Posts

Showing posts with the label வாழ்க்கை

கிருபானந்த வாரியாரின் வாழ்க்கை வரலாறு

Image
கிருபானந்த வாரியாரின் வாழ்க்கை வரலாறு  சிவசுப்ரமணியசுவாமி கோவில்  திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு மிகவும் பிடித்த கோவிலாக விளங்குகிறது,  அவர் பல சொற்பொழிவுகளை நமது கோவிலில் நடத்தி இருக்கிறார்,  நமது குமாரசுவாமிபேட்டை இருக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒருவர் நமது கிருபானந்தவாரியார் சுவாமிகள், அவர் ஒரு சில சொற்பொழிவுகளை நானும் சிறுவயதில் பார்த்தும் மட்டும் கேட்டு இருக்கிறேன், என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது,  அவர் தான் எனக்கு எனக்கு பெயர் சூடினார் என்பது இன்னும் எனக்கு பெருமையாக இருக்கிறது,  அவர் சொற்பொழிவு என்றால் போதும் கூட்டம் அலைமோதும் கோவிலின் முன் , அவரின் சொற்பொழிவு கேட்பதற்கு மிகவும்  அருமையாக இருக்கும், தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து, மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும் தனித்திறன் அவர...

காட்சி மொழிகளாக செதுக்கப்படும் சென்னை வாழ்க்கை

Image
காட்சி மொழிகளாக செதுக்கப்படும்  சென்னை வாழ்க்கை நடைபாதை கடையில் நாஷ்டா சாப்பிடுபவர் முதல், ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்து சாப்பிடுபவர்கள் வரை, அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது சென்னை. அதிகாலையில் அலறும் ஆட்டோ சத்தத்தில் துவங்கி, நள்ளிரவில் கேட்கும் குல்பி ஐஸ் சத்தம் வரை பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இப்படி, மாநகர் மக்களின் அன்றாட வாழ்க்கை கேட்போருக்கு, ஒரு புதிய செய்தியையும், பார்ப்போருக்கு புதிய படம் பார்த்த அனுபவத்தையும் தரும். சென்னை வாழ்க்கையை படம் பிடித்தாலே போதுமானது. புதிதாக கற்பனை தேவையில்லாதது என, அறிந்த இளைஞர்கள் பலர், டிஜிட்டல் கேமராவுடன் சென்னையை வலம் வந்து படம் பிடிக்கத் துவங்கியுள்ளனர். இதன் தாக்கமாக, சென்னை மக்கள், வாழ்க்கையை நகர்த்த நூதனமாக செயல்படும் விதத்தையும், கிராமத்து மக்களின் சென்னை பார்வை குறித்தும் குறும்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் வெளிவந்த குறும்படங்களில் சில... அதிகாலை:  விபத்திற்கான அடிப்படை காரணத்தை களையாமல் விபத்துகளை குறைப்பது சாத்தியமில்லை என்கிற விஷயத்தை, மாநகரில் தொடரும் இரு வேறுபட்ட...

வாழ்க்கை ஒரு புத்தகம் ...தத்துவம் ... அதை கிழித்துவிடாதே மகனே -முத்துக்குமார்

Image
வாழ்க்கை ஒரு புத்தகம் ...தத்துவம் ... அதை கிழித்துவிடாதே மகனே  -முத்துக்குமார்  மரணத்தருவாயில், நா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்! ▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪ “அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது இது நான் உனக்கு எழுதும்முதல் கடிதம். இதைப்படித்துப்புரிந்து கொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப்பழகிக்கொண்டு இருக்கிறாய்… . வயதின் பேராற்றாங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும்.  சிறகு முளைத்த தேவதைகள் உன் கனவுகளை ஆசீ்ர்வாதிப்பார்கள்.  பெண் உடல் புதிராகும். என்தகப்பன் என்னிடமிருந்து ஒளித்து வைத்த ரகசியங்கள்  அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைபோல  நீயும் தேடத் தொடங்குவாய். பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது.  உனக்கு த் தெரியாதது இல்லை.  பார்த்து நடந்து கொள். நிறைய பயணப்படு.  பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்கு ப்பின்னாலும்  இரண்டு கண்களைத்திறக்கின்றன. புத...

மொபைல் போனின் மாய வலையத்திடம் நாம் ....

Image
மொபைல் போனின் மாய வலையத்திடம்  நாம் .... இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் போன், நம் வாழ்க்கையின் அன்றாட தேவைகளில் ஒன்றாகி விட்டது. கை, கால்கள் போல, நம் உடலின் ஓர் அங்கம் போலவே மாறிவிட்ட மொபைல் போனின் மாய வளையத்தில், நம் அனைவரும் கட்டுண்டு கிடக்கிறோம். இதிலிருந்து மீள்வது சற்று கடினம் தான். ஆரம்ப காலங்களில், நாம் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்திய மொபைல் போன், அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், உலகமே மொபைல் போனிற்குள் அடங்கி விட்டது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன், நம் இணைய தேடல்களுக்காக, 'பிரவுசிங் சென்டர்'களுக்கு சென்றோம். ஆனால், இப்போது நம் கையடக்க மொபைல் போனிலேயே, இணைய வழி சேவைகளை பயன்படுத்துகிறோம். சமூக வலைதளங்கள் பெருகிவிட்டன. அதில் உறுப்பினர்களாகும் விடலைப் பருவத்தில் உள்ளவர்களுக்கு, படிப்பில் நாட்டமின்மை, மன உளைச்சல், பாலியல் வக்கிர எண்ணங்கள் உருவாகி விடுகின்றன. பல மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் போட்டி போட்டு, மொபைலில் இன்டர்நெட் சலுகைகளையும், 'டாக் டைம்' சலுகைகளையும் தாராளமாக வழங்குகின்றன. இப்போதைய கணக்குப்படி, இந்தியாவில் மொபைல் போன்...