Thursday 24 September 2020

BOMBAY CRIMINAL VARATHARAJAN 1926 - 1988 JANUARY 2

 


BOMBAY CRIMINAL VARATHARAJAN 

1926 - 1988 JANUARY 2

*வரலாறு! மும்பை தாதா வரதராஜன் முதலியார்.* DIED 02.01.1988



பிறவி தாதா இவர். 1926 ல் தூத்துக்குடியில் பிறந்தவர். அந்த கால கட்டத்தில் இவருடைய தந்தை தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். (இவருடைய முன்னோர்கள் ஆற்காடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்). பின் வரதராஜனின் தந்தை பிழைப்பு தேடி பம்பாய் செல்ல அவருடனே ஒட்டிக் கொண்டு வரதாவும் பம்பாய் வந்து VT இரயில்வே ஸ்டேஷனில் போர்ட்டராக வேலை பார்த்தார். வறுமையின் காரணமாக முதன் முதலில் ரயிலில் வந்த சரக்கு மூட்டை ஓன்றைத் திருடி வெளியில் விற்றார். எந்த குற்ற உணர்வும் அவருக்கு வரவில்லை. பிறகென்ன...?. திருடுவது தொடர் கதையானது. அப்படியே திருடுவதற்காக ஒரு சிறு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டார். செல்வா என்ற நண்பர் எப்போதும் இவர் கூடவே இருப்பார்.( வரதா சாகும் வரை அவர் கூடவே தான் செல்வா இருந்தார்).


போலீஸ் ஸ்டேஷனுக்கு கரெக்டாக மாமூல் போய் விடும். ஆதலால் போலீஸ் இவரது திருட்டுத் தனங்களை கண்டு கொள்ளவில்லை. ஆதலால் வரதா அடுத்த லெவலுக்கு போனார். கள்ள சாராயம் காய்ச்சி விற்பது. லாரி டயர் டியூப்புகளில் சாராயத்தை அடைத்து வைத்து சிந்தாமல் சிதறாமல் கடத்தலாம் என்பதை முதன் முதலில் கண்டு பிடித்து இந்த உலகத்திற்கு சொன்ன மாபெரும் விஞ்ஞானி தான் இந்த வரதா. சரக்கு வாகனங்களில் அதை எடுத்து சென்று மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்றார். பணம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டியது. போலீஸ்க்கும் செமத்தியாக மாமூல் கிடைத்தது. வாழ்க்கையில் படு வேகமாக முன்னேறினார் வரதா.


அடுத்து லெவல் கூலிக்கு கொலை செய்தல். " காசு கொடுத்தால் போட்டு தள்ளு....." வரதாவுக்கு பணத்தை கொடுத்தால் போதும்.... எதிராளியின் தலை சொன்ன தேதியில் வெட்டபட்டு ரோட்டில் விழும். அதை யாராலும் தடுக்க முடியாது. அவ்வளவு கச்சிதமான கொலை திட்டம். தொழில் நேர்த்தி. கடன் வசூல் செய்தல் வாடகை வீட்டை காலி பண்ணுதல் புறம்போக்கு நிலம் ஆக்கிரமித்தவர்களுக்கு பாதுகாப்பு, ஆள் கடத்தல் இப்படி தாதாயிஸத்தில் கொடி கட்டி பறந்தார் வரதா.


மும்பையை சுற்றி உள்ள பஞ்சு மில்களில் இருந்து வரதாவுக்கு மாதா மாதம் மாமூல் வந்து விடும். வராவிட்டால் மில்லை தொடர்ந்து நடத்த முடியாது. தொழிலாளர்களை தூண்டி விட்டு குழப்பம் பண்ணுவார். இப்படி மும்பை தொழில் அதிபர்களின் தூக்கத்தை கெடுத்தவர் தான் வரதா. அக்மார்க் சுத்தமான தாதா..... மும்பை தமிழர்களின் ஒட்டு மொத்த காட்ஃபாதர் ஆகவும் இருந்தார் வரதா. நிறைய தமிழர்களுக்கு பண உதவி செய்திருக்கிறார். இவரை மீறி மும்பையின் தாராவி மாதுங்கா பகுதிகளில் தமிழர்கள் மீது யாரும் கை வைத்து விட முடியாது. கொலையே விழும்....


வரதாவின் பேச்சு, நடவடிக்கைகள், எல்லாமே இவர் ஒரு பிறவி தாதா என்பதை நிருபித்தன. வருடா வருடம் இவர் விநாயகர் சதூர்த்தி கொண்டாடும் முறையே அலாதியானது. விநாயகருக்கு மிக பிரமாண்டமாக அலங்காரம் செய்வார். பிற மதத்தை சேர்ந்தவர்கள் கூட இவர் விநாயகருக்கு செய்யும் அலங்காரத்தை கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து பிரமித்து விட்டு போவார்கள்.... மும்பை சினிமா பிரபலங்களும் கூட வந்து பார்த்துவிட்டு போவார்கள். அப்படியொரு கலை நேர்த்தி. கொலை நேர்த்தியை போல...கலை நேர்த்தி. அதாவது கொலையோ, கலையோ.. எதுவா இருந்தாலும் அதை கச்சிதமாகச் செய்வார் வரதா... அப்படித் தான் தன்னை வெளி உலகத்திற்கு காண்பித்து கொண்டார். பிரமாண்டம்... பயங்கரம்... இதுவே வரதாவின் தாரக மந்திரம்.



1960, 70 களில் முமபையில் நம்பர் 1 தாதா இவர். மற்ற மும்பை தாதாக்களான கரிம் லாலா, காஜி மஸ்தான் ஆகியோர் வரதாவுடன் மோத விரும்பாமல் மும்பை மாநகரை மூன்றாக பிரித்துக் கொண்டு அவரவர் ஏரியாவிற்குள் மட்டும் தொழில் செய்து, அடிதடி இல்லாமல் இருந்தனர். சொல்லப்போனால் அடக்கி வாசித்தனர். வந்தார் போலீஸ் அதிகாரி ஒய்.சி. பவார். வரதாவுக்கு வில்லனாக வந்த நேர்மையான அதிகாரி இவர். வரதாவின் கூட்டாளிகளை ஒவ்வொருவராக பிடித்து ஜெயிலுக்கு அனுப்பினார். ஒரு சிலரை என்கவுன்டரில் சுட்டு தள்ளினார்.


ஆதலால் வரதா 1985ல் மும்பையிலிருந்து தப்பி சென்னை வந்தார். பட்டினப் பாக்கத்தில் தன் மகள் மகாலட்சமி வீட்டில் தங்கியிருந்தார். சென்னையில் அமைதியாகவே வாழ்ந்தார் வரதா. பக்கத்துத் தெருவில் இருந்தவர்களுக்கு கூட இவரை யார் என்று தெரியாது. அவ்வளவு கச்சிதமான வாழ்க்கை. உண்மையான தாதாக்கள் இப்படித் தான் இருப்பார்கள்.... நடிகர் வடிவேலு மாதிரி "நானும் பெரிய தாதா தான் ..." என்றெல்லாம் வெளியே காண்பித்துக் கொள்ளமாட்டார்கள்.


2.1.1988ல் மாரடைப்பால் மரணமடைந்தார் வரதா. இதை கேள்விப் பட்ட மற்றொரு மும்பை தாதா காஜி மஸ்தான் இந்தியன் ஏர் லைன்ஸ் நிர்வாகத்திடம் பேசி தனி விமானத்தை வாடகைக்கு எடுத்து சென்னையிலிருந்து வரதாவின் உடலை மும்பை கொண்டு போய், ஏதோ ஒரு மிகப் பெரிய அரசியல் தலைவர் இறந்து விட்டதைப்போல, அவருடைய உடலை பொது மக்களின் அஞ்சலிக்காக வைத்தார். எவ்வளவு தைரியம் பாருங்கள்.....!. அரசியல்வாதிகள் முதல் லோக்கல் அதிகாரிகள் வரை எல்லோருடைய சப்போர்ட்டும் அவருக்கு இருந்தது. ஆதலால் எதைப் பற்றியும் யாரை பற்றியும் மஸ்தான் கவலை படவில்லை.( மஸ்தான் போன்ற பெரிய தாதாக்கள் இப்படித் தான் ஏதாவது ஏடாகூடமாக செய்வார்கள்...!!.

யார் கேள்வி கேட்க முடியும்.? . அவரும் உண்மையான தாதாதான்....). ஆயிரக் கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். ஊர்வலமாக எடுத்து சென்று நல்லடக்கம் செய்தார் மஸ்தான். அவ்வளவு மரியாதை வரதா மீது. ...2010 ல் பட்டினப் பாக்கத்தில் அவர்கள் வீட்டில் நடந்த தீ விபத்தில் மகாலட்சமியும் அவருடைய கணவரும் இறந்து விட்டனர்.


1970, 80 களில் மும்பை என்ன பாடுபட்டிருக்கும் என்பதை சொல்ல தேவையில்லை. 1987ல் டைரக்டர் மணிரத்தனம் வரதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து நாயகன் என்ற படத்தை எடுத்து வெளியிட்டார். கமல் ஹீரோ.

No comments:

Post a Comment