன் கனு காந்தியின் கேமரா. Kanu's camera had the ability to artificate the life of gandhi, a life that's mentioned nowhere in his experiment with truthGandhi's Photographs by his grand nephew kanu gandhi | சாந்தமே உருவான முகத்துடன் கையில் நாளிதழோடு ராட்டையின் முன்பு காந்திஜி அமர்ந்திருக்கும் இந்தப் புகைப்படம் மிகவும் பிரபலமானது. அவரது அஹிம்சை, ஒத்துழையாமை, கிராம சுயராஜ்ஜியம், ஆங்கிலேயருக்கு எதிராக அவர் எடுத்த ஆயுதமான இராட்டை என அனைத்தையும் ஒருசேர கொண்டிருக்கும் இந்தப் புகைப்படம் உலகளவில் அஹிம்சையின் முகமாக இன்றளவும் அவரை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது. 1946-ம் ஆண்டு பிற்பக...