MANIPEN ,PETEL`S DAUGHTER`S LOYATY
மனிபென் படேல் சர்தார் வல்லபாய் படேலின் மகள். அவருக்கு நிழலாக நின்று உதவியவர்.
படேலுக்கு கிடைக்கவேண்டிய பிரதமர் பதவியை தட்டி பறித்த நேரு, அவரது மகள் இந்திரா ஆகியோரை மனக்கண் முன் கொணர்ந்து ஒப்புநோக்கினால் மணி பென்னின் வலியை நன்றாக உணர முடியும்.
வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட வர்கீஸ் குரியனின் சுயசரிதையில் மணிபென் பற்றி எழுதி உள்ளார்.
“மணிபென் அளப்பரிய நேர்மையும் விசுவாசமும் உள்ள ஒரு உயர்ந்த பெண்மணி. தந்தை சர்தார் படேலுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். படேல் இறந்த பிறகு அவர் கூறியபடி ஒரு நோட்டுப் புத்தகத்தையும் ஒரு பையையும் நேருவிடம் ஒப்படைத்தார். அதை வாங்கி வைத்துக்கொண்ட நேரு எதுவும் கேட்கவில்லை. சற்று தயங்கிவிட்டு மணிபென் வெளியேறினார். அந்த நோட்டு காங்கிரசின் வரவு செலவு கணக்கு புத்தகம். அந்தப் பையில் முப்பத்தைந்து லட்ச ருபாய் இருந்தது. தாய் தந்தை இல்லாத மணிபென் எங்கு தங்கப் போகிறார்; ஏதும் உதவி தேவையா என்றெல்லாம் நேரு கேட்கவில்லை.
இது படேல் மீது நேருவுக்கு இருந்த வெறுப்பின் ஒரு முகம். மணிபென் என்ன ஆனார் என்று தில்லி காங்கிரஸ் தலைவர்கள் எவருமே அக்கறை காட்டவில்லை. பிர்லா அவரை அழைத்து பிர்லா மாளிகையில் தங்க வைத்தார். அந்த ஏற்பாடும் பிடிக்காமல் அகமதாபாத்தில் ஒரு உறவினருடன் தங்கினார். காசில்லாமல் பஸ்ஸிலும் மூன்றாம் வகுப்பு ரயிலிலும் பயணம் செய்தார்.
பின்னாளில் திருபுவன்தாஸ் என்ற குஜராத் காங்கிரஸ் தலைவரின் சிபாரிசால் லோக்சபா உறுப்பினரானார். குஜராத் காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் தயவில் மூன்று முறை லோக் சபாவுக்கும் ஒரு முறை ராஜ்ய சபாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் வகுப்பு பாஸ் இருந்தாலும் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்தார். தானே நூற்ற நூலில் நெய்யப்பட்ட கதர் புடவையையே அணிந்தார். இறுதிவரை எங்கு சென்றாலும் கை ராட்டையை கூட எடுத்து செல்லும் பழக்கம் உண்டு.
நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்த படேலின் மகளை இந்த தேசம் கண்டுகொள்ளவில்லை. பின்னாளில் கண் பார்வை குறைந்த மணிபென் அகமதாபாத்தில் தனியாக வாழ்ந்தார்.
சில தேவைகளுக்காக வெளியே செல்ல நேர்ந்தபோது அஹமதாபாத் தெருக்களில் அடிக்கடி தடுக்கி விழுவாராம். யாரென்று தெரியாமலே அவரை வழிப்போக்கர்கள் தூக்கி விடுவார்களாம். அவரது எளிய வாழ்க்கையில் சிறு உதவிகள் கிடைத்திருந்தால் அவர் கடைசி நாட்களை அமைதியாக கழித்திருப்பார். படுத்த படுக்கையாக இருந்த அவரை இறுதி நாட்களில் புகைப்படக்காரருடன் வந்து பார்த்தார் முதல்வர் சிமன் பாய் படேல். அடுத்த நாள் அது எல்லா நாளிதழ்களிலும் புகைப்படத்துடன் செய்தியாக வந்தது.
ஏமாற்றுக் காங்கிரசின் பல முகங்களில் இதுவும் ஒன்று
No comments:
Post a Comment