NARENDRA MODI ,
THE LEGEND OF INDIAN PRIME MINISTER
BORN 1950 SEPTEMBER 17
நரேந்திர தாமோதரதாசு மோதி (Narendra Dāmodardās Modī, குசராத்தி: નરેંદ્ર દામોદરદાસ મોદી, பரவலாக நரேந்திர மோடி), (பி. செப்டம்பர் 17, 1950) இந்தியப் பிரதமர் ஆவார்.[1] பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் அக்டோபர் 7, 2001 முதல் மே, 2014 வரை குசராத்து மாநிலத்தின் முதல்வராக பதவியில் இருந்தார்.[1]
குடும்பம்
நரேந்திர தாமோதர்தாசு மோதி ஒரு நடுத்தர குடும்பத்தில் வாட்நகர் என்னும் இடத்தில் பிறந்தார், அவர் தாமோதர்தாசு முல்சந் மோதி மற்றும் அவரது மனைவி கீரபேன்னுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் மூன்றாவதாக பிறந்தார். தனது மனைவியின் பெயர் ஜசோதாபென் என 2014 ஆம் ஆண்டுக்கான வடோதரா நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்புமனுவில் குறித்துள்ளார்.[2]
இளமைப் பருவம்
இவர் இளமைப் பருவத்திலிருந்து ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (RSS) ஒரு உறுப்பினராகவும் உள்ளார், இளமை முதல் அரசியலில் ஆர்வம் கொண்டவர். இவர் 1998 ஆம் ஆண்டில் அரசியல் அறிவியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் குசராத்து மாநிலம், இமாசல பிரதேச தேர்தல் பிரச்சாரங்களில் இயங்க அத்வானியால் தேர்வு செய்யப்பட்டார்.
குசராத்தின் முதல்வர்
அப்போதைய முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர தாமோதர்தாசு மோதி வெற்றி பெற்று அக்டோபர் 7, 2001 இல் குசராத்தின் முதல்வர் ஆனார். இவர் தன் பதவிக்காலத்தை அக்டோபர் 7, 2001 இல் தொடங்கி சூலை, 2007 வரை இருந்தார். பின் திசம்பர் 23, 2007 தேர்தலில் மறுபடியும் வெற்றி பெற்று ஆட்சியை தொடர்ந்தார். இவர் தொடர்ந்து 2063 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்து, குசராத்து வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.
சர்ச்சைகள்
மோதி ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். ஊடகங்களும் அறிஞர்களும் இவரை இந்து தேசியவாதியாக விவரிக்கின்றனர்.[3] இக்கூற்றை இவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.[4][5][6] இந்தியாவிற்குள்ளும், பன்னாட்டளவிலும் மிகுந்த சர்ச்சைகளுக்குட்பட்ட மனிதராக மோதி உள்ளார்.[7][8][9][10] கோத்ரா தொடருந்து எரிப்புக்க்குப் பின் 2002 ஆம் ஆண்டு குசராத்து வன்முறைக்காக மிகக் கடுமையாக சாட்டப்பட்டது இருப்பினும் நீதிமன்றம் தீர்ப்பு இவருக்கு சாதகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.[10][11] குசராத்தில் மிக விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கியதாக இவரது பொருளாதார கோட்பாடுகள் பரவலானப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன.[12] இருப்பினும், இவரது ஆட்சி குறிப்பிடத்தக்க மனிதவளர்ச்சிக் கூறுகளில் நேர்மறை தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை என்றும் குறைகாணப்படுகிறது.[13]
2014 நாடாளுமன்றத் தேர்தல்
பரப்புரை
2014 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ.) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நரேந்திர மோதி நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டார். ஏப்ரல் 2014 முதல் மே 2014 வரை இரண்டு மாதங்களில் நாடெங்கும் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 430 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
பிரதமர் பதவி வேட்பாளர்
2014 ஆம் ஆண்டு 16 ஆவது மக்களவைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முதன்மையேற்கும் தேசிய சனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு வாரணாசி மற்றும் வடோதரா ஆகிய இரண்டு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார்.[14]
வடோதரா தொகுதியில் 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வாரணாசி தொகுதியில் 3,71,784 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பாஜகவின் மக்களவைத் தலைவர்
பாஜகவின் மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் உரையாற்றினார்.[15]
2019 மக்களவைத் தேர்தல்
2019 ஆம் ஆண்டு 17 ஆவது மக்களவைத்தேர்தலில் வாரணாசியில் 674664 வாக்குகள் பெற்று 479505 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றியடைந்தார். இரண்டாவதாக வந்த சமாஜ்வாதி கட்சியின் சாலினி யாதவ் 195159 வாக்குளும் மூன்றாவதாக வந்த காங்கிரசின் அசய் ராய் 152548 வாக்குகளும் பெற்றனர்.
இந்தியப் பிரதமர்
முதல் முறை
முதன்மைக் கட்டுரை: இந்தியக் குடியரசின் 16வது அமைச்சரவை
மே 26, 2014 அன்று பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருடன் ஏனைய 44 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். புது தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணமும், இரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.[16]
இரண்டாம் முறை
முதன்மைக் கட்டுரை: நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவை
2019 இந்தியப் பொதுத் தேர்தலில், 543 மக்களவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், நரேந்திர மோடி இரண்டாம் முறையாக இந்தியப் பிரதமராக 30 மே 2019 அன்று பதவி ஏற்றார்.[17][18][19][20]
முதன்மைக் கட்டுரை: 2014 - 2019 இந்திய நடுவண் அரசின் நிருவாகம்
ஆட்சி முறை
அமைச்சர்கள் அனைவரும் முதல் 100 நாட்களுக்குரிய தமது திட்ட அட்டவணையை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார். அனைத்து அமைச்சர்களையும், அமைச்சகத்தின் செயலர்களையும் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.[21]
தனது வாழ்க்கைக் கதையை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.[22]
வெளிநாட்டுப் பயணம்
அரசுமுறைப் பயணமாக இதுவரை 2014 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு சூன் மாதம் முடிய ஓராண்டில் மட்டும் 16 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதற்கான மொத்த செலவு 37 கோடிகள் ஆகும். இதில் ஜப்பான், இலங்கை, பிரான்ஸ் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்கு சென்ற விபரங்கள் கொடுக்கப்படவில்லை. இதில் அதிக செலவாக ஆஸ்திரோலியா சென்றதற்கு 8.91 கோடிகளும், குறைந்த செலவாக பூடான் சென்று வந்ததற்காக 41.33 லட்சங்களும் செலவிடப்பட்டுள்ளது.[23]
நூல்கள்
சக்தி பாவ் (2015)
சமூக நல்லிணக்கம் (2015)
ஜோதி பூனா (2015)
'சமூக நல்லிணக்கம்' குஜராத்தி மொழியில் 'சமாஜிக் சம்ரஸ்தா' (2010)
நரேந்திர மோடி அவர்கள், குஜராத்தை சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர் ஆவார். தொடர்ந்து நான்கு முறை குஜராத் மாநிலத் இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்று, குஜராத் அரசியல் வரலாற்றில் நீண்டகால முதல்வராக இருந்தவர் என்ற சாதனையைப் பெற்றார். மிகப்பெரிய அளவில் தொழில் வளர்ச்சி ஏற்படவேண்டும் என்பதில், அதிக ஆர்வம் கொண்டவராக விளங்கிய அவர், மின்சாரம், தண்ணீர், சாலை வசதிகள், பெண் கல்வி, ஆரோக்கியம், ஊழலற்ற நிர்வாகம், விவசாயம், தொழில் வளர்ச்சி என அனைத்துத்துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி, குஜராத் மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார். இவருடைய சாதனையைப் பாராட்டி, “இந்தியா டுடே” நாளிதழ், “இந்தியாவின் சிறந்த முதல்வர்” என்ற விருதை வழங்கி கௌரவித்தது. மேலும், குஜராத் கணினித்துறையில் இவர் ஏற்படுத்திய வளர்ச்சிக்காக ‘கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு “இ-ரத்னா” விருதை வழங்கி கௌரவித்தது. நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலும் நிர்வாகமே, எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமானது எனக் கூறியது மட்டுமல்லாமல், அதை செயல்படுத்தியும் காட்டிய நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: செப்டம்பர் 17, 1950
பிறப்பிடம்: வட்நகர், மேஹ்சானா மாவட்டம், குஜராத் மாநிலம், இந்தியா
பணி: அரசியல்வாதி
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
நரேந்திர மோடி அவர்கள், 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் இந்தியாவின் குஜராத் மாநிலம், மேஹ்சானா மாவட்டத்திலுள்ள “வட்நகர்” என்ற இடத்தில் ‘தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி என்பவருக்கும், ஹூராபேன்னுக்கும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில், மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு ஆறு சகோதரர்கள் உள்ளனர்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தன்னுடைய ஆரம்பக் கல்வியை ‘வட்நகரில்’ உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய நரேந்திர மோடி அவர்கள், பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுதே, ரயில் நிலையத்தில் டீக்கடை நடத்திவந்த தன்னுடைய தந்தைக்கு உதவிகள் பல செய்துவந்தார். தன்னுடைய எட்டு வயதிலேயெ, இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட ‘ஆர்.எஸ்.எஸ்’ என அழைக்கப்படும் ‘தேசிய தொண்டர் அணியில்’ உறுப்பினராக இணைந்த மோடி அவர்கள், அரசியலில் அதிகம் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். இதனால், குஜராத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
அரசியல் வாழ்க்கை
சிறுவயதிலேயே ‘ஆர்.எஸ்.எஸ்–இல்’ தன்னை இணைத்துக்கொண்ட மோடி அவர்கள், ‘அகில பாரதிய வித்யார்தி பரிஷத்’ என்னும் மாணவர் குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றிருந்தார். இந்தியாவில் நெருக்கடிநிலை அமலில் இருந்த பொழுது, போராட்டங்களில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட மோடி அவர்களுக்கு, பல அரசியல் தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. மோடியின் அயராத உழைப்பும், தன்னலமற்ற ஈடுபாட்டையும் கண்ட பிற கட்சி தலைவர்கள் அவரை வெகுவாகப் பாராட்டினர். ‘ஆர்.எஸ்.எஸ்-இன்’ தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த அவர், பிறகு பாரதிய ஜனதாக் கட்சியின் உறுப்பினராகவும் சேர்ந்து, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச்செயலாளராக உயர்ந்தார்.
குறுகிய காலத்திற்குள், அத்வானியால் 1998 ஆம் ஆண்டு ‘குஜராத்’ மற்றும் ‘இமாசலப் பிரதேச’ தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மோடி அவர்கள், வெகு விரைவில், ‘இமாசலப் பிரதேசம்’, ‘பஞ்சாப்’, ‘ஹரியானா’, ‘சண்டிகர்’, மற்றும் ‘ஜம்மு காஷ்மீர்’ போன்ற ஐந்து மாநிலங்களுக்கு, ‘பாரதிய ஜனதாக் கட்சியின்’ பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு ‘அடல் பிகாரி வாஜ்பாய்’ பிரதமராகப் பதவியேற்றபொழுது, மோடிக்கு ‘தேசிய செயலாளர்’ பதவி வழங்கப்பட்டது.
குஜராத் முதல்வராக மோடி
தான் வகித்த அனைத்து பொறுப்புகளிலும் திறம்படச் செயல்பட்ட மோடி அவர்கள், 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி, குஜராத் முதல்வராக இருந்த ‘கேசுபாய் பட்டேல்’ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ‘பாரதிய ஜனதாக் கட்சியின்’ தனிப்பெரும்பான்மை ஆதரவுடன் அக்டோபர் 7 ஆம் தேதி குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார். பின்னர், இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற அவர், பிப்ரவரி 27, 2002 ஆம் ஆண்டு நடந்த “கோத்ரா ரயில் எரிப்புச்” சம்பவத்தைத் தொடர்ந்து, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இருந்தாலும், அதே ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பின்னர், 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக குஜராத் முதல்வர் பதவியை அலங்கரித்தார். இதனால், குஜராத் அரசியல் வரலாற்றில், நீண்டகால முதல்வராக இருந்தவர் என்ற சாதனையைப் பெற்றார். அதோடு நின்று விடாமல், நரேந்த மோடியின் அரசு மேற்கொண்ட பல்வேறு நலத்திட்டங்களினால், குஜராத் மக்கள் அனைவரும் பலன் அடைந்துள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநிலத் தேர்தலில் நான்காவது முறையாக வெற்றிபெற்று, இந்திய அரசியலில் மாபெரும் சாதனைப் படைத்தார்.
முதல்வராக மோடியின் சாதனைகள்
பல எதிர்ப்புகள் இருந்தாலும், மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட மோடி அவர்கள், சோலார் மின் உற்பத்தியினை அதிகப்படுத்தி குஜராத்தை மின் மிகை மாநிலமாக மாற்றினார். இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதை தவிர்க்க, “குட்கா” என்னும் போதைப்பொருளுக்குத் தடை விதித்தார். மும்பைத் தாக்குதலுக்குப் பின், குஜராத் கடலோர பாதுகாப்பைப் பன்மடங்கு பலப்படுத்தினார். மேலும், தண்ணீர், சாலை வசதிகள், பெண் கல்வி, ஆரோக்கியம், ஊழலற்ற நிர்வாகம், விவசாயம், தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி, குஜராத் மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார்.
விருதுகளும், மரியாதைகளும்
2006 – ‘’இந்தியா டுடே’ நாளிதழ் இந்தியாவின் ‘சிறந்த முதல்வர்’ என்ற விருதை வழங்கி கௌரவித்தது.
குஜராத் கணினித்துறையில் இவர் ஏற்படுத்திய வளர்ச்சிக்காக ‘கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு ‘இ-ரத்னா’ விருதை வழங்கி கௌரவித்தது.
2009 – ஆசியாவின் சிறந்த ‘எப்.டி.ஐ பெர்சனாலிட்டி’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
2012 – ‘டைம்’ பத்திரிகையின் முதல் அட்டையில் இந்தியாவின் ‘சிறந்த அரசியல்வாதிகளில்’ ஒருவராக சித்தரிக்கப்பட்டார்.
நரேந்திர மோடியின் தலைமையிலான குஜராத் அரசாங்கம், சிறந்த நிர்வாகத்திற்கான உதாரணம் என அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது.
‘ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படைத் தேவை பொருளாதார சுதந்திரம்தான், இது இல்லாவிட்டால், பூரண சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ஒரு போதும் சொல்ல முடியாது’ என்பது பொருளாதார ஆய்வாளர்களின் கருத்து ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு, குஜராத் மாநிலம் பல துறைகளில் வளர்ச்சிக் கண்டு, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது என்றால், மோடியின் அரசியில் ஆளுமை தான் அதற்கு முக்கிய காரணம். மேலும், அவர், மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களை நடைமுறைப்படுத்தி, தனது நடவடிக்கையாலும், செயல் திட்டங்களாலும் நிரூபித்துக் காட்டி, மற்ற தலைவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார் என்றால் அது மிகையாகாது.
குஜராத்தின் வாத்நகர் என்ற சிறுகிராமத்தின் நடுவே, முதலைகள் கூட்டமாய் அலையும் ஷர்மிஸ்தா ஏரி. இதன் நடுவில் ஒரு சிறு கோயில். விழாவின் போது, கோயில் உச்சியில், புதிய கொடியை கட்டுவார்கள். அன்றும் அப்படித்தான். முதலைகளுக்கு பயப்படாமல், ஏரிக்கு நடுவில் சென்று கொடியை கட்ட மூன்று சிறுவர்கள் நீந்தினார்கள். அதில் இரண்டு பேர் பின்வாங்கினர்.
ஊரே சுற்றி நின்று உற்சாகப்படுத்த, முதலைகளை விரட்ட மக்கள் மத்தளம் முழுக்க, அந்த 14 வயது சிறுவன் நீந்தி சென்று, காவிக்கொடியை ஏற்றி கரை சேர்ந்தான். மக்கள் எல்லாம் கூடி நின்று சிறுவனின் துணிச்சலை பாராட்டினர்; துாக்கி கொண்டாடினர். ஆர்ப்பரித்தனர். அப்போது அந்த சிறுவன் நினைத்திருக்கவில்லை, 50 ஆண்டுகள் கழித்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் ஆவேன் என்று! உலகின் 15 சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவன் ஆவேன் என்று! அவர் நரேந்திர மோடி! அவருக்கு இன்று 67 வயது.
மின்சாரமே நுழையாத வாத்நகரில், ஏழை டீக்கடைக்காரரின் மகனாக, செப்.,17, 1950ல் மண்குடிசையில் பிறந்த மோடி, இந்தியாவின் பிரதமராக எளிதாக உயர்ந்து வந்துவிடவில்லை. விடாமுயற்சி, கொண்ட கொள்கையில் உறுதி, மாற்று சிந்தனை, புதுமை பார்வை, தனிமனித துாய்மை, நேர்மை, நல்லொழுக்கம் என நரேந்திர மோடியின் தனிக்குணங்கள் ஏராளம்.
பள்ளி படிப்பில் ஆசிரியர்கள் கூறும் கருத்தை கவனமாக கேட்டாலும், அதில் மாற்று சிந்தனையை முன்வைப்பார். அவர் வாழ்ந்த வாத்நகர் புத்த, இந்து, முஸ்லிம் கலாச்சார பின்னணி கொண்டது. அவரது பால்ய நண்பர்கள் எல்லாம் முஸ்லிம்கள். அனைத்து மத பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அப்போதே அறிந்து வைத்திருந்தார்.
தேசப்பற்று
ஆழ்ந்த தேசப்பற்று கொண்டவராக இருந்தார். 1965 இந்திய-பாக் போரின் போது, வாத்நகர் ரயில்வே ஸ்டேஷன் வழியே ராணுவ வீர்கள் ஆயுதங்களுடன் செல்வர். 15 வயது சிறுவனான மோடி, அவர்களை ஊக்கப்படுத்த, இலவசமாக டீயை தருவாராம். ராணுவத்தினரை பிரமிப்போடு பார்த்து, நாமும் இவர்களோடு போருக்கு சென்றால் என்ன என்று சிந்திப்பார்.
முதன்முதலாக மோடி, திகார் சிறைவாசம் அனுபவித்ததே ராணுவத்திற்கு செல்லும் ஆசையில் தான். 1971 போரில் பங்கேற்கும் நோக்கில், 'எங்களையும் ராணுவத்தில் சேருங்கள்' என்று ஆர்.எஸ்.எஸ்., இயக்க இளைஞர்கள் போராடினர். அதில் மோடியும் ஒருவர். அப்போது தான் கைதானார். இதனை பின்னாளில் ஒரு கட்டுரையில் மோடி நகைச்சுவையாக குறிப்பிட்டார், 'எங்களை போருக்கு அனுப்புங்கள் என்று கெஞ்சினோம்; திகாருக்கு அனுப்பினார்கள்'
8 வயதில்
உள்ளத்துாய்மையும், உடல் துாய்மையும் வேண்டும், தேசத்தை காக்க வேண்டும் என்ற உத்வேகம், மோடிக்கு 8 வயதிலேயே உதயமானது. ஆம், வாத்நகரில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., 'சாகாவில்' தினமும் கலந்து கொள்ளும், மிகச்சிறிய வயது சிறுவன் இவர் தான்.நாட்டிற்கு கடமை ஆற்ற வேண்டும் என்று, அப்போது மனதில் உறுதி எடுத்துக்கொண்டார். எட்டு வயதில் இருந்து, ஆர்.எஸ்.எஸ்., பயிற்சியில் கற்ற விஷயங்கள், பெற்ற அனுபவங்கள், பின்னாளில் அவரது வாழ்க்கைக்கு புதுப்பாதை அமைத்தது.
பள்ளிபடிப்பின் போதே, ஏராளமான புத்தகங்கள் படிக்கும் பழக்கம் கொண்ட மோடியின் சிந்தனை, விவேகானந்தர் பக்கம் திரும்பியது. பதினேழு வயதில் வீட்டை விட்டு வெளியேறி, நாட்டின் பல பகுதிகளில் ஒரு துறவி போல அலைந்து, விவேகானந்தர் மடம், ராமகிருஷ்ண மடம் சென்று ஆன்மிக விஷயங்களை அறிந்து கொண்டார். இன்றும், நவராத்திரிக்கு 9 நாட்கள், ஒரு வேளை உணவருந்தி விரதம் இருப்பது அவர் வழக்கம். 'நரேந்திர மோடி- எ பொலிடிக்கல் பயோகிராபி' என்ற ஆங்கில புத்தகத்தில், அந்த வாழ்க்கையை மோடி இவ்வாறு குறிப்பிடுகிறார்...
''எனக்கென்று வாழ்க்கையில் எந்த வசதிகளும் வைத்துக்கொள்ளவில்லை. கூடவே தோளில் ஒரு பை மட்டும் தான். அதற்குள் இருந்தது தான் என் சொத்து. விரும்பிய இடத்திற்கு செல்வேன்; விரும்பிய இடத்தில் சாப்பிடுவேன்; விரும்பிய திண்ணையில் துாங்குவேன்! அப்படித்தான் சில ஆண்டுகள் என் வாழ்க்கை கழிந்தது. இதனால் நான் பெற்ற அனுபவங்கள் புதுமையானது''
இருபது வயதில்
மூன்றாண்டுகள் நாடுமுழுக்க அலைந்து திரிந்த பின்பு, இருபதாவது வயதில் வீட்டிற்கு திரும்பினார். மகன் மீது கொண்ட பாசத்தில், அவரது அம்மா 'என் மகன் நாட்டிற்காக, வீட்டை விட்டு போய் விடுவான் என்றே தோன்றுகிறது,' என புலம்பினார். அவர் கூறியது போல, இரண்டு நாட்கள் மட்டும் அங்கு தங்கி இருந்தார். பின்னர் ஆமதாபாத் சென்று, ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் முழுநேர ஊழியரானார். அதற்குப்பிறகு இருபது ஆண்டு கழித்து தான், உறவினர்களை பார்க்க, வாத்நகர் வந்தார்.
ஆமதாபாத்தில்...
ஆமதாபாத் ஆர்.எஸ்.எஸ்., அலுவலக வாசம், மோடியின் அரசியல் தொடர்புகளுக்கு அடித்தளமிட்டது. அவர் பிரதமரானதும், 'துாய்மை இந்தியா' கோஷத்தை முன்வைத்தார். நாடு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும், வீட்டையும், தெருவையும், நாட்டையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று, யாரும் சிந்திக்கவில்லை. எந்த தலைவனும் பேசவில்லை. அதை மோடி, 'கையில் எடுக்க' காரணம் உண்டு.
சிறுவயதில் இருந்தே, வீட்டை, ஊரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தவர் மோடி. 'வீட்டில் உள்ள அத்தனை அழுக்கு துணிகளையும், ஊர்குளத்தில் அழகாக துவைப்பார்; இவர் எப்படி துவைக்கிறார் என்று பார்க்க மக்கள் வருவார்கள்.' என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் அம்மா ஹிராபென்.ஆமதாபாத் ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தின், மொத்த துாய்மைப்பணியும், மோடி கையில் வந்தது. அதனை மோடியே குறிப்பிடுகிறார்...
''காலை 5 மணிக்கு எழுந்து தியானம், யோகா செய்வேன். பால் கறப்பேன்; மற்றவர்களை எழுப்புவேன். டீ தயாரிப்பேன். தரை, பாத்திரங்கள் கழுவுவேன். காலை பயிற்சிக்கு செல்வேன். பின்னர் சமையல் செய்வேன். ஒன்பது அறைகளை கூட்டி பெருக்கி சுத்தம் செய்வேன். ஓய்வே இல்லை''- இந்த பயிற்சி தான் நாட்டின் பிரதமர் ஆனதும், குப்பைகளை அகற்றிட, துடைப்பம் துாக்க வைத்தது போலும்! அது இன்று ஒரு இயக்கமாக நாடு முழுவதும் நடக்கிறது.
ஓய்வு இல்லை
இன்றும் பிரதமர் மோடி ஓய்வறியாதவர்; 5 மணி நேரம் மட்டுமே துாங்குகிறார். குஜராத் முதல்வராக 12 ஆண்டுகள், ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றினார்.சிறுவயதில் அம்மாவிடம் எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்பாராம், 'இந்த விஷயத்தை ஏன் இப்படி செய்தீர்கள்; வேறு வழியில் செய்யக்கூடாதா' என்று. அந்த சிந்தனை நாட்டிற்கு பணியாற்ற வந்த போதும் தொடர்கிறது. குஜராத் முதல்வரானதும், எல்லா விஷயங்களிலும் மாற்று சிந்தனையை முன்வைத்தார். 'இடையூறு இல்லாமல், 24 மணி நேரமும் மின்வினியோகம் செய்ய வேண்டும்,' என்று அவர் கூறியபோது, அதிகாரிகள் இது நடக்காது என்றனர்.
இரண்டாண்டுகளில், குஜராத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி காட்டினார்; இதனால் தொழில் வளம் பெருகியது. ஆறு கோடி மக்கள் கொண்ட குஜராத்தை, இந்தியாவின் முன் மாதிரி மாநிலம் ஆக்கினார்.இந்த தகுதியே, 120 கோடி மக்கள் கொண்ட இந்தியாவை ஆளும் தகுதியை, மோடிக்கு பெற்று தந்தது. 'இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பிறந்த, இந்திய பிரதமர்' என்ற பெருமை மோடிக்கு உண்டு.
அதுபோலவே, பிற பிரதமர்களை விட, தொலைநோக்கு பார்வையோடு, வித்தியாசமாக, வளர்ச்சியை பற்றி சிந்திக்கிறார். ஜப்பானின் 'புல்லட் ரயிலை' இந்தியாவிற்கு கொண்டு வருவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார். சென்னை-நெல்லை 11 மணி நேர ரயில்பயண துாரத்தை, மூன்று மணி நேரத்தில் புல்லட் ரயில் கடந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான், ஆமதாபாத்-மும்பை புல்லட் ரயில் வரப்போகிறது. நிறைவேற்ற 5 ஆண்டு காலக்கெடு நிர்ணயித்து விட்டார். இதன் மூலம் 15 லட்சம் பேருக்கு, வேலைவாய்ப்பு கிடைக்க போகிறது.
அவரது முடிவுகள், திட்டங்கள் வரவேற்பையும், சர்ச்சைகளையும் ஒருங்கே பெற்றிருக்கின்றன. என்றாலும், ஊழல் என்ற குற்றச்சாட்டு இல்லை. அதுவே இந்திய குடிமகனுக்கு ஆறுதலான விஷயம். நிர்வாக இயந்திரம் வேகமாக நகர்கிறது என்பதிலும் மாற்று கருத்து இல்லை. என்றாலும் மோடியிடம், இளைஞர்களின் எதிர்ப்பார்ப்பு இன்னும் நிறையவே உள்ளது.
'மக்களுக்கு, மக்களை கொண்டு, தொண்டு செய்' என்பதே மோடியின் நிர்வாக சித்தாந்தம்.குறை, நிறைகள் பல கூறினாலும், மோடி நமது நாட்டின் பிரதமர். மக்களுக்கு தொண்டு செய்ய, வாழ்க பல்லாண்டு என வாழ்த்துவோம்!
-ஜீ.வி.ரமேஷ்குமார்பத்திரிகையாளர்
No photo description available.
No comments:
Post a Comment