மொபைல் போனின் மாய வலையத்திடம் நாம் ....
மொபைல் போனின் மாய வலையத்திடம் நாம் .... இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் போன், நம் வாழ்க்கையின் அன்றாட தேவைகளில் ஒன்றாகி விட்டது. கை, கால்கள் போல, நம் உடலின் ஓர் அங்கம் போலவே மாறிவிட்ட மொபைல் போனின் மாய வளையத்தில், நம் அனைவரும் கட்டுண்டு கிடக்கிறோம். இதிலிருந்து மீள்வது சற்று கடினம் தான். ஆரம்ப காலங்களில், நாம் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்திய மொபைல் போன், அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், உலகமே மொபைல் போனிற்குள் அடங்கி விட்டது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன், நம் இணைய தேடல்களுக்காக, 'பிரவுசிங் சென்டர்'களுக்கு சென்றோம். ஆனால், இப்போது நம் கையடக்க மொபைல் போனிலேயே, இணைய வழி சேவைகளை பயன்படுத்துகிறோம். சமூக வலைதளங்கள் பெருகிவிட்டன. அதில் உறுப்பினர்களாகும் விடலைப் பருவத்தில் உள்ளவர்களுக்கு, படிப்பில் நாட்டமின்மை, மன உளைச்சல், பாலியல் வக்கிர எண்ணங்கள் உருவாகி விடுகின்றன. பல மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் போட்டி போட்டு, மொபைலில் இன்டர்நெட் சலுகைகளையும், 'டாக் டைம்' சலுகைகளையும் தாராளமாக வழங்குகின்றன. இப்போதைய கணக்குப்படி, இந்தியாவில் மொபைல் போன்...