PITHA MAGAN - REAL STORY OF A MAN, LIVING IN CEMETERY
PITHA MAGAN - REAL STORY OF A MAN, LIVING IN CEMETERY பிதாமகன் திரைப்படம் இவருடைய வாழ்க்கையை அடிப்படையாய் கொண்டது ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து பிணங்கள் எரிந்து கொண்டே யிருக்கும் சுடுகாடு என்பார்கள் மதுரை தத்தனேரி சுடுகாட்டை. மின் மயானம் இருந்தாலும்கூட, சடங்கு, சம்பிரதாயங்களில் அதிக நாட்டமுள்ள வர்கள், பாரம்பரிய முறைப்படியே ‘காரியம்’ செய்ய விரும்புவதால், ஐம்பது சதவீத உடல்கள் இன்னமும் இங்கு பழைய முறைப்படியே எரியூட்டப்படுகின்றன. 24 மணி நேரமும் இயங்கும் இந்தச் சுடுகாட்டிற்காக, மதுரை மாநகராட்சி 3 ஷிஃப்ட்டாக பணியாளர்களை பணியமர்த்தியுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவர்களுக்கு மத்தியில், கோயில் களுக்கு காளைகளை நேர்ந்து விடுவதைப் போல இந்தச் சுடுகாட்டிற் கென்றே நேர்ந்துவிடப்பட்டிருக்கிறார் ஒருவர். 50 வயதுக்குரிய தோற்றம். கருத்த உருவம். கண்கள், மூக்கைத் தவிர முகத்தை முழுக்க ஆக்கிரமித் திருக்கும் கருகரு தாடி. அழுக்குச் சட்டை. உடலில் அங்குலம் தப்பாத காயத்தழும்புகள். திடீரென பார்த்த...