M.G.R AND CLASSIC DANCES
எம்.ஜி.ஆர் கர்நாடக சங்கீதத்தை மிகவும் ரசித்துக் கேட்பார். கச்சேரிகளுக்குச் சென்றால் கடைசி இருக்கையில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்து அமைதியாக ரசித்து விட்டுத் திரும்பி விடுவார்.
ஒருமுறை எம்.ஜி.ஆர் , பாடலாசிரியர் பாபநாசன் சிவன் அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பத்தாயிரம் ருபாய் அளித்துப் பாராட்டி விட்டு சிவனின் காலில் விழுந்து வணங்கினார்.
" உங்களில் பலர் சினிமா சங்கீதம் என்றால் அலட்சியமாக நினைக்கக் கூடும் , அது கர்நாடக இசையிலிருந்து மாறு பட்டதாகவும் , தரம் குறைந்ததாகவும் கூடத் தோன்றலாம் . கொஞ்சம் நினைவைப் பின்னோக்கித் திரும்பிப் பாருங்கள் . எம்.கே.தியாயகராஜ பாகவதர் பாடிய " வள்ளலைப் பாடும் வாயால்" , எம்.எஸ்,சுப்புலட்சுமி பாடிய "எங்கும் நிறைநாதப் பிரம்மம்" போன்ற பாடல்களை நினைத்துப் பாருங்கள் . அந்தக் காலத்தில் இப்படிக் கர்நாடக இசையை மேடையில் ஜன ரஞ்சகமாக அரங்கேற்றி மென்மையாகத் திரைப்படங்களில் ஒலிக்கச் செய்தார்கள். இப்பொழுது திரைஇசையில் கர்நாடக இசை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது . மீண்டும் அதை முன்னணிக்குக் நாம் கொண்டு வரவேண்டும் அதுவே நாம் இந்தப் பெரியவர்களுக்கு காட்டும் நன்றி " எனப் பேசினார் எம்.ஜி.ஆர்.
பாபநாசம் சிவன் பாடல் எழுதும் போதே இது இன்ன இன்ன ராகத்தில் அமைந்தது என எழுதிக் கொடுத்து விடுவார். எம்.கே.தியாகராஜ பாகவதரின் பெரும்பாலான பாடல்களை எழுதியவர் பாபநாசம் சிவன் தான்
" நூறு ஜென்மங்கள் கேட்கும் அளவிற்கு அற்புதமான இசை இவ்வுலகில் இருக்கிறது.ஆயினும் எல்லா இசைக்கும் அடிப்படை ஸரிகமபதநி தான்.. விருட்சத்தின் வேர்கள் வெவ்வேறாக பிரிந்து நிற்பினும் அதனைத் தாங்கி நிற்கும் ஆணிவேர் ஒன்று தான் .
வெவ்வேறு வடிவங்களும் வெளிப்பாடுகளும் அமைந்திருந்தாலும் இசைக்கு அடிப்படையாக அமைந்துள்ள ஏழு ஸ்வரங்களில் எந்த மாற்றமும் இல்லை " என இளையராஜா அடிக்கடி கூறுவார்...
வண்ண மலர்களைச் சரம் தொடுத்தால்
பூமாலையாகும்
சந்தத் துணை கொண்டு ஸ்வரம் தொடுத்தால்
பாமாலையாகும்
என்பார் பூவை செங்குட்டுவன்..
கர்நாடக இசையைத் தன் திரையிசை மெட்டுக்களுக்குள் கட்டிப்போட்டவர் ராஜா !
.........................
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச....
ஸ்வர்ணலாதாவின் குரலில் சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த பாடல் இது..
இளையராஜாவிற்கு முன்பே மெல்லிசை மன்னர்கள் சுத்த தன்யாசி ராகத்தில் பல பாடல்கள் அமைத்திருக்கிறார்கள்..
காட்டாக இரண்டு பாடல்கள்..
கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே - கர்ணன்
தொட்டால் பூ மலரும் - படகோட்டி
முன்பொருமுறை ஹிந்துவில் சாருலதா மணி சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த சில திரையிசையைப் பாடல்களைப் பற்றி எழுதியிருந்தார்.
பூவரசம் பூ பூத்தாச்சு - கிழக்கே போகும் ரயில்
மாஞ்சோலை கிளிதானோ - கிழக்கே போகும் ரயில்
இளையநதி - மனசெல்லாம்
என்ன சொல்லி பாடுவதோ - என் மன வானில்
.
No comments:
Post a Comment