Sunday 27 September 2020

SUDHA CHANDRAN ,ACTRESS BORN 1965 SEPTEMBER 27

 SUDHA CHANDRAN ,ACTRESS 

BORN 1965 SEPTEMBER 27



சுதா சந்திரன் (பிறப்பு: செப்டம்பர் 27, 1965) ஒரு இந்திய பரதநாட்டியக் கலைஞர்.மேலும் இந்திய மொழி திரைப்படங்களிலும், சின்னத் திரை தொடர்களிலும் நடித்துள்ளார் இவர். 1981-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி அருகே காயமடைந்த சுதா சந்திரனின் வலது காலின் ஒரு பகுதி அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கம் செய்யப்பட வேண்டியிருந்தது. இருப்பினும் அவர் நடனக் கலையை கைவிடவில்லை.

மும்பையில் உள்ள மித்பாய் கல்லூரியில் இருந்து பி.ஏ. பட்டப்படிப்பு மற்றும் அதன் பிறகு எம்.ஏ. பொருளாதாரவியல் என பள்ளி கல்லூரி படிப்பு மும்பையிலேயே முடித்துக் கொண்டார். 1981-ம் ஆண்டு புணித யாத்திரை மேற்கொண்டபோது இவர் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளானது.


விபத்தைத் தொடர்ந்து கால் இழந்த நிலையில் ஜெய்பூர் செயற்கைக் காலை பொருத்திய பிறகு இவர் தொடர்ந்து நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஐரோப்பா, கனடா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். உலகின் பல்வேறு நகரங்களுக்கு சென்று வந்திருந்தாலும் தன்னை கவர்ந்த அமைதியான நகரம் சென்னை என்றார் சுதா சந்திரன். ([1]).


திரைப்படத் துறையில் சுதா சந்திரன்[மூலத்தைத் தொகு]

1984-ம் ஆண்டு வெளி வந்த மயூரி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 1986-ம் ஆண்டு இந்த திரைப்படம் நாச்செ மயூரி என்ற பெயரில் இந்தி மொழியில் ரீ மேக் செய்யப்பட்டது. மயூரி திரைப்படத்திற்காக 1986-ம் ஆண்டு தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்பு ஜூரி விருதை பெற்றுள்ளார்.



தமிழில் விஷால் நடித்த சத்தியம் மற்றும் ஆதிபகவன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இது தவிர பல்வேறு சின்னத் திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.

No comments:

Post a Comment