RANJAN -UNFORGETABLE ACTOR
RANJAN -UNFORGETABLE ACTOR நடிகர் #ரஞ்சன் அவர்கள் ( பகுதி 1) மறைந்து போன மறக்க முடியாத திரைப்பட நடிகரில் ஒருவர். இவர் ஒரு சகலகலா வல்லவர். பாடகர், டான்ஸ் மாஸ்டர், வாள் வீச்சு வீரர், நாடக நடிகர், வில் வித்தையில் திறமை சாலி, ஓவியக்கலைஞர், கிரிக்கெட் வீரர், குதிரை சவாரியில் வல்லவர், நீச்சல் வீரர், எம்.லிட்., பட்டதாரி, பத்திரிகையாளர், மேஜிக் நிபுணர், எழுத்தாளர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக விமானம் ஓட்ட கற்றவர். ரஞ்சனின் இயற்பெயர் வெங்கடரமண சர்மா. ‘ரமணி’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். இவரது பூர்வீகம் ஸ்ரீரங்கம். ரஞ்சன் 2–3–1918–ந் தேதி சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். ரஞ்சனின் தந்தை ராமநாராயண சர்மா; தாய் அலமேலு. இத்தம்பதிகளுக்கு பத்து பிள்ளைகள். அதில் ஒருவர் ரஞ்சன். ரஞ்சனின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி சென்னையில் தான். தந்தை சர்மாவுக்கு இசை அறிஞர்கள் தொடர்பு அதிகம். தன் பிள்ளைகள் உயர்ந்து தரமான நிலையில் இருந்ததில் அவருக்கு ஆத்ம திருப்தி. ரஞ்சனின் இளம் வயதிலேயே தனது திறமையின் பன்முகங்களை குறிப்பாக இசைத்துறையிலிருந்த ஈடுபாட்டினை வெளிப்படுத்தினார். இதனால் உந்தப்பட்ட சர்மா, ரஞ்சனை இசைத்த...