Posts

Showing posts with the label கே.பி.சுந்தராம்பாள்

MUSIC LEGEND SINGER K.B.SUNDARAMBAL

Image
கந்தர்வ கானக்குயில் இசையரசி கே.பி.சுந்தராம்பாள் Sathish K.L நம் தமிழ் கடவுள் முருகன் வரலாறு என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது திருவிளையாடல் புராணமும், “பழம் நீயப்பா… ஞானப்பழம் நீயப்பா….” என்ற பாடலும் தான். ஔவையார் காலத்தில் அவரே இவ்வளவு ரம்மியமான குரலில் பாடினாரா என்பது நமக்குத் தெரியாது. மேலும் பக்தி இலக்கிய காலகட்டத்தின் சங்கப் புலவர் ஔவையாரின் முகம் இப்படித்தான் இருக்கும் என்ற அழியா பிம்பத்தை  தமிழக மக்களின் நெஞ்சில் நீக்கமற நிறைத்தவர். ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இவற்றில் கே.பி.எஸ் பாடியவை மட்டும் 30. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கி நடித்த முதல் நடிகை கே.பி. சுந்தராம்பாள். இன்றும் நம் காதுகளில் தேனாய் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த தெளிந்த நீரோடை போன்ற கணீர் கானக்குரலுக்குச் சொந்தக்காரர் கே.பி.சுந்தராம்பாள். நாடகக்கலைஞர், திரைப்படப் பாடகர்,  திரைப்பட நடிகை,  ஆன்மீகவாதி, மற்றும் அரசியல்வாதி என்று பன்முகத்திறன் கொண்ட ஒரு ஆளுமை அவர் என்றால் அது மிகையாகாது. வறுமையின் கோரப்பிடியில் தன் வாழ்வைத் தொடங்கிப் பின்னாளில் ஒரு திரைப்படத்திற்கு அவர் வாங்...