Posts

Showing posts with the label Madurai

MADURAI MANI IYER BIOGRAPHY 1912 OCTOBER 25 -JUNE 8,1968

Image
  MADURAI MANI IYER BIOGRAPHY 1912 OCTOBER 25 -JUNE 8,1968 மதுரை மணி ஐயர் ( அக்டோபர் 25 ,  1912  -  ஜூன் 8 ,  1968 )  கருநாடக இசையுலகில்  புகழ்பெற்ற ஒரு இசைக்கலைஞர்.  சுவரம்  பாடுவதில் வல்லுநராகக் கருதப்பட்டார். வாழ்க்கைக் குறிப்பு [ தொகு ] இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன், காலப்போக்கில் இது சுருங்கி மணி ஆனது.  மதுரையில்  எம். எஸ். இராமசுவாமி ஐயர், சுப்புலக்சுமி ஆகியோருக்குப் பிறந்தவர். தகப்பனார் இராமசுவாமி ஐயர், அக்காலத்தில் பிரபலமான இசைக்கலைஞரான வித்துவான் புஷ்பவனத்தின் சகோதரர். சிறு வயதிலேயே கருநாடக இசையை முறையாகக் கற்றுக் கொண்டார். இவரது முதலாவது ஆசிரியர் ஸ்ரீ ராகம் பாகவதர். ராகம் பாகவதர்  எட்டயபுரம்  ராமச்சந்திர பாகவதருடைய மாணவர்.  அரிகேசநல்லூர் முத்தையா பாகவதருடன்  தொடர்பு ஏற்பட்டு அவரது மதுரை தியாகராஜ சங்கீத வித்தியாலயத்தில் மாணவராகச் சேர்ந்தார். மணி ஐயர் தம் பெருநோய் காரணமாகத் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆங்கிலக் கல்வியில் தீவிரமான ஈடுபாடு கொண்டவர் மணி அய்யர். ஆங்கில இலக்கியத்தை விரிவாக வாசித்தவர். தமி...

MADURAI -JALLIKATTU BACKED BY LOVE STORY OF PAST 400 YEARS

Image
  MADURAI -JALLIKATTU BACKED  BY LOVE STORY OF PAST 400 YEARS : மதுரை  ஜல்லிக்கட்டு வரலாற்றில் 400ஆண்டுகள்  பழமையான  ஒரு உண்மையான காதல்  கதையும்   உண்டு. அதில் நிகழ்ந்த துரோகமும், அக்கதையின் நாயகி உடன்கட்டை மரணமும் நம்மை உலுக்குகின்ற ஒன்றாகும . மதுரை மாவட்டத்தில் சொரிநாயக்கன்பட்டியைச் (இன்றைக்கு அது சொரிக்காம்பட்டி) சேர்ந்தவர் கருத்தமாயன். நிலபுலன்களோடு வாழ்கின்ற செல்வந்தர்.   அவரது கடைக்குட்டி அழகாத்தேவன் புஜபல பராக்கிரமுடைய இளைஞன்.  ஆனால் பொறுப்பில்லாமல் தனது நண்பன்  மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற நாடோடி. அழகாத்தேவனுக்கு கால்கட்டு (கல்யாணம்) போட்டுவிட்டால் பையன் ஒழுங்காக இருப்பான் என்று பெரியவர்கள் கூறியதைக் கேட்ட கருத்தமாயன் பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கினான். நாகமலைக்கு அருகேயுள்ள கீழக்குயில்குடியில் வாழ்ந்து வரும் கருத்தமலையின் மகள் ஒய்யம்மாள் குறித்து அறிந்து, தன் செல்வாக்குக்கு சமமாக இல்லையெனினும் கருத்தமாயன், கருத்தமலையின் வீட்டிற்கு பெண் பார்க்கச் செல்கிறார்.  கருத்தமலைக்கோ ஏக மகிழ்ச்சி. தனது மகளைப் பெண் பார்க்க...

MADURAI ,VAIDYANATHA IYER FREEDOM FIGHTER BORN 1890 MAY 16 -FEBRUARY 23,1955

Image
  MADURAI ,VAIDYANATHA IYER FREEDOM FIGHTER   BORN 1890 MAY 16 -FEBRUARY 23,1955 பெரியார் தன்னுடைய  தோல்வியை ஒப்புக்கொண்ட தருணம் எது  பெரியார்பவுண்டேஷன் பூமி பூஜைக்கு சாஸ்திர முறைப்படி சமஸ்கருத்த்துடன் வேத விற்பன்னர்களை கொண்டு துவங்கி வைக்கப்பட்ட போது.என்ன ஒரு மாய்மாலம்… வெட்கக்கேடு… ஊரெல்லாம் தாலி அறுத்த, ராமசாமி சொத்தான 20000 கோடியை அனுபவக்கும், வீரமணி, தன் பேத்திக்கு தாலி கட்டி அழகு பார்த்த போது தனியாக சாஸ்திர முறைப்படி சமஸ்கிருத மந்திரங்களுடன் தாலி கட்டி கொண்டதாக கேள்வி பட்டேன் ராமசாமியின் தோல்விக்கு வேறென்ன காரணம் வேண்டும்? பாம்பைக் கண்டால் விடு பாப்பானைக் கண்டால் அடி' என்று துவேஷப் பிரச்சாரம் செய்தும், பிராமணர்களை எதிர்த்தும் அவமதித்தும் பேசிவந்த ராமசாமி நாயக்கர் பிராமணராலேயே காப்பற்றப்பட்ட சம்பவத்தைப் பார்க்கலாம். 'மதுரை வைத்தியநாத ஐயர்' - இந்த பெயரை எங்கோ கேள்விப்பட்டது போல் இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். இல்லை என்றால் மேலே படிக்கவும். தஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணாம்பேட்டையில் அருணாசலம் அய்யர்-லட்சுமி அம்மாள் மகனாகப் பிறந்த வைத்தியநாதய்யர் மதுரை சேதுபதி...

STONE MANDAPAM OF MADURAI MADANA GOPALASAMY TEMPLE IN AMERICA ,PHILADELPHIA,1912

Image
  STONE MANDAPAM OF MADURAI , MADANA GOPALASAMY TEMPLE  IN AMERICA ,PHILADELPHIA1912 சாமி சிலைகள் மட்டுமல்ல, #கோவில் #மண்டபமே வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்ட உண்மை தெரியுமா உங்களுக்கு? ஆச்சர்யமாக இருக்கலாம். இது தமிழகத்தில் அதுவும் கோவில் நகரமாகச் சொல்லப்படுகிற மதுரையில் நடந்திருக்கிறது. அறநிலையத்துறையின் நிர்வாகத்திற்குப் பிறகு தான் எல்லா திருவிளையாடல்களும் நடந்தன என்று வாதிடுகிறவர்கள்-கோவில்கள் தனியார் வசம் இருந்தபோது எப்படி இருந்தன என்பதையும் சற்றுக் கவனிக்கலாம். வாங்க…பார்க்கலாம். மதுரை பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கிறது மதனகோபால சுவாமி திருக்கோவில். நாநூறு ஆண்டுகளுக்கு முந்தைய கோவிலில் கலையழகு ததும்பும் சிற்பங்கள்; உள்ளே நுழைந்ததும் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் வலதுபுறம் வெற்றிடமாய் கிடக்கிறது. அதற்கருகில் சமீபகாலத்திய சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. இதே வெட்டவெளியை முன்பு அபூர்வ வனப்பால் நிரப்பியிருந்தது, நுணுக்கமான அழகு மிளிர்ந்த அற்புதமான கல் மண்டபம். அந்த அபூர்வம் இப்போது எங்கே போனது? பிரிட்டிஷாரின் ஆட்சி நடத்த காலம். சிற்பங்களுக்குப் பெயர்போன மதுரை...

FAMINE AND KUNJARAMMA `S CHALLENGE ,POOR DEATH ,MADURAI

Image
  FAMINE AND KUNJARAMMA `S CHALLENGE ,POOR DEATH ,MADURAI ஒரு மாத #லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாது வருடப் பஞ்சம் என்ற பெயரையாவது  கேள்விப்பட்டதுண்டா? 1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம். வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைகூட தோண்டி எடுத்து திண்று தீர்த்தபின்னும் தீராத பஞ்சம், முருங்கை கீரையை மட்டுமே மூன்று வேளையும் அவித்து தின்று உயிர் பிழைத்துக்கிடந்த கொடிய பஞ்சமது. கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது . பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம் அம்மாவினுடையது.  குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி. மதுரையில் கொடிகட்டிப் பறந்த அழகே வடிவான  தாசி. பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தவள். மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. வடக்கு ஆவணி ம...