Sunday 27 September 2020

BASIC OF MAHABHARATHAM

 



BASIC OF MAHABHARATHAM

இந்த கதையே மஹாபாரத்தின் மூல கரு .

இது புரியாவிட்டால் மஹாபாரதமே புரியாது



வைசம்பாயனர் சொன்னார், "கோசல இளவரசியின் மாதவிடாய் முடிந்ததும், சத்தியவதி தனது மருமகளை {அம்பிகையை} நீராட்டிச் சுத்தப்படுத்தி, படுக்கையறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கே இருந்த ஆடம்பரக் கட்டிலில் தனது மருமகளை அமரச் செய்து, அவளிடம் {அம்பிகையிடம்},(1) "ஓ கோசல இளவரசியே {அம்பிகையே}, உனது கணவனின் {விசித்திரவீரியனின்} அண்ணன் இன்று உனது கருவறைக்குள் உனது குழந்தையாக நுழைவான். இன்றிரவு அவனுக்காகத் {வியாசருக்காக} தூங்காமல் காத்திருப்பாயாக" என்றாள்.(2) தனது மாமியாரின் {சத்தியவதியின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த இனிமையான இளவரசி {அம்பிகை}, பீஷ்மரையும், குரு குலத்தின் பிற மூத்தவர்களையும் நினைத்து அந்தக் கட்டிலில் சாய்ந்திருந்தாள்.(3) அந்த உண்மை நிறைந்த அம்முனிவர் (வியாசர்), தான் அம்பிகையைக் (இளவரசிகளில் மூத்தவள்) குறித்த ஒரு வாக்கை முதலில் கொடுத்திருந்ததால், அவளது அறையில் விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போதே நுழைந்தார்.(4) அந்த இளவரசி {அம்பிகை} அவரது {வியாசரது} கரிய நிறத்தையும், தாமிரக்கம்பிகள் போலச் சிவந்திருந்த சடா முடியையும், எரியும் தழல் போன்ற கண்களையும், கரடு முரடான தாடியையும் பார்த்துப் பயந்து தனது கண்களை மூடிக் கொண்டாள்[1].(5)



எனினும், அந்த முனிவர் {வியாசர்}, தனது தாயின் {சத்தியவதியின்} விருப்பத்தை நிறைவேற்றும் விருப்பத்தால் அந்த இளவரசியை {அம்பிகையை} அறிந்தார். அச்சத்திலிருந்த அவள் {அம்பிகை}, கண்ணைத் திறந்து ஒரு முறையேனும் வியாசரைப் பார்க்கவில்லை.(6) வியாசர் வெளியே வந்த போது, அவரது தாய் {சத்தியவதி} அவரைச் சந்தித்து, "இளவரசி {அம்பிகை} பிள்ளையைப் பெறுவாளா?" என்று கேட்டாள்.(7) அதைக்கேட்டு, "இளவரசி {அம்பிகை} பெறப்போகும் பிள்ளை பத்தாயிரம் யானைகள் பலம் கொண்டவனாக இருப்பான். அவன் சிறந்த அரசமுனியாக இருந்து, பெரும் கல்வியும், புத்திக்கூர்மையும், சக்தியும் பெற்றிருப்பான். அந்த உயர் ஆன்மா தனது காலத்தில் நூறு பிள்ளைகளைப் பெறுவான். ஆனால் அவனது தாயின் {அம்பிகையின்} தவறால் அவன் குருடாகப் பிறப்பான்" என்று வியாசர் பதிலுரைத்தார்.(8-10)



இந்த வார்த்தைகளைக் கேட்ட சத்தியவதி, "ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவனே, குருடாக இருப்பவனால் எவ்வாறு குருக்களுக்குத் தகுந்த ஏகாதிபதியாக முடியும்?(11) குருடாக இருப்பவனால் எவ்வாறு தனது உறவினர்களையும், குடும்பத்தையும், தன் தந்தையுடைய குலத்தின் மகிமையையும் பாதுகாக்க முடியும்? நீ குருக்களுக்கு இன்னும் ஒரு மன்னனைக் கொடுக்க வேண்டும்" என்றாள்.(12) வியாசர் "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிச் சென்று விட்டார். மூத்த கோசல இளவரசி சரியான காலத்தில் ஒரு குருட்டு மகனைப் பெற்றெடுத்தாள்.(13) ஓ எதிரிகளை அழிப்பவனே {ஜனமேஜயனே}, விரைவில் சத்தியவதி, தனது மற்றுமொரு மருமகளிடம் {அம்பாலிகையிடம்} உறுதி பெற்று முன்பு போலவே வியாசரை வரவழைத்தாள்.(14) வியாசர் முன்பு போலவே தனது உறுதிக்கிணங்கத் தனது தம்பியின் {விசித்திரவீரியனின்} இரண்டாவது மனைவியை {அம்பாலிகையை} அணுகினார். அம்பாலிகை அந்த முனிவரைக் {வியாசரைக்} கண்ட பயத்தால் ஒளியிழந்து வெளிறிவிட்டாள். ஓ பாரதா {ஜனமேஜயா}, அவள் {அம்பாலிகை} பயத்தால் வெளிறிப்போவதைக் கண்ட வியாசர் அவளிடம் {அம்பாலிகையிடம்},"எனது கொடும் உருவத்தைக் கண்டு நீ பயத்தால் வெளிறிப் போனதால்,(15-17) ஒளியிளந்து வெளிறிய நிறத்தில் மகனைப் பெறுவாய். ஓ அழகான முகம் கொண்டவளே, உனது மகனின் பெயரும் பாண்டு (மங்கலானவன்) என்று வழங்கப்படும்" என்றார்.(18)


இதைச்சொல்லிவிட்டு அந்தச் சிறப்புமிகுந்த முனிவர் {வியாசர்} அந்த அறையில் இருந்து வெளியே வந்தார். அவர் {வியாசர்} வெளியே வந்தபோது, அவரது தாய் {சத்தியவதி} அவரைச் சந்தித்துக் குழந்தையைப் பற்றிக் கேட்டாள்.(19) அதற்கு அந்த முனிவர் {வியாசர்} குழந்தை மங்கிய நிறத்தில் பிறந்து பாண்டு என்ற பெயரால் அழைக்கப்படும் என்றார். சத்தியவதி அந்த முனிவரிடம் {வியாசரிடம்} இன்னுமொரு குழந்தையை இரந்து கேட்டாள்.(20)


அந்த முனிவர், "அப்படியே ஆகட்டும்" என்றார். அம்பாலிகை, அவளுக்குரிய காலத்தில் மங்கிய நிறத்தில் ஒரு மகனை ஈன்றெடுத்தாள்.(21) அந்தப் பிள்ளை மிகவும் அழகானவனாக அனைத்து அதிர்ஷ்டக்குறிகளும் பெற்றிருந்தான். அந்தப் பிள்ளையே பின்னாட்களில் பெரும் வில்லாளிகளான பாண்டவர்கள் ஐவரின் தந்தையானான்[2].(22) சிறிது காலத்திற்குப் பிறகு, விசித்திரவீரியனின் மூத்த விதவை {அம்பிகை} தனது மாதவிடாய்க்குப் பிறகு, சத்தியவதியால் வியாசரை அணுகப் பணிக்கப் பட்டாள். தேவலோகத்தைச் சேர்ந்த மங்கை போன்றவளான அழகான அந்த இளவரசி அந்த முனிவரின் {வியாசரின்} கொடும் உருவத்தையும், கடும் நாற்றத்தையும் நினைத்துத் தனது மாமியாரின் உத்தரவை ஏற்க மறுத்தாள். இருப்பினும், அப்சரஸ் போன்ற அழகுடைய தனது தாதிகளில் ஒருத்திக்குத் தனது ஆடை மற்றும் ஆபரணங்களைப் பூட்டி அவரிடம் {வியாசரிடம்} அனுப்பி வைத்தாள். வியாசர் வந்ததும் அந்த மங்கை எழுந்திருந்து அவரை {வியாசரை} வணங்கினாள்.(23-25)



அவள் அவரை {வியாசரை} மரியாதையுடன் கவனித்துக் கொண்டு, அவர் கேட்டுக்கொண்ட போது அவரருகே அமர்ந்தாள். ஓ மன்னா {ஜனமேஜயா}, கடுந்தவம் இருந்தவரான அம்முனிவர் {வியாசர்} அவளிடம் பெரும் மனநிறைவு கொண்டு,(26) அவளிடம் இருந்து விடைபெறும் முன், "இனிமையானவளே, இனி நீ அடிமையாக {பணிப்பெண்ணாக} இருக்க மாட்டாய். உனது குழந்தை மிகவும் அதிர்ஷ்டசாலி, அவன் அறம் சார்ந்தவனாக இருந்து, இந்தப் பூமியில் புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவனாக இருப்பான்"


என்றார்.(27) ஓ மன்னா {ஜனமேஜயா}, கிருஷ்ண துவைபாயனருக்கு {வியாசருக்கு} அவளிடம் பிறந்த மகன் பின்னாட்களில் விதுரன் என்று அழைக்கப்பட்டான். இப்படியே அவன் {விதுரன்} திருதராஷ்டிரனுக்கும், சிறப்புமிகுந்த பாண்டுவுக்கும் சகோதரனானான்.(28) விதுரன் ஆசை மற்றும் விருப்பங்களுக்கு அப்பாற்பட்டவனாக இருந்து ஓர் அரசாங்கத்தின் சட்டங்கள் மற்றும் விதிகளைப் பயின்று அதில் நிபுணனானான். அவனே ஆணிமாண்டவ்யரின் சாபத்தால் பூமியில் பிறந்த தர்மதேவன் {யமன்} ஆவான்.(29) கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} முன்பைப் போலவே தனது தாயைச் {சத்தியவதியைச்} சந்தித்து மூத்த இளவரசியால் தாம் ஏமாற்றப்பட்டதையும், சூத்திரப் பெண்ணுக்கு மகனைக் கொடுத்ததையும் சொன்னார். அனைத்தையும் சொல்லிவிட்டுத் தனது தாய் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போனார்.(30) இப்படியே விசித்திரவீரியனுக்கு உரிமையுள்ள நிலத்தில் {அம்பிகை, அம்பாலிகையிடத்தில்} துவைபாயனருக்கு {வியாசருக்கு}, தேவர்களைப் போன்ற அந்தப் பிரகாசமான குழந்தைகள் குரு பரம்பரையின் தழைக்கச் செய்வதற்காகப் பிறந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(3

.

No comments:

Post a Comment