Wednesday 2 September 2020

WORLD WAR II இரண்டாம் உலகப்போர்........ (1939-1945)





WORLD WAR II 1939 - 1945

இரண்டாம் உலகப்போர்........ (1939-1945)........ இந்த இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற உலகத்தின் மிகப்பெரிய யுத்தப் பேரழிவின் நினைவுகளை திரும்ப கொண்டுவரும் வரலாற்றுச்சுவடு......என்பது நமக்கெல்லாம் தெரியும் (இத்தனைக்கும் அப்போர்கள் துவங்கியதற்கான காரணங்களாக சொல்லப்பட்டவைகள் மிக அற்பமானவை...சண்டைபோடுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட காரணங்கள்)...இந்தப்போரின் கோரத்தாண்டவம் அதன் இறுதிகட்டப்போரில் நிலைநிறுத்தப்பட்டது. அதை பற்றிய ஒளிஒலிக்காட்சிகள்........

அடால்ப் ஹிட்லர் நாஜி ஜெர்மனியின் அதிபரை எதிர்ப்பதற்காவும், அவரின் யூதப்பகைமையை தனித்து எதிர்க்க மனமின்றி மூவரும் அணி சேர்ந்தனர்...ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின், பிரிட்டன் பிரதமர் வின்சன்ட் சர்ச்சில், அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் இவர்கள் மூவரும் மிகப்பெரிய ஜாம்பவான்களாக கருதப்பட்டவர்களாகவும், நேசநாட்டு அணியினராகவும் அச்சு நாடுகளுக்கு எதிராக வலம் வந்தனர்.

ஜெர்மனியை நிபந்தனையற்ற சரணாகதிக்கு ஆளாக்குவதற்கு, அறைகூவல் விடுத்து முழு முனைப்புடன் அதற்காகவே செயல்பட்டனர். (இதற்கு முன் பிரான்ஸ், போலந்து, பிரிட்டன் என்ற அணிக்கு பிறகு அமைக்கப்பட்டது). இம்மூவர்கள் தான் அச்சு நாடுகளின் ஒட்டுமொத்த சக்தியென கருதப்பட்ட நாஜி ஜெர்மனியின் அடால்ப் இட்லரோடு மோதினர். அதன் இறுதிகட்டப்போர் தான் டிசம்பர் 1944 ஆம் ஆண்டு தொடங்கியது.

(அச்சு சக்தி....ஜெர்மனி, இத்தாலி, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா இந்த கூட்டமைப்பு நாடுகள்)

இரண்டாம் உலகப்போர் இரண்டு போர்க்களங்களை கொண்டது கிழக்கு போர்முனைகள் மற்றும் மேற்கு போர்முனைகளை கொண்டது.

அமெரிக்கப்படைகள், இங்கிலாந்து படைகள் மேற்கு போர்முனைகளில் (மேற்கு முனைப் போர்க்களம்....டென்மார்க், நார்வே, லக்சம்பர்க், பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மேற்கு ஜெர்மனி) ஜெர்மனியை எதிர்த்து தாக்கின. ரஷ்யா கிழக்கு போர்முனையில் (கிழக்கு முனைப் போர்க்களம், ஐரோப்பிய அச்சு நாடுகள், பின்லாந்து, ரஷ்யா...இவைகளுடன் போர்நடந்த களம்) ரஷ்யா எதிர்த்து தாக்கியது....

இறுதிப்போர் 1

http://www.youtube.com/watch?v=6e6j6BXCS0c

1944 இல் டிசம்பர் மாதத்தில் இடலர் தன்னுடைய யுத்தத்தை பெல்ஜிய துறைமுகத்தில் இருந்து நேச அணிகளை (அலைட் போர்சஸ்) தடுக்கும் முகமாக தன்படைகளை நகர்த்த ஆரம்பித்தார்.

...இந்த மூவர்களின் அணிசேர்ந்த உள்நுழைவு இட்லரை போரின் இறுதி நாட்களில் கதிகலங்கவைத்தது. மிக செல்வமிகுந்த நகராமன ஜெர்மனியின் ''ரெய்க்'' மிக பொலிவிழந்த நகரமாக ஜெர்மனியில் மாறிக்கொண்டு வந்ததது.


....அமெரிக்க மற்றும் இங்கிலாந்து படைகள் பெரும்பாலும் வழியெங்கிலும் இருந்த ஜெர்மனியின் வதை முகாம்களை அழித்துக்கொண்டே வந்தனர்...இந்த வகையான வதை முகாம்களில் ஒரு நாளைக்கு 12000 பேர்கள் வீதம் நச்சு வாயு செலுத்தி கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை எரிக்க அங்கேயே எரிமேடையும் அமைக்கப்பட்டிருந்ததை இந்த ஓளிஓலிக்காட்சியில் காணலாம். இந்த வதை முகாம்களில் மட்டும் மொத்தம் 90,00,000 பேர் கொல்லப்பட்டனர். இதில் 60,00,000 பேர் யூதர்கள்.

இதில் வதைக்கப்பட்டவர்கள் அரசியல கைதிகள், நாடோடிகள், அகதிகள், போர்க்கைதிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் என பல்வேறு கைதிகளும் கொல்லப்பட்டனர்.

(ஒளியொலிக்காட்சியில் வரலாற்று ஆய்வாளர்கள், முன்னாள் படைவீரர்கள், வர்ண்ணையாளர்கள் தெரிவித்த கருத்துக்களை ஒரளவுக்கு நான்றிந்தவரையில், புரிந்த வரையில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்........இது நான் நுகர்ந்தவைகளை ஒரளவுக்கு மன்றத்தில் பகிர்ந்து கொள்ள முயற்சித்திருக்கிறேன். இதன் முழுவிபவரங்களையும், இன்னும் பிற தகவல்களையும் தோழர்கள் பகிர்ந்து கொள்ளலாம்..தவறுகளையும் சுட்டிக்காட்டலாம்...உடனே திருத்தப்படும்.... )

........................
டிசம்பர் 16 காலைவேளையில் ஜெர்மன் படைகள் அமெரிக்கத் துருப்புகளின் வலுவிழந்த பகுதிகளில் மேற்குபோர்முனையில் (வெஸ்டர்ன் பிரன்ட்) ஊடுருவியது....

இதன்காரணமாக ஆயிரக்கணக்கான அமெரிக்க ராணுவத்தினர் ஜெர்மானியரால் (லக்ஸம்பர்க்கில்) சிறைபிடிக்கப்பட்டனர்.

ஜெர்மனியின் முன்னேற்றத்தை தடுக்கும் முகமாக 6,00,000 அமெரிக்க வீரர்கள களம் இறக்கப்பட்டனர்.

ஜெர்மனிக்கு வரும் எரிபொருள் வரத்திற்கு படைகளால் தடை ஏற்படுத்தப்பட்டது.
‘’கிறிஸ்துமஸ் தினத்தன்று வானம் தெளிவாக இருந்தது......ஜெர்மனியின் ஒரு விமானம் கூட பறக்கவிடாமல் நேசநாட்டு விமானப்படையினராலும், தரைப்படையினராலும் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது...’’

‘’மேற்கு முனையின் ஜெர்மனியின் உயிரிழப்பு 1,00,000 மாக உயர்ந்தது. ஜெர்மனி லக்ஸம்பர்க்கில் இருந்து பின் வாங்க ஆரம்பித்தது.’’

.....................................................

கிழக்கு முனையில்...ஸ்டாலின் கிராடில் கொடுத்த மரணஅடிக்கு பதிலடியாக ரஷ்யாவின் செஞ்சேனையிடம் ஜெர்மன்படைகள் சிதைந்து கொண்டிருந்தன....இட்லர் எதிரியின் மூர்க்கத்திற்கு ஆட்படாதவாறு பின்வாங்க நாஜிப்படைகளுக்கு கட்டளையிட்டார்.

.....நாஜிப்படைகள்....... எதிரிகளை முன்னேறாதவாறு தடுக்க பின்லாந்து, நார்வே பகுதிகளில் தொடர்ந்து வந்த பாலங்கள், கட்டிடங்கள், இருப்புபாதைகள் என்று ஒன்று கூட இல்லாமல் வெடிவைத்து தகர்த்தனர்.

.............................................

பெப்ரவரி இறுதி 1945 இல், போலந்து நாடு ரஷ்ய விமானப்பிரிவு செஞ்சேனையால் (ரெட் ஆர்மி) ஜெர்மானி நாஜியரிடமிருந்து விடுவிக்கப்பட்டது...

..................
செஞ்சேனை ஜெர்மனி எல்லைக்குள் மூர்க்கமாக நுழைந்தது...
ரஷ்யப் படைகளின் அத்துமீறல்கள் ஜெர்மனி வீதிகளில் அதிகமிருந்தன....

‘’ஆம் ஜெர்மனியர் ரஷ்யர்களின் தாய்மார்களையும், பெண்கள் மற்றும் உறவினர்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொன்றனர். அதற்கு பழிதீர்க்கும் முகமாக..........

.......................
1000 விமானங்கள் பிரிட்டன் மற்றும் அமெரிக்கப்படைகளின் விமானங்கள் ஜெர்மனிக்குள் நுழைந்தன....ஜெர்மனியின் விமானத்தளங்களின் மீதும், ராணுவத்தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மீதும் சரமாரியாக குண்டுமழைகளை பொழிந்தன......
nambi
11-10-2010, 03:43 PM
இறுதிப்போர் 2


http://www.youtube.com/watch?v=Qz-usV5SKiQ&NR=1


ஜெர்மன் சாலைகள் மற்றும் பாலங்களை, ரயில் தடங்களை நிர்மாணிக்கும் பணியில் ஜெர்மானியர் ஈடுபட்டனர்....


ஜெர்மனின் எண்ணெய் கிடங்குகளும், எஃகுத்தொழிற்சாலைகளும் நேசநாட்டுப்படையினரின் அடுத்த இலக்குகள் ஆயின...

1944 ஆண்டு இறுதிக்குள் ஜெர்மனியின் ஏறக்குறைய 50 சதவீத இலக்குகளும் நேசநாட்டுப் படையினரின் தாக்குதலுக்குள்ளாயின...

ஜெர்மன் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனர். குண்டு மழைபொழியாத இடங்களே இல்லை எனலாம்.........அதே சமயத்தில் ஜெர்மானியரின் விமானப்படைகள் இங்கிலாந்து படைகளுடன் பலமாக மோதின...இங்கிலாந்து நாட்டின் இலண்டன் இலக்குகளை தாக்கிகொண்டிருந்தன......இடைவிடாத யுத்தம்.....

எதிரி நாட்டு விமானங்கள் வருவதைக்கூட அறியமுடியவில்லை.....வானொலியின் அறிவிப்புகளை கொண்டே தாக்குதல் விவரங்களை அறியமுடிந்த்து......(யுத்தத்தை நேரில் கண்ட சாட்சியாளர்)


இன்னும் மிச்சமிருந்தது.....துறைமுக இலக்குகள் தான்.......ஜெர்மனியின் டிரஸ்டன் நகரம் பராம்பரியம் வாய்ந்த கலாச்சார நகரம்....ராணுவப்பிரிவில் முக்கியத்துவம் வாய்ந்த நகரம்...இந்த நகரங்களில் பல அகதிகளும் தங்கியிருந்தனர்.... பெப்ரவரி 13, 1945 காலை வேளையில்
870 ராயல் குண்டுபொழியும் வானூர்திகள் 1000 கணக்கான குண்டுகளை டிரஸ்டன் மேல் பொழிந்தது....நகரமெங்கும் தீப்பற்றி எரிந்தது.... டிரஸடனின் வெப்பநிலை 1000 டிகிரியை அடைந்திருந்தது.....காற்று அதிக வெப்பத்துடன் வீசிக்கொண்டிருந்தது......பேப்பர்களை எடுப்பது போல் மக்களை அள்ளிக்கொண்டிருந்தனர்.... எங்கும் இருள் மயம் நகரெங்கும் ஹரிக்கேன் விளக்குகள் ஆயின.......(யுத்த ஆய்வாளர்)

அடுத்து வந்த இரு நாட்களில் 500 நேசநாட்டு விமானங்கள் டிரஸ்டன் மேல் குண்டு மழை பொழிந்தன.. டிரஸ்டன் சுடுகாடாக மாறியது...எங்கும் பிணக்குவியல் என்று தெரிவிக்கிறார் டிரஸ்டனில் போரைசந்தித்து.....மக்கள் வெப்பத்தை தாங்க ஈரத்துணிகளை இறுக்கமாக சுற்றிக்கொண்டனர்..... (உயிர்பிழைத்த குடியானவர்)...

வீதிஎங்கும் சாம்பல் மேடுகள்....பிணக்குவியல்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன...

நான்கு நாட்கள் நடந்த டிரஸ்டன் யுத்தத்தில் 1,00,000 குடிமக்களின் (சிவிலியன்) உயிர்கள் டிரஸ்டனில் பலிவாங்கப்பட்டன.......டிரஸ்டனின் 11 சதுர மைல்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தன..........

டிரஸ்டனின் சேதப்பகுதிகளின் மதிப்பீடு பெர்லினை அடைந்தபொழுது.... இட்லரின் கொள்கைப் பரப்பு அமைச்சரான ஜோசப் கோயபல்ஸ் இந்த மாபெரும் படுகொலையை செய்த நேசநாட்டு அணியை கண்டித்தார்......

டிரஸ்டன் (Dresden) குண்டு மழைக்குப் பிறகு பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் இந்த படுகொலைக்கு எதிராக கேள்வி எழுப்பினார். ஜெர்மன் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் குண்டுகள் பொழிந்தது தவறு! என்ற கண்டனத்தை அறிவிக்க தவறவில்லை....


இருவாரங்களுக்குப்பிறகு 1200 அமெரிக்க விமானங்கள் ஜெர்மன் தலைநகர் பெர்லினை நோக்கி குண்டு மழைபொழிய கிளம்பி வானில் காத்திருந்தது...வான் சண்டை தொடர்ந்தது.....

வானிலிருந்து ஜெர்மன் நிலைகளை சரியாக தாக்கமுடியவில்லை என்ற புகார் எழுந்ததை அடுத்து தரைவழியே பெர்லினை அடைய நேசநாட்டு அணிகள் தீர்மானித்திருந்தன...........

.....1805 இல் மாவீரன் நெப்போலியன் போனபர்டே படைகளின் நுழைவு முயற்சிக்குப்பிறகு ரைன் ஆற்றை யாரும் அதன்வழியே கடக்கமுடியாதபடி ஜெர்மானியர் நிர்மானித்திருந்தனர்......(கலோன் பாலம்)...(ஜெர்மனியின் பாதுகாப்பு அரண்.... ரைன் ஆறு....அந்த ஆற்றின் மீது அமைக்கப்பட்ட கலோன் பாலத்தின்மீது சரணாகதி அடைந்தாலோ....பின்வாங்கினோலோ அந்த வீரர் சுடப்படவேண்டும்...பாலம் உடனே தகர்க்கப்பட்டாகவேண்டும் என்பது இட்லரின் ஆணை)

நேசநாட்டு அணியினர் நகரத்தை நெருங்குவதற்கு முன்பே கலோன் பாலம் தகர்க்கப்பட்டது........இன்னொரு பாலமான ரிமாகன் பாலத்தின் வழியே கடக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.....ரயில் பாலமான லுடோன்டர்ப் பாலத்திலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.....ஜெர்மானியரிடம் நடந்த மிகப்பெரிய சண்டையில் பாலத்தின் இன்னொரு முனை கைப்பற்றப்பட்டது...ஜெர்மன் படை பின்வாங்கியது....அந்த முயற்சியில் நேசநாட்டுப்படைக்கு வெற்றிகாணப்பட்டது.......

(இட்லர் பாலத்தகர்ப்பு குழுவிற்கு மரணதண்டனை விதித்தார்.....)

23000 பிரிட்டன் பாரச்சூட் வீரர்கள் (Paratrooper) பாலத்தை கடந்து நகருக்குள் நுழைந்தனர்.........

1600 வானுர்திகள் ரைன் (Rhine) ஆற்றைக்கடந்து நகருக்குள் சென்று குண்டுமழைப்பொழிய காத்திருந்தன....சர்ச்சிலும் இந்த காட்சியை காண ரைன் ஆற்றைக்கடந்தார்.......

பாரச்சூட் வீரர்கள் ஜெர்மன் எல்லையை ஊடுருவித்த தாக்குதலை பலமாகத்தொடுத்தனர்............போர் மூர்க்கத்துடன் தொடங்கியது.........
nambi
11-10-2010, 03:48 PM
இறுதிப்போர் 3

http://www.youtube.com/watch?v=uDz4LU3ZF2E&NR=1

கலோன் (Cologne) நகரத்தில் ராணுவ டாங்கிகளுடன் போர் மூண்டது........கலோன் நகத்தின் வீடுகளின் மத்தியில் இருவீடுகளுக்கு இடையே நடக்கும் சண்டை போன்று வீட்டிற்கு இடையே நின்று சுட்டுக்கொண்டனர்...

ஜெர்மன் வீரர்கள் வீட்டின் கீழ்தளப்பகுதியில் ஒளிந்திருந்தவர்களையும் வெடிவைத்து வெளியேற்றி கைது...செய்தனர்...

……ஆறுவாரங்களுக்குப்பிறகு ரூஹர் (Ruhr) நகரம் சரணாகதியடைந்தது....இச்சரணாகதியே இரண்டாம் உலகப்போரின் மிகப்பெரிய சரணாகதி (Surrender).....3,40,000 ஜெர்மானியர்கள் அமெரிக்கத்துருப்புகளிடம் சரணடைந்தனர்.

நேசநாட்டு படை மேலும் தொடர்ந்து பெரிலினை நோக்கி நகர்த்தியது.......

ஏப்ரல் 11, 1945.... தொடர்ந்து கிடைத்த முன்னேற்றத்துடன்......ஐ.அ படை தன்னுடைய இறுதிகட்ட நகர்வை தனது இரண்டாவது ஐ.அ படைப்பிரிவுடன் (யு எஸ் ஆர்மி) நகர்த்தியது....

பெர்லினிலிருந்து 53 மைல்களுக்கு அப்பால் ஐ.அ.படைகள் நிலைகொண்டிருந்தன......

இன்னொரு பக்கமான கிழக்கு முனையின் 10,00,000 வீரர்களுடன் பெர்லினிருந்து 33 மைல்களுக்குப்பால் கட்டளைக்காக காத்திருந்தனர்...........

பெர்லினில் உள்ளே ஹிட்லர் தனது சகாக்களுடன்....பியூரர் பதுங்கு அறையில் (பியூரர் பங்க்கர்....பியூரர்=ஜெர்மன் அதிபரை பியூரர் என்றே அழைப்பர்...அவரே நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்)...நேசநாட்டு தாக்குதலுக்கு ஆட்படாமல் பதுங்கு அறையிலேயே இருக்கவைத்தது...35 அறைகளை கொண்ட ஒயிட் சான்சலர் மாளிகைக்கு அருகில் கட்டப்பட்ட அறையே ஹிட்லரின் பதுங்கு அறை.... .வெளியுலக்த் தொடர்பு அனைத்துமே வானொலி மூலமே.......

ஹிட்லரின் எண்ணமும், செயலுமாய் இருந்த கொள்கை பரப்பு அமைச்சரான கோயபல்ஸ் வெற்றிக்கனிகளை பறிக்க ஜெர்மன் ஜெர்மன் நெருங்கிவிட்டதாக, அந்த அற்புத நிகழ்வு வெகு விரைவில் நிகழவிருப்பதாக அறிக்கைகளை தயாரித்து மக்களுக்கு வானொலி மூலமும் துண்டு பிரசுரங்களின் மூலம் விமானத்தின் மூலமும் தூவச்செய்து பரப்பிக்கொண்டிருந்தார்...

அவர் நினைத்தபடியே ஓரளவுக்கு அற்புதமான நிகழ்வாக...ஒரு செய்தி வானொலிகளில் ஒளிபரப்பி கொண்டிருந்தன....அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டின் மரணச்செய்தி.........

ஜெர்மனி தனது அரசின் கொள்கையாக பின்பற்றுவது புருஷ்யப் பேரரசர் பிரட்ரிக்கின் (பிரெட்ரிக் தி கிரேட்) கொள்கையைத்தான்...அதன்படி ரஷ்யாவை நேசநாட்டு அணியிலிருந்து பிரித்து விட்டால் ஜெர்மானியருக்கு வெற்றி என்ற இலக்கில் இருந்த ஹிட்லருக்கு....ஏப்ரல் 12 இல் வந்த ரூஸ்வெல்டின் மரணச்செய்தி அதிக மகிழ்ச்சியை தந்தது.....மீண்டும் ரஷ்யா நேசநாட்டு அணியிலிருந்து தூக்கியெறியப்படும் அப்பொழுது ரஷியாவை எளிதில் வென்று விடலாம் என்ற கனவில் மிதந்தார்.....இதையே கோயபல்ஸ் வெளிப்படுத்தி கொண்டிருந்தார்..........

புதியதாக பதவியேற்ற அமெரிக்க அதிபர் போரை விரும்பாதவராக இருப்பார் என்ற கணிப்பும் ஹிட்லரிடம் இருந்தது....அதிக அனுபவமும் இல்லாதவர்...(ட்ருமேன்)

டிருமேன்னும்...ரூஸ்வேல்டும் அதிகபட்சமாக மூன்றுமுறை மட்டுமே சந்தித்திருந்தனர்....யுத்த சமயத்தில்...அதிக ஈடுபாட்டுடன் ட்ருமென் இல்லை...

சில நாட்களுக்கு ட்ருமென்னிடமிருந்து எந்த சமிக்கையும் வரவில்லை...ஹிட்லரை நோக்கி படையெடுக்க....

...........எந்த தள்ளிவைப்பும்...எந்த எதிர்ப்பும் இல்லை, எந்த அதிசயமும் நடைபெறவில்லை...... இட்லர் எதிர்பார்த்தது போல....நேசநாட்டு அணி பழையபடி நிறுத்திய இடத்திலிருந்து முன்னேறியது....

நாசி வதை முகாம்களை தாக்கி கைதிகளை விடுவிப்பதற்காக முன்னேறிய படைகள் அங்கே எந்த ஒரு கைதியும் கிடைக்கவில்லை மாறாக....உடல்கள் தான் கிடைத்தது....

.....100 க்கும் அதிகமான வதை முகாம்களை நாஜிக்கள் யூதர்கள், ஒரினச்சேர்க்கையாளர்கள், அரசியல் கைதிகள், யுத்த கைதிகள் என அனைவரையும் அடைத்து சித்தவதை செய்து கொன்றனர்....ஒரு நாளைக்கு 12000 பேர்கள் என்ற விகிதத்தில் நச்சு வாயுக்களை செலுத்தி கொன்றனர்....அவ்வுடல்களை எரிப்பதற்கு அங்கேயே எரிமேடை..(அவன்) ஏற்படுத்தி அந்த உடல்களை எரித்தனர்....

நாஜி....வதை முகாம்களில் குவித்து வைக்கப்பட்ட அழுகிய மனித உடல்களை..... ஐ.அமெரிக்க ராணுவ கவர்னர் ஜெனரல் (ஜெர்மன் பிரிவு) ஐசன் ஹொவர் (பின்னாளில் அதிபராக வந்தவர்) பார்த்து அதிர்ச்சியடைந்தார்...........
nambi
11-10-2010, 03:53 PM
இறுதிப்போர் 4


http://www.youtube.com/watch?v=wvWl1C5JDes&NR=1

ஐசன் ஹோவர் கூற்றுப்படி பெரிலினை வீழ்த்தி வெற்றிபெற்ற முதல் அணியாக அறிவித்து கொள்ளவேண்டுரென்றால் 10,00,000 அதிகமான அமெரிக்க சிப்பாய்களை இழக்க வேண்டும் என்று ஐ.அ அட்மிரல் ஹார்ட்லி அறிவுறுத்தியதன்படி..... (புரப்பகான்டா விக்டரி) இதிலிருந்து சற்று பின்வாங்கினார்....இதனால் ரஷ்யாவுக்கு பெர்லினை மீட்கும் அந்த வாய்ப்பு போனது.....

ஸ்டாலின் இந்த வாய்ப்பை எதிர்பாத்தவராக இருந்ததினால் இது அவருக்கு தேடிவந்த வாய்ப்பாக மாறியது....1944 இல் மே தின அணிவகுப்பை மாஸ்கோவில்...ஜெர்மனியின் அச்சறுத்தலுக்கிடையே நடத்தியவர்...... இந்த மேதினத்தை (1945) சுத்ந்திரமாக வெற்றி பெருமிதத்துடன் கொண்டாடினார்.......

ஏப்ரல் 28 இட்லர் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்..........ஜெர்மனியின் குடிமக்கள் நிலத்திற்கு கீழே பதுங்கு குழிகளில் பல நாட்களாக வாழ்ந்துவருவதை உணர்ந்தார்........இட்லரின் பிறந்த நாள் தேசிய விடுமுறையாக அங்கே (ஜெர்மனி) அறிவிக்கப்பட்டிருந்தது (ஏப்ரல் 20)...அந்த நாளில் ஜெர்மன் முழுவதும் இருளில் மூழ்கியிருந்தது...உணவின்றி இறந்து கிடந்த ஆடுமாடுகளை வெட்டித்தின்றனர்.......அந்த நாளை மறக்காமல் நேசநாட்டுபடைகள் இன்னும் 1000 குண்டெறி வானுர்தி படைகளை அனுப்பி குண்டு மழை பொழிந்து கொண்டேயிருந்தது.....
ரஷ்யாவின் 20,00,000 துருப்புகள் மிக மூர்க்கமாக தாக்கி கொண்டிருந்தன......

பியூரரின் வலது கரமாக செயல்பட்ட ஹிம்லர், கோயபல்ஸ் கலக்கமுற்றனர்.........

பெர்லினின் மையப்பகுதி முற்றிலும் சேதமடைந்தது...

இட்லர் தனது கடைசி பொதுமக்கள் சந்திப்புகள் மற்றும் உரைகளை பியூரர் பதுங்கு அறையினருகே ஆற்றிகொண்டிருந்தார்.

ஜெர்மன் பியூரரான இட்லர் தனது இளம் படை வீரர்களுக்கு தெம்பூட்டி கொண்டிருந்தார்............ தனது மக்களிடம் அன்பையும், நன்றியினையும் வெளிப்படுத்தி கைகுலுக்கிக் கொண்டிருந்தார் (ஷேக்கன்)...இறுகிப்போன முகத்துடன் (அன்ஷேக்கன்)

ஏப்ரல் 25, அமெரிக்கப்படைகள் ரஷ்யப்படைகளை (ஆர்மர் ரிவர்) பகுதியில் ஒன்று சேர்ந்தன...........ஜெர்மனி தலைநகர் பெர்லினின் முற்றுகைப் போர் நேசநாட்டுப் படையினரால் முடிவு நிலைக்கு வந்தது முழுவதும் முற்றுகையிடப்பட்டது....

இருநாள் கழித்து மீண்டும் முற்றுகைப்போரிலிருந்து முன்னேறியது....முழுவதும் முற்றுகையிடப்பட்டும் இட்லர் தன்னுடையப் நாஜிப் படைப்பிரிவினரை இன்னும் நம்பினார்.
nambi
11-10-2010, 03:59 PM
இறுதிப்போர் 5


http://www.youtube.com/watch?v=x5ez7-39C54&NR=1
இட்லரின் இறுதிகட்டம் மிக நெகிழ்வுடையதாகவே இருந்தது....

இடலர் தன்னுடைய படைவீரர்களை அழைத்து இறுதிகட்ட ஆலோசனைக்கு அழைப்பு விடுத்தார்......... இறுதி கட்ட போர் யுக்தி வடிவமைப்பை பியூரரிடம் ஜென்ரல் வைட்லிங் சமர்ப்பித்தார்....

ஆனால் இட்லர் ‘’இல்லை வைட்லிங் நான் தெருவில் அனாதையாக செத்து கிடக்க விரும்பவில்லை...... இட்லரின் பேச்சை கேட்டவுடன் பல வீரர்கள் வீதியிலே தற்கொலை புரிந்து மாண்டனர்......என்சகோதரரும் அப்படித்தான் உயிர்விட்டார்...(முன்னாள் வீரர்)

ஏப்ரல் 29,1945 அடால்ப் ஹிட்லர் தனது நீண்ட நாள் காதலியான இவாபிரானை மணந்தார்.......ஜெர்மன் சட்டப்படி தம்பதிகளாக பதிவுசெய்துகொண்டனர்....திருமதி(லேடி) பியூரர் ஆக மாறினார்...(பியூரருக்கு அடுத்தபடியான அதிகாரம் கொண்டவர். ஜெர்மன் சட்டப்படி...ஒரு நாளுக்குமட்டும்) சிறிய சம்பிரதாய திருமணவரவேற்புக்குப்பின்......

மரணசாசனம் (டெஸ்டாமென்ட்..Testament) எழுதினார்…..

இந்த யுத்தத்திற்கு நான் பொறுப்பல்ல....ஜெர்மானியர்களுக்கும், யூதர்களுக்கும் நிலவி வந்த நெடுநாள் பகைமையே காரணம்....நானும் என் மனைவியும் இதற்கு பொறுப்பல்ல என்று கூறி உயிர் விடுகிறோம்....

இத்துடன் மூன்று குறிப்புகளையும்......... தனது மறைவுக்குப்பின் யார்? பியூரராக இருக்கவேண்டும் என்பதைனையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார்......

இட்லர் மறைவதற்கு முன் அவருடைய ஆரூயிர் நண்பன் இத்தாலியின் டியுசான பெனிட்டோ முசோலியின் (பாசிசவாதி) படுகொலைச்செய்தியினை அறிந்து துயருற்றார்....(இத்தாலியின் அதிபர் டியுஸ்) அதன் பிறகே இட்லர் தன்னுடைய முடிவிற்கு தயாரானார்.

(பெனிட்டோ முசோலினி தன் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்கு தப்பிச்செல்ல எத்தனித்தபோது கோமோ ஏரி அருகே பார்ட்டிசான்களால் (புரட்சியாளர்கள்) பிடிபட்டு இருவரும் சுட்டுகொல்லப்பட்டு மிலன் நகர் எண்ணைக்கடைமுன் இருவரும் தலைகீழாக தொங்கவிடப்பட்டனர்.)

இட்லர் தன்மனைவியுடன் சயனட் வில்லைகளை அருந்தி உயிர்விட்டார். இட்லர் தன் செல்ல பிராணியாக வளர்த்த ஜெர்மன்
ஷெப்பர்ட் பிளான்டிவகை நாய்க்கு முதலில் சயனைட் கொடுத்து இறத்த்தை பார்த்தபின்... இட்லர் இவா பிரவுனுக்கு கொடுத்தார்...இறுதியாக இட்லர் சயனட் வில்லையை விழுங்கியபின் நெற்றி பொட்டில் கைத்துப்பாக்கியால் சுட்டுகொண்டார்.........

இட்லர் மற்றும் அவரது மனைவி உடல்கள் கேசோலின் ஊற்றி உடனடியாக எரிக்கப்பட்டது....ரஷ்யப்படைகள் பங்கரை நெருங்கிவருவதால் உடனடியாக இவைகள் நடத்தப்பட்டன........

இடலரின் மரணச்செய்தி 7 சிம்பொனி இசைப்பின்னணியுடன் வானொலியில் ஜெர்மன் மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது....

‘’பியூரரின் அறையிலிருந்து பதிவுசெய்யப்பட்டது....ஜெர்மனியின் பீயூரர் இறந்து விட்டார்’’

......இட்லர் இறந்து இருநாட்களுக்குப்பிறகு கொள்கைப்பரப்பு அமைச்சரான கோயபல்ஸ், அவர் மனைவி மற்றும் ஆறு குழந்தைகளும் சயனைட் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

அன்றையதினமே இட்லரின் தலைமைச்செயலகம் ராக்கெட்டுகளால் தாக்கப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டது....

மொத்தம் 128 ராக்கெட்டுகள் செலுத்தி ஜெர்மன் சான்சலரின் மாளிகை முற்றிலும் தகர்க்கப்பட்டது....இந்த ஆணையை இட்ட நான் மிக மகிழ்ச்சி கொண்டேன்....என் அப்பா நாஜிக்களால் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்தேன்...இது அவருக்காக..(செஞ்சேனை பிரிவு கமான்டர்)

மே 1 செஞ்சேனைகள் இறுதி தகர்ப்பில் ஈடுபட்டது....ஜெர்மன் ரெய்க் ஸ்டாக் பாராளுமன்ற கட்டிடம் தகர்ப்பில் மும்முரமாக ஈடுபட்டது........இட்லர் ஒருவேளை இங்கிருப்பாரோ? என்ற சந்தேகத்தில் அந்த தாக்குதல் நடத்தப்பட்டது...

சான்சிலர் தோட்டத்தினருகே இட்லரின் உடல் ஆழமில்லாத பள்ளத்தினருகே அடையாளம் தெரியாதவகையில் கண்டுபிடிக்கப்பட்டது.....

பிரேத பரிசோதனைக்குழு (ஆட்டாப்சி...Autopsy) கிடைத்த பற்களை கொண்டு ஆராய்ந்ததில் இறந்தது இடலர் தான் என் உறுதிசெய்யப்பட்ட அறிக்கையை சமர்ப்பித்தது.

கொயபல்சின் பிரேதமும் இதேபோன்றதொரு தோற்றத்தினை உருவாக்கியது...கோயபல்சின் உடல் அடையாளம் தெரியாத வகையில் சிதைந்திருந்தது....


இறுதியில் செங்கோடி ஜெர்மன் ரெய்க் ஸ்டாக் (பாராளுமன்றம்) கட்டடத்தின் உச்சியில் ஏற்றப்பட்டது.....பெர்லின் போர் முடிவுக்கு வந்தது....(பேட்டல் ஆப் பெர்லின்)
.......................................................................................................................
...........சீருடைகளை தூக்கி எறிந்தனர்.....கணவன்மார்களை உயிருடன் திருப்பி தந்தமைக்காக.....மனைவிமார்கள் எறிந்தவை...

அமைதி திரும்பியதினால் கிடைத்த மகிழ்ச்சி இருதரப்பினரிடமே தெரிந்தது.....மீண்டும் இது போல் நடக்க்கஃகூடாது என்று...........

..............ஜெர்மன் புதிய பியூரரால் (கார்ல் டான்ஸ்) நிபந்தனையற்ற சரணாகதி பத்திரம் கையொப்பமிட்டு ரஷியாவிடம் வழங்கப்பட்டது........

ஜெர்மன் மட்டுமே நிபந்தனையற்ற சராணகதிக்கு ஒப்புக்கொண்டதாக அமைக்கப்பட்டது...நேசநாட்டு அணி எதிரி வைக்கும் எந்த ஒரு நிபந்தனையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயமில்லை....எந்த ஒப்பந்தமும் இல்லை அனைத்தும் ரத்து..........அனைத்து ஆயதங்களையும் கீழே போடவேண்டும் என்ற சரணாகதி மட்டுமே ஒப்புக்கொள்ளப்பட்டது.



ஜெர்மானியர்கள் நேசநாட்டு அணித் தலைவருக்கு கட்டுபட்டவர்களாக இருக்க நிபந்தனை விதிக்கப்பட்டது...ஜசன் ஹோவர் நேசநாட்டு அணியின் உச்சபட்ச அதிகாரியாக கருதப்பட்டார்.

இரண்டு ஜெர்மன் அதிகாரிகள் பிரிட்டன் அலுவலகத்தில் அமர்ந்து கையொப்பமிட்டனர்...முதல் சம்பிரதாய ஜெர்மனி சரணாகதியை சமர்ப்பித்தனர்...........பிரிட்டன் அதிகாரிகள் அதை பெற்றகொண்டனர்.
nambi
11-10-2010, 04:03 PM
இறுதிப்போர் 6


http://www.youtube.com/watch?v=42nQn4jYoy0&NR=1
மே 2....ஜெர்மன் தலைநகர் ரெய்க் ஸ்டாக் இல் வெள்ளை கொடி ஏற்றப்பட்டது................

ஜெர்மன் அட்மிரல் அனைத்து ஜெர்மன் படைப்பிரவுகளும் சரணைடைந்து விட்டதாக அறிவித்தார்............

இருநாள்கழித்து ஜெர்மன் கமான்டர் கொடுத்த அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளபட்டு வானொலியில் நேசநாட்டு படைத்தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது....

சரணாகதி அறிக்கையில் கூறப்பட்டவை ஜெர்மன் படைகள் நேசநாட்டு அணித்தலைவர்களின் கட்டளைக்கு கட்டுப்படுவதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு கையொப்பமிடப்பட்டது.................

மே 6 ஜெர்மன் அட்மிரல் டொனட்ஸ் ஐசன் ஹோவர் மாளிகைக்கு சென்று சரணாகதி பத்திரத்தை சமர்ப்பித்தார்.........ஆரம்பிக்கும் பொழுது இருந்த கைகுலுக்கும் சம்பிரதாயங்கள் சரணாகதி சம்பிரதாயங்கள் முடிந்தபொழுது இல்லை. ஐசன் ஹோவர் அவர்களுக்கு கை குலுக்கவில்லை, வழியனுப்பவில்லை......மீண்டும் அவர்களுக்கு நிப.ந்தனையின் சாரம்சம் நினைவூட்டி அனுப்பப்பட்டனர். வெற்றி பொது விழாவாக கொண்டாடதீர்மானிக்கப்பட்டது....ஆனால் ஐசன் ஹோவர் அவர்களை இணைத்து கொள்ள விரும்பவில்லை என்பது அவரது செயலின் மூலம் தெரிந்தது....

மே 8 நியுயார்க் டைம் சதுக்கம், செஞ்சதுக்கம்........லண்டன்....மக்களால் வெற்றி கொண்டாடப்பட்டது...........ட்ரூமென் அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு ஜெர்மன் சரணைடைந்ததை அறிவித்தார் வெற்றி ஜ.நா படைக்கு சமர்ப்பிப்பதாக அறிவித்தார்......................நாடே ஒளிவெள்ளமாய் காட்சி அளித்தது............

..................................................
...........இரண்டாம் உலகப்போர் ஏதுமறியாத லடசகணக்கான அப்பாவிகளை பலிவாங்கியது........பல யுத்த குற்றங்களை உள்ளடக்கியது........

போருக்குப்பின் நேசநாட்டு அணியினரால் யுத்த குற்றத்திற்கான தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது........இந்த தீர்ப்பாயத்தின்படி குற்றமுறு செயல் புரிந்தவர்களுக்கு ராணுவ நீதிமன்ற சட்டதிட்டத்தின் படி மரணதண்டனை வித்க்கப்பட்டது...அதன்படி குற்றம்புரிந்தவர்கள் தீர்ப்பாயம் வழங்கிய மரணதண்டனைத் தீர்ப்பின்படி சுட்டுகொல்லப்பட்டனர்.........

முதல் குற்றவாளிகளாக கருதப்பட்ட ஹிட்லர், கோயபல்ஸ் முன்னரே இதனையறிந்து தற்கொலை புரிந்து கொண்டனர்..........

ஹிட்லரின் வலது கரமாக செயல்பட்ட ஹென்ரிச் ஹிம்லர் (படைத்தளபதி) தப்பிச்செல்லும் போது பிடிபட்டு தீர்ப்பாயத்தின் நிறுத்தப்பட்டபோது தீர்ப்பாயத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்கு முன்னரே தற்கொலை புரிந்து கொண்டார்.

அதேபோன்று இன்னொரு படைத்தளபதியான ஹேமன்ந் கோரிங் நியுரம்பர்க் தீர்ப்பாயத்தின் மூலம் மரணதண்டனைவிதிக்கப்பட்டார்....தண்டணைக்கு முன்னரே தற்கொலை புரிந்து கொண்டார்.

No comments:

Post a Comment