LOVE FAILURES IN MOVIES
இந்தியத் திரையில் காதல் தோல்வியின் மிக அழுத்தமான பிம்பம் என்றால் அது 'தேவதாஸ்' தான். சரத் சந்திர சட்டோபாத்யாயா 1917-ல் எழுதிய இந்த வங்க நாவல் பல்வேறு இந்திய மொழிகளில் வெவ்வேறு காலக்கட்டங்களில் சினிமாவாக உருவாகியிருக்கிறது. தெலுங்கு வடிவத்தில் இந்தப் பாத்திரத்தில் நடித்த நாகேஸ்வரராவின் நடிப்பு அவருக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தது.
இதைத் தவிர பொதுவாக, துன்பவியலின் நாயகன் என்கிற பிம்பத்தை இந்தி சினிமாவில் குருதத் அழுத்தமாகக் கொண்டிருந்தார்.
காதல் தோல்வி சார்ந்த திரைப்படங்களை இயக்குநர் ஸ்ரீதர் தமிழில் பெருமளவு உருவாக்கினார். இங்கே ஜெமினிகணேசன் அந்த பிம்பத்தைக் கொண்டிருந்தார்.
இந்த காதல் தோல்வி நாயகனின் வரிசையில் செம்மீனின் 'பரீக்குட்டி' இன்னொரு அழுத்தமான பிம்பம். நடிகர் மது இந்தப் பாத்திரத்தை திறம்பட கையாண்டிருந்தார்.
No comments:
Post a Comment