PARAMBU MALAI ALIAS PRAN MOUNTAIN
PARAMBU MALAI ALIAS PRAN MOUNTAIN பிரான்மலை: `வரலாற்றுச் சிறப்புமிக்க இடம்!’ - கல்குவாரியால் சிதைக்கப்படும் பாரி ஆண்ட மலை? அருண் சின்னதுரை சி அரவிந்தன் பிரான்மலை பிரான்மலை பாரி ஆண்ட பறம்புமலை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம். பிரான்மலை என மாற்றமடைந்த இந்த மலையில் இந்து, இஸ்லாமியர்கள் அருகருகே வழிபடும் ஸ்தலமும் உள்ளன. ஆன்மிக ஸ்தலமாக மட்டுமல்லாமல் இயற்கை வளங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களும் நிறைந்துள்ளன. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது பிரான்மலை. இயற்கை எழில் கொஞ்சும் இந்த பிரான்மலையை முல்லைக்கு தேரீந்த `பாரி’ ஆண்ட பறம்பு மலை எனப் போற்றப்படுகிறது. இந்நிலையில் இந்த மலையின் குறிப்பிட்ட பகுதிகள் தனியாருக்குச் சொந்தமான பட்டா இடமாகும். இந்த மலை அடிவாரத்தில் உள்ள 'கல் மற்றும் மண்' நிறைந்த குன்றுகளை இடத்தின் உரிமையாளர்கள் கல்குவாரி நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியுள்ளதால், அவர்கள் அதைச் சிதைத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. கல்குவாரி அமைந்துள்ள இடம் கல்குவாரி அமைந்துள்ள இடம் இந்நிலையில் இந்த மலை அருகே கல் குவாரி நடப்பதை பார்வையிட உள்ளதாக, பல்வே...