Posts

Showing posts with the label KRISHNAMMAL

KRISHNAMMAL JEGANNATHAN - PADMA BHUSAN AGED 94

Image
KRISHNAMMAL JEGANNATHAN - PADMA BHUSAN AGED 94 தமிழகத்தை சேர்ந்த 94 வயது சமூக போராளி கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருதை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. யார் இவர்? இவர் தமிழக மக்களுக்கு ஆற்றிய பங்குதான் என்ன? காந்தி, வினோபா பாவே என பெருந்தலைவர்களோடு பயணித்து, நிலமற்ற மக்களுக்கு நிலம் வாங்கி தந்த கிருஷ்ணம்மாளின் நீண்ட நெடிய விருது பட்டியலில் இப்போது இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷனும் சேர்ந்துள்ளது. பதின்பருவத்தில் தொடங்கிய அவரது போராட்டம், காலங்கள் கடந்தும் அதே வீரியத்தோடு பயணிக்கிறது. குடிசையில் வசிக்கும் எண்ணற்ற குடும்பங்களின் நிலை, அவர்களை முன்னேற்ற என்ன செய்யலாம் என்பது தொடர்பான உரையாடல் இல்லாமல் யாரும் அவரிடம் இருந்து விடைபெற முடியாது.  இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட, கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கும், குடிசை வீடுகளில் சிரமப்படும் பெண்களின் நிலைமையை சரிசெய்ய என்ன திட்டங்களை வைத்துள்ளார் என்பது குறித்து பேசினார். 1950களில் சுதந்திர போராட்ட வீரர் வினோபா பாவே தொடங்கிய பூமிதான இயக்கத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை இன்றும் பின்பற்றுபவர். ''தன்மானத்தோடு வாழ்வ...