K.P.KAMATCHI SUNDARAM
LYRICS WRITER
கே.பி.காமாட்சி
[வில்லன் நடிகர் மற்றும் கவிஞர்]
ஆரம்ப கால பேசும் படங்களிலும் முன்னோடி நடிகராக உருவானவர். வில்லன் நடிப்பில் ரி.எஸ்.பாலையாவிற்கு முன்னுதாரணம் கே.பி.காமாட்சிதான்.
‘பதி பக்தி’ படத்தில் 1936-இல் நடிக்கத் தொடங்கியவர். 1941-இல் வந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சொந்தப் படமான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் கொள்ளைக் கூட்டத் தலைவராக சிறப்பாக நடித்தவர். படத்தில் சில பாடல்களும் எழுதினார் கே.பி.காமாட்சி.
கலைஞர் மு.கருணாநிதியின் உரை நடையில் சிவாஜிகணேசனின் வசன அம்புகளால் தாக்கப்படும் கோயில் பூசாரியாக ‘பராசக்தி’யில் நடித்தவரும் இந்த கே.பி.காமாட்சி தான். நடிப்பு வாய்ப்பு பறி போனவுடன், பாடலாசிரியராக மாறி சக்கைப் போடு போட்டார் கே.பி.காமாட்சி.
1949-இல் வெளிவந்த “வாழ்க்கை” படத்தில் ’உன் கண் உன்னை ஏமாற்றினால்’, 1952-இல் வெளிவந்த “பராசக்தி”யில் ‘ஓ ரசிக்கும் சீமானே வா”, 1954-இல் வெளிவந்த ”எதிர் பாராதது” ‘சிற்பி செதுக்காத பொற்சிலையே’, 1957-இல் வெளிவந்த “அமரதீபம்” படத்தில் ‘தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு’ முதலிய வெற்றிப் பாடல்களை எழுதியவர் கே.பி.காமாட்சி. இவரும் கவிஞர் கம்பதாசனும் நெருங்கிய நண்பர்கள்.
தினமலர் பல்சுவை மலரிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது.
.
No comments:
Post a Comment