WORLD WAR II இரண்டாம் உலகப்போர்........ (1939-1945)
WORLD WAR II 1939 - 1945 இரண்டாம் உலகப்போர்........ (1939-1945)........ இந்த இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற உலகத்தின் மிகப்பெரிய யுத்தப் பேரழிவின் நினைவுகளை திரும்ப கொண்டுவரும் வரலாற்றுச்சுவடு......என்பது நமக்கெல்லாம் தெரியும் (இத்தனைக்கும் அப்போர்கள் துவங்கியதற்கான காரணங்களாக சொல்லப்பட்டவைகள் மிக அற்பமானவை...சண்டைபோடுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட காரணங்கள்)...இந்தப்போரின் கோரத்தாண்டவம் அதன் இறுதிகட்டப்போரில் நிலைநிறுத்தப்பட்டது. அதை பற்றிய ஒளிஒலிக்காட்சிகள்........ அடால்ப் ஹிட்லர் நாஜி ஜெர்மனியின் அதிபரை எதிர்ப்பதற்காவும், அவரின் யூதப்பகைமையை தனித்து எதிர்க்க மனமின்றி மூவரும் அணி சேர்ந்தனர்...ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின், பிரிட்டன் பிரதமர் வின்சன்ட் சர்ச்சில், அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் இவர்கள் மூவரும் மிகப்பெரிய ஜாம்பவான்களாக கருதப்பட்டவர்களாகவும், நேசநாட்டு அணியினராகவும் அச்சு நாடுகளுக்கு எதிராக வலம் வந்தனர். ஜெர்மனியை நிபந்தனையற்ற சரணாகதிக்கு ஆளாக்குவதற்கு, அறைகூவல் விடுத்து முழு முனைப்புடன் அதற்காகவே செயல்பட்டனர். (இதற்கு முன் பிரான்ஸ், போலந்து, பிரிட்டன் எ...