ROBERT CLIVE , THE LEGEND
தன் அத்தை வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த பதின்ம வயது சிறுவன் வீட்டிற்கு அடங்காத பிள்ளையாக இருந்தான்.தன் பொறுக்கி நண்பர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு டிரைட்டன் சந்தையில் மாமூல் வசூலிக்க ஆரம்பித்தான்.முரடனாகவும், அடிதடி ஆசாமியாகவும் இருந்த அவன் இரண்டு முறை சிறையிலும் அடைக்கப்பட்டான்.அவனது தந்தை இந்தியாவின் கிழக்கிந்திய கம்பெனியில் எழுத்தர் வேலைக்கு அவனை அனுப்பினார்.
தன் 17 வயதில் கப்பலில் கிளம்பியவன் வழக்கம் போல் தனக்கென ஒரு கும்பலை சேர்த்துக் கொண்டு உணவிற்கு ம், முடி திருத்துவதற்கும் பணம் தராமல் குடித்து விட்டு அடாவடி செய்து கேப்டனால் கட்டி வைத்து அடி வெளுக்கப்பட்டான்.
எல்லா இன்னல்களையும் கடந்து இந்தியாவில் பிரிட்டீஸ் சாம்ராஜ்யத்தை வேரூன்ற வைக்க இந்திய மண்ணில் கால் பதித்தான்! அடிமை இந்தியாவிற்கு பிள்ளையார் சுழி போட்ட அந்த இளைஞன் இராபர்ட் கிளைவ்!
No comments:
Post a Comment