MERITS OF MODI

 



MERITS OF MODI

நறுக்கென்று பாயின்ட் பாயிண்டாக கேட்டிருக்கிறார்  பங்களூருவைச் சேர்ந்த ஒரு சகோதரி.



முழுவதும் படியுங்கள். கேட்டிருக்கும் கேள்வி நியாயம் தான் என்று உங்களுக்கு தோன்றுகிற பட்சத்தில் இந்தக் கேள்விகளை அப்படியே (தமிழில்) உள்ளது உள்ளபடியே காப்பி பேஸ்ட் செய்து இந்நாள் காங்கிரஸ் தலைவருக்கு அனுப்பி வையுங்களேன்.


பெங்களூரை சேர்ந்த பெண்ணின் கடிதம் ராகுல் காந்திக்கு. ராகுல் காந்தி தன்னை மோடியோடு ஒப்பிடுவது பற்றி கேட்கிறார்.


அன்புடன் திரு ராகுல் காந்தி அவர்களுக்கு,


கோடிக்கணக்கானவர்கள் நரேந்திர மோடியை தங்கள் தலைவராக, முன்மாதிரியாக பார்க்கிறார்கள். உங்களை எத்தனை பேர் தலைவராக, முன்மாதிரியாக பார்க்கிறார்கள்?


பரம்பரை அரசியல் வேண்டாம் என்பவர்கள் நரேந்திர மோடியை தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆனால், நீங்களோ வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட அதே பரம்பரையை சேர்ந்தவர். காந்தி என்ற குடும்ப பெயரை தவிர நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சாதித்தது என்ன? பெரும்பாலோர் மிக அதிக காலம் ஏமாற்றப்பட்டு விட்டார்கள். நீங்களெல்லாம் என்னதான் சாதித்துள்ளீர்கள் இதுவரை?


ஒவ்வோர் ஆண்டும் மோடியின் தாயார் அவரது பிறந்த நாளன்று அவருக்கு பகவத் கீதை புத்தகம் பரிசளிக்கிறார். சரியான பாதையை தேர்ந்தெடு என்று நினைவு படுத்த. உங்கள் தாயார் உங்களுக்கு என்ன தருகிறார்?


நரேந்திர மோடி, பாராளுமன்றத்தை நெருங்கிய போது தரையில் விழுந்து வணங்கினார். ஜனநாயகத்தின் கோவில் என்று கூறி உள்ளே நுழைந்தார். நீங்களும் அப்படித்தான் பார்க்கிறீர்களா? அப்படித்தான் பாராளுமன்றத்தை மதித்திருக்கிறீர்களா?


குஜராத் முதலமைச்சராக அவர் ராஜினாமா செய்தபோது, அதுவரை தன்னுடைய சம்பளம் ரூபாய் 21 லட்சத்தை அரசு வேலை செய்வோரின் குழந்தைகள் கல்விக்காக தானம் செய்திருந்தார். இந்த தேசத்துக்காக இதுவரை நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் ராகுல்?


மோடியின் தலைமையில், இந்த நான்காண்டுகளில் 478 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். உங்கள் அரசு தலைமையில் இருந்தபோது எத்தனை பயங்கரவாதிகள் இறந்தார்கள்?


சுதந்திரம் பெற்ற நாள் முதல், 30% மேலாக ஏழைகள் சமையல் எரிவாயு இணைப்பு கிடைக்காமல் அவதிப்பட்டார். இந்த நான்காண்டுகளில் 5 கோடி பேருக்கு கிடைத்துள்ளது. இதை உங்கள் அரசு ஏன் செய்யவில்லை?


மோடி குடும்ப அரசியல், பரிந்துரைகள், சிபாரிசுகள் எதையும் செய்வதில்லை. உங்கள் குடும்பமோ இந்த நாட்டையே தங்கள் சொத்தாக பாவிக்கிறது. ஏனிப்படி? உங்கள் ஆட்சி நடந்த போது ராபர்ட் வத்ராவுக்கு ஏன் இத்தனை சலுகைகள் வழங்கப்பட்டன?


சைனா டோக்லாம் பகுதியில் வாலாட்டியது மோடி வந்த பிறகு அல்ல. ஆனால், சைனாவை தங்கள் துருப்புக்களை பின்வாங்க செய்தார் அவர். இதை உங்களால் செய்ய முடியுமா? அந்த தகுதி, தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?


இந்த நான்காண்டுகளில் ஒரு லஞ்ச ஊழல் புகார் கூட அவர் மீதோ, அவர் கட்சியின் மீதோ இல்லை. கடந்த 60 ஆண்டுகளில் ஊழல் செய்யாத ஆண்டு என்று ஒன்றை காட்ட முடியுமா உங்களால்?


உங்கள் கட்சியினர் அவரை டீ விற்றவர் என்று கிண்டல் செய்கிறார்கள். அவரும் ஒப்புக்கொள்கிறார். எங்களுக்கு அதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை. அதுவும் நேர்மையான பிழைப்புதானே? நீங்கள் பிழைப்புக்காக எதையெல்லாம் விற்றீர்கள் என்று சொல்ல முடியுமா? என்னென்ன தொழில்களை நேர்மையாக செய்தீர்கள் என்று கூற முடியுமா?


நரேந்திர மோடி நம் நாட்டு நலனுக்காக பல்வேறு நாடுகளுக்கு செல்கிறார். நீங்கள் வெளிநாடு செல்வது யார் நலனுக்கு என்று கூற முடியுமா?


பிரதமர் மோடி ஒரு ரேங்க் ஒரு பென்சன் முறையை மீண்டும் ஏற்படுத்தினார். சுதேசி குண்டு துளைக்காத கவசங்கள் தந்தார். இன்னும் தலைக்கவசம், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை பெற்று தந்தார்.

இது எதையுமே உங்கள் காங்கிரஸ் செய்யவில்லையே. ஏன்?

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER