Tuesday 22 September 2020

SIVAJI MOVIE SONGS

 


SIVAJI MOVIE SONGS 



.கலை மகள் துணை கொண்டு கலை வென்று

புகழ் கொண்ட காவலன் வாழ்க வாழ்க


மலை மகள் வரம் கொண்டு மலை போன்ற

பலம் கொண்ட மன்னவன் வாழ்க வாழ்க


திரு மகள் அருள் கொண்டு பொருள் கொண்ட

திருவருட் செல்வனே வாழ்க வாழ்க


இயல் இசை நாடகம் முதமிழ்

காக்கின்ற தலைவனே வாழ்க வாழ்க


குடி மக்கள் மனம் போல முடியாட்சி

காண்கின்ற கொற்றவா வாழ்க வாழ்க


நின் கோடி வாழ்க படை வாழ்க குடி வாழ்க

குளம் வாழ்க நலமும் பல்லாண்டு வாழ்க


மன்னவன் வந்தானடி தோழி

மன்னவன் வந்தானடி தோழி

மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த

மன்னவன் வந்தானடி தோழி

மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த

மன்னவன் வந்தானடி


மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன்

மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன்

மன்னவன் வந்தானடி தோழி


செந்தமிழ் சொல் எடுத்து இசை தொடுப்பேன்

வண்ண சந்தத்திலே கவிதை சரம் தொடுப்பேன்

முன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்

முன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்

இனி முப்பொழுதும் கற்பனையில் அற்புதமாய் வாழ்ந்திருக்கும்

மன்னவன் வந்தானடி தோழி

மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த

மன்னவன் வந்தானடி


தூவிய பூவினில் மேனிகள் ஆடிட

நாயகன் நாயகி பாவனை காட்ட வரும்

மன்னவன் வந்தானடி


ச .. ரி .. க .. ம .. ப .. த . . நி …..

சரிகமபதனி சுரமோடு ஜதியோடு

நாத கீத ராக பாவம் தான் பெறவே

மன்னவன் வந்தானடி


காதர் கவிதை கடலெனப் பெருகிட

மாதர் மனமும் மயிலென நடமிடவே

மன்னவன் வந்தானடி


சிறு மலர் மனமொரு குறு நகை நலம் பெற

மலர்விழி சிவந்திட கனி இதழ் கனிந்திடவே

மன்னவன் வந்தானடி


தித்தித்தால் அது செம்பொற் கிண்ணம்

தத்தித் தாவிடும் தங்கக் கிண்ணம்

சித்தத்தால் ஒரு காதற் சின்னம்

தத்தித் தாவென பாவை முன்னம்

என் மன்னவன் …


ச … சத்தமது தரவா

ரி … ரிகமபதநிசா

க … கருணையின் தலைவா

ம … மதி மிகு முதல்வா

ப … பரம் பொருள் இறைவா

த … தனிமையில் வரவா

நி … நிறையருள் பெறவா


ஆளும் புவி எழும் கடல் எழும் நடமாடும் படி வாராய்

அருள் தாராய் ..

ஆளும் புவி எழும் கடல் எழும் நடமாடும் படி வாராய்

அருள் தாராய் ..

அணு தினம் உன்னை வழி படும்

மாட மயில் இனி ஒரு

தலைவனைப் பணிவதில்லை


மன்னவன் வந்தானடி


இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே

அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே

அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே


உன்னையே நினைத்திருப்பான் உண்மையே தான் உரைப்பான்

ஊருக்கு பகையாவான் ஞானத்தங்கமே ஏ….

உன்னையே நினைத்திருப்பான் உண்மையே தான் உரைப்பான்

ஊருக்கு பகையாவான் ஞானத்தங்கமே

அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத்தங்கமே ஞானத்தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே

அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே


நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து

நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து

நல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே

நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து

நல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே

அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத்தங்கமே ஞானத்தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே

அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே


தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்

கண்டுக் கொள்வாய் அவனை ஞானத்தங்கமே ஏ….

தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்

கண்டுக்கொள்வாய் அவனை ஞானத்தங்கமே

அவன் கடவுளில் பாதியடி ஞானத்தங்கமே ஞானத்தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே

அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே


பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு

பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு

தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத்தங்கமே ஏ….

பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு

தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத்தங்கமே

அவன்தான் தரணியை படைத்தாண்டி ஞானத்தங்கமே ஞானத்தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே

அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே


உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே

உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே

கன்னி என்னை மீதில் ஆசை கொண்டதினாலே

காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே


பொன்போலே மின்னும் மன்னா உன் அங்கம்

கண்ணாலே கண்டாலே பேரின்பம் பொங்கும்

ஆ..ஆ….ஆ…ஆ….

பொன்போலே மின்னும் மன்னா உன் அங்கம்

கண்ணாலே கண்டாலே பேரின்பம் பொங்கும்

உன்போலே ஆண்பிள்ளை காணேனே எங்கும்

உன்போலே ஆண்பிள்ளை காணேனே எங்கும்

உன்னாசை ஒன்றே இன்பம் என்பேன்

உன்னாசை ஒன்றே இன்பம் என்பேன்


உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே

உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே

கன்னி என்னை மீதில் ஆசை கொண்டதினாலே

காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே


ஆ…ஆ….ஆ….ஆ….ஆ..

விழியாலே பேசும் கலை மானை பாராய்

இனிதான மொழியால் என் எழில் காண வாராய்

ஆ..ஆ..ஆ…..ஆ….ஆ…

விழியாலே பேசும் கலை மானை பாராய்

இனிதான மொழியால் என் எழில் காண வாராய்

அன்பே என் அமுதா என்றொரு வார்த்தை கூறாய்

அன்பே என் அமுதா என்றொரு வார்த்தை கூறாய்

ஆசை…?


உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே

உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே

கன்னி என்னை மீதில் ஆசை கொண்டதினாலே

காரியம் நிறைவேறும் எந்தன் எண்ணத்தைப்போலே




.



.





..




.



MM:  ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்

திருவடி சரணம் கண்ணா


ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்

திருவடி சரணம் கண்ணா


TMS: ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்

திருவடி சரணம் கண்ணா

ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்

திருவடி சரணம் கண்ணா


MM, TMS: ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்

திருவடி சரணம் கண்ணா


TMS: பாரத தேவா பாண்டவர் நேசா

MM: பதமலர் பணிந்தோமே

TMS: பாரத தேவா பாண்டவர் நேசா

MM: பதமலர் பணிந்தோமே

MM, TMS: உன் பதமலர் பணிந்தோமே


MM, TMS: ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்

திருவடி சரணம் கண்ணா

MM: ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்

திருவடி சரணம் கண்ணா

TMS: ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்

திருவடி சரணம் கண்ணா


MM: கண்ணா....

TMS: கண்ணா....

MM: கண்ணா....

TMS: கண்ணா....


PS: ஞான மலர்க் கண்ணா ஆயர் குல விளக்கே

வானும் கடலும் வார்த்தெடுத்த பொன்னுருவே

கானத்தில் உயிரினத்தைக் கட்டுவிக்கும் கண்ணா...

தானே உலகாகிக் தனக்குள்ளே தானடங்கி

மான குல மாதர் மஞ்சள் முகம் பார்த்து

வாழ்விப்பாய் என்று மலர்த்தாள் கரம் பற்றி

நானும் தொழுதேன் நம்பி பரந்தாமா...

உன் நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே


ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்

திருவடி சரணம் கண்ணா


ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்

திருவடி சரணம் கண்ணா


ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்

திருவடி சரணம் கண்ணா


TMS, PS: ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்

திருவடி சரணம் கண்ணா

ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்

திருவடி சரணம் கண்ணா




சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவன் ஆடினான் தமிழ் கீதம் பாடினான் எனை பூவைப் போல சூடினான் சிந்து நதிக்கரை ஓரம் சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவி ஆடினாள் தமிழ் கீதம் பாடினாள் எனை பூவைப்போல சூடினாள் சிந்து நதிக்கரை ஓரம் மஞ்சள் மலர் பஞ்சணைகள் மன்மதனின் மந்திரங்கள் மஞ்சள் மலர் பஞ்சணைகள் மன்மதனின் மந்திரங்கள் கொஞ்சும் குயில் மெல்லிசைகள் கோதை எந்தன் சீர்வரிசை சொல்லிக் கொடுத்தேன் கதை கதை அள்ளிக் கொடுத்தாய் அதை அதை காதல் கண்ணம்மா சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவி ஆடினாள் தமிழ் கீதம் பாடினான் எனை பூவைப் போல சூடினான் சிந்து நதிக்கரை ஓரம் தெள்ளு தமிழ் சிலம்புகளை அள்ளி அவள் அணிந்து கொண்டாள் தெள்ளு தமிழ் சிலம்புகளை அள்ளி அவள் அணிந்து கொண்டாள் கள்ளிருக்கும் கூந்தலுக்கு முல்லை மலர் நான் கொடுத்தேன் வானவெளியில் இதம் இதம் சோலைவெளியில் சுகம் சுகம் காதல் மன்னவா சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவன் ஆடினான் தமிழ் கீதம் பாடினாள் எனை பூவைப்போல சூடினாள் சிந்து நதிக்கரை ஓரம்..." ~~~~~~~~¤💎¤~~~~~~~ 💎நல்லதொரு குடும்பம் 💎1979 💎டி.எம்.எஸ். 💎சுசிலா 💎இளையராஜா 💎கண்ணதாசன்

Show less

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீஉலகம் அறிந்திடாத பிறயம்மா நீபார்வையிலே குமரியம்மாபழக்கதிலே குழந்தையம்மாஆயிரத்தில் ஒருத்தியம்மா நீஆயிரத்தில் ஒருத்தியம்மா நீஉலகம் அறிந்திடாத பிறயம்மா நீபார்வையிலே குமரியம்மாபழக்கதிலே குழந்தையம்மாஆயிரத்தில் ஒருத்தியம்மா நீபாலினும் வெண்மை பனியினும் மென்மைபாலினும் வெண்மை பனியினும் மென்மைபச்சை இளம் கிளி மொழி நீ சொல்வது உண்மைபாவிகள் நெஞ்சம் உரைந்திடும் வஞ்சம்உண்மை என்று சொல்வதர்க்குதெய்வமும் அஞ்சும்தேன் என்ற சொல் என்றும் தேன் ஆகுமோதீ என்று சொன்னாலும் தீ ஆகுமோ ஓ...ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீஉலகம் அறிந்திடாத பிறயம்மா நீபார்வையிலே குமரியம்மாபழக்கதிலே குழந்தையம்மாஆயிரத்தில் ஒருத்தியம்மா நீபெண்ணொடு தோன்றி பெண்ணொடு வாழ்ந்தும்பெண்ணொடு தோன்றி பெண்ணொடு வாழ்ந்தும்பெண் மனது என்னவென்று புரியவில்லையோகண்ணென்ன கண்ணோ நெஞ்சென்ன நெஞ்சோகளங்கம் சொல்பவர்க்கு உள்ளம் இல்லையோஆதாரம் நூறு என்று ஊர் சொல்லலாம்ஆனாலும் பொய் என்று நான் சொல்லுவேன்...ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீஉலகம் அறிந்திடாத பிறயம்மா நீபார்வையிலே குமரியம்மாபழக்கதிலே குழந்தையம்மாஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ..
கை கொடுத்த தெய்வம் டி.எம்.சௌந்தரராஜன் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் * ராமமூர்த்தி பாடலாசிரியர்...கண்ணதாசன் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ராகம் வெளியானஆண்டு 1964 தயாரிப்பு எம். எஸ். வேலப்பன்
.


ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலேநிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலேஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்இரு விழியாலே மாலையிட்டான்என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலேகாதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலேயாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலேஅடைக்கலம் ஆனேன் முடிவினிலேஎன் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் 
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவாஎன் பாடல் அவள் தந்த மொழி அல்லவாஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யாசருகான மலர் மீண்டும் மலராதய்யாகனவான கதை மீண்டும் தொடராதய்யாகனவான கதை மீண்டும் தொடராதய்யா..காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யாஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்….
எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மாமலரோடு மலராக மலர்ந்தாளம்மாகனவென்னும் தேரேறி பறந்தாளம்மாகனவென்னும் தேரேறி பறந்தாளம்மாகாற்றோடு காற்றாக கலந்தாளம்மா…என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையாஅவள் ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையாஅவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவாஅவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவாஅன்போடு அவளோடு மகிழ்வாளய்யா… ஆ…என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

போனால் போகட்டும் போடாபோனால் போகட்டும் போடாஇந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?போனால் போகட்டும் போடா
ஒஹோஹோ…
வந்தது தெரியும் போவது எங்கேவாசல் நமக்கே தெரியாதுவந்தவரெல்லாம் தங்கிவிட்டால்இந்த மண்ணில் நமக்கே இடமேது?வாழ்க்கை என்பது வியாபாரம்வரும் ஜனனம் என்பது வரவாகும்அதில் மரணம் என்பது செலவாகும்போனால் போகட்டும் போடாபோனால் போகட்டும் போடாபோனால் போகட்டும் போடாபோனால் போகட்டும் போடா
இரவல் தந்தவன் கேட்கின்றான்அதை இல்லை என்றால் அவன் விடுவானா?உறவைச் சொல்லி அழுவதனாலேஉயிரை மீண்டும் தருவானா?கூக்குரலாலே கிடைக்காதுஇது கோட்டைக்குப் போனால் ஜெயிக்காதுஅந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாதுபோனால் போகட்டும் போடாபோனால் போகட்டும் போடாஇந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?போனால் போகட்டும் போடா
ஒஹோஹோ…
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்இதற்கொரு மருந்தைக் கண்டேனா?இருந்தால் அவளைத் தன்னந்தனியேஎரியும் நெருப்பில் விடுவேனா?நமக்கும் மேலே ஒருவனடாஅவன் நாலும் தெரிந்த தலைவனடாதினம் நாடகமாடும் கலைஞடாபோனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடாஇந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?போனால் போகட்டும் போடாபோனால் போகட்டும் போடாபோனால் போகட்டும் போடா

பொன்மகள் வந்தாள்பொருள் கோடி தந்தாள்பூமேடை வாசல் பொங்கும் தேனாக‌க‌ண்ம‌ல‌ர் கொஞ்சும் க‌னிவோடு என்னைஆளாக்கினாள் அன்பிலே !.பொன்மகள் வந்தாள்பொருள் கோடி தந்தாள்பூமேடை வாசல் பொங்கும் தேனாக‌க‌ண்ம‌ல‌ர் கொஞ்சும் க‌னிவோடு என்னைஆளாக்கினாள் அன்பிலே.முத்துக்க‌ள் சிரிக்கும் நில‌த்தில்தித்திக்கும் நினைப்பை விதைக்கும்முத்துக்க‌ள் சிரிக்கும் நில‌த்தில்தித்திக்கும் நினைப்பை விதைக்கும்பாவை நீ வாசொர்க்க‌த்தின் வ‌ன‌ப்பை ரசிக்கும்சித்த‌த்தில் ம‌ய‌க்கும் வ‌ள‌ர்க்கும்யோக‌மே நீ வாவைர‌மோ என் வ‌ச‌ம்வாழ்விலே ப‌ர‌வ‌ச‌ம்வீதியில் ஊர்வ‌ல‌ம்விழியெல்லாம் ந‌வ‌ர‌ஸ‌ம்பொன்மகள் வந்தாள்பொருள் கோடி தந்தாள்பூமேடை வாசல் பொங்கும் தேனாக‌.செல்வ‌த்தின் அணைப்பின் கிட‌ப்பேன்வெல்வெட்டின் விரிப்பில் ந‌ட‌ப்பேன்செல்வ‌த்தின் அணைப்பின் கிட‌ப்பேன்வெல்வெட்டின் விரிப்பில் ந‌ட‌ப்பேன்ராஜ‌னாக‌ !இன்ப‌த்தில் ம‌ன‌த்தில் குளிப்பேன்என்றென்றும் சுக‌த்தில் மித‌ப்பேன்வீர‌னாக‌ !திரும‌க‌ள் ச‌ம்ம‌த‌ம் த‌ருகிறாள் என்னிட‌ம்ம‌ன‌திலே நிம்ம‌திம‌ல‌ர்வ‌தோ புன்ன‌கை.பொன்மகள் வந்தாள்பொருள் கோடி தந்தாள்பூமேடை வாசல் பொங்கும் தேனாக‌க‌ண்ம‌ல‌ர் கொஞ்சும் க‌னிவோடு என்னைஆளாக்கினாள் அன்பிலே......பொன்மகள் வந்தாள்பொருள் கோடி தந்தாள்பூமேடை வாசல் பொங்கும் தேனாக‌...


பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றதுஉன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றதுபூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றதுஉன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்ஆ..சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்ஆ…சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்கரும்போ கனியோ கவிதைச் சுவையோகரும்போ கனியோ கவிதைச் சுவையோவிருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்
பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றதுஉன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது
மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்ஆ…மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்ஆ…இளமை அழகின் இயற்கை வடிவம்இளமை அழகின் இயற்கை வடிவம்இரவைப் பகலாய் அறியும் பருவம்இரவைப் பகலாய் அறியும் பருவம்
பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றதுஉன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றதுஇன்னும் வேண்டுமா என்றது 

தேடினேன் வந்தது நாடினேன் தந்ததுவாசலில் நின்றது வாழவா என்றதுதேடினேன் வந்தது நாடினேன் தந்ததுவாசலில் நின்றது வாழவா என்றது
என் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றிஎன் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றிநான் இனி பறைக்கும் மலரனைத்தும் மணம்பரப்பும் சுத்திநான் இனி பறைக்கும் மலரனைத்தும் மணம்பரப்பும் சுத்திபெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோஓ…தேடினேன் வந்தது நாடினேன் தந்ததுவாசலில் நின்றது வாழவா என்றது
இனி கலக்கம் என்றும் இல்லை இதில் விளக்கம் சொல்வதுமில்லைஇனி கலக்கம் என்றும் இல்லை இதில் விளக்கம் சொல்வதுமில்லைஇனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டுமயக்கம் உண்டு நெஞ்சேபெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ..ஓ…தேடினேன் வந்தது நாடினேன் தந்ததுவாசலில் நின்றது வாழவா என்றது .
Happy இன்று முதல் HappyHappy இன்று முதல் Happyகோடை மழை மேகத்தை கண்டுஆடும் மயிலே வாஆடி வரும் தோகையை கையில்மூடும் அழகே வாதுணை எங்கே… இதோ இங்கே…சுகம் எங்கே… இதோ இங்கேஆ…Happy இன்று முதல் ஹேப்பிஆ…Happy இன்று முதல் ஹேப்பி
தென்றல் தொடாத இலக்கிய காதல் இதுதான் தெரியாதோதென்றல் தொடாத இலக்கிய காதல் இதுதான் தெரியாதோஅது தேடிய கனியை மூடிய துணையை பகையாய் நினையாதோஅது தேடிய கனியை மூடிய துணையை பகையாய் நினையாதோஇந்த உறவினில் தடையேது இந்த பிறவியில் கிடையாதுஇந்த உறவினில் தடையேது இந்த பிரவியில் கிடையாதுபனி ஓடுவதும் மலை தேடுவதும்நம்மை பார்த்ததிலே தானேஆ…Happy இன்று முதல் ஹேப்பிஆ…Happy இன்று முதல் ஹேப்பி
அச்சம் இதோடு அடங்கட்டும் என்று அணைப்பேன் மெதுவாகஅச்சம் இதோடு அடங்கட்டும் என்று அணைப்பேன் மெதுவாகஇனி மிச்சம் மீதி இருந்தாலும் அது விலகும் பனியாகஇனி மிச்சம் மீதி இருந்தாலும் அது விலகும் பனியாகஇது தொடரட்டும் சுவையாக சுகம் படரட்டும் இதமாகஇது தொடரட்டும் சுவையாக சுகம் படரட்டும் இதமாகவிழி மூடி வர கனவோடி வர விளையாடிட அழகாகஆ…Happy இன்று முதல் ஹேப்பிஆ…Happy இன்று முதல் ஹேப்பி 
புது நாடகத்தில் ஒரு நாயகிசில நாள் மட்டும் நடிக்க வந்தாள்புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு..ஓஹோ..ஓஹோ..புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டுபுது நாடகத்தில் ஒரு நாயகிசில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
அகப்பட்டுக்கொண்டாள் மேடையிலே அந்தோ பரிதாபம்அகப்பட்டுக்கொண்டாள் மேடையிலே அந்தோ பரிதாபம்ஆடிய வேடம் கலைந்ததம்மா அடியேன் அனுதாபம்ஆடிய வேடம் கலைந்ததம்மா அடியேன் அனுதாபம்ஒத்திகையில் தூங்கிவிட்டாள் ஏன் ஏன் தெரியவில்லைநித்திரையில் யாரை கண்டாள் அது நான் தான் எவருமில்லைபுது நாடகத்தில் ஒரு நாயகிசில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
மூச்சு விடாமல் பாடுகிறேன் முகத்தில் பாவமில்லைமூச்சு விடாமல் பாடுகிறேன் முகத்தில் பாவமில்லைமுடிவு சொல்லாமல் ஓடுகிறாய் நீ பெண்ணா புரியவில்லைவந்த இடம் நல்ல இடம் வந்தால் தெரிந்துவிடும்அந்த சுகம் என்னவென்று வாழ்ந்தால் புரிந்துவிடும்புது நாடகத்தில் ஒரு நாயகிசில நாள் மட்டும் நடிக்க வந்தாள்புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு..ஓஹோ..ஓஹோ..புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டுபுது நாடகத்தில் ஒரு நாயகிசில நாள் மட்டும் நடிக்க வந்தாள் 
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்ராஜ போகம் தர வந்தாள்கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்தகன்னமிரண்டு இன்னொரு ரகசியம் சொல்லராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்ராஜ போகம் தர வந்தான்
தேடிச்சென்ற பூங்கொடி காலில் பட்டதுசிந்தும் முத்தத்தால் என்னை பின்னிக்கொண்டதுபின்னிக்கொண்ட பூங்கொடி தேனை தந்தததுதேனைத் தந்ததால் இந்த ஞானம் வந்ததுஞானம் ஒன்றல்ல பிறந்த கானம் ஒன்றல்லஎழுந்த ராகம் ஒன்றல்ல எழுந்த தாளம் ஒன்றல்லபாடல் கொண்டு கூடல் கொண்ட தாளம் ஒன்றல்லகண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்தகன்னமிரண்டு இன்னொரு ரகசியம் சொல்லராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்ராஜ போகம் தர வந்தாள்
மேகம் வந்த வேகத்தில் மோகம் வந்ததுமெல்ல மெல்ல நாணத்தில் தேரும் வந்ததுகன்னிப்பெண்ணில் மேனியில் மின்னல் வந்ததுகாதல் என்றதோர் மழை வெள்ளம் வந்ததுபெண்ணும் பெண்ணல்ல இணைந்த கண்ணும் கண்ணல்லமலர்ந்த பூவும் பூவல்லஅமர்ந்த வண்டும் வண்டல்லஆடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்லஇடை ஒரு வேதனை நடை ஒரு வேதனை கொள்ளஇதழ் ஒரு பாவமும் முகம் ஒரு பாவமும் சொல்ல
.

அங்கே மாலை மயக்கம் யாருக்காக?இங்கே மயங்கும் இரண்டு பேருக்காகஇது நாளை வரும் என்று காத்திருந்தால்ஒரு நாளல்லவோ வீணாகும்அங்கே மாலை மயக்கம் யாருக்காக?இங்கே மயங்கும் இரண்டு பேருக்காகஇது நாளை வரும் என்று காத்திருந்தால்ஒரு நாளல்லவோ வீணாகும்
ஆடச் சொல்வது தேன் மலர் நூறுஅருந்தச் சொல்வது மாங்கனிச் சாறுஆடச் சொல்வது தேன் மலர் நூறுஅருந்தச் சொல்வது மாங்கனிச் சாறுகூடச் சொல்வது காவிரி ஆறுகொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாருகூடச் சொல்வது காவிரி ஆறுகொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு
அங்கே மாலை மயக்கம் யாருக்காக?இங்கே மயங்கும் இரண்டு பேருக்காகஇது நாளை வரும் என்று காத்திருந்தால்ஒரு நாளல்லவோ வீணாகும்
கேட்டுக் கொள்வது காதலில் இனிமைகேட்டால் தருவது காதலி கடமைகேட்டுக் கொள்வது காதலில் இனிமைகேட்டால் தருவது காதலி கடமைஇன்பம் என்பது இருவரின் உரிமையார் கேட்டாலும் இளமைக்குப் பெருமைஇன்பம் என்பது இருவரின் உரிமையார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை
லாலா…ஆஹா…
அங்கே மாலை மயக்கம் யாருக்காக?இங்கே மயங்கும் இரண்டு பேருக்காகஇது நாளை வரும் என்று காத்திருந்தால்ஒரு நாளல்லவோ வீணாகும்



யாரோடும் பேசக் கூடாது  ஆகட்டும்கேட்டாலும் சொல்லக் கூடாது  ஆகட்டும்நீ மட்டும் மாறக் கூடாது  ஆகட்டும்வேறொன்றை நாடக் கூடாது  ஆகட்டும்
உள்ளத்தில் இல்லாதது சொல்லுக்கோ வராததுஎன்னென்று ஒரே முறை சொல்லலாமாகன்னத்திலா உடல் வண்ணத்திலாகன்னத்திலா உடல் வண்ணத்திலாமாங்கனி ஊறும் செவ்வாயின் கிண்ணத்திலாஆ ஹாஹஹாமுத்து போல் உண்டாவது முல்லை பூ செண்டாவதுஇன்னும் நான் சொல்லாததை சொல்லலாமாசொல்லுங்களேன் பெண்ணை வெல்லுங்களேன்சொல்லுங்களேன் பெண்ணை வெல்லுங்களேன்வண்ண தோளோடு தோள் சேர நில்லுங்களேன்
பக்திக்கும் இல்லாதது முக்திக்கும் விடாததுதித்திக்கும் அதா இது என்ன இன்பம்
இன்பம் வரும் அது இன்னும் வரும்இன்பம் வரும் அது இன்னும் வரும்கொஞ்சம் நாளாக நாளாக சொர்க்கம் வரும்ம்… ம்… ம்…மன்றத்தில் விழா வரும்மஞ்சத்தில் நிலா வரும்என்றைக்கும் இதே சுகம் விளையாடும்மஞ்சத்திலா உங்கள் நெஞ்சத்திலாமஞ்சத்திலா உங்கள் நெஞ்சத்திலாஅந்த மணநாளை ஊர் கேட்க சொல்லட்டுமாம்… ம்… ம்…யாரோடும் பேசக் கூடாது  ஆகட்டும்கேட்டாலும் சொல்லக் கூடாது  ஆகட்டும்நீ மட்டும் மாறக் கூடாது  ஆகட்டும்வேறொன்றை நாடக் கூடாது  ஆகட்டும்






மந்தரையின் போதனையால்மனம் மாறி கைகேயிமஞ்சள் குங்குமம் இழந்தாள்...வஞ்சக சகுனியின் சேர்க்கையால் கௌரவர்கள்பஞ்ச பாண்டவரை பகைத்து அழிந்தார்...சிந்தனையில் இதையெல்லாம்சிறிதேனும் கொள்ளாமல் மனிதரெல்லாம்...மந்த மதியால் அறிவு மயங்கிமனம் போன படி நடக்கலாமோ... ஓ... ஆ... ஆ... 
ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையேவேற்றுமையை வளர்ப்பதனாலேவிளையும் தீமையே
உணர்வோடு ஒன்றியே உருவாகும் பாசமேஅணையாத தீபமாய் சுடர் என்றும் வீசுமே
நெஞ்சில் உண்டான அன்பையேதுண்டாடி வம்பையே உறவாக தந்திடும் சிலர் சொல்லை நம்பியே
வேற்றுமையை வளர்ப்பதனாலேவிளையும் தீமையே
ஒற்றுமையாய் வாழ்வதாலேஉண்டு நன்மையேவேற்றுமையை வளர்ப்பதனாலேவிளையும் தீமையே
துணையின்றி வெண் புறா தனியாக வந்ததேவன வேடன் வீசிய வலை தன்னில் வீழ்ந்ததே
இனம் யாவும் சேர்ந்து தான்அதை மீட்டுச் சென்றதேகதையான போதிலும் கருத்துள்ள பாடமே
வேற்றுமையை வளர்ப்பதனாலேவிளையும் தீமையே
ஒற்றுமையாய் வாழ்வதாலேஉண்டு நன்மையேவேற்றுமையை வளர்ப்பதனாலேவிளையும் தீமையே 
தந்ததான தானதந்தா...ஆ...தந்ததான தா... ஆ...தந்தானே...தானே தந்தினன்னா... ஓ... ஓ...தானானெனோ... ஏ...
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா 
பொன்னம்மா 
என்வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா

என்னம்மா
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்துவாழை இலை போல வந்த பொன்னம்மா என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
பாளை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு
குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா 
கன்னையா 
இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா 
சொல்லையா
பாளை போல் சிரிப்பிருக்குபக்குவமாய் குணமிருக்குஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா
தந்தான தந்தனத் தன்னே தனனன தானே தன்னேதானேனேனேனா... னானானேனே...
தாயாரின் சீதனமும் ஓ...தம்பிமார் பெரும் பொருளும் ஓ...
தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும் பொருளும் மாமியார் வீடு வந்தால் போதுமா அது மானாபி மானங்களை காக்குமாமானாபி மானங்களை காக்குமா
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்துவாழை இலை போல வந்த பொன்னம்மா என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா( இசை )
தந்தனானே தானதந்தா... ஆ...தானேனே தானேனேனேனே... ஏ...தானேனன்னே.... தானே...தானானெனோ... யியோ...
மானமே ஆடைகளாம் மரியாதை பொன் நகையாம்
மானமே ஆடைகளாம் மரியாதை பொன் நகையாம்நாணமாம் துணை இருந்தால் போதுமே எங்கள்நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமேநாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே
பாளை போல் சிரிப்பிருக்குபக்குவமாய் குணமிருக்குஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா
அங்கம் குறைந்தவனை... ஈ...அங்கம் குறைந்தவனை... ஓ...
அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண் மகனைமங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மாவீட்டில்மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மாமணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா
மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லைமண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லைகன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையாகண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
பாளை போல் சிரிப்பிருக்குபக்குவமாய் குணமிருக்குஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்துவாழை இலை போல வந்த பொன்னம்மா என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
தந்தனனனே... ஏ... தானேனன்னே... 
பாலூட்டி உழவு செய்வார்...உழவு செய்வார் 
ஆ... ஆ... ஆ... ஆ... 
பனி போல் விதை நடுவார்...விதை நடுவார்... ஓ... 
ஆ... ஆ... ஆ... ஆ... 
மாம்பழத்து சாரெடுத்துவயலுக்கு உரமிடுவார்...
உரமிடுவார்...
தேன் பாய நெல் விளையும்தென் பாண்டி நாட்டினிலே... ஏ...ஆ... ஆ... ஆ... 
தேரோடும் எங்க சீரான மதுரையிலேஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
தேரோடும் எங்க சீரான மதுரையிலேஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலேஆனந்த கூத்தாட்டம் ஒயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலேஆனந்த கூத்தாட்டம் ஒயிலாட்டம்
ஓ... ஓ... ஓ... ஹோய்...
ஓ... ஓ... ஓ... ஹோய்...
தண்டை சிலம்புகள் தைய தந்தோமெனதங்க வளையல்கள் ஐயோ வந்தோமென
தங்க வளையல்கள் ஐயோ வந்தோமென
கொண்டையிலே மலர் செண்டு குலுங்கிடவண்டு விழியெனும் செண்டைகள் துள்ளிடதேரோடும் எங்க 
ஓஹோய் சீரான மதுரையிலேஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
ஓ... ஓ... ஓ... ஹோய்...
ஓ... ஓ... ஓ... ஹோய்...
சின்னஞ் சிறுசுகள் உள்ளம் கலங்கிடசிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
அன்னம் பிறப்பதன் முன்னம் பிறந்தவர்ஆடுவதை கண்டு மா மழை பெய்திடநீரோடும் வைகை 
ஆத்தோர மேடையிலேஆனந்த கூத்தாட்டம் ஒயிலாட்டம் 
சித்திரை மாதம் முத்துகள் வித்துதிரும்பி இங்கே வருவதென்றேசென்றவர் இன்னமும் வந்திலர் சேதி தெரிந்து சொல்லடி 
ராமாயம்மா
ராமாயம்மா ராமாயம்மா ஆ... ஆ...
ஓ ராமாயம்மா...
மிச்ச இடுப்பில் மந்திரி பொண்ணும்விரித்த வலையில் விழுந்து விட்டார்உன்னையும் என்னையும் மறந்து விட்டார்உண்மையை சொல்லடி ராமாயம்மா
ராமாயம்மா ராமாயம்மா... ஆ... ஆ...
ஓ ராமாயம்மா...
சின்னஞ் சிறுசுகள் உள்ளம் கலங்கிடசிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
அன்னம் பிறப்பதன் முன்னம் பிறந்தவர்ஆடுவதை கண்டு மா மழை பெய்திடநீரோடும் வைகை 
ஆத்தோர மேடையிலேஆனந்த கூத்தாட்டம் ஒயிலாட்டம்
மஞ்சுவிரட்டில் மாடு பிடித்தால் மாலை சூடி மணப்பதென்றுசொன்னவள் இன்னமும் வந்திலள் நீயும் தூது சொல்லடி
ராமாயம்மா
ராமாயம்மா ராமாயம்மா ஆ... ஆ...
ஓ ராமாயம்மா...
கொஞ்சு கிளி போல் வஞ்சிக்கும் முன்னர்கொள்ளை ஆசை பிறந்திருக்குவாசக் கதவு சாத்தியிருக்கு வழியுமில்லை ராமாயம்மா
ராமாயம்மா ராமாயம்மா... ஆ... ஆ...
ஓ ராமாயம்மா...
தண்டை சிலம்புகள் தைய தந்தோமெனதங்க வளையல்கள் ஐயோ வந்தோமென
தங்க வளையல்கள் ஐயோ வந்தோமென
கொண்டையிலே மலர் செண்டு குலுங்கிடவண்டு விழியெனும் செண்டைகள் துள்ளிடதேரோடும் எங்க 
ஓஹோய் சீரான மதுரையிலேஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலேஆனந்த கூத்தாட்டம் ஒயிலாட்டம் 
ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு 
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்... 
ஆ ஹா...
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்... 
ஓ ஹோ...
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்... 
ஆ ஹா...
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்... 
ஓ ஹோ...
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்... 
ஆ ஹா...
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்... 
ஓ ஹோ...
ஓ... ஓ... ஓ... 
ஓ... ஓ... ஓ... 
ஓ... ஓ... ஓ... 
ஓ... ஓ... ஓ... 
ஓ... ஓ... ஓ... 
அனைவர் தேரோடும் எங்க சீரான மதுரையிலேஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்தேரோடும் எங்க சீரான மதுரையிலேஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்... 
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்தரத்தினில் குறைவதுண்டோஉங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்சீற்றம் குறைவதுண்டோசிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்சீற்றம் குறைவதுண்டோசிந்தையும் செயலும் ஒன்று பட்டாலேமாற்றம் காண்பதுண்டோ...மாற்றம் காண்பதுண்டோ
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்தரத்தினில் குறைவதுண்டோஉங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ
கால்கள் இல்லாமல் வெண்மதி வானில்தவழ்ந்து வரவில்லையாகால்கள் இல்லாமல் வெண்மதி வானில்தவழ்ந்து வரவில்லையாஇரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்துகாதல் தரவில்லையா...காதல் தரவில்லையா
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்தரத்தினில் குறைவதுண்டோஉங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ
காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்துகாதல் உறவாடுவேன்காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்துகாதல் உறவாடுவேன்உயர் மானம் பெரிதென்று வாழும் குல மாதர் வாழ்வின் சுவை கூறுவேன்...வாழ்வின் சுவை கூறுவேன்
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்தரத்தினில் குறைவதுண்டோஉங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ...
ஏன் பிறந்தாய் மகனே... ஏன் பிறந்தாயோ...
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோஇல்லை ஒரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்கஇங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனேஇல்லை ஒரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்கஇங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ 
நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னேநீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனேநான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னேநீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடாகாதலிலும் பெருமை இல்லை கண்களுக்கும் இன்பமில்லைகடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
மண் வளர்த்த பொறுமையெல்லாம்மனதில் வளர்த்தவளாய்கண் மலர்ந்த பெண் மயிலை நானடைந்தேன்நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் வரைதாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனேநீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் வரைதாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே
ஆராரோ ஆரோ ஆரிரரோ...ஆராரோ ஆரோ ஆரிரரோ...

 
ஆரம்பம்      ஆவது      பெண்ணுக்குள்ளே  அவன்      ஆடி      அடங்குவதும்      மண்ணுக்குள்ளே
மனிதன்      ஆரம்பம்   ஆவது   பெண்ணுக்குள்ளே  அவன்   ஆடி   அடங்குவதும்   மண்ணுக்குள்ளே        
ஆராய்ந்து   பார்   மனக்      கண்ணுக்குள்ளேஆத்திரம்   கொள்ளாதே   நெஞ்சுக்குள்ளே  
ஆரம்பம்      ஆவது      பெண்ணுக்குள்ளே  அவன்      ஆடி      அடங்குவதும்      மண்ணுக்குள்ளே
மனைவியின் ஒப்பாரி :ஆ   ஆ      ஐய்யோ   ஐய்யோ   ஐய்த்தான்  இந்த   சின்ன   வயஸுல   இப்படி      புட்டுகிட்டீங்களே   ஐய்த்தான்என்   மீது   நிஜமான   அன்பிருந்தால்   உண்மையை   கூறுங்கள்ஏன்   இந்த   பழிக்கு   ஆளாகிவிட்டீர்கள்   ஐய்த்தான்
அன்பை      கெடுத்து   நல்லாஷையை   கொன்றவன்  ஆட்டம்   நிலைக்காது   ஞானப்பெண்ணே   (2)  துன்பத்தை   கட்டி   ஷுமக்க      துணிந்தவன்ஷொன்னாலும்   கேட்பானோ   ஞானப்பெண்ணே   (2)  
ஐய்த்தான்   எமன்   இவ்வளவு   அவசரமாக   தங்களை   அழைத்துச்   செல்ல   அப்படி   என்னதான்   தவறு   செய்துவிட்டீர்கள்   ஐய்த்தான்
தவறுக்கும்   தவறான   தவறை   புரிந்துவிட்டுதனிப்   பட்டு   போனவன்   ஞானப்பெண்ணேபதறி   பதறி   நின்று   கதறி   புலம்பினாலும்  பயன்பட்டு   வருவானோ   ஞானப்பெண்ணே(2)
ஐயய்யோ      ஐத்தான்  உங்கள்   மூச்செங்கே   ஐத்தான்பேச்செங்கே   ஐத்தான்கொய்யாலே   எனக்கு   சேரவேண்டிய   சொத்து   எங்கடா   ஐத்தான்
கொடுத்தவனே   பறித்துக்கொண்டான்டீமண்ணில்   வளத்தவனே   எடுத்துக்கொண்டான்டீஉசுர   கொடுத்தவனே   பறித்துக்கொண்டான்டீமண்ணில்   வளர்த்தவனே   எடுத்துக்கொண்டான்டீ
பொருத்தமான   துணை   இருந்தும்  பொங்கி   வரும்   அழகிருந்தும்  போன   பக்கம்   போக   விட்டான்   பார்வையைஅவன்   பொறுத்து   பாத்து   முடிச்சுப்புட்டான்   சோலியைநாடு   மாறி   போன   பயநாலும்   கெட்ட   ஈனப்பயமூனு   தாலி   அறுக்கும்படி   வச்சுப்புட்டான்இப்ப   முச்சந்தியில்   சட்டி   ஒடைக்க   விட்டுப்புட்டான்உசுர   கொடுத்தவனே   பறித்துக்கொண்டான்டீமண்ணில்   வளர்த்தவனே   எடுத்துக்கொண்டான்டீ  
   கருணையே   வடிவமான   தெய்வமா   உன்   ஆவியை   பறித்தது
ஒறவு   மொற   மதிச்சதில்லஒருத்தியோடு   இருக்கவில்ல(2)   மூனு   பேரு   பூவும்   பொட்டும்   போச்சுடாஇப்போ   ஒத்தக்காசு   நெத்தி   பொட்டு   ஆச்சுடாஉசுர   கொடுத்தவனே   பறித்துக்கொண்டான்டீமண்ணில்   வளர்த்தவனே   எடுத்துக்கொண்டான்டீ
சிங்காரம்   கெட்டு   ஷிறைபட்ட   பாவிக்கு   ஷம்ஷாரம்   ஏதுக்கடீதங்கம்   ஸம்ஸாரம்   ஏதுக்கடி  சிங்காரம்   கெட்டு   ஷிறைபட்ட   பாவிக்கு   ஷம்ஸாரம்   ஏதுக்கடீதங்கம்   ஸம்ஸாரம்   ஏதுக்கடி  மனைவியை   குழந்தையை   மறந்து   பிரிந்தவனைவாழ்த்துவதாகாதடி(2)தங்கம்   மன்னிக்க   கூடாதடீ
சிங்காரம்   கெட்டு   சிறைபட்ட   பாவிக்கு   ஷம்ஷாரம்   ஏதுக்கடீ
தங்கம்   ஷம்ஷாரம்   ஏதுக்கடி


சிங்கார கன்னே உன் 
தேனூரும் சொல்லாலே
தீராத துன்பங்கள் 
தீர்ப்பாயடி
மங்காத பொன்னே உன் 
வாய் முத்தம் தந்தாலே
பாராத இன்பங்கள் 
சேர்ப்பாயடி
பாராத ரோஜா உன் மேனி
துள்ளி ஆடாத பார்க்கின்ற
ராணி 
பூவான பாதம் நோவாத
போதும் 
பன்னாகி என் நெஞ்சம்
வாடும்





பகாடி ராகத்தில் அமைக்கப்பட்ட இனிமையான பாடல்.எந்த ராகத்தையும் தனக்கேயுரிய வித்தியாசமான பாணியில் வேறு எந்த இசையமைப்பாளரும் சிந்திக்காத வகையில் அற்புதமாக இசையமைப்பார் இசைமேதை ஜி.ராமநாதன் அவர்கள்.P.B.S க்கும்P.சுசீலாவுக்கும் மிகவும் புகழ் தந்த பாடல்.G.R.ன் இசைக்குழுவில் இருந்த பைரவன் சிறந்த தபேலா ஆர்ட்டிஸ்ட். அவருடைய வாசிப்பு துல்லியமாக இருக்கும். இந்தப் பாடலில் அவருடைய இனிமையான வாசிப்பைக் கேட்கலாம்."மதுரை வீரன்"பட வெற்றிக்குப் பிறகு அப்படத் தயாரிப்பாளர் லேனா செட்டியார் அவர்கள், ஜி.ராமநாதன் இசைக் குழுவில் உதவியாளராக பணியாற்றிய D.B.ராமச்சந்திரனுக்கு "யூனிவாக்ஸ்" எனும் இசைக் கருவியை வாங்கிக் கொடுத்தார். இப்பாடலில் வரும் மகுடி இசை அக்கருவியில் வாசிக்கப் பட்டது தான்.👌

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக்கண்டு.. உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே - இதை
எண்ணி எண்ணி .. எண்ணி எண்ணி
எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் கீதமே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே - இனி
கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே
இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே
வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே - ஒரு
எல்லையில்லா இன்பம் அலை மோதுதே

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

அன்பில் ஊறும் மெய்க் காதல் போலே பாரிலே
இன்பம் எதும் வேறில்லையே ஆருயிரே
கன்னல் சாறும் உன் சொல்லைப் போல் ஆகுமோ? - என்னைக்
கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ?

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே



அஞ்சாத சிங்கம் என் காளை
பஞ்சா பறக்க விடும் ஆளை
இந்த ஆபத்தைத் தேடிவரும் 
மாவீரன் பாரிலே யாரடி 
கும்பகோணம் போடும்
உன் காளை கொட்டம் 
அடங்குமடி நாளை
அங்கே கூசாமல் போராடும் 
வீரனை நேரிலே பார்டி
கும்மாளம் போடும் உன்
காளை
கூரான கொம்புரெண்டு 
சீரான மின்னல் கண்டு
வீராதி வீரரெல்லாம்
கூறாமல் போனதுண்டு
மாறாத ஆசை கோண்டு
வீராப்பு பேசிக்கொண்டு 
மாட்டை பிடிக்க வந்து 
ஓட்டம் பிடிப்பதுண்டு
ஓ ஓ ஓ ஓ 
மாற்றாடை கண்டாலே
ஆகாது இது ஆவேசம்
கொள்வதினால்
பொல்லாது
அஞ்சாத சிங்கம் என் காளை 
பஞ்சா பறக்க விடும் ஆளை 
இந்த ஆபத்தைத் தேடிவரும் 




ஆதி மனிதன் காதலுக்குப் பின் 
அடுத்த காதல் இது தான்

ஆதாம் ஏவாள் ஜோடிக்குப் பின்னே 
அடுத்த ஜோடி இது தான்

ஆதி மனிதன் காதலுக்குப் பின் 
அடுத்த காதல் இது தான்

ஆதாம் ஏவாள் ஜோடிக்குப் பின்னே 
அடுத்த ஜோடி இது தான்

கண்ணிலே கண்டதும் எண்ணமே மாறினேன்

காதிலே கேட்டதும் காதலில் முழ்கினேன்

கண்ணிலே கண்டதும் எண்ணமே மாறினேன்

காதிலே கேட்டதும் காதலில் முழ்கினேன்

அன்று அன்னத்திடம் தமயந்தி தூது விட்டாள் 

இன்றுஅண்ணனிடம் தங்கை ஒரு தூது விட்டாள்

அந்தக் காதல் காதலா 

இந்தக் காதல் காதலா

ஆதி மனிதன் காதலுக்குப் பின் 
அடுத்த காதல் இது தான்

ஆதாம் ஏவாள் ஜோடிக்குப் பின்னே 
அடுத்த ஜோடி இது தான்

ஊரை விட்டு ஓடி வந்த காதல் 
இது உறவென்று சொல்லி வந்த காதல்
கால் நடையாய் வந்த காதல் 
இது காவியத்தில் இல்லாத காதல்

பேரை மட்டும் கேட்டு வந்த காதல் 
கண்டு பேசாமல் ஆசை வைத்த காதல்
ஊரார்கள் காணாத காதல் 
இது உலகத்தில் இல்லாத காதல்

இது தேவருக்கும் மூவருக்கும் சொந்தக் காதல் 

வெறும் மானிடர்க்குத் தோன்றாது இந்தக் காதல்

இந்தக் காதல் காதலா 

அந்தக் காதல் காதலா

ஆதி மனிதன் காதலுக்குப் பின் 
அடுத்த காதல் இது தான்

ஆதாம் ஏவாள் ஜோடிக்குப் பின்னே 
அடுத்த ஜோடி இது தான்


அத் திக்காய் காய் காய் 
ஆலங்காய் வெண்ணிலவே
இத் திக்காய் காயாதே 
என்னைப் போல் பெண்ணல்லவோ
நீ என்னைப் போல் பெண்ணல்லவோ 

அத் திக்காய் காய் காய் 
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே 
என்னுயிரும் நீ அல்லவோ
என்னுயிரும் நீ அல்லவோ 

அத் திக்காய் காய் காய் 
ஆலங்காய் வெண்ணிலவே... ஏ... 

ஓ... ஓ... 

கன்னிக் காய் ஆசைக் காய் 
காதல் கொண்ட பாவைக் காய்
அங்கே காய் அவரைக் காய் 
மங்கை எந்தன் கோவைக் காய் 

கன்னிக் காய் ஆசைக் காய் 
காதல் கொண்ட பாவைக் காய்
அங்கே காய் அவரைக் காய் 
மங்கை எந்தன் கோவைக் காய்

மாதுளங்காய் ஆனாலும் 
என்னுளங்காய் ஆகுமா
எனை நீ காயாதே 
என்னுயிரும் நீ அல்லவோ

இத் திக்காய் காயாதே 
என்னைப் போல் பெண்ணல்லவோ 

ஓ... ஓ... ஆ... ஆ...

இரவுக்காய் உறவுக்காய் 
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் 
நேரில் நிற்கும் இவளைக் காய் 

இரவுக்காய் உறவுக்காய் 
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் 
நேரில் நிற்கும் இவளைக் காய் 

புருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

அத் திக்காய் காய் காய் 
ஆலங்காய் வெண்ணிலவே
இத் திக்காய் காயாதே 
என்னுயிரும் நீ அல்லவோ

ஆஹாஹா ஹாஹாஹா
ஆஹாஹா ஹா...

ஏலக் காய் வாசனை போல் 
எங்கள் உள்ளம் வாழக் காய்
ஜாதிக் காய் பெட்டகம் போல் 
தனிமை இன்பம் கனியக் காய் 

ஏலக் காய் வாசனை போல் 
எங்கள் உள்ளம் வாழக் காய்
ஜாதிக் காய் பெட்டகம் போல் 
தனிமை இன்பம் கனியக் காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ 
தூது வழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே 
என்னுயிரும் நீயல்லவோ

அத் திக்காய் காய் காய் 
ஆலங்காய் வெண்ணிலவே
இத் திக்காய் காயாதே 
என்னுயிரும் நீ அல்லவோ

ஆஹாஹா ஹாஹாஹா
ஆஹாஹா ஹா...

உள்ளமெலாம் மிளகாயோ 
ஒவ்வொரு பேர் சுரைக்காயோ
வெள்ளரிக் காய் பிளந்தது போல் 
வெண்ணிலவே சிரித்தாயோ 

உள்ளமெலாம் மிளகாயோ 
ஒவ்வொரு பேர் சுரைக்காயோ
வெள்ளரிக் காய் பிளந்தது போல் 
வெண்ணிலவே சிரித்தாயோ 

கோதை என்னை காயாதே 
கொற்றவரங்காய் வெண்ணிலா

இருவரையும் காயாதே 
தனிமையிலேங்காய் வெண்ணிலா

அத் திக்காய் காய் காய் 
ஆலங்காய் வெண்ணிலவே
இத் திக்காய் காயாதே 
என்னுயிரும் நீ அல்லவோ
ஆஹாஹா... ஆ... ஆ...
ஓஹோஹோ... ஹோ... ஹோ... ம்ஹும்... ஹும்...


நான் என்ன சொல்லிவிட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்
நான் என்ன சொல்லிவிட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன் 
ஏன் தலை குனிந்தாயோ
உன் சம்மதம் கேட்டேன் 
ஏன் தலை குனிந்தாயோ

என்ன சொல்லி விட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்...

செம் மாம்பழம் போலே 
கன்னம் சிவந்து விட்டதடி
கொண்ட மௌனத்தினாலே 
இதழ் கனிந்து விட்டதடி 

செம் மாம்பழம் போலே 
கன்னம் சிவந்து விட்டதடி
கொண்ட மௌனத்தினாலே 
இதழ் கனிந்து விட்டதடி
சுகம் ஊறிவிட்டதடி முகம் மாறிவிட்டதடி
சுகம் ஊறிவிட்டதடி முகம் மாறிவிட்டதடி
நெஞ்சில் அன்றில்லாத நாணம் இன்று 
எங்கு வந்ததடி
என்ன... என்ன... என்ன... 

நான் என்ன சொல்லிவிட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன் 
ஏன் தலை குனிந்தாயோ

என்ன சொல்லி விட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்...

மலர் பஞ்சணை மேலே 
வரும் பருவம் அத்தனையும்
உன் நெஞ்சில் கொண்டாயோ 
அதை நினைவில் வைத்தாயோ 

மலர் பஞ்சணை மேலே 
வரும் பருவம் அத்தனையும்
உன் நெஞ்சில் கொண்டாயோ 
அதை நினைவில் வைத்தாயோ 
கண்டு ஏங்குகின்றாயோ இன்று தூங்குகின்றாயோ
நாம் பழகப் போகும் அழகை எல்லாம் 
படம் பிடித்தாயோ
என்ன... என்ன... என்ன... 

நான் என்ன சொல்லிவிட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன் 
ஏன் தலை குனிந்தாயோ

என்ன சொல்லி விட்டேன் 
நீ ஏன் மயங்குகிறாய்...



நீயே உனக்கு என்றும் நிகரானவன்...
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
தாயாகி வந்தவன்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
ஆ... ஆ... ஆ... 

வாய் வேதம் கை நீதி 
விழி அன்பு மொழி கருணை... ஈ...
கருணை கருணை கருணை கருணை....
வாய் வேதம் கை நீதி 
விழி அன்பு மொழி கருணை
வடிவாகி முடிவற்ற முதலான இறைவா
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
ஆ... ஆ... ஆ... 

துதி பாடும் கூட்டம் 
உன்னை நெருங்காதய்யா
வெறும் தூபத்தில் 
உன் இதயம் மயங்காதய்யா
துதி பாடும் கூட்டம் 
உன்னை நெருங்காதய்யா
வெறும் தூபத்தில் 
உன் இதயம் மயங்காதய்யா
விதி கூட உன் வடிவை நெருங்காதய்யா
விதி கூட உன் வடிவை நெருங்காதய்யா
வினை வென்ற மனம் கொண்ட 
இனம் கண்டு துணை சென்று 
வென்ற தெய்வ மலர்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
தாயாகி வந்தவன்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்
ஆ... ஆ... ஆ... ஆ... 

துதி பாடும்... ஆ... ஆ... ஆ...
துதி பாடும்... ம்.. ம்...
துதி பாடும் ம்ம்.. 
துதி பாடும் பாடும் பாடும் பாடும்
டும் டும் டும் டும் டும் டும் டும் டும்
துதி பாடும்...
ஸநிஸகம துதி பாடும்...
ஆன் 2 ததிங்கிணதோம் ததத் ஜம் ஜம்...

பதநி பநிப மபப கமக ஸகாம துதி பாடும்...

தகிட தகிட தகிட தகிட திந்தரி தரிகிட
தக்க ஜம் ஜம்... 

நிநி பநிபமப மம கமகஸக
ஸநி கஸ மக பமநிபம கம துதி பாடும்...

ததிம் தரிகிட தகதத்தோம் 
ததிம் தரிகிட தகதத்தோம் 
தஜம் தஜம் தஜம் 
தா தரிகிடதத் தரிகிடதத் ஜம் ஜம்... 

பபபப பபபப மபபப பபபப 
மபபப பப மபப மபப மப
மப நிநிப மபம ஸஸாநிப நிப 
ஸா நிபா மகா ஸநி ஸகம துதி பாடும்...

தாக தாக தாக தாக
டும் டு டும் டு டும் டு டும் டு 
தஜம் தஜம் தஜம் தஜம் தீம்தக தரிகிட 
தத்தீம்ன தகதீம்ன தத்தீம்ன தகதீம்
தாம் தரிகிட தீம் தரிகிட தா
ததிங்கிணதோம் தத ஜம் ஜம் ம்...

ஸாஸ நிஸஸஸ நிஸஸ பநி மபஸ
காக ஸகக கக ஸகக ஸக நிஸக
ககஸ ஸகநிஸா ஸஸநி நிஸபநி
ஸஸஸ நிநிநி நிப பபப மபமம
மக பமக பமக பமக பமகஸ
பம நிபம நிபம நிபம நிபமக
பமக நிபமக ஸநிபமக
கஸ நிபநி ககஸநிப
ஸஸநிபம கமஸகம துதி பாடும்....

தா கிடதக தீம் கிடதக தகிட தகிட தக
தீம் கிடதக தோம் கிடதக தகிட தகிட தக
தத் தரிகிடதக தகதின்ன தீம்கிட தரிகிட தகதின்ன 
தத் தஜுனு தக தத் தஜுனு தக 
தத் தஜுனு தக தத் தஜுனு
தக தகிட தகிட தீம்கிட தரிகிட தகனக தரிகிட
தக தகிட தகிட தீம்கிட தரிகிட தகனக தரிகிட
தகிட தக திம் ததிங்கினத்தோம் ததிங்கின
ஜுனுதக தரிகிடதோம் ஜுனுதக தரிகிடதோம்
தா தகிட ததத்ஜம் ஜம்...

ஸாஸஸ ஸஸஸஸ நிஸஸஸ ஸஸஸஸ
நிஸகா கககக நிஸகா பபபப
நிஸகா ஸஸஸஸ
ஸா ஸஸஸஸ நி ஸஸஸஸ 
நிஸநிஸ பநிபநி மபமப க... ம... ம... ம... ம... ம...
மா மா மா மா மாமா...

மாப்ளே...
தாம்தத்த தகதக தரிகிட
தீம்தத்த தகதக தீம்
தத்த ஜூம் டு டு டு டு தத்த ஜூம் டு டு டு டு
தத்த ஜூம் டு டு டு டு தா தகதிமி தா தகதிம்
ஜனுதக தகதிமி ஜனுதக தகதிமி
ஜனுதக தரிகிட ஐயய்ய யெய்யெய்யெ
யெய்யெய்யெ னய்யய்யெ தொவ்வொவ்வொ
ஐயய்ய திங் கி ண தோம் மாப்ளே...

நி நி ஸ ஸ ஸஸஸஸ நிஸ நிஸ ஸஸஸஸ
நிஸ நிக ககஸஸஸ கக ஸஸஸ
நிஸஸ நிஸநிஸ ஸஸ
நிஸ நிநிக ஸநிபநி மாமா...

தீம்தகிட தகதகிட தகதகிட தகதகிட ததத் ஜம்
ததிங்கிணதோம் தஜம் ததிங்கிணதோம் தா
ஜுனுதக தரிகிடதோம் ஜுனுதக தரிகிடதோம்
ஜுனுதக தரிகிடதோம் மாப்ளே...

நிகஸ நிகாஸ நிபமக 
மநிப மநி பமக ஸக மாமா...

தகிட தக ததிங்கிணதோம் தக ததிங்கிணதோம்
தக ததிங்கிணதோம் மாப்ளே...

ஸநிப மக ஸகம மாமா...

தும்தக தரிகிட தகதக தரிகிட மாப்ளே...

நீ மாமா...

நீ மாப்ளே...

நீ மாமா...

நீ மாப்ளே...

மாமா...

மாப்ளே...

மாமா...

மாப்ளே...

மாமா...

மாப்ளே...

மாமா...

மாப்ளே...

வாழ நினைத்தால் வாழலாம் 
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாக
ஆசை இருந்தால் நீந்தி வா

வாழ நினைத்தால் வாழலாம் 
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாக
ஆசை இருந்தால் நீந்தி வா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம் 
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாக
ஆசை இருந்தால் நீந்தி வா

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்

வாழச் சொன்னால் வாழ்கிறேன் 
மனமா இல்லை வாழ்வினில்
ஆழக் கடலில் தோணி போலே 
அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்

ஏரிக் கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி

துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி

துடித்து நிற்கும் இளமை சாட்சி

வாழும் காலம் முழுதும்
ஒருவராக வாழலாம்

வாழ நினைப்போம் வாழுவோம் 
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே 
காலம் முழுதும் நீந்துவோம்
வாழ நினைப்போம் வாழுவோம் 
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே 
காலம் முழுதும் நீந்துவோம்
 

யாரை எங்கே வைப்பது என்று 
யாருக்கும் தெரியல்லே 

யாரை எங்கே வைப்பது என்று 
யாருக்கும் தெரியல்லே
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் 
பேதம் புரியல்லே

யாரை எங்கே வைப்பது என்று 
யாருக்கும் தெரியல்லே
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் 
பேதம் புரியல்லே பேதம் புரியல்லே

பேரெடுத்து உண்மையைச் சொல்லி 
பிழைக்க முடியல்லே
இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் 
பேதம் தெரியல்லே

பேரெடுத்து உண்மையைச் சொல்லி 
பிழைக்க முடியல்லே
இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் 
பேதம் தெரியல்லே பேதம் தெரியல்லே

யாரை எங்கே வைப்பது என்று 
யாருக்கும் தெரியல்லே
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் 
பேதம் புரியல்லே பேதம் புரியல்லே

நானி இருக்கும் இடத்தினிலே 
அவன் இருக்கின்றான்
அவன் இருக்கும் இடத்தினிலே 
நான் இருக்கின்றேன்
நாளை எங்கே யாரிருப்பார் 
அதுவும் தெரியல்லே
இப்போ நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் 
பேதம் தெரியல்லை
அட என்னத்தச் சொல்வேண்டா 
தம்பி என்னத்தச் சொல்வேண்டா 

தம்பி ஒருவன் வெளியில் நின்று 
காசை எண்ணுகிறான்
நம்பி ஒருவன் சிறையில் வந்து 
கம்பி எண்ணுகிறான்
உண்மை இங்கே கூட்டுக்குள்ளே 
கலங்கி நிக்குதடா
அட உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு 
வெளியில் நிற்குதடா
அட என்னத்தச் சொல்வேண்டா 
தம்பி என்னத்தச் சொல்வேண்டா 

யாரை எங்கே வைப்பது என்று 
யாருக்கும் தெரியல்லே
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் 
பேதம் புரியல்லே பேதம் புரியல்லே

மூடருக்கும் மனிதர் போல 
முகம் இருக்குதடா
மோசம் நாசம் வேஷமெல்லாம் 
நிறைந்திருக்குதடா
காலம் மாறும் வேஷம் கலையும் 
உண்மை வெல்லுமடா
கதவு திறந்து பறவை பறந்து 
பாடிச் செல்லுமடா
அட என்னத்தச் சொல்வேண்டா 
தம்பியோ என்னத்தச் சொல்வேண்டா 

யாரை எங்கே வைப்பது என்று 
யாருக்கும் தெரியல்லே
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் 
பேதம் புரியல்லே பேதம் புரியல்லே
 


அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்தத் தென்னை தாலாட்டும் இளநீர்
இன்பத் தேரில் தூவும் பன்னீர்

அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு

இந்த மேகக் கூந்தல் கலைகள்
கடல் நீரில் ஆடும் அலைகள்
உந்தன் மோக ராக நாதம்
இந்த ஏழை பாடும் வேதம்
அந்த மானும் உன் போல அழகு
இளம் பாவை உன்னோடு உறவு
அந்தத் தென்னை தாலாட்டும் இளநீர்
இந்தக் காதல் தூவும் பன்னீர்
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு

நல்ல பூவும் தேனும் திரண்டு
சுகம் பொங்கும் உள்ளங்கள் இரண்டு
இது ராஜ போக சொர்க்கம்
இனி பேச என்ன வெட்கம்

அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு

இது ஏக்கம் தீர்க்கும் தனிமை
என்ன இன்பம் அம்மா உன் இளமை
இந்த தேவி மேனி மஞ்சள்
நான் தேடி ஆடும் ஊஞ்சல்

உங்கள் கைகள் என்ற சிறையில்
வரும் கால காலங்கள் வரையில்
நான் வாழ வேண்டும் உலகில்
அந்த மானைப் போல அருகில்

அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
 


நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா ஆ... 
திருக்கோவிலே ஓடி வா... 


நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா ஆ... 
திருக்கோவிலே ஓடி வா
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
வேரின்றி மலரே ஏதம்மா 
வேரின்றி மலரே ஏதம்மா


நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா


ஐயா உன் நினைவே தான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள்
ஐயா உன் நினைவே தான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள்
கண்ணீரிலே நான் தீட்டினேன்
கன்னத்தில் கோலங்கள்...
கன்னத்தில் கோலங்கள்


செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்
திருக்கோவிலே ஓடி வா
ஆ.. திருக்கோவிலே ஓடி வா
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா

முல்லைக்கு குழல் தந்த 
பெண்மைக்கு பெண்மை நீ
பிள்ளைக்கு தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ
முல்லைக்கு குழல் தந்த 
பெண்மைக்கு பெண்மை நீ
பிள்ளைக்கு தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ
அதி காலையில் நான் கேட்பது
நீ பாடும் பூபாளம்
என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி
என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி
செவ்வானமானேன் உனை தேடித் தேடி
திருக்கோவிலே ஓடி வா


ஆ... திருக்கோவிலே ஓடி வா
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா


ஆ...


திருக்கோவிலே ஓடி வா...


அழகே வா அருகே வா
அலையே வா தலைவா வா
அழகே வா…
அழகே வா அருகே வா
அலையே வா தலைவா வா
அழகே வா வா வா அழகே வா

ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே

அழகே வா அருகே வா
அலையே வா தலைவா வா
அழகே வா வா வா அழகே வா

ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டுவிட்டேன்
நான் கேட்டதை எங்கே போட்டுவிட்டாய்
என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய்

அழகே வா அருகே வா
அலையே வா தலைவா வா
அழகே வா வா வா அழகே வா
 

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

தென்fனம் இளங்கீற்றினிலே ஏ..ஏ..ஏ
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

ஓ ஓ ஓ
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

அந்தியில் மயங்கிவிடும் காலையில் தெளிந்துவிடும்
அந்தியில் மயங்கிவிடும் காலையில் தெளிந்துவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
.
.
.ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
சொல்லுக்கு செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு.... 


கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா

கண்ணிரண்டும் மின்ன மின்ன 
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா
கட்டழகு துள்ளத் துள்ள
காதல் கதை சொல்லச் சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா
என் பார்வையிலே மருந்தொன்று இல்லையா

கட்டழகு துள்ளத் துள்ள
காதல் கதை சொல்லச் சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா
என் பார்வையிலே மருந்தொன்று இல்லைய்யா

நெய் மணக்கும் கூந்தலுக்கு
நீல மலர் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த மலர்களிலே
வண்டு வந்து மோதுதம்மா

வண்டு வந்து தேனெடுத்து
உண்டு விட்ட போதையிலே
வட்டமிட்டு பாடுதய்யா
தொட்டு தொட்டு பேசுதய்யா

தொட்டு தொட்டு பேசையிலே
சொர்க்கமே தோன்றுதய்யா

பட்ட இடம் அத்தனையும்

பனி போல் குளிருதய்யா

கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா

வாழைப் பூ கைகளுக்கு 
வளையல்கள் வாங்கி வந்தேன்
வாங்கி வந்து சூடி விட்டேன்
தாங்கி கொள்ள நான் வரவா

இல்லை என்று சொன்னதில்லை
என்னவென்று கேட்டதில்லை
தொல்லை என்று எண்ணவில்லை
சொன்ன மொழி கேட்டிருப்பேன்

சொன்ன மொழி கேட்டிருப்பேன்

உன்னழகை பார்த்திருப்பேன்

கண் திறந்து காத்திருப்பேன் 

பொன்னுலகம் பார்த்திருப்பேன் 

சொன்ன மொழி கேட்டிருப்பேன்
உன்னழகை பார்த்திருப்பேன்
கண் திறந்து காத்திருப்பேன் இரவிலே
பொன்னுலகம் பார்த்திருப்பேன் உறவிலே

ஆஹ ஹஹ ஹஹஹஹா
ஓஹோ ஹோஹோ ஹோஹோஹோஹோ
ஆஹஹஹ ஹாஹஹஹா ஆஹஹா...

ஓஹொ ஹோஹோ ஓஹொ ஹோஹோ
ஓஹொஹோ...

அஹ ஹாஹா அஹ ஹாஹா 
ஆஹஹா ஹா...



மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்... ஓ... ஓ...
மறு நாள் எழுந்து பார்ப்போம்... ஓ... ஓ...

மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

மங்கல குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
மங்கல குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலே
பொழுதும் புலரும் அணைப்பிலே

ஆஹா

ஓஹோ

ம் ஹும்...

மடி மீது தலை வைத்து

விடியும் வரை தூங்குவோம்

இருவர் மறு நாள் எழுந்து பார்ப்போம் 

இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே
சேவல் குரலே கூவாதே
சேர்ந்தவர் உயிரை பிரிக்காதே

சேர்ந்தவர் உயிரை பிரிக்காதே

மடி மீது தலை வைத்து

விடியும் வரை தூங்குவோம்

இருவர் மறு நாள் எழுந்து பார்ப்போம் 

வாயின் சிவப்பு விழியிலே
மலர் கண் வெளுப்பு இதழிலே 
வாயின் சிவப்பு விழியிலே
மலர் கண் வெளுப்பு இதழிலே 

காயும் நிலவின் மழையிலே
காலம் நடக்கும் உறவிலே
ஆஹா

ஓஹோ

ம் ஹும்...

மடி மீது தலை வைத்து

விடியும் வரை தூங்குவோம்

இருவர் மறு நாள் எழுந்து பார்ப்போம்
 

நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது

நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது

கடற்கரை காத்து அடிக்குது
காத்துல சேலை நடிக்குது
கடற்கரை காத்து அடிக்குது
காத்துல சேலை நடிக்குது
முன்னாலே வரச் சொல்லி அழைக்குது
முகத்திலே கடுகு வெடிக்குது

வெள்ளிக் கண்ணு மீனா வீதி வழி போனா
தையா தக்கா தையா தக்கா உய்யா

நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது

கண்ணுனு இருந்தா இமை வேணும்
கழுத்துனு இருந்தா நகை வேணும்
கண்ணுனு இருந்தா இமை வேணும்
கழுத்துனு இருந்தா நகை வேணும்
பொண்ணுன்னு இருந்தா துணை வேணும்
ஒண்ணும் புரியல்லையா இன்னும் தெரியல்லையா

நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது

தேரோட்டும் கண்ணனுக்கு ராதா
சிங்கார ராமனுக்கு சீதா
தேரோட்டும் கண்ணனுக்கு ராதா
சிங்கார ராமனுக்கு சீதா
காரோட்டும் எனக்கொரு கீதா
கல்யாணம் பண்ணிக் கொள்ள தோதா

நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது

வெள்ளிக் கண்ணு மீனா வீதி வழி போனா
தையா தக்கா தையா தக்கா உய்யா




உறவினில்

ஃபிஃப்டி ஃபிஃப்டி

உதட்டினில்

ஃபிஃப்டி ஃபிஃப்டி

உறவினில்

பாதி பாதி

உதட்டினில்

பாதி பாதி

வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி
தருவது இந்த தங்க கட்டி
வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி
தருவது இந்த தங்க கட்டி

முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர
முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர 

தன்னம் தனி இவளுடைய கன்னம் கனி
சின்ன கிளி இனிய மொழி என்றும் ஹனி
தன்னம் தனி இவளுடைய கன்னம் கனி
சின்ன கிளி இனிய மொழி என்றும் ஹனி
சுட்டு விழி கட்டழகு பக்கம் வர பக்கம் வர
சுட்டு விரல் பட்டுடலை தொட்டு விட தொட்டு விட
ஆ... ஆ... ஆ... ஆ... 

முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர 

உறவினில்

ஃபிஃப்டி ஃபிஃப்டி

உதட்டினில்

ஃபிஃப்டி ஃபிஃப்டி

வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி
தருவது இந்த தங்க கட்டி
முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர 

முத்துச் சரம் மடியில் விழும் பத்துத் தரம்
வெள்ளிக் குடம் சுவை அமுதை அள்ளி தரும்
முத்துச் சரம் மடியில் விழும் பத்துத் தரம்
வெள்ளிக் குடம் சுவை அமுதை அள்ளி தரும்
அன்னமென சின்ன இடை பின்னி வர பின்னி வர
கட்டிலறை பஞ்சு மெத்தை வட்டமிட வட்டமிட

உறவினில்

ஃபிஃப்டி ஃபிஃப்டி

உதட்டினில்

ஃபிஃப்டி ஃபிஃப்டி

வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி
தருவது இந்த தங்க கட்டி
முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை தத்தி வர தத்தி வர வர

நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி 

நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி

எங்கே உன் ஜாடை விழும்
அங்கே என் ஆசை வரும்
அன்பே உன் பேர் எழுதும்
கண் பார்வை நாள் முழுதும்

நல்ல இடம் நான் வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண புது ரோஜா

நித்திரை ஓடிட முத்திரை வாங்கிட
பத்தரை மாற்றுத் தங்கம்
குங்குமம் நெஞ்சினில் சங்கமமாகிட
பொங்கிடும் வெள்ளம் எங்கும்

மல்லிகைப் பூவிலும் மெல்லியதாகிய
செவ்வண்ணக் கால்கள் பின்ன
நித்தமும் ஆடிட இத்தனை நாடக 
ஒத்திகை பார்ப்பதென்ன

தழுவாதோ கைகள் தானாக 

உன்னால் கனிந்தேன் கனியாக

நல்ல இடம் நீ வந்த இடம்

வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்

பெற வேண்டும் வண்ண புது ரோஜா

லலல லலலா... லா... லலல லலலலா... லா...

ஆஹஹாஹ ஹாஹஹஹா...
ஆஹஹாஹ ஹாஹஹஹா...

கட்டழகானது ஒட்டுறவாடிட
எண்ணங்கள் தேடிப் போகும்
சித்திரப் பூமகள் முத்தமளந்திட
எத்தனைக் காலம் ஆகும்

முத்து மொழிக் கிளி கொத்து மலர்க் கொடி
தித்தித்த வார்த்தை சொல்வாள்
வட்ட நிலா ஒளி பட்ட இடத்தினில் 
சந்திக்க வேண்டும் என்பாள்

இதமான இன்பம் சேராதோ

இன்றே இதயம் குளிராதோ

நல்ல இடம் நீ வந்த இடம்

வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்

பெற வேண்டும் வண்ண புது ரோஜா
 


மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து
மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து
ஆணிப் பொன் மேனியை ஆசையில் அணைத்திட 
காணிக்கை கொடுத்ததும் நேற்றல்லவோ
பனி மலர் அழகினில் மயங்கிட அருகினில்
வந்தால் இன்றே வா...

மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து

தலைவன் தலைவி விழியால் மொழிந்தால் பாடல்
தனியே பிரிந்தே தழுவாதிருந்தால் ஊடல்

அவனும் அவளும் சிலையாய் இருந்தால் கோயில்
இதயம் முழுதும் அன்பாய் இருந்தால் காதல்

காதலன் பேசிட மாதுளம் பூவினில்
தேன் துளி கொடுத்ததும் நீயல்லவோ

உனக்குள்ள மயக்கத்தில் எனக்குள்ள பாக்கியை
தந்தால் இன்றே தா...

மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து

மலர்ந்தாள் கனிந்தாள் மடிமேல் விழுந்தாள் பாவை

மெதுவாய் தொடவும் 
கொடி போல் வளைந்தாள் தோகை

யாரும் இல்லாதொரு நேரத்திலே உன்னை
வாவென அழைத்ததும் நானல்லவோ

நாளென்ன பொழுதென்ன ஆரம்பப் பாடத்தை
சொன்னால் இன்றே சொல்...

மெல்ல வரும் காற்று

சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து

பெண்ணென்ற சுதி சேர்த்து

லாலால லலலால லாலால லலலால 
லால்லால்ல லலலால்லா 
லால்லால்ல லலலால்லா
 


எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி
பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி

எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி
பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி

மாப்பிள்ளைகள் செலவு செய்ய
மாமனார் தான் வரவு வைக்க
கல்யாண பந்தல் போட்டாராம்

காலையிலே திருமணமாம் 
மாலையிலே முதல் இரவாம்
வாழ்க காதல் கல்யாணம்
பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி
பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி

எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி
பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி

நாளை மண மேடை மாலைகள் வழங்காதோ
நாளை மண மேடை மாலைகள் வழங்காதோ

நாதஸ்வரத்தோடு மேளங்கள் முழங்காதோ
காதலர் கதை தானே 

கண்களில் அரங்கேற்றம்

கண்களில் அரங்கேற 

எத்தனை போராட்டம்

வண்ணத் தேரோடும் எந்தன் பக்கமே

வந்து சேராமல் சேரும் சொர்கமே

வண்ணத் தேரோடும் எந்தன் பக்கமே

வந்து சேராமல் சேரும் சொர்கமே

மாமியார் தான் மையெழுத
மாப்பிள்ளை தான் கண் விழிக்க
கண்ணாடி பார்த்துக் கொள்வாராம்

தெருவெல்லாம் ஊர்வலமாம்
ஊர்வலத்தில் மாடங்களாம்
எல்லோரும் வாழ்த்த சொல்வாராம்
பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி
பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி

பத்து பதினாறு பிள்ளைகள் பெறலாமோ
பத்து பதினாறு பிள்ளைகள் பெறலாமோ

கட்டு குலையாத மேனியும் கெடலாமோ
கட்டு குலையாத மேனியும் கெடலாமோ

ஆண்களை எதிர்த்தாயே 

ஆசையை கொடுத்தாயே

மன்மதன் நான் தானே 

காரணம் நீ தானே

என்னை வாவென்று கூறும் கன்னங்கள்

ஒன்று தாவென்று வேண்டும் எண்ணங்கள்

மின்னல் கோலங்கள் போடும் கண்ணென்ன

முன்னம் காணாத இன்பம் என்னென்ன

திருப்பதியில் மணமுடிக்க
உருப்படியாய் வாழ வைக்க
எப்போதோ வேண்டிக் கொண்டாராம்

மாப்பிள்ளைகள் வீடு வந்து
மாமனுக்கு விடை கொடுக்க
சன்யாசம் வாங்கிக் கொள்வாராம்

எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி
பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி
பிபிபிபி டும்டும் டும்டும் பிபிபிபி
 





அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே

அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே 

மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே... ஏ...
மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்டம் மணியாரமே
பாடும் புது ராகமே

அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே

கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே 

வெள்ளலை கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே... ஏ...
வெள்ளலை கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம் தோறும் புகழ் சேர்க்கும் தவமே
தென்னர் குல மன்னனே

இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே

மாநிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே

காணும் நிலமெங்கும் தமிழ் பாடும் மனமே
உலகம் நமதாகுமே

அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே

அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே

கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே
 

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ 


தாழங் குடைகள் தழுவும் கொடிகள்
தாமரைப் பூக்களின் தோட்டம்
தாழங் குடைகள் தழுவும் கொடிகள்
தாமரைப் பூக்களின் தோட்டம்
மாலை மணிகள் மந்திரக் கனிகள்
மழலை என்றொரு தோட்டம்
மாளிகையில் ஒரு மதி வந்தது
அது எந்த வானத்து மதியோ
மாளிகையில் ஒரு மதி வந்தது
அது எந்த வானத்து மதியோ
மாயமாக ஒரு ஒலி வந்தது
அது எந்த ஆலயத்து மணியோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ

கதிரொளி தீபம் கலசம் ஏந்தி
கண்ணன் வருகின்ற கனவு
கதிரொளி தீபம் கலசம் ஏந்தி
கண்ணன் வருகின்ற கனவு
கண்டனள் ஒருத்தி வந்தனன் கண்ணன்
கண்கள்....
கங்கையிலே புது புனல் வந்தது
அது எந்த மேகம் தந்த புனலோ
கங்கையிலே புது புனல் வந்தது
அது எந்த மேகம் தந்த புனலோ
மங்கையிடம் ஒரு அனல் வந்தது
அது எந்த மன்னன் தந்த அனலோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது இந்த தேவதையின் குரலோ...


ஜலிதா... வனிதா... ஓ மை டார்லிங்
ஜலிதா தும் ஃபாத்திமா

ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ 
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ 
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ

ஜலிதா... வனிதா... ஜலிதா தும் ஃபாத்திமா
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ 
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ

மௌனத்தின் மலர்ச் சோலை
மஞ்சத்தின் குளிர் காற்று
மாணிக்க மணிமாலை
மன்மதன் இசை பாட்டு
மௌனத்தின் மலர்ச் சோலை
மஞ்சத்தின் குளிர் காற்று
மாணிக்க மணிமாலை
மன்மதன் இசை பாட்டு
உருவத்தில் ஒன்றாகி நடை போட்டதோ
உள்ளங்களை எடை போட்டாதோ
உள்ளங்களை எடை போட்டாதோ

ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ 
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ

கார் முகில் குழல் ஆட
கை விரல் படம் போட
கண்மணி நடமாட உன் இடை பதம் பாட
கார் முகில் குழல் ஆட
கை விரல் படம் போட
கண்மணி நடமாட உன் இடை பதம் பாட
உலகத்தை விலை பேச சிலை வந்ததோ
ஊடலெனும் கலை வந்ததோ
ஊடலெனும் கலை வந்ததோ 

ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ 
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ

இலக்கிய ரசத்தோடு இலை மறை கனியோடு
ஒதுங்கிய உடையோடு குலுங்கிய வளையோடு
இலக்கிய ரசத்தோடு இலை மறை கனியோடு
ஒதுங்கிய உடையோடு குலுங்கிய வளையோடு
ஓவிய சீமாட்டி உரு வந்ததோ
ஓசை தரும் மணி வந்ததோ
ஓசை தரும் மணி வந்ததோ

ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ 
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ 
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
ஜலிதா... வனிதா... ஜலிதா தும் ஃபாத்திமா...

மனிதன் நினைப்பதுண்டு... வாழ்வு நிலைக்குமென்று...
இறைவன் நினைப்பதுண்டு... பாவம் மனிதனென்று...

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும்
பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கிறது மயக்கம் வருகின்றது
அழுது லாபமென்ன அவன் ஆட்சி நடக்கின்றது

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும்
கூட்டை திறந்து விட்டால் அந்த
குருவி பறந்து விடும்
காலில் விலங்கும் இட்டோம்
கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம்
நாட்டியம் ஆடுகின்றோம்

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

விதியின் ரதங்களிலே நாம்
விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு
மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என்
குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன்
ஒரு கவலை முடிந்ததடா

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று



தாமரைப் பூ குளத்திலே 
சாயங்கால பொழுதிலே
தாமரைப் பூ குளத்திலே 
சாயங்கால பொழுதிலே
குளிக்க வந்தேன் தன்னாலே 
கூட வந்தான் பின்னாலே
குளிக்க வந்தேன் தன்னாலே 
கூட வந்தான் பின்னாலே
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா ( இசை )
மல்லிகைப் பூ முகத்திலே 
மாம்பழத்து உதட்டிலே
மல்லிகைப் பூ முகத்திலே 
மாம்பழத்து உதட்டிலே
பள்ளம் போட வந்தானே 
பரிசு ஒண்ணு தந்தானே
பள்ளம் போட வந்தானே 
பரிசு ஒண்ணு தந்தானே
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா

தூங்கும் போது சிரிக்கிறான்
தூக்கத்தையே கெடுக்கிறான்
ஒஹோஹோ... ஒஹோஹோ... 
தூங்கும் போது சிரிக்கிறான்
தூக்கத்தையே கெடுக்கிறான்
ஏங்க விட்டு இளைக்க விட்டான் தன்னாலே
இப்போ இடையைப் பாத்து 
மனசை விட்டான் முன்னாலே
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா

பருவம் காக்கும் முந்தானே 
பறக்கும் போது வந்தானே
கர்வம் எல்லாம் விட்டு விட்டு நின்றானே
உன் கைகளுக்குள் 
பிள்ளையாகிக் கொண்டானே
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா

இருவர் மேடை இட்டு கோலம் இட்டு 
மேள தாள விருந்து வச்சி ( இசை )
மேடை இட்டு கோலம் இட்டு 
மேள தாள விருந்து வச்சி
மாலையிட்டு தாலி கட்டிக் கொள்வோமா
அந்த மயக்கத்திலே 
முழுக் கதையும் சொல்வோமா
பறந்திடலாமா ஒன்றாய் கலந்திடலாமா
பறந்திடலாமா ஒன்றாய் கலந்திடலாமா
தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே


.






.






.

No comments:

Post a Comment