Thursday 17 September 2020

BOLLYWOOD CINEMA


BOLLYWOOD CINEMA



.பாலிவுட் [ இந்தி: बॉलीवुड , உருது: بالی وڈ ] என்பது இந்தியாவில் மும்பை மாநகரில் மூலதளம் கொண்டுள்ள உருது-ஹிந்திமொழி திரையுலகைக் குறிப்பதற்கான பிரபலமான அதிகாரபூர்வமில்லா ஒரு சொல். பல முறை இந்தச் சொல்லானது இந்தியத் திரைப்பட உலகு முழுவதையுமே குறிப்பதாகத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; இது இந்திய திரைப்படத் தொழிலில் ஒரு பகுதிதான்.[1] பாலிவுட் இந்தியாவில் மிக அதிகமான அளவில் படம் தயாரிப்பதாகும்; உலக அளவில் மிக அதிகமான அளவில் படம் தயாரிக்கும் மையங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது.[2][3][4] இந்தப் பெயர், மும்பைக்கு முன்னர் வழங்கப்பட்ட பாம்பே என்ற சொல் மற்றும் அமெரிக்க திரைப்படத் தொழில் மையமான ஹாலிவுட் என்ற சொல் ஆகிய இரண்டு சொற்களின் ஒலிகளும் பொருளும் கலந்துருவான ஒரு கற்பனைச் சொல்.[5]

பாலிவுட்டில் உருது மொழியின் கவிதைச் சொற்கள் மிகுதியாக பயன்படுத்தப்பட்டாலும், இதை முறையாகச் சொல்வதானால் ஹிந்தித் திரைப்பட [6] உலகு என்றே கூற வேண்டும். தற்போது இதன் உரையாடல்கள் மற்றும் பாடல்களில் இந்திய ஆங்கிலம் அதிக அளவில் தென்படும் போக்கு மிகுந்து வருகிறது. ஆங்கில வார்த்தைகள் சொற்றொடர்கள் மற்றும் முழு ஆங்கில வாக்கியங்கள் போன்ற அம்சங்களைக் கொண்ட வசனங்கள் உள்ள முழுத் திரைப்படங்களைக் காண்பது என்பது தற்போது அசாதாரணமானது அல்ல.[7]

சொல் வரலாறு
"பாலிவுட் என்னும் பெயர் மும்பைக்கு முன்னர் வழங்கப்பட்ட பாம்பே என்ற சொல் மற்றும் அமெரிக்க திரைப்படத் தொழில் மையமான ஹாலிவுட் என்ற சொல் ஆகிய இரண்டு சொற்களின் ஒலிகளும் பொருள்களும் கலந்துருவான ஒரு கற்பனைச் சொல்.[5] இருப்பினும் ஹாலிவுட்டைப் போல் அல்லாது பாலிவுட் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ளதல்ல. இது ஹாலிவுட்டின் ஒன்று விட்ட ஏழைச் சகோதரனைப் போலத் தோற்றமளிப்பதாக வாதிட்டு, சிலர் இந்தப் பெயரை இகழ்ந்துரைத்தாலும்[5][8], இது ஆக்சுஃபோர்ட் ஆங்கில அகராதி யில் தனக்கென ஒரு பதிவை ஏற்படுத்திக் கொண்டு விட்டது.

"பாலிவுட்" என்ற சொல்லின் தொடக்கம், இந்தியா மிகப் பெரும் திரைப்படத் தயாரிப்பு மையமாக வளர்ந்து பாலிவுட்டை முந்திச் சென்ற காலகட்டமான 1970ஆம் ஆண்டுகளில் உருவானது. இந்தப் பெயர் உருவாக்கத்திற்கான பெருமையை பாடலாசிரியரும், திரைப்படத் தயாரிப்பாளரும் மற்றும் கல்விமானுமான அமித் கன்னா[9] மற்றும் பத்திரிக்கையாளர் பெவின்டா கொலெகோ[10] உள்ளிட்ட பலரும் கோருகின்றனர்.

"பாலிவுட்" என்ற சொல்லாக்கம், மேற்கு வங்காள திரைப்படவுலகைக் குறிப்பதற்குப் பயன்பட்ட டோலிவுட் என்ற சொல்லின் ஆதிக்கத்திலிருந்து உருவானது. "டோலிவுட்" என்பது 1932ஆம் ஆண்டிலேயே ஹாலிவுட் என்னும் பெயரின் ஆதிக்கத்தால் விளைந்த ஆரம்பகாலப் பெயராகும். இது டோலிகஞ்ச் என்னும் இடத்தில் அமைந்திருந்த, அன்றைய கால கட்டத்தில் இந்திய திரைப்பட மையம் என்று விளங்கிய வங்காளத் திரை உலகை குறிப்பதாகவும் ஹாலிவுட் என்ற சொல்லுடன் ஒத்திசைவு கொண்டதாகவும் இருந்தது. பின்னாளில் டோலிகஞ்சில் இருந்த திரைப்பட மையத்தை விட மும்பய்-தள திரையுலகு முன்னேறி வளர்ந்த பொழுது "பாலிவுட்" என்ற பெயர் உருவானது.[11]

வரலாறு

இந்தியாவின் முதல் பேசும் படத்தின் சுவரொட்டி, ஆர்தேஷிர் இரானியின் ஆலம் ஆரா (1931)

இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் முழு நீள ஊமைத் திரைப்படம் தாதாசாஹேப் ஃபால்கேயின் ராஜா ஹரிச்சந்திரா (1913) 1930ஆம் ஆண்டுகளில் திரைப்படத் தொழில் வருடத்திற்கு 200 திரைப்படங்களுக்கும் மேலாக உருவாக்கத் துவங்கியது.[12] முதன் முதலாக இந்தியாவில் உருவான பேசும்படம் ஆர்தேஷிர் இரானியின் ஆலம் ஆரா (1931). இது வணிக ரீதியாக மிகப்பெரும் வெற்றி அடைந்தது. பேசும் படங்களுக்கும், இசைப் படங்களுக்கும் ஒரு பெரிய சந்தை இருப்பது தெளிவாகியது; பாலிவுட் மற்றும் அனைத்துப் பிராந்திய திரைப்படத் தொழில்களும் விரைவில் பேசும் பட முறைமைக்கு தங்களை மாற்றிக் கொண்டன.

1930ஆம் ஆண்டுகளும் மற்றும் 1940ஆம் ஆண்டுகளும் பெரும் கலவரமான கால கட்டங்களாக இருந்தன: மாபெரும் தாழ்நிலை,இரண்டாவது உலகப் போர், இந்திய சுதந்திர இயக்கம் மற்றும் பிரிவினை காரணமான வன்முறை ஆகியவற்றால் இந்தியா தொடர்ச்சியாக அடிபட்டிருந்தது. பெரும்பான்மையான பாலிவுட் திரைப்படங்கள் வெட்கமில்லாமல் தப்பித்துச் செல்லும் மனப்பாங்கு கொண்டவையாகவே இருந்தன. இருப்பினும், சிக்கலான சமூக கருத்தாக்கங்களைக் கையாண்ட மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தை தமது திரைப்படக் கதைகளின் பின்புலமாகப் பயன்படுத்திய திரைப்படத் தயாரிப்பாளர்களும் பலர் இருந்தனர்.[12]

1937ஆம் ஆண்டு ஆலம் ஆரா புகழ் ஆர்தேஷிர் இரானி ஹிந்தியின் முதல் வண்ணப்படமான கிஷன் கன்யா என்னும் திரைப்படத்தைத் தயாரித்தார். அதற்கு அடுத்த வருடம் மதர் இந்தியா என்னும் மற்றொரு வண்ணப்படத்தையும் தயாரித்தார். இருப்பினும், 1950கள் வரையில் வண்ணம் என்பது திரைப்படங்களில் பிரபலமான ஒரு அம்சமாக இருக்கவில்லை இந்தக் கால கட்டத்தில், ஆடம்பரமான காதல் அம்சங்கள் கொண்ட இசைப் படங்களும், உணர்ச்சி மிகுந்த நாடக பாணித் திரைப்படங்களுமே இந்தியத் திரைப்பட உலகின் பொதுவான மூலப் பொருளாக இருந்தன.

பொற்காலம்
இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்த 1940ஆம் ஆண்டுகளின் இறுதி ஆண்டுகளிலிருந்து 1960ஆம் ஆண்டுகள் வரையிலான கால கட்டம் திரைச் சரித்திர ஆய்வாளர்களால், ஹிந்தித் திரைப்படத்தின் "பொற்காலம்" என்று கருதப்படுகிறது.[13][14][15] எல்லாக் காலத்திற்குமான, மிக அதிக அளவில் விமர்சனப் பாராட்டுக்களைப் பெற்ற ஹிந்தித் திரைப்படங்களில் சில இந்தக் காலகட்டத்தில்தான் உருவாக்கப்பட்டன. இதற்கான உதாரணங்களில், குருதத் படங்களான ப்யாசா (1957), காகஸ் கே ஃபூல் (1959) மற்றும் ராஜ் கபூர் படங்களான ஆவாரா (1951) மற்றும் ஸ்ரீ 420 (1955) ஆகியவை அடங்கும். இந்தத் திரைப்படங்கள் சமூகக் கருத்தாக்கங்களை, குறிப்பாக நகரத்தில் வாழும் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கையைப் பற்றியவையாக அமைந்திருந்தன; நகரம் என்பதை சொர்க்க பூமி மற்றும் அச்சப்படத் தக்க நரகம் என்று இரண்டு வகையாகவும் ஆவாரா சித்தரித்தது. நகர வாழ்க்கையின் உண்மையில்லாத் தன்மையை ப்யாசா விமர்சித்தது.[16] இந்தக் கால கட்டத்தில்தான் ஹிந்தித் திரையுலகின் மிகவும் பிரபலமான காவியத் திரைப்படங்கள் சிலவும் தயாரிக்கப்பட்டன. இவற்றில் மெஹபூப் கான் தயாரித்ததும், சிறந்த வெளி நாட்டு மொழித் திரைப்படத்திற்கான அகாடமி விருது[17] க்காகப் பரிந்துரைக்கப்பட்டதுமான மதர் இந்தியா (1957)மற்றும் கே.ஆசிஃப் பின் மொகல்-ஈ-ஆஸம் (1960)[18] ஆகியவை அடங்கும். வி சாந்தாராம் தயாரித்த தோ ஆங்கேன் பாரா ஹாத் (1957) திரைப்படம்தான் ஹாலிவுட் படமான தி டர்ட்டி டஜன் (1967) படத்திற்கான ஆதாரவூக்கம் என்று நம்பப்படுகிறது.[19] ரித்விக் கடக் எழுதி பிமல் ராய் இயக்கிய மதுமதி (1958), பிரபல மேற்கத்திய நாகரிகத்தில் மறு பிறவி என்னும் கருத்தாக்கத்தை பிரபலமாக்கியது.[20] இந்தக் கால கட்டத்தில் மிகுந்த பாராட்டுப் பெற்ற வணிக ரீதியான பிற திரைப்பட உருவாக்குனர்களில் கமால் அம்ரோஹி மற்றும் விஜய் பட் ஆகியோரும் அடங்குவர். இந்தக் கால கட்டத்தில் கொடி கட்டிப் பறந்த நடிகர்கள் தேவ் ஆனந்த், திலீப் குமார், ராஜ் கபூர், குருதத் ஆகியோர். வெற்றிகரமாகத் திகழ்ந்த நடிகைகளில் வைஜெயந்திமாலா, நர்கிஸ், மீனா குமாரி, நூதன், மதுபாலா, வஹிதா ரஹ்மான் மற்றும் மாலா சின்ஹா ஆகியோர் அடங்குவர்.[21]

வணிக ரீதியான ஹிந்தித் திரைப்படம் செல்வாக்குடன் இருந்த 1950 சார்ந்த ஆண்டுகள் பாரலல் சினிமா எனப்படும் இணைத் திரைப்பட இயக்கத்தையும் கண்ணுற்றது.[16] இந்த இயக்கத்தை பிரதானமாக வங்காளத் திரைப்பட உலகு தலைமை தாங்கி நடத்தினாலும், ஹிந்தி திரைப்பட உலகிலும் இது முக்கியத்துவம் பெறத் துவங்கியது. ஹிந்தித் திரைப்பட உலகில் இந்த இயக்கத்திற்கான ஆரம்ப கால உதாரணங்கள் சேதன் ஆனந்த்தின் நீச்சா நகர் (1946)[22] மற்றும் பிமல் ராயின் தோ பிகா ஜமீன் (டூ ஏக்கர்ஸ் ஆஃப் லேண்ட் ) (1953) ஆகியவையாகும். அவற்றிற்குக் கிட்டிய விமர்சன ரீதியிலான பாராட்டுக்கள் மட்டும் அன்றி, வணிக ரீதியாகவும் அவை அடைந்த வெற்றி, இந்திய திரைப்படத்தில் புதிய நிதர்சனம் மற்றும் இந்தியப் புதிய அலை [23] ஆகியவை தோன்ற வழி வகுத்தன. இந்த இயக்கத்தில் ஈடுபட்டிருந்த ஹிந்தித் திரைப்பட இயக்குனர்களில் சிலர் உலகளவில் பாராட்டப்பெற்ற மனி கௌல், குமார் ஷஹானி, கேதன் மேத்தா, கோவிந்த் நிஹலானி, ஷியாம் பெனகல் மற்றும் விஜய் மேத்தாஆகியோர் ஆவர்.[16]

சமூக நிதர்சனம் சார்ந்த திரைப்படமான நீச்சா நகர் வெளியாகி முதல் கேன்ஸ் திரைப்படத் திருவிழா[22] வில் கிராண்ட் பிரைஸ் பெற்றதில் இருந்து, 1950ஆம் ஆண்டுகளிலும், 1960ஆம் ஆண்டுகளிலும், பால்மெ டியோர் பரிசுக்காக கேன்ஸ் திரைப்படத் திருவிழாக்களில் ஹிந்தித் திரைப்படங்கள் போட்டியிடத் துவங்கின; இவற்றில் சில திரைப்படங்கள் பெரும் பரிசுகளை வெல்லவும் செய்தன.[24] தன் வாழ்நாளில் அவ்வளவாக கண்டு கொள்ளப்படாத குருதத் தனது மறைவிற்கு மிகவும் பிற்காலத்தில், அதாவது 1980ஆம் ஆண்டுகளில், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறத்துவங்கினார்.[24][25] தற்போது, பிரபல இந்திய வங்காள இயக்குனரான சத்யஜித் ரேயுடன் இணைந்து, எல்லாக் காலங்களிலும் போற்றத்தக்க ஆசிய திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக குருதத் மதிக்கப்படுகிறார். 2002வது ஆண்டு சைட் அண்ட் சௌண்ட் விமர்சகர்கள் மற்றும் இயக்குனர்களின் மிகச் சிறந்த திரைப்பட உருவாக்குனர்களுக்கான வாக்கெடுப்பு அந்தப் பட்டியலில் குருதத்திற்கு 73வது இடம் அளித்தது.[26] அவரது படங்களில் சில தற்போது எல்லாக் காலத்திற்குமான மிகச் சிறந்த படங்கள் என்ற வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் ப்யாசா (1957) டைம் பத்திரிகையில் "எல்லாக் காலத்திற்குமான" 100 சிறந்த திரைப்படங்கள் பட்டியலில்[27] இடம் பெற்றது. ப்யாசா மற்றும் காகஸ் கே ஃபூல் (1959) ஆகிய இரண்டு திரைப்படங்களும், 2002வது ஆண்டு எல்லாக் காலத்திற்குமான மிகச் சிறந்த திரைப்படங்கள் சைட் அண்ட் சௌண்ட் விமர்சகர்கள் மற்றும் இயக்குனர்கள் வாக்கெடுப்பில் 160வது இடத்தைப் பிடித்தன. சைட் அண்ட் சௌண்ட் வாக்கெடுப்பில், இந்தக் கால கட்டத்தைச் சேர்ந்த வேறு பல ஹிந்தித் திரைப்படங்களும் மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ராஜ் கபூர் படமான ஆவாரா , (1951) விஜய் பட்டின் பைஜு பவ்ரா (1952), மெஹபூப் கான் படமான மதர் இந்தியா (1957) மற்றும் கே.ஆசிஃப்பின் மொகல்-ஈ-ஆஸம் (1960) ஆகியவை அடங்கும்.[28]

நவீன காலத் திரைப்படம்
1960ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 1970ஆம் ஆண்டுகளின் ஆரம்ப ஆண்டுகளிலும் ராஜேஷ் கன்னா மற்றும் தர்மேந்திரா போன்ற நடிகர்கள் மற்றும் ஷர்மிலா தாகூர், மும்தாஜ், லீனா சந்த்ரவார்க்கர் மற்றும் ஹெலன் போன்ற நடிகைகள் ஆகியோர் நடித்த காதல் திரைப்படங்களும் அதிரடித் திரைப்படங்களும் வெளியாயின. 1970ஆம் ஆண்டுகளின் இடைக் காலத்தில் காதல் மிட்டாயின் இடத்தை குண்டர்களைப் பற்றிய சத்தம் மிகுந்த வன்முறைப் படங்கள் பிடித்தன. (பார்க்க: இந்திய மாஃபியா மற்றும் கொள்ளைக்காரர்கள்). கோபம் கொண்ட இளைஞன் கதாபாத்திரங்களில் மிகுதியாக அறியப்பட்ட நட்சத்திரமான அமிதாப் பச்சன் இந்தப் பாணித் திரைப்படங்களில், இவருடன் இருந்த பிற நடிகர்களான மிதுன் சக்ரவர்த்தி மற்றும் அனில் கபூர் ஆகியோருடன், வெற்றிக் கொடி நாட்டினார். இந்தப் போக்கிலான திரைப்படங்கள் 1990ஆம் ஆண்டுகளின் தொடக்கம் வரை நீடித்தன. இந்தக் கால கட்டத்து நடிகைகளில் ஹேம மாலினி, ஜயா பச்சன் மற்றும் ரேகா ஆகியோர் அடங்குவர்.[21]

ஷியாம் பெனகல் மற்றும் மனி கௌல், குமார் ஷஹானி, கேத்தன் மேத்தா, கோவிந்த் நிஹலானி மற்றும் விஜய மேத்தா போன்ற சில ஹிந்தி திரைப்பட இயக்குனர்கள் நிஜ வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இணைத் திரைப்படம் தயாரிப்பதை 1970[29] களிலும் தொடர்ந்தனர்.[16] இருப்பினும், திரைப்பட நிதி வாரியம் 'கலைத் திரைப்படங்கள் பால் கொண்டிருந்த சாய்வு' 1976ஆம் ஆண்டுகள் பொதுத் துறை நிறுவனங்களின் மேலான ஒரு புலனாய்வின்போது மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த வாரியம் வணிக திரைப்படத்திற்குப் போதுமான ஊக்கம் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இவ்வாறாக 1970ஆம் ஆண்டுகள், ஷோலே (1975) போன்ற அழியாத வணிக ரீதியிலான திரைப்படங்களின் எழுச்சியைக் கண்ணுற்றது. இத்திரைப்படம் ஒரு முன்னணி நடிகராக அமிதாப் பச்சனின் இடத்தை உறுதிப்படுத்தியது. ஜெய் சந்தோஷி மா என்னும் ஒரு பக்திக் காவியமும் 1975ஆம் ஆண்டு திரையிடப்பட்டது.[30] 1975ஆம் ஆண்டுகள் வெளியான மற்றொரு முக்கியமான திரைப்படம், யஷ் சோப்ரா இயக்கத்தில் சலீம்-ஜாவேத் எழுத்தில் உருவான தீவார் . ஒரு "காவல் துறை ஊழியர் அவரது சகோதரனுக்கு எதிராகவே களத்தில் இறங்கும்" இந்தக் குற்றச் செயல் பற்றிய திரைப்படம் ஹாஜி மஸ்தான் என்ற கடத்தல்காரரின் நிஜ வாழ்க்கையின் அடிப்படையில், அமிதாப் பச்சன் நடிப்பில் உருவானது. இதை "இந்திய சினிமாவுக்கான மிகச் சரியான திறவுகோல்" என்று டேனி போயில் குறிப்பிட்டார்.[31] 1980ஆம் ஆண்டுகளில், சர்வதேச அளவில் மிகவும் பாராட்டப்பட்ட ஹிந்திப் படம் மீரா நாயர் படமான சலாம் பாம்பே (1988). இது 1988 கேன்ஸ் திரைப்படத் திருவிழாவில் கேமிரா டியோர் பரிசைப் பெற்றது. மற்றும் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான அகாடமி விருதுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது.

1980ஆம் ஆண்டுகளின் இறுதியிலும், 1990ஆம் ஆண்டுகளின் துவக்கத்திலும், ஹிந்தித் திரைப்படம் மீண்டும் குடும்ப மையமான காதல்-இசைப் படங்களின் பால் ஊசலாடலானது. இதன் காரணம், கயாமத் ஸே கயாமத் தக் (1988), மைனே ப்யார் கியா (1989), ஹம் ஆப்கே ஹை கோன் (1994), மற்றும் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே (1995) ஆகியவை பெற்ற மாபெரும் வெற்றியே. இவை ஆமிர் கான், சல்மான் கான், ஷாருக் கான் போன்ற நடிகர்கள், மற்றும் ஸ்ரீதேவி, மாதுரி தீக்ஷித், ஜூஹி சாவ்லா மற்றும் காஜோல்[21] போன்ற நடிகைகள் ஆகியோர் கொண்ட ஒரு புதிய தலை முறை நட்சத்திரங்களை உருவாக்கின. இந்தக் கால கட்டத்தில் அதிரடி மற்றும் நகைச்சுவைப் படங்களும் வெற்றி அடைந்தன. கோவிந்தா, அக்ஷய் குமார் போன்ற நடிகர்களும், ரவீனா டாண்டன் மற்றும் கரிஷ்மா கபூர் போன்ற நடிகைகளும் இத்தகைய படங்களில் தோன்றி நடித்தனர். மேலும், இந்தக் காலகட்டத்தில் கலைத் திரைப்படம் மற்றும் தனிப்படங்கள் ஆகியவற்றில் புதிய செயற்பாளர்கள் தோன்றி அவர்களில் சிலர் வணிக ரீதியாகவும் வெற்றி அடைந்தனர். இதற்கு மிகவும் பொருத்தமான ஒரு உதாரணமாக அனுராக் காஷ்யப் எழுதி ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான சத்யா என்ற திரைப்படத்தைக் கூறலாம். சத்யா வின் விமர்சக மற்றும் வணிக ரீதியான வெற்றி குறிப்பிடத்தக்க அளவில் மும்பய் நோய்ர் [32] என்னும் புதுப்பாணி கொண்ட திரைப்படங்கள் உருவாக வழி வகுத்தது. இத்தகைய திரைப்படங்கள் மும்பய்[33] நகரின் சமூக ரீதியான பிரச்சினைகளை பிரதிபலிக்கும் நகர்ப்புற படங்களாக விளங்கின. இதன் காரணமாக இந்தப் பத்தாண்டுக் காலத்தின் இறுதியில் இணைத் திரைப்படம் மீண்டும் உயிர்த்தெழுந்தது.[32] இந்தத் திரைப்படங்கள் பெரும்பாலும், நானா படேகர், மனோஜ் பாஜ்பாய், மனிஷா கொய்ராலா, தபு மற்றும் ஊர்மிளா மடோண்ட்கர் போன்று விமர்சகர்களால் தமது நடிப்பிற்குப் பாராட்டுப் பெறும் நட்சத்திரங்களைக் கொண்டிருந்தன.

2000வது ஆண்டுகளின் துவக்கம் பாலிவுட் உலகெங்கும் பிரசித்தி அடைவதைக் கண்ணுற்றது. இதன் காரணமாக தரம், ஒளிப்பதிவு, புதுமையான கதை அமைப்பு, மற்றும் சிறப்பு அமைப்புகள், அசைவூட்டங்கள் போன்ற தொழில் நுட்ப ரீதியான முன்னேற்றங்கள் ஆகியவற்றில் நாட்டின் திரைப்படத் தொழில் புதிய உச்சங்களை அடைந்தது.[34] யஷ்ராஜ் ஃபிலிம்ஸ், தர்மா ப்ரொடக்ஷன்ஸ் போன்ற பெரும் திரைப்பட நிறுவனங்கள் சில புதிய நவீன திரைப்படங்களைத் தயாரித்தன.[34] வெளி நாட்டுச் சந்தை இந்தியத் திரைப்படங்களுக்குத் தன் வாசலைத் திறந்து வைத்ததும், அதிக அளவிலான பாலிவுட் திரைப்படங்கள் வெளி நாடுகளில் வெளியாயின. மேலும், பெரும் நகரங்களில் பல்திரையரங்குகள் பல்கிப் பெருகியதும் லகான் (2001), தேவதாஸ் (2002), கோயி... மில்கயா (2003), கல் ஹோ ந ஹோ (2003), வீர்-ஜரா (2004), ரங் தே பசந்தி (2006), லகே ரஹோ முன்னா பாய் (2006), க்ர்ரிஷ் (2006), தூம்2 (2006), ஓம் ஷாந்தி ஓம் (2007), சக் தே இந்தியா (2007), ரப் னே பனாதி ஜோடி (2008), மற்றும் கஜினி (2008) போன்ற திரைப்படங்கள் இந்தியா மற்றும் வெளி நாடுகளில் மாபெரும் வெற்றியடைய வழி வகுத்தன. இவை மூலமாக ஹிரிதிக் ரோஷன், அபிஷேக் பச்சன் போன்ற பிரபல நடிகர்கள் மற்றும் ஐஸ்வர்யா ராய், ப்ரீத்தி ஜிந்தா, ரானி முகர்ஜி மற்றும் கரினா கபூர் போன்ற நடிகைகள் அடங்கிய புதிய தலைமுறைக்கான பிரபல நட்சத்திரங்களை உருவாகி,[35][36] முந்தைய பத்தாண்டுகளில் திரைப்பட நட்சத்திரங்கள் பெற்றிருந்த செல்வாக்கினை தக்க வைத்துக் கொண்டனர். வணிக ரீதியிலான படங்களில் லகான் லோகார்னோ சர்வதேச திரைப்படத் திருவிழாவில் பார்வையாளர் விருது வென்றது. மேலும் 74வது அகாடமி விருதுகளுக்காக சிறந்த வெளி நாட்டு மொழித் திரைப்படமாக பரிந்துரைக்கப்பட்டது; மறுபுறம், தேவதாஸ் மற்றும் ரங் தே பசந்தி ஆகிய இரண்டும் சிறந்த வெளி நாட்டு மொழித் திரைப்படத்திற்கான பாஃப்தா விருதுக்கு நியமிக்கப்பட்டன.

எல்லாத் தரப்பிலும் உள்ள பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் திரைப்படங்களைத் தயாரிக்கவே ஹிந்தித் திரையுலகம் விரும்பி வந்துள்ளது (பார்க்க: குறிப்புகளில் குறிக்கப்பட்டிருக்கும் கண்டி,2004 என்பதன் மீதான விவாதம்). மேலும் அது குறுகிய அளவிலான பார்வையாளர்களுக்காக மட்டுமே திரைப்படங்களை உருவாக்குவதை எதிர்த்து வந்துள்ளது. பெருவாரியான மக்களை இலக்காகக் கொண்டு திரைப்படம் எடுப்பது அதன் வணிக ரீதியான வெற்றியை அதிக பட்சமாக்கும் என்று நம்ப்பபட்டது. இருப்பினும், கிராமப் புற திரைப்படப் பார்வையாளர்கள் மற்றும் நகர்ப்புற திரைப்படப் பார்வையாளர்கள் ஆகியோர் நிர்ணயிக்கும் வணிக ரீதி வெற்றி தனித்தனியானது என்பதை ஒப்புக் கொள்ளும் நிலைக்குச் சில திரைப்பட உருவாக்குனர்கள் செல்லக் கூடும்.

ஆதிக்கங்கள்
வணிக ரீதியான பிரபல இந்தியத் திரைப்பட மரபு அமைப்பில் பொதுவாக ஆறு காரணிகள் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன:

மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகிய பண்டைய இந்திய இதிகாசங்கள் பிரபல இந்தியத் திரைப்படத்தின் கருத்தாக்கம் மற்றும் கற்பனையோட்டம், குறிப்பாக கதை சொல்லப்படும் விதம், ஆகியவற்றில் மிகுந்த அளவு ஆதிக்கம் செலுத்தி வநதுள்ளன.
இத்தகைய ஆதிக்கத்திற்கு எடுத்துக் காட்டாக கிளைக்கதை, பின்கதை, மற்றும் கதைக்குள் கதை போன்ற உத்திகளைக் கூறலாம். பிரபல இந்தியத் திரைப்படக் கதைகள் அநேக முறை ஒரு கிளைக் கதைக்குத் தாவி விடும் இயல்புடையவை; இத்தகைய கதைப்படுத்தும் பாணியை 1993ஆம் ஆண்டுகளின் திரைப்படங்களான கல்நாயக் கர்தீஷ் ஆகியவற்றில் காணலாம்.[37]

பண்டைய சமிஸ்கிருத நாடகம் , அதன் மிகவும் நாகரிகமான செயற்பாணி மற்றும் காட்சியின் மீது செலுத்தப்படும் கவனம், இசை, நடனம் மற்றும் பாவனை ஆகியவை இரண்டறக் கலந்து "நடனமும் நடிப்பும் மையமாக அமைந்த நாடக அனுபவமாக உயிர்த்துடிப்பான ஒரு கலை அலகை" உருவாக்கியது.
சமிஸ்கிருத நாடகங்கள் நாட்டியா என்றே அழைக்கப்பட்டன. இதன் வேர்ச்சொல் நிருத் (நடனம்) என்பதாகும். இவை நாடகங்களை வியக்கத்தக்க நடன-நாடகங்களாக்கின. இந்த மரபு இந்தியத் திரைப்படத்திலும் தொடர்வதாக அமைந்தது.[37]

சமிஸ்கிருத நாடகங்கள் வழக்கொழிந்த 10வது நூற்றாண்டு கால கட்டத்தில் பாராம்பரிய கிராமிய இந்திய நாடகம் பிரபலமடைந்தது.
இத்தகைய பிராந்திய மரபு நாடகங்களில் வங்காளத்தின் யாத்ரா, உத்திரப் பிரதேசத்தின் ராம்லீலா மற்றும் தமிழ் நாட்டின் தெருக்கூத்து ஆகியவை அடங்கும்.[37]

பார்சி நாடகவியல் "நிதர்சனம் மற்றும் கட்டற்ற கற்பனை, இசை மற்றும் நடனம், கதைப்படுத்துதல் மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்பு, யதார்த்தமான உரையாடல்கள் மற்றும் புதுமையான மேடை அளிப்புகள் ஆகியவை இரண்டறக் கலந்த வகையில் உணர்ச்சியூட்டும் நாடக மேடைக் கதைகளாக அவற்றை அளித்தது.
செப்பமுறா நகைச்சுவை, இனிமையான பாடல்கள் மற்றும் இசை, உணர்ச்சியூட்டும் மற்றும் கண்கவரும் மேடை வித்தைகள் ஆகியவற்றை பார்சி நாடகங்கள் கொண்டிருந்தன."[37]

1920ஆம் ஆண்டுகளிலிருந்து 1950ஆம் ஆண்டுகள் வரை இசைத் திரைப்படங்கள் பிரபலமாக இருந்த ஹாலிவுட்டும், அதன் பாணியிலிருந்து இந்தியத் திரைப்பட உருவாக்குனர்கள் பல வழிகளில் மாறுபட்டாலும், இந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியது; "உதாரணமாக, ஹாலிவுட்டின் இசைத் திரைப்படங்கள் பொழுது போக்கு உலகத்தையே தமது கதையம்சமாகக் கொண்டிருந்தன.
இந்தியத் திரைப்பட உருவாக்குனர்கள், வணிக ரீதியிலான திரைப்படங்களில் கட்டற்ற கற்பனைத் தனிமங்களை மிகைப்படுத்தினாலும் பாடல் மற்றும் இசை ஆகியவற்றை தமது படங்களில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை வெளிப்படுத்துவதற்கு இயல்பான ஒரு வழியாகப் பயன்படுத்தினர். இசை மற்றும் நடனம் வழியாக புராணம், சரித்திரம், தேவைதைக் கதைகள் போன்றவற்றைச் சொல்லும் மிகப் பழமையான வலுவான பாராம்பரியம் இந்தியாவில் உண்டு."

மேலும், "ஹாலிவுட் திரைப்பட உருவாக்குனர்கள், நிதர்சனமான கதைப்படுத்துதலை மேற்படுத்தி தங்கள் கலை வடிவங்களின் கற்பனைக் கட்டமைப்பை மறைக்கும் பாணியைக் கடைப்பிடித்தனர்; இந்தியத் திரைப்பட உருவாக்குனர்கள், திரையில் காட்டப்படுவது ஒரு மாயை, ஒரு உருவாக்கம், ஒரு புனைகதை என்பதை மறைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இருப்பினும், இத்தகைய ஒரு உருவாக்கம், நுணுக்கமான மற்றும் சுவாரசியமான வழிகளின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையினூடே எப்படி இடையூடு கொள்கிறது என்பதை அவர்கள் வெளிக்காட்டினார்கள்."[38]

1990ஆம் ஆண்டுகள் துவங்கி, மேற்கத்திய இசைத் தொலைக்காட்சி கள், குறிப்பாக எம்டிவி, இந்தியத் திரைப்படங்களில் மிகுந்த செல்வாக்கு செலுத்தத் துவங்கியது. இதை 2000 ஆம் ஆண்டுகள் துவங்கி இந்தியத் திரைப்படங்களில் அவை செல்லும் வேகம், புகைப்படக் கோணங்கள், நடன அசைவுகள் மற்றும் இசை ஆகியவற்றில் காணலாம். இத்தகைய அணுகலுக்கான ஒரு ஆரம்பகால உதாரணம் மணி ரத்தினம் இயக்கிய பாம்பே (1995.[39]
செல்வாக்கு
2000 ஆம் ஆண்டுகள் துவங்கி பாலிவுட் மேற்கத்திய உலகு இசைத் திரைப்படங்கள் மீது செல்வாக்கு செலுத்தத் துவங்கியது. குறிப்பாக, அமெரிக்காவில் இசைத் திரைப்படப் பிரிவு புத்துயிர் பெறுவதற்கு இது முக்கியமான ஒரு கருவியாக இருந்தது. பஜ் லுஹ்ர்மான் தன்னுடைய இசைத் திரைப்படமான மௌலின் ரௌஜ்! (2001)பாலிவுட் இசையின் நேரெதிர் ஊக்குவிப்புதான் என்று கூறினார்.[40] இந்தப் படம் சிறு களி மண் வண்டி என்னும் இந்தியக் கருத்தமைப்பு கொண்ட பண்டைய சமிஸ்கிருத நாடகம் மற்றும் பாலிவுட் பாணியிலான நடனக் காட்சியுடன் சைனா கேட் என்னும் படத்திலிருந்து ஒரு பாடல் ஆகியவற்றைத் தன்னுள் கொண்டிருந்தது. மௌலின் ரௌஜ்! பெற்ற விமர்சன மற்றும் வணிக ரீதியிலான வெற்றி அந்தக் காலகட்டத்தில் குற்றுயிராக இருந்த மேற்கத்திய இசைத்திரைப்படப் பிரிவின்பால் மீண்டும் ஆர்வத்தை ஊட்டியது. இதைத் தொடர்ந்துசிகாகோ, தி ப்ரொட்யூசர்ஸ், ரெண்ட் , ட்ரீம்கேர்ல்ஸ் , ஹேர்ஸ்ப்ரே , ஸ்வீனி டொட் , அக்ராஸ் தி யூனிவர்ஸ் , தி ஃபேண்டம் ஆஃப் தி ஓபரா , என்சேண்டட் மற்றும் மாமா மியா போன்ற படங்கள் தயாரிக்கப்பட்டு இசைத் திரைப்படப் பிரிவில் ஒரு மறுமலர்ச்சிக்கு உரமிட்டன.[41]

இந்திய இசை அமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் ஆண்ட்ரூ லாய்ட் வெப்பர் தயாரிப்பான பாம்பே ட்ரீம்ஸ் க்கு இசை அமைத்தார். ஹம் ஆப் கே ஹை கோன் திரைப்படத்தின் ஒரு இசை வடிவம் லண்டனில் உள்ள வெஸ்ட் எண்டில் நிகழ்த்தப்பட்டது. பாலிவுட் இசைத் திரைப்படமான லகான் (2001) சிறந்த வெளி நாட்டு மொழித் திரைப்பட அகாடமி விருதுக்காக நியமிக்கப்பட்டது; மேலும் இரண்டு பாலிவுட் படங்களான தேவதாஸ் (2002) மற்றும் ரங் தே பசந்தி (2006) ஆகியவையும் சிறந்த வெளி நாட்டு மொழித் திரைப்பட பாஃப்தா விருதுக்காக நியமிக்கப்பட்டன. நான்கு கோல்டன் குளோப் விருதுகள் மற்றும் எட்டு அகாடமி விருதுகள் ஆகியவற்றை வென்ற டேனி போயில் படமான ஸ்லம்டாக் மில்லியனர் (2008) பாலிவுட் திரைப்படங்களின்[31][42] நேரடி பாதிப்பில் உருவானதுதான். இது "இந்தியாவின் வணிகத் திரைப்படத்திற்கான மனந்திறந்த ஒரு புகழுரை" என்பதாகக் கருதப்படுகிறது.[22] மேலும் பல ஹாலிவுட் படங்களும் பாலிவுட் படங்களின் பாதிப்பில் உருவானவையாக நம்ப்பபடுகின்றன. உதாரணமாக வி.சாந்தாராம் இயக்கிய தோ ஆங்கேன் பாரா ஹாத் (1957) திரைப்படத்தின் பாதிப்பில் ஹாலிவுட் திரைப்படமான தி டர்ட்டி டஜன் (1967) உருவானதாக எண்ணப்படுகிறது.[19] பாலிவுட் படங்களின் மூலமாக மறுபிறவி என்னும் கருத்தாக்கமும் பிரபல மேற்கத்திய கலாசாரத்தில் பரவலானது. மதுமதி (1958) யின் பாதிப்பில் ஹாலிவுட் திரைப்படமான ரீ இங்காரனேஷன் ஆஃப் பீடர் ப்ரௌட் (1975)[20] உருவானது. இதன் பாதிப்பில் உருவான கர்ஜ் (1980) என்னும் பாலிவுட் திரைப்படம், "சான்சஸ் ஆர் " (1989) என்னும் ஹாலிவுட் பட உருவாக்கத்தை நிகழ்வித்தது.[43] சோட்டி சி பாத் என்னும் 1975ஆம் ஆண்டுத் திரைப்படத்தின் பாதிப்பில் உருவானதாகக் கருதப்படும் ஹிச் (2005) திரைப்படம், தன் பங்குக்கு பார்ட்னர் (2007) என்னும் பாலிவுட் திரைப்படத்திற்கு அடிப்படையானது.[44]

உலகின் பிற பகுதிகளில் உள்ள பிரபல இசை வடிவங்களிலும், பாலிவுட்டின் திரைசார்ந்த இசையைக் காணலாம். உதாரணமாக தேவாவின் 1988ஆம் ஆண்டின் பிரபல பாடலான டிஸ்கோ டான்சர் பாலிவுட்டின் டிஸ்கோ டான்சர் (1982)[45] திரைப்படத்தின் "ஐயம் எ டிஸ்கோ டான்சர்" என்ற பாடலின் பாதிப்பில் உருவானது. டிஜே க்விக் மற்றும் டாக்டர் ட்ரெ தயாரிப்பில், ட்ருத் ஹர்ட்ஸ் பாடிய 2002ஆம் ஆண்டுப் பாடலான அடிக்டிவ், ஜோதி (1981) திரைப்படத்திற்காக லதா மங்கேஷ்கர் பாடிய "தோடா ரேஷம் லக்தா ஹை" என்ற பாடலிலிருந்து உருவப்பட்டதே.[46] 2005ஆம் ஆண்டு பிளாக் ஐட் பீஸ்' கிராம்மி விருது வென்ற பாடலான "டோண்ட் ஃபங்க் வித் மை ஹார்ட்", 1970ஆம் ஆண்டுகளின் இரண்டு பாலிவுட் பாடல்களின் பாதிப்பாகும்: டான் (1978)[47] திரைப்படத்தின் "ஏ மேரா தில் யார் கா திவானா" மற்றும் அப்ராத் (1972) திரைப்படப்பாடலான "ஏ நோஜவான் ஹை சப்".[48] இந்த இரண்டு பாடல்களும் அசலாக கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையமைப்பில் ஆஷா போஸ்லே பாடி நடன மாது ஹெலன் நாட்டியத்தில் உருவானவை.[49] மேலும், 2005ஆம் ஆண்டு, க்ரோனோஸ் கவார்டெட் ஆர்.டி.பர்மன் இசையில் ஆஷா போஸ்லே பாடிய பல பாடல்களை மறு-ஒலிப்பதிவு செய்து யூ ஹேவ் ஸ்டோலன் மை ஹார்ட்- சாங்க்ஸ் ஃப்ரம் ஆர்.டி.பர்மன்'ஸ் பாலிவுட்" என்ற பெயரில் ஒரு இசைத் தொகுப்பாக வெளியிட்டார். இது 2006ஆம் ஆண்டுக்கான கிராம்மி விருதுகளில் "சிறந்த சமகால உலக இசைத் தொகுப்பு"க்காகப் பெயரிடப்பட்ட்து. (பின்னாளில் {{1}0}ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் ஒலித்தடத்திற்காக இரண்டு அகாடமி விருதுகளைப் பெற்ற) ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த திரைசார்ந்த இசை உலகின் பல நாடுகளிலும் இசைக் கலைஞர்களால் கையாளப்பட்டுள்ளது. இவர்களில் சிங்கப்பூர் இசைக் கலைஞர் கெல்லி பூன், உஜ்பெக் கலைஞர் இரோடா டில்ரோஜ், அமெரிக்கக் கலைஞர் சிகாரா, ஃப்ரெஞ்ச் ராப் இசைக் குழு லா காஷன் மற்றும் ஜெர்மன் ஒருங்கிசைக் குழு லோவென்ஹெர்ஜ் ஆகியோர் அடங்குவர்.[50] கடல்தாண்டிப் பரவியுள்ள இந்தியக் கலைஞர்கள் பலரும் பாலிவுட் இசையின் பாதிப்பைக் கொண்டுள்ளனர்.

இன மரபுகள்
இதனையும் பார்க்க: Masala (film genre) மற்றும் Parallel Cinema
பாலிவுட் திரைப்படங்கள் அநேகமாக இசைப்படங்கள் வடிவிலேயே உள்ளன, மற்றும் கவர்ந்திழுக்கும் இசையை பாடல்-ஆடல் காட்சிகளாக கதையம்சத்துக்குள் பிணைத்திருக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றன. ஒரு திரைப்படத்தின் வெற்றி பல சமயங்களில் அத்தகைய பாடல்களைப் பொறுத்தே அமைகிறது.[51] சொல்லப் போனால், ஒரு படத்தின் இசை படத்தின் வெளியீட்டிற்கு முன்னரே வெளியிடப்பட்டு அந்தப் படத்திற்கான பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

இந்தியத் திரைப்பட ரசிகர்கள் தங்கள் பணத்திற்கான முழு மதிப்பையும் எதிர்பார்ப்பவர்கள். ஒரு நல்ல பொழுது போக்கான திரைப்படம் பொதுவாக பைசா வசூல் (அதாவது பணத்திற்கான மதிப்பு) என்றே குறிப்பிடப்படுகிறது.[52] ஒரு இடைவெளியுடன் கூடிய மூன்று மணி நேரத்திற்கான வரம்பற்ற கற்பனை மிகுந்த வெளிப்பாடாகப் பாடல்கள், ஆடல்கள், முக்கோணக் காதல்கள், நகைச்சுவை மற்றும் அதிரடியான, மெய் சிலிரிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள் ஆகிய அனைத்தும் கலந்திருக்கின்றன. அத்தகைய திரைப்படங்கள் மசாலா திரைப்படங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மசாலா என்பது ஹிந்தி மொழியில் காரக் கலவைக்கான பெயர். அப்படிப்பட்ட மசாலாக்கள் போல, இந்தப் படங்களும், அதிரடி, நகைச்சுவை, காதல் என்று பலவற்றையும் கலந்து கட்டியாகக் கொண்டுள்ளவையாகும். பெரும்பான்மையான படங்களில் கதா நாயகர்கள் தனியாகவே வில்லன்கள் அனைவரையும் வென்று விடுவார்கள்.


பாலிவுட் திரைப்படங்களில் அதீத உணர்ச்சிகளும், காதல் காட்சிகளும் பொதுவான உள்ளிருப்புகள். அச்சுத் கன்யா திரைப்படம் (1936)

பாலிவுட் கதைக் கருக்கள் மிகு உணர்ச்சிகொண்டவை. இவை அநேகமாக ஒரு குறிப்பிட்ட சூத்திரத்திற்குள் அடக்கி விடக் கூடிய தனிமங்களாக, காதல் வயப்படும் இளைஞர்கள், கோபக்கார பெற்றோர், முக்கோணக் காதல்கள், குடும்ப உறவுகள், தியாகம், ஊழல் அரசியல்வாதிகள், கடத்தல்காரர்கள், சூழ்ச்சி செய்யும் வில்லன்கள், தங்க மனம் கொண்ட தாசிகள், நெடுங்காலம் முன்னர் தொலைந்து போன உறவினர், விதியால் பிரிக்கப்பட்ட குழந்தைகள், நாடகத் தன்மை கொண்டு தலைகீழாக மாறும் அதிர்ஷ்டம், மற்றும் சௌகரியமான உடன் நிகழ்வுகள் ஆகியவற்றை பயன்படுத்துகின்றன.

இத்தகைய பாலிவுட் மரபுக்கு உள்ளும் புறமும், உயர்ந்த கலை நோக்கும், உயர்தரக் கதைகளும் கொண்ட இந்தியத் திரைப்படங்களும் இருந்து வந்துள்ளன (பார்க்க இணைத் திரைப்படம்). அவை, பெரும்பாலான மக்களைக் குறி வைத்துத் தயாரிக்கப்படும் திரைப்படங்களிடம் வணிக ரீதியாகப் பல முறை தோற்றிருக்கின்றன. இருப்பினும், பாலிவுட் மரபுகள் மாறி வருகின்றன. ஆங்கிலம் பேசும் நாடுகளில் வாழும் பெரும் அளவிலான இந்தியர்கள், மற்றும் உள்நாட்டில் மிகுந்து வரும் மேற்கத்திய செல்வாக்கு ஆகியவை, ஹாலிவுட் மாதிரிகளுக்கு அருகில் பாலிவுட் திரைப்படங்களை நகர்த்தி வருகின்றன.[53]

திரைப்பட விமர்சகரான லதா குப்சந்தானி எழுதுகிறார்: " ..நமது ஆரம்ப காலத் திரைப்படங்கள்.... மிக அதிக அளவில் பாலியல் மற்றும் முத்தக் காட்சிகளைக் கொண்டிருந்தன. விசித்திரமான முறையில், சுதந்திரத்திற்குப் பிறகுதான் தணிக்கை வாரியமும் மற்ற கட்டுப்பாடுகளும் உருவாயின."[54] தற்போதைய கதைக் கருக்கள் பெற்றோர் செய்து வைக்கும் திருமணஙகளை விட மேற்கத்திய நகர்ப்புறத்தாரின் கலாசாரமான ஆணும் பெண்ணும் ஒன்றாகச் சுற்றுவது, விடுதிகளில் ஆடுவது ஆகியவற்றையே சுற்றிச் சுழல்கின்றன. தற்போதைய பாலிவுட்டில் இத்தகைய மாற்றங்களை பெருமளவில் காண முடிந்தாலும், இந்தத் தொழிலுக்கு வெளியே மேற்கத்திய பாதிப்புகளுக்கு எதிர்ப்புகளாக பாராம்பரிய இந்தியக் கலாசாரத்தின் பழமை வாதப் போக்குகள் தொடர்ந்து இருந்து கொண்டுதான் வருகின்றன.[53] இவ்வாறு இருப்பினும், இந்தியாவின் நவநாகரிப் போக்கில் பாலிவுட் தொடர்ந்து ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.[53] உண்மையில் இந்தியாவின் நவநாகரிகம் பற்றிய ஒரு ஆய்வில், சிலர் பாலிவுட் திரைப்படங்களில் மாறிவரும் நவநாகரிகப் போக்குகள் உலகமயமாக்கலின் விளைவு என்பதை அறியாதவர்களாக இருப்பதையும், பாலிவுட் நட்சத்திரங்கள் அணியும் உடைகள் உண்மையில் இந்திய உடைகளே என்று பலர் எண்ணுவதையும் வெளிப்படுத்தியுள்ளது.[53]

நடிகர்களும் குழுவும்
மேற்கொண்டு தகவல்களுக்குப் பார்க்க: இந்தியத் திரைப்பட நடிகர்கள், இந்தியத் திரைப்பட நடிகைகள், இந்தியத் திரைப்பட இயக்குனர்கள், இந்தியத் திரைப்பட இசை இயக்குனர்கள், இந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர்கள்.
இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பலரையும் ஹாலிவுட் வேலைக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்தத் தொழிலில் முன்னேறும் ஆசை கொண்ட பல்லாயிரக்கணக்கான வருங்கால நடிகர் நடிகைகளை இது கவர்ந்திழுக்கிறது. அழகுக் காட்சியாளர்கள், அழகிப் போட்டியாளர்கள், தொலைக் காட்சி நடிகர்கள், நாடக நடிகர்கள், ஏன் சாதாரண மனிதர்கள் கூட நட்சத்திரமாகும் நம்பிக்கையில் மும்பய் வந்தடைகிறார்கள். ஹாலிவுட்டைப் போலவே, இங்கும் ஒரு சிலரே வெற்றி அடைகிறார்கள். பல பாலிவுட் படங்கள் வெளி நாட்டில் படமாக்கப்படுவதால், வெளி நாட்டு துணை நடிகர்களும் பலரும் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.[55]

பொழுதுபோக்குத் தொழிலில் நட்சத்திர அந்தஸ்து என்பது நிலையற்றது, இதற்கு பாலிவுட்டும் விதி விலக்கு அல்ல. நட்சத்திரங்களின் பிரபலம் கூடலாம், அல்லது விரைவில் இறங்கி விடலாம். அப்போதைய பிரபல நட்சத்திரத்தை தமது படத்தில் ஒப்பந்தம் செய்ய வேண்டுமென இயக்குனர்கள் போட்டியிடுகின்றனர்; காரணம் இந்த நட்சத்திரங்கள் படத்தின் வெற்றிக்கு உறுதியளிப்பதாக நம்பப்படுகிறது (ஆயினும், இந்த நம்பிக்கைக்கு அந்தப் படங்களின் வசூல் எல்லாக் காலங்களிலும் ஆதரவாக இருப்பதில்லை) இதனால் பெரும்பான்மையான நட்சத்திரங்கள் தாங்கள் பிரபலமானதும் தங்கள் புகழைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் பல படங்களில் நடிக்கிறார்கள்.

இந்தியரல்லாத நடிகர்கள் பலரும் பல்வேறு கால கட்டங்களில் முயன்றிருப்பினும், அவர்களில் வெகு சிலரே பாலிவுட்டில் முத்திரை பதித்துள்ளனர். இதற்குச் சில விதி விலக்குகள் உள்ளன. அண்மைக் காலத்திய ஒரு உதாரணம், வெற்றிப் படமான ரங் தே பசந்தி . இதில் முன்னணி நடிகையான அலைஸ் பேட்டன் ஒரு ஆங்கிலப் பெண்மணி. கிஷ்னா , லகான் மற்றும் தி ரைசிங்: பேலட் ஆஃப் மங்கள் பாண்டே ஆகிய படங்களும் வெளிநாட்டு நடிகர்களைக் கொண்டிருந்தன.

பாலிவுட் குடும்ப ஆதிக்கம் மிகுந்தது. படவுலகில் உள்ளவர்களின் உறவினர்கள் திரைப்படங்களில் முக்கியமான பாத்திரங்களைப் பெறுவதிலோ அல்லது திரைப்படக் குழுவில் இடம் பெறுவதிலோ, ஏனையவர்களை விட அதிக வாய்ப்பு உடையவர்களாக உள்ளனர். இருப்பினும், தொழிலில் ஒருவருக்கு உள்ள தொடர்புகள் அவரது நீண்ட காலத் தொழில் பயணத்திற்கான உத்திரவாதமாகாது: இங்கு போட்டி என்பது மிகவும் கடுமையானது. வாரிசுகள் வசூலைக் காட்டாவிட்டால், அவர்கள் தொழில் வாழ்க்கை முற்றுப் பெற்று விடும். இத்தகைய தொழில் முறைத் தொடர்புகள் ஏதும் இல்லாவிடினும் தர்மேந்திரா, அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக் கான் ஆகிய நட்சத்திரங்கள் மிகப் பெரும் வெற்றி ஈட்டியுள்ளனர். திரை வாரிசுகளுக்குப் பார்க்க: பாலிவுட் திரை வாரிசுகளின் பட்டியல்.

ஒலி
பாலிவுட் படங்களில் ஒலிப்பதிவு படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பதிவு செய்யப்படுவது மிகவும் அரிது (மாறாக, இது ஒலி ஒருங்கிணைப்பு என்று அழைக்கப்படுகிறது). ஆகவே, ஒலியானது முழுமையாக ஸ்டுடியோ[56] எனப்படும் படப்பிடிப்பு தளத்தில்தான் முழுமையாக உருவாக்கப்படுகிறது, அல்லது மறுவாக்கம் செய்யப்படுகிறது. இதில் நடிகர்கள் படப்பிடிப்புத் தளத்தின் திரையில் தங்கள் உருவம் தோன்றும்போது அதற்கான வசன வரிகளைச் சொல்கிறார்கள். இந்த முறைமையானது "ஒலியை இணைக் கிளைப்படுத்துதல்" அல்லது ஃபோலே மற்றும் சிறப்பு ஒலிகளுடன் பின்னர் இணைக்கப்படும் "ஏடிஆர்" எனப்படுகிறது. இதனால் பல பிரச்சினைகள் உருவாகின்றன. திரைப்படத்தில் ஒலியானது உதட்டசைவிற்கு இரண்டொரு படச் சட்டங்களுக்கு முன்னதாகவே ஒலித்து விடுகிறது.[56] படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் ஒரு முறையும், மற்றும் படப்பிடிப்பு தளத்தில் ஒரு முறையுமாக நடிகர்கள் இருமுறை நடிக்க வேண்டும். அதே அளவு உணர்ச்சியை இரண்டு முறைகளிலும் வெளிப்படுத்துவது என்பது பெரும்பாலும் மிகவும் கடினமான பணியாகும். ஹிந்திப் படங்கள் மட்டும் அன்றி, வணிக ரீதியான இந்தியத் திரைப்படங்கள் அனைத்துமே, சூழல் சார்ந்த ஒலியின்மைக்காக அறியப்பட்டுள்ளன. இதனால், நிகழ்வுக்கான சூழலை மீண்டும் உருவாக்குவதற்காக, பின்புல இசை மட்டும் அல்லாது, அப்போது இருந்திருக்கக் கூடிய ஒலிகளை அவற்றின் ஆழம் மற்றும் சூழலுடன் மறு உருவாக்கம் செயவதற்கு சிறப்பு ஒலிகள் பயன்படுத்தப்படுகின்றன.

பாலிவுட் திரைப்படங்களில் எங்கும் நிறைந்த ஏடிஆர், 1960கஆம் ஆண்டுகளில் ஏரிஃப்ளெக்ஸ் புகைப்படக் கருவியின் வருகையின்போது மேலும் பரவலானது. இந்தப் புகைப்படக் கருவியைப் பயன்படுத்துகையில், படப்பிடிப்பின்போது, இதிலிருந்து எழும் மிகையான சத்தத்தை மறைப்பதற்கு ஒரு திரையிட நேர்ந்தது. தங்கள் வேகத்திற்குப் பெயர் பெற்ற வணிக இந்தியத் திரைப்படவாளர்கள், இவ்வாறு புகைப்படக் கருவிக்குத் திரையிட முயன்றதில்லை. இதனால், அதன் அளவுக்கதிகமான ஒலியின் காரணமாக, எல்லா ஒலிகளையும் மீண்டும் படப்பிடிப்புத் தளத்தில் மறுவாக்கம் செய்ய நேர்ந்தது. இதுவே காலப்போக்கில் இந்தியத் திரைப்படங்களில் பொது நிலையாகிவிட்டது.

இவ்வாறு ஒருங்கிணைத்த ஒலியமைப்பே முப்பது வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த போக்கை, 2001ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட லகான் திரைப்படம் உடைத்தெறிந்தது. இதைத் தயாரித்து நடித்த ஆமிர் கான், படப்பிடிப்பு நடக்கும் இடத்தில்தான் ஒலிகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.[56] இவ்வாறு படப்பிடிப்பு நடக்கும் இடத்தில்தான் ஒலிகளைப் பதிவு செய்வதில் உள்ள பொருளாதார ரீதியிலான செயல் வலிமை பெரும் விவாதத்திற்குள்ளானது. அதன் பிறகு, பல பாலிவுட் திரைப்படங்களும் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ஒலிகளைப் பதிவு செய்யத் துவங்கியுள்ளன.

பாலிவுட் பாடல் மற்றும் நடனம்
மேலும் தகவல்களுக்கு: Hindi dance songs மற்றும் Filmi
இங்கே படத்திலிருப்பது புகழ் பெற்ற பின்னணிப் பாடகர் முகேஷ். ]]


பாலிவுட் நடனங்கள் பொதுவாகத் திரைப்பட பாடல்களையே பின்பற்றுகின்றன.

பாலிவுட் திரையிசை "ஆஃப் ஃபிலிம்ஸ்" என்ற சொற்றொடருக்கான ஃபிலிம்-இ என்ற ஹிந்தி வார்தையிலிருந்து பெறப்பட்டு ஃபில்மி இசை என்று அழைக்கப்படுகிறது. பாலிவுட் திரைப்படங்களின் பாடல்கள் பொதுவாகத் தொழில் முறைப் பாடகர்களைக் கொண்டு முன்னதாகவே ஒலிப்பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. பிறகு நடிகர்கள், பாடலின் சொற்களுக்கு ஏற்பத் திரையில் நடனமாடிக் கொண்டே ஒத்த உதட்டசவை அளிக்கின்றனர். இன்றைய நடிகர்களில் பெரும்பாலானவர்கள் சிறந்த நடனக் கலைஞர்களாக இருந்தாலும், பாடகர்களாக யாரும் இல்லை. இதில் குறிப்பிடத்தக்க ஒரு விதிவிலக்காக இருந்தவர் கிஷோர் குமார். இவர் பல 1950களில் பெரிய படங்களில் நடித்தார். ஒரு நட்சத்திரப் பின்னணிப் பாடகராகவும் ஒளிர்ந்தார். கே.எல்.சைகால், சுரையா மற்றும் நூர்ஜஹான் ஆகியோர் நடிகர்களாகவும், பாடகர்களாகவும் அறியப்பட்டவர்கள். கடந்த முப்பது ஆண்டு காலத்தில் சில நடிகர்கள் தாங்களே ஒன்றிரண்டு பாடல்களைப் பாடியுள்ளனர்; இதற்கான பட்டியலுக்குப் பார்க்க: இந்தியத் திரைப்படத்தில் பாடும் நடிகர்களும் நடிகைகளும்.

பின்னணிப் பாடகர்களின் பெயர்கள் முதன்மையான தலைப்புக்களில் திரைப்படம் துவங்கும் நேரம் காட்டப்படுகின்றன. இவர்களுக்கென்றே விசிறிகள் கூட்டம் உண்டு. சுமாரான ஒரு படத்திற்குக் கூட தங்கள் அபிமான பாடகர்களின் பாடல்களைக் கேட்பதற்காகவே இந்த விசிறிகள் செல்வதுண்டு. பாடிய பாடல்களின் எண்ணிக்கை மற்றும் தரம் ஆகிய இரண்டையும் பொறுத்து, பாலிவுட்டின் குறிப்பிடத்தக்க பாடகிகள் லதா மங்கேஷ்கர்,ஆஷா போன்ஸ்லே, கீதா தத், ஷம்சாத் பேகம், மற்றும் அல்கா யாக்னிக் ஆகியோர் ஆவர். பாடகர்களில், கே.எல்.சைகால், தளத் மஹமூது, முகேஷ், முகம்மது ரஃபி, மன்னா டே, ஹேமந்த் குமார், கிஷோர் குமார், குமார் சானு, எஸ்.பி.பாலசுப்ரமணியம், உதித் நாராயண் மற்றும் சோனு நிகம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அநேக வாதங்களில், முகம்மது ரஃபியே பாலிவுட் படப்பாடல்களுக்கு குரல் அளித்தவர்களில் மிகச் சிறந்த பாடகராக கருதப்படுகிறார். இவரைத் தொடர்ந்து வருபவர் லதா மங்கேஷ்கர். அறுபது ஆண்டுகள் நீண்ட தமது பின்னணிப்பாட்டுத் தொழிலில், இவர் ஆயிரக் கணக்கான பாடல்களை இந்தியத் திரைப்படங்களுக்காக பாடியுள்ளார். இசை இயக்குனர்கள் என்று அறியப்படும் இசை அமைப்பாளர்களும் மிகவும் பெயர் பெற்றவர்களாவர். அவர்களது பாடல்களால் ஒரு படத்தை உயர்த்தவும் முடியும், இறக்கவும் முடியும். அவ்வாறே செய்தும் இருக்கின்றன. தற்சமயம் பழைய பாடல்களை நவீன தாளகதி மற்றும் சந்தம் ஆகியவற்றைக் கொண்டு மறுகலவை செய்யும் போக்கு பொதுவாகக் காணப்படுகிறது. சில தயாரிப்பாளர்கள், அவர்களது படங்களின் பாடல்களை மறுகலவை செய்து அவற்றின் வழக்கமான ஒலித்தட பேழைகளுடன் வெளியிடுவது கூட வழக்கமாகி விட்டது.

பாலிவுட் திரைப்படங்களின் நடனங்கள், குறிப்பாக பழையவற்றில், பாராம்பரியமான நடனப் பாணிகள், சரித்திர காலத்தில் வட இந்தியாவின் அரசவை நடன மாதர்கள், தாசிகள் மற்றும் கிராமிய நடனங்கள் ஆகிய இந்திய நடன முறைகளை ஒற்றியே இருந்தன. நவீனத் திரைப்படங்களில், இந்திய நடனத் தனிமங்கள் (எம்டிவி அல்லது ப்ராட்வே இசைநாடகங்கள் ஆகியவற்றில் காணப்படுபவை போன்ற) மேற்கத்திய நடன பாணிகளுடன் இரண்டறக் கலந்திருப்பவையாக உள்ளன. ஒரே திரைப்படத்தில், மேற்கத்திய பாப் மற்றும் தூய்மையான பாராம்பரிய நடனக் காட்சிகள் என்று இரண்டுமே காணக் கிடைப்பதும் உண்டு. கதாநாயகன் அல்லது கதாநாயகி பெரும்பாலும் துணை நடன நடிகர்களின் ஒரு குழுவுடன் நடனமாடுவார்கள். இந்தியத் திரைப்படங்களில் பெரும்பாலான பாடல் மற்றும் நடனக் காட்சிகள் யதார்த்ததை மீறியதாக, சட்டென்று மாறும் சூழல்களும், பாடலின் சரணங்களுக்கு இடையில் மாறும் உடையலங்காரங்களும் கொண்டுள்ளன. ஒரு கதாநாயகனும், கதாநாயகியும் ஒருங்கிணைந்து நடனமாடுகையில் பொதுவாக அது அழகான இயற்கைச் சூழலில் அல்லது பிரம்மாண்டமான கட்டமைப்பு கொண்ட செயற்கை அமைப்பில் அமைகிறது. இவ்வாறு அமைத்தல் "படமாக்குதல்" என்று கூறப்படுகிறது.

பாடல்கள் திரைப்படத்தில் நடக்கும் பல விஷயங்களுக்கு ஒரு விளக்கக் கூறாகவே பல வகைகளில் அமைகின்றன. சில வேளைகளில் கதையம்சத்திற்குள் பாடல் இணைக்கப்படுகிறது; இதனால் ஒரு கதாபாத்திரம் பாடுவதற்கான காரணம் உருவாகிறது. ஒரு பாடல் என்பது ஒரு கதாபாத்திரத்தின் எண்ணங்களை வெளிப்படுத்துவதாகவோ அல்லது இதுவரை கதையில் நிகழாத ஒன்றை முன்னரே அறிவிப்பதாகவோ அமைகின்றன. இந்த இடத்தில் பார்த்தால், இரண்டு கதாபாத்திரங்கள் காதலில் விழுவதுதான் நிகழ்வாகிறது.

தற்போது ஐட்டம் நம்பர்) என்று அழைக்கப்படும் உருப்படி எண்கள் எப்போதுமே பாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. பெரும்பாலும், பிரதான கதாபாத்திரங்களுக்கோ, கதைக் கருவிற்கோ முற்றிலும் தொடர்பில்லாத, உடற்கவர்ச்சி மிக்க ஒரு பெண் கதாபாத்திரம் (அதாவது "ஐட்டம் கேர்ள்") ஈர்க்கும் வகையில் அமைந்த ஒரு பாடலுடன் திரைப்படத்தில் ஆடிக் காட்டுவார். பழைய திரைப்படங்களில் இந்த "ஐட்டம் நம்பர்" என்பது, ஒரு நடனப்பெண் (தாசி ) ஒரு செல்வந்தரான வாடிக்கையாளருக்காக ஆடுவதாகவோ அல்லது ஒரு காபரே நடனக் காட்சியின் ஒரு பகுதியாகவோ இருக்கும். ஹெலன் என்னும் நடன மாது தமது காபரே நடனங்களுக்காக மிகுந்த புகழ் பெற்றிருந்தார் நவீன காலப் படங்களில், ஐட்டம் நம்பர்கள் டிஸ்கொதே மற்றும் விழா அல்லது மேடை நிகழ்ச்சி ஆகிய வடிவங்களிலும் நுழைக்கப்படுகின்றன.

கடந்த சில பத்தாண்டுகளாக, பிரதான திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே, பின்னர் படம் வெளியாகும்போது அதைக் காண பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் என்ற நம்பிக்கையில் அதன் ஒலி நாடா, குறுந்தகடு போன்ற அதன் ஒலித்தடத்தை பாலிவுட் தயாரிப்பாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். பல சமயங்களில் திரைப்படத்தை விட அதன் ஒலித்தடம் பிரபலமாகி விடுகிறது கடந்த சில வருடங்களாக தயாரிப்பாளர்கள் இசை ஒளிக்காட்சிகளையும் வெளியிடத் துவங்கியுள்ளனர். பொதுவாக இதில் திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சி வெளியிடப்படுகிறது. இருப்பினும், சில விளம்பர ஒளிக்காட்சிகளில் படத்தில் இல்லாத பாடல்களும் சேர்க்கப்படுகின்றன.

வசனமும் படல்கவிதைகளும்
முதன்மைக் கட்டுரை: Bollywood songs
திரைப்படத்தின் வசனம் அல்லது உரையாடல் வரிகள் (இது இந்திய ஆங்கிலத்தில் "டயலாக்ஸ்" என்று அழைக்கப்படுகிறது) மற்றும் பாடல் வரிகள் ஆகியவை அநேக சந்தர்ப்பங்களில் வேறு வேறு நபர்களால் எழுதப்படுகின்றன.

உரையாடல்கள் பெரும்பாலும் அலங்காரமற்ற ஹிந்தி[6] அல்லது ஹிந்துஸ்தானியில், பார்வையாளர்களில் பெரும்பான்மையோர் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்படுகின்றன. இருப்பினும், சில திரைப்படங்களில் கிராமிய சூழலுக்காக வட்டார வழக்குகளும் அல்லது மொகலாயர் காலம் போன்ற சரித்திரப் படங்களில் அந்நாளைய அரசவைச் சூழலை வெளிக் கொணர்வதற்காக உருது மொழி ஆகியவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சம காலத்திய திரைப்படங்கள் ஆங்கில மொழியை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. உண்மையில், பல திரைப்படங்களின் வசனம் முதலில் ஆங்கிலத்தில்[57] எழுதப்பட்டு பிறகு ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சூழலை பிரதிபலிப்பதற்காக, கதாபாத்திரங்கள் ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு (உதாரணமாக, ஒரு வணிகச் சூழலில் ஆங்கிலமும், சாதாரண சூழலில் ஹிந்தியுமாக) தங்கள் பேச்சை மாற்றிக் கொள்ளலாம்.

வசனமோ, பாடலோ எதுவாக இருந்தாலும் திரைப்பட மொழியானது பொதுவாக மிகு உணர்ச்சியுடனும் கடவுள், குடும்பம், தாய், கடமை மற்றும் சுய-தியாகம் ஆகியவற்றைப் பற்றிய அறைகூவலாகவுமே உள்ளது.

இசை இயக்குனர்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட பாடலாசிரியர்களுடேனேயே பணியாற்ற விரும்புகின்றனர். இசை இயக்குனரும் பாடலாசிரியரும் ஒரு குழு என்று காணப்படும் அளவிற்கு இது நிலவுகிறது. இந்த நிகழ்வானது அமெரிக்க இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்கள் ஜோடி அமைவதைப் போன்றதுதான். உதாரணமாக எந்தக் காலத்திற்குமான பிராட்வே இசை நாடகங்களை உருவாக்கிய ரிச்சர்ட் ரோட்ஜர்ஸ் மற்றும் ஆஸ்கார் ஹாம்மர்ஸ்டீன் அல்லது அலன் ஜே லெர்னர் மற்றும் ஃப்ரெடரிக் லோவ் ஆகியோரைக் கூறலாம். பாடல் வரிகள் அநேகமாக காதலைப் பற்றியதாகவே உள்ளன. பாலிவுட் பாடல் வரிகள், குறிப்பாக பழைய படங்கள், அராபிய-பாரசீக-உருதுச் சொற்களை அடிக்கடி பயன்படுத்தின. காதல் பாடல்களுக்கான மற்றொரு மூலம் கிருஷ்ணா, ராதா மற்றும் கோபி ஆகியோரின் பற்றிய இதிகாச லீலைகள் பற்றிய மிகப் பழமையான ஹிந்து பாராம்பரியக் கவிதைகள். பல பாடலாசிரியர்கள் பாடகரை ஒரு பக்தனாகவும், அவரது அல்லது அவளது பக்திக்கான பொருளை கிருஷ்ணா அல்லது ராதாவாகவும் ஒப்பிடுகிறார்கள்.

நிதி
பாலிவுட் திரைப்படங்கள் பல-மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் மிகப் பிரம்மாண்டமானவை 100 கோடி ரூபாய் (ஏறத்தாழ 20 மில்லியன் அமெரிக்க டாலர் வரையிலுமான பொருட்செலவில் தயாரிக்கப்படுகின்றன. படத்தள அமைப்புக்கள், உடையலங்காரங்கள், சிறப்பு விளைவுகள் மற்றும் ஒளிப்பதிவு ஆகியவை - இவற்றில் சில விதி விலக்குகள் இருந்தாலும்- 1990களின் இடைக்காலக் கட்டம் வரை உலகத் தரத்திற்கு கீழாகத்தான் இருந்தன. மேற்கத்தியத் திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் அதிக அளவில் இந்தியாவில் விநியோகமாகத் தொடங்கியதைத் தொடர்ந்து, அதே அளவிலான தயாரிப்புத் தரத்தை, குறிப்பாக அதிரடிக் காட்சிகள் மற்றும் சிறப்பு விளைவுகள் ஆகியவற்றில், கடைப்பிடிக்கும் அவசியம் பாலிவுட்டை மிகவும் அழுத்தத் துவங்கியது இந்தப் பகுதிகளைச் சிறப்பாக அமைக்க அண்மைக்கால பாலிவுட் திரைப்படங்கள் சர்வதேச தொழில் நுட்ப நிபுணர்களை நியமிக்கத் துவங்கியுள்ளன. உதாரணமாக, க்ர்ரிஷ் படத்திற்கான அதிரடிக் காட்சிகளை ஹாங்காங்கைச் சேர்ந்த டோனி சிங்க்அமைத்தார். இவ்வாறு தொழில் முறையாளர்கள் மற்றும் சிறப்பு விளைவாளர்களுடனான வளர்ந்து வரும் அணுகல் மற்றும் பெருகி வரும் திரைப்படப் பொருளாதாரம் ஆகியவை காரணமாக அதிரடி மற்றும் அறிவியல்-புனைகதைத் திரைப்படங்களில் ஒரு பெரும் புரட்சியே நிகழ்ந்துள்ளது.

வெளிநாடுகளில் படமாக்கப்படும் காட்சிகளில் வசூல் அளவைப் பெருக்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், மும்பய் படப்பிடிப்புக் குழுக்கள் ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, யுனைடட் கிங்டம், ஐக்கிய அமெரிக்க நாடு, ஐரோப்பிய கண்டம் மற்றும் வேறு பல இடங்களிலும் படப்பிடிப்பை நிகழ்த்துகின்றனர். தற்போது, லகான் , தேவதாஸ் மற்றும் இதர அண்மைக் காலப் படங்களைப் போன்று இந்தியாவிற்குள் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும் தயாரிப்பாளர்கள் அதிகரித்து வரும் அளவுகளில் நிதியுதவி பெறுகின்றனர்.

பாலிவுட் திரைப்படங்களுக்கு நிதியுதவியானது பெரும்பாலும் தனிப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் பெரும் படப்பிடிப்பு தளங்கள் ஆகியவற்றிலிருந்து வருவதாகும். இந்திய வங்கிகளும் மற்றும் நிதி நிறுவனங்களும் படப்பிடிப்பு தளங்களுக்கு கடன் கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்தத் தடையானது தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது.[58] நிதியுதவி சரியானபடி முறைப்படுத்தப்படாததால், மும்பையின் கீழுலகம் போன்ற சட்டபூர்வமல்லாத வழிகளிலிருந்தும் நிதியுதவி வருகிறது. பல படங்களின் தயாரிப்பில் மும்பையின் கீழுலகம் ஈடுபட்டிருப்பது தெரிந்த விஷயமாகும். பல பிரபல திரைப்படப் புள்ளிகளுக்கு இவர்கள் அளிக்கும் ஆதரவு மிகவும் அறிபழியாகும். திரையுலகப் பேரங்களில் தங்கள் பணம் மற்றும் குண்டர்கள் துணை கொண்டு தங்கள் காரியத்தை ஆற்றிக் கொள்வதாக இவர்கள் அறியப்பட்டுள்ளார்கள். 2000 ஆம் ஆண்டு ஜனவரியில் ஹ்ரித்திக் ரோஷன் என்ற தந்தையும் திரைப்பட திரைப்பட நட்சத்திரத்தின் தந்தையும் இயக்குனருமான ராகேஷ் ரோஷன் மும்பய் குண்டர்களால் சுடப்பட்டார். 2001 வருடம் சோரி சோரி சுப்கே சுப்கே என்ற திரைப்படம் மும்பய் கீழுலகு உறுப்பினர்களால் நிதியுதவி அளிக்கப்பட்டது என்று அறியப்பட்டதும், சென்ட்ரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் அதன் அனைத்துப் பிரதிகளையும் கைப்பற்றியது.[59]

பாலிவுட் சந்திக்கும் மற்றொரு பரவலான பிரச்சினை காப்புரிமை மீறல் பல நேரங்களில், திரையரங்குகளில் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே அதன் கள்ள மின்னணு ஒளிப்பேழைகள் (டிவிடி) கிடைக்கப் பெறுகின்றன. இவ்வாறு, கள்ளத்தனமாக டிவிடி, விசிடி மற்றும் விஹெச்எஸ் பிரதிகள் மிகச் சமீபத்திய திரைப்படங்களுக்கும் கிடைக்கப் பெறுவது தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியா ஆகியவற்றில் ஒரு சிறு தொழில் என்று கூறப்படும் அளவிற்கே வளர்ந்து விட்டது. இவ்வாறு கள்ளத்தனமாக நகல் எடுக்கப்படும் ஒளிப்பேழை மற்றும் மின்னணு ஒளிப்பேழை ஆகியவற்றால், வருடந்திரமாக 100 மில்லியன் டாலர் இழப்பு பாலிவுட்டிற்கு ஏற்படுவதாக இந்திய வணிக மற்றும் தொழில் குழுமப் பேரவை (தி ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி- எஃப்ஐசிசிஐ)கணக்கிட்டுள்ளது. இவை உள்நாட்டு சந்தைக்கு மட்டும் அல்லாது, பெரும் அளவில் வெளி நாட்டு இந்தியர்குழுக்களுக்கும் வழங்கப்படுவதாக உள்ளன. (உண்மையில், பாகிஸ்தான் அரசு ஹிந்தித் திரைப்படங்களின் விற்பனை, விநியோகம் மற்றும் ஒளிபரப்பு ஆகியவற்றைத் தடை செய்து விட்டதால், இவ்வாறான கள்ளப் பிரதிகளே பாகிஸ்தானிய மக்கள் பாலிவுட் திரைப்படங்களைக் காண்பதற்கான ஒரே வழியாக உள்ளது). பல நேரங்களில், இந்தியாவிலும், தென்னாசியாவின் இதர பகுதிகளிலும் உள்ள பல கம்பிவழி தொலைக் காட்சி சிறு நிறுவனங்கள் இழப்பீடு ஏதும் அளிக்காமலேயே திரைப்படங்களை ஒளிபரப்புகின்றன. யூ.எஸ் மற்றும் யூகே ஆகிய நாடுகளில் புலம் பெயர்ந்த இந்திய மக்களுக்காக நடத்தப்படும் சிறிய அளவுக் கடைகள் இவ்வாறான சந்தேகத்துக்குரிய கள்ள ஒலி நாடாக்கள் மற்றும் மின்னணு ஒளிப்பேழைகளை எப்போதுமே தம் வசம் வைத்துள்ளன. பயனர்களும் தம் பங்குக்கு இவற்றைப் பிரதி எடுப்பது பிரச்சினையை அதிகப்படுத்துவதாக உள்ளது. தற்போது இணைய தளத்தில் திரைப்படங்களின் பிரதிகள் சட்ட விரோதமான முறையில் கிடைக்கப் பெறுவதும், திருட்டுப் பிரச்சினைக்குப் பங்களிக்கிறது.

செயற்கைக் கோள் தொலைக்காட்சி, தொலைக் காட்சி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அந்நிய நாட்டுத் திரைப்படங்கள் ஆகியவை இந்திய பொழுதுபோக்குத் துறைக்கான உள்நாட்டு சந்தையில் மிகுந்த அளவில் புகுந்து விட்டன. பழங்காலத்தில் நிறைய பாலிவுட் திரைப்படங்கள் வசூலில் வெற்றியடைந்தன; தற்போது அவ்வாறு வெற்றி அடைபவை மிகக் குறைவே. இருப்பினும், பல பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர்கள், இணை உரிமைகளை விற்பது போன்ற வேறு பல வருமான வழிகளின் மூலம் தங்கள் மூல தனத்தைத் திரும்பப் பெறுகின்றனர். மேலும், யுனைடட் கிங்டம், கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடு போன்று பாலிவுட் திரைப்படங்கள் மெள்ள கவனிப்பு பெறத் துவங்கியுள்ள மேற்கத்திய நாடுக்ளிலிருந்தும் வருமான வரவு அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்த நாடுகளுக்கு மேலும் மேலும் இந்தியர்கள் குடியேறிச் செல்வதால், இந்தியத் திரைப்படங்களுக்கான சந்தை இந்த நாடுகளில் மேலும் மேலும் பெருகி வருகிறது.

ஹாலிவுட் மற்றும் பாலிவுட் ஆகியவற்றின் நிதி சார்ந்த ஒரு சுவாரசியமான ஒப்புமைக்குப் பார்க்க: வரை பட்டியல் இது 2002ஆம் ஆண்டு விற்பனையான அனுமதிச் சீட்டுகள் மற்றும் மொத்தமாகக் கணக்கிடப்பட்ட வருமானம் ஆகியவற்றைக் காட்டுகிறது. பாலிவுட் 3.6 பில்லியன் அனுமதிச் சீட்டுகளை விற்றது. அதன் மொத்த வருமானம் (திரையரங்கு அனுமதிச் சீட்டுகள், டிவிடிக்கள், தொலைக்காட்சி ஆகியவற்றின் மூலம்) 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஹாலிவுட் 2.6 பில்லியன் அனுமதிச் சீட்டுகளை விற்றது. இது மொத்தமாக 51 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை (அனைத்து வடிவங்கள் வழியாகவும்) உருவாக்கியது.

விளம்பரச் செயற்பாடுகள்
பல இந்திய ஓவியர்கள் திரைப்பட விளம்பரப் பலகைகள் மற்றும் சுவரொட்டிகள் ஆகியவற்றைக் கைகளால் வரைவதினால் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். (மிகப் பிரபலமாக அறியப்படும் எம்.எஃப்.ஹுசைன் தனது தொழிலின் ஆரம்ப நாட்களில் திரைப்பட விளம்பரச் சுவரொட்டிகளை வரைந்தவர்தான்). விளம்பரப் பொருட்களை அச்சிட்டு விநியோகிப்பதை விடவும், இவ்வாறு மனித உழைப்பைப் பயன்படுத்திக் கொள்வது மலிவானதாக இருந்தததே இதன் காரணம்.[60] தற்போது, இந்தியாவில் அனைத்து இடங்களிலும் காணப்படும் பெரும் விளம்பரப் பலகைகள் கணினியால் அச்சிடப்பட்ட வினைல் பலகைகளாகும். முன்பு நிரந்தரமல்லாதவை என்று கருதப்பட்ட பழங்கால முறைப்படி கையால் வரையப்பட்டவை தற்போது பாராம்பரியக் கலை வடிவமாக சேகரிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.[60]

ஒரு திரைப்படத்தின் இசை, இசை ஒளிப்பேழைகள் ஆகியவற்றை அத் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னால் வெளியிடுவதையும் ஒரு வகையான விளம்பர முயற்சி என்று கொள்ளலாம். பிரபலமான ஒரு மெட்டு பார்வையாளர்களைத் திரைப்பட அரங்குகளுக்குக் கவர்ந்திழுக்கும் என்று நம்பப்படுகிறது.[61]

பாலிவுட் விளம்பர வல்லுனர்கள் இணைய தளத்தையும் விளம்பரத்திற்கான ஒரு தளமாக பயன்படுத்திக் கொள்ளத் துவங்கியுள்ளனர். சிறந்த முறையில் நிதியுதவி பெற்றுத் தயாரிக்கப்படும் படங்களில் பல சொந்தமாகவே வலைத்தளங்களை உருவாக்கிக் கொள்கின்றன. இவற்றில், படங்களின் முன்னோட்டங்கள், அசையாப்படங்கள், கதைக் கரு, நடிகர்கள் மற்றும் குழு ஆகியவை பற்றிய தகவல்கள் போன்றவை இணையதள உலாவிகளுக்குக் கிடைக்கப் பெறுகின்றன.[62]

இதர பொருட்களை விளம்பரப்படுத்தவும் பாலிவுட் பயன்படுத்தப்படுகிறது. ஹாலிவுட்டின் செயற்பாடான பொருளை நிலைநாட்டுவது என்னும் முறைமை பாலிவுட்டிலும் பெரும் அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.[63]

பாலிவுட் நட்சத்திரங்கள் கைக் கடிகாரம், சோப்பு போன்ற பல்வேறு பொருட்களுக்காக, அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடக விளம்பரங்களில் தோன்றுகிறார்கள் (பார்க்க: பிரபலங்களின் ஏற்பிசைவு). ஒரு நட்சத்திரத்தின் ஏற்பிசைவு அந்தப் பொருளின் விற்பனையை அதிகரிப்பதாக விளம்பரதாரர்கள் கூறுகின்றனர்.

விருதுகள்
இந்தியாவில் ஹிந்தித் திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும் திரைப்படம் சார்ந்த முதன்மையான நிகழ்ச்சிகளில் ஃபிலிம்ஃபேர் விருதுகள் விழாவும் ஒன்றாகும்.[64] இந்திய திரைப்படப் பத்திரிகையான ஃபிலிம்ஃபேர் தனது முதல் ஃபிலிம்ஃபேர் விருதுகளை 1954ஆம் ஆண்டு துவங்கியது. 1953ஆம் ஆண்டிற்கான சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகள் பத்திரிகை ஆசிரியரின் பெயரை ஒட்டி க்ளேர் விருதுகள் என்று குறிப்பிடப்பட்டன. அகாடமி ஆஃப் மோஷன் பிகசர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் பின்பற்றிய வாக்கெடுப்பு அடிப்படையிலான தேர்வு முறைமையை ஒற்றி, தனிப்பட்ட நபர்கள் வெவ்வேறு பிரிவுகளுக்கு தங்களது வாக்குகளை சமர்ப்பிக்கலாம். 1956ஆம் ஆண்டு ஒரு இரட்டை வாக்கெடுப்பு முறை உருவாக்கப்பட்டது.[65] ஆஸ்கார் விருதுகளைப் போல, ஃபிலிம்ஃபேர் விருதுகளும் கலை உயர்வு கொண்ட படங்களை விடுத்து, வணிக ரீதியில் வெற்றியடைந்த படங்களுக்கே அளிக்கப்படுவதாக அநேக சமயங்களில் குற்றம் சாட்டப்படுகிறது.

ஃபிலிம்ஃபேர் போலவே, தேசிய திரைப்பட விருதுகள் 1954ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. 1973ஆம் ஆண்டிலிருந்து தேசிய திரைப்பட விருதுகளுக்கு இந்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. இதற்கான விருதுகளை அரசால் நடத்தப்படும் டைரக்டோரேட் ஆஃப் ஃபிலிம் ஃபெஸ்டிவல் (டிஎஃப்எஃப்) வழங்கி வருகிறது. பாலிவுட் திரைப்படங்கள் மட்டும் அல்லது, பிராந்திய மொழிப் படங்களையும் மற்றும் தனிப்பட்ட/கலை சார்ந்த படங்களையும் டிஎஃப்எஃப் திரையிடுகிறது. இந்திய குடியரசுத் தலைவர் தலைமை தாங்கும் ஒரு வருடாந்திரச் சடங்கில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த முறைமையில், இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஒரு குழுவால் தீர்மானிக்கப்படும் தேசிய திரைப்பட விருதுகளைப் போல அல்லாது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் பொதுமக்கள் மற்றும் ஒரு நிபுணர்களின் குழு ஆகிய இரண்டினாலும் வாக்களிக்கப்படுகின்றன.[66]

இந்தியாவினுள் நடைபெறும் கூடுதல் விழாச்சடங்குகள்:

ஸ்டார் டஸ்ட் விருதுகள்
ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள்
வெளிநாடுகளில் நிகழ்த்தப்பெறும் விழாச்சடங்குகள்:

பாலிவுட் திரைப்பட விருதுகள் - லாங் ஐலேண்ட், நியூயார்க், யுனைடட் ஸ்டேட்ஸ்
குளோபல் இந்தியத் திரைப்பட விருதுகள்- ஒவ்வொரு வருடமும் வேறு வேறு நாட்டில்.
ஐஐஎஃப்ஏ விருதுகள்- ஒவ்வொரு வருடமும் வேறு வேறு நாட்டில்.
ஜீ திரை விருதுகள்- ஒவ்வொரு வருடமும் வேறு வேறு நாட்டில்.
இவற்றில் பல விருது நிகழ்ச்சிகள் ஆடம்பரமாக நிகழ்த்தப்பெறும் பிரம்மாண்டமான கண் கவர் நிகழ்ச்சிகளாகும். இவற்றில் ஆடல், பாடல் மற்றும் எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொள்வது ஆகியவை நிகழ்கின்றன.

திரைப்படக் கல்வி
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம்
சத்யஜித் ரே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கழகம்
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கான ஆசிய அகாடமி
பிரபலத் தன்மையும் ஈர்ப்பு சக்தியும்
இதனையும் பார்க்க: List of highest-grossing Bollywood films
புலம் பெயர்ந்த இந்தியர்களைத் தவிர, நைஜீரியா தொடங்கி சினேகால் வரை பல்வேறு தொலை தூர நாடுகளிலும் ரஷ்யாவின் பல தலைமுறைகளும் பல்லாண்டுகளாக பாலிவுட்டின் விசிறிகளாக இருந்து வருகின்றனர். இந்தியத் திரைப்படங்கள் கலாசாரம் கடந்தும் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டுள்ளதற்கு இதுவே சாட்சி.[67]

20வது நூற்றாண்டின் கடந்த பல வருடங்களாகவும் அதற்கு அப்பாலும், மேற்கத்திய ரசிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோரின் மனதிலும் இடம் பிடித்துள்ள பாலிவுட் தொடர்ந்து முன்னேறி வருகிறது.[34][68]

ஆசியா
பாலிவுட் திரைப்படங்கள் பங்களாதேஷ், நேபால், பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீ லங்கா போன்ற தெற்காசிய நாடுகளில் பரவலான அளவில் பார்வையளர்களைப் பெற்றுளளன. பெரும்பான்மையான பாகிஸ்தானியர்கள் (உருது மொழிக்கு இசைவைக் கொண்டிருப்பதால்) ஹிந்தியைப் புரிந்து கொண்டு, பாலிவுட் படங்களைப் பார்க்கிறார்கள்.[69] 1965[69] லிருந்து அதன் அரசு இந்தியப் படங்களை தடை செய்திருந்தாலும், 2006ஆம் ஆண்டு, சட்ட பூர்வமாக சில பாலிவுட் படங்கள் அங்கே திரையிடப்பட்டன. இவற்றில் திரைக்கு வந்து பல வருடங்களாகி விட்ட தாஜ் மஹல் , மொகல்-ஈ-ஆஸம் ஆகியவை அடங்கும். மேலும் பல படங்களும் தொடர்ந்து வெளியாகின.[70] பெரும்பான்மையான நேரங்களில், பாகிஸ்தானில் பாலிவுட் திரைப்படங்கள் கம்பி வழித் தொலைக்காட்சியில் பார்க்கப்படுகின்றன; உள்ளூர் ஒளிப்பேழைக் கடைகளில், பாலிவுட் திரைப்படங்களுக்கு பெரும் அளவிலான கிராக்கி இருக்கிறது. சரித்திர ரீதியாக, ஒளிப்பேழை திருட்டு இந்தியத் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு மற்றொரு அணுகு முறையாக இருந்து வந்துள்ளது.[71]

பாலிவுட் திரைப்படங்கள் ஆஃப்கனிஸ்தான் நாட்டிலும் பிரபலமாக உள்ளன. இது அந்நாடு இந்திய துணைக் கண்டத்திற்கு அருகில் இருப்பதாலும், மற்றும் பொதுவான சில கலாசார அணுக்கங்கள் திரைப்படங்களில் இருப்பதாலும், இவ்வாறு உள்ளது.[72] பல பாலிவுட் திரைப்படங்கள் ஆஃப்கனிஸ்தானில் படமாக்கப்பட்டுள்ளன. சில அந்த நாட்டைப் பற்றியும் இருந்தன. இவற்றில், தர்மாத்மா , காபூல் எக்ஸ்பிரஸ் , குதா கவா மற்றும் எஸ்கேப் ஃப்ரம் தாலிபான் ஆகியவை அடங்கும்.[73][74] பாலஸ்தீனம், ஜோர்டான், எகிப்து மற்றும் வளைகுடா நாடுகள் ஆகியவற்றை உள்ளிட்ட எண்ணற்ற அராபிய நாடுகள் பலவற்றிலும் ஹிந்தித் திரைப்படங்கள் பிரபலமாக உள்ளன.[75]

இறக்குமதி செய்யப்படும் இந்தியப் படங்கள் பொதுவாக அவற்றின் வெளியீட்டின்போது அராபிய மொழியில் துணைத் தலைப்புகள் கொண்டிருக்கின்றன. 2000 ஆம் ஆண்டுகளின் துவக்கம் தொடங்கி, பாலிவுட் இஸ்ரேல் நாட்டிலும் முன்னேறி வருகிறது. கம்பி வழி தொலைக் காட்சியில் பிரத்யேகமான அலைவரிசைகள் இந்தியத் திரைப்படங்களுக்காகவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.[76] தென் கிழக்கு ஆசியா (குறிப்பாக மலாய் ஆர்ச்சிபேலேகோ)[77] மற்றும் மத்திய ஆசியா (குறிப்பாக உஜ்பெகிஸ்தான்[78] மற்றும் தாஜிகிஸ்தான்)[79] ஆகியவற்றிலும் பாலிவுட் படங்கள் பிரபலமாக உள்ளன.

1940கள் மற்றும் 1950களில் சில ஹிந்தித் திரைப்படங்கள் சீனக் குடியரசு நாட்டிலும் மிகப் பெறும் வெற்றியை ஈட்டின. சீனாவில் மிகப் பிரபலம் அடைந்த படங்கள், டாக்டர் கோட்னிஸ் கி அமர் கஹானி (1946), ஆவாரா (1951), தோ பிகா ஜமீன் (1953) ஆகியவையாகும். சீனாவில் ராஜ் கபூர் பிரபலமான திரை நட்சத்திரமாக இருந்தார். "ஆவார ஹூம்" ("நானொரு நாடோடி) என்ற பாடல் அந்த நாட்டில் மிகவும் பிரபலம் அடைந்தது. அந்தக் கால கட்டத்திற்குப் பிறகு, ஹிந்தித் திரைப்படங்கள் சீனாவில் மதிப்பிழந்து வந்தன. லகான் (2001) திரைப்படம் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பின்னர், பல ஆண்டுகளுக்குப் அந்த நாடு முழுவதும் திரையிடடப்பட்ட படமாகும்.[80] ஹெ பிங்க் என்னும் சீனத் திரைப்படத் தயாரிப்பாளர் லகான் திரைப் படத்தைப் பார்த்து,குறிப்பாக அதன் ஒலித்தடத்தம் கண்டு மிகவும் பிரமித்து விட்டார். இந்தப் படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தனது திரைப்படமான வாரியர்ஸ் ஆஃப் ஹெவன் அண்ட் எர்த் என்னும் படத்திற்காக இசையமைக்க வேண்டி அவரை நியமித்தார்.[81] பல பழைய ஹிந்தித் திரைப்படங்களும், குறிப்பாக மறைந்த குருதத் இயக்கிய படங்கள், ஜப்பான் நாட்டில் மதிப்புடன் ரசிக்கப்படுகின்றன.[82]

ஆபிரிக்கா
சரித்திர ரீதியாக, ஹிந்தித் திரைப்படங்கள் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளுக்கு பெரும்பாலும் லெபனிய தொழிலதிபர்களால் விநியோக்கிப்பட்டன. உதாரணமாக, மதர் இந்தியா (1957), அது வெளியாகிப் பல ஆண்டுகளுக்குப் பிறகும் நைஜீரியாவில் தொடர்ந்து திரையிடப்பட்டு வந்தது. இந்தியத் திரைப்படங்கள் ஹௌசா நாகரிகப் போக்குகளை மாற்றும் அளவிற்கு அங்கு பிரபலமாகியுள்ளன. பாடல்கள் ஹௌசா பாடகர்களால் பிரதி எடுக்கப்பட்டுள்ளன; கதைகள் நைஜீரிய நாவலாசிரியர்களின் கதைகளை பாதிக்கும் அளவு செல்வாக்கு பெற்றுள்ளன. வாடகை ஊர்திகள் மற்றும் பேருந்துகள் ஆகியவற்றை இந்திய திரைப்பட நட்சத்திரங்களின் ஒட்டுப் படங்கள் அலங்கரிக்கின்றன. இந்தியத் திரைப்படங்களின் சுவரோட்டிகள் தையற் கடைகள் மற்றும் வாகனப் பராமரிப்பாளர் கடைகள் ஆகியவற்றின் சுவரை அலங்கரிக்கின்றன. ஐரோப்பாவைப் போல் அல்லது, புலம் பெயர்ந்த இந்தியர்கள் தங்கள் தாய் நாட்டுடன் இணைப்பு வைத்துக் கொள்ள ஏங்குவதன் ஒரு குறியீடாக வட அமெரிக்காவிலும் மற்றும் உலகின் வேறு பல பாகங்களிலும் உள்ளதைப் போல போதுமான அளவு இந்தியப் பார்வையாளர்கள் இல்லாதபோதும், மேற்கு ஆப்பிரிக்காவிலும் இந்தியத் திரைப்படங்கள் அந்நியமான ஒரு கலாசாரத்தைச் சார்ந்திருப்பினும், முற்றிலும் மாறுபாடான ஒரு பகுதியைப் பற்றியதாக இருப்பினும், பெரும் அளவு புரியாத மொழி ஒன்றில் இருப்பினும் மிகுந்த அளவு பிரபலமடைந்துள்ளன. இதற்கான விளக்கங்களில் ஒன்று, இந்த இரண்டு கலாசாரங்களுக்கும் இடையே உள்ள சில ஒத்திசைவுகள். மற்ற ஒற்றுமைகள் தலைப்பாகை அணிவது, சந்தைகளில் விலங்குகள் நடமாடுவது, கூலியாட்கள் பெரும் மூட்டைகளைத் தூக்கிச் செல்வது, கரும்பைக் கடித்துத் தின்பது, பஜாஜ் இரு சக்கர வண்டிகளில் இளைஞர்கள் பயணம் செய்வது, திருமண விழாக்கள் போன்றவையாகும். கட்டுப்பாடான இஸ்லாமிய கலாசாரத்தில், இந்தியப் படங்கள் பெண்களுக்கு "மரியாதை" காட்டுவதாகவும், அதே சமயம் ஹாலிவுட் படங்கள் "வெட்கமற்று" இருப்பதாகவும் கூறப்பட்டன. இந்தியத் திரைப்படங்களில் பெண்கள் அடக்கமாக உடுத்திருக்கிறார்கள், பெண்களும் ஆண்களும் மிக அரிதாகத்தான் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். நிர்வாணக் காட்சிகள் கிடையாது. இவற்றால், ஹாலிவுட் படங்களில் இல்லாத "கலாசாரம்" இந்தியத் திரைப்படங்களில் இருப்பதாக கூறப்படுகிறது. ஹாலிவுட் இங்கு தோல்வியுற்றதன் காரணம், "அவர்கள் மனிதர்களின் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொள்வதில்லை" ஆனால், பாலிவுட் படங்கள், "பொதுவுடமை கருத்தாக்கங்கள் மற்றும் பல்லாண்டு காலம் அடிமைத் தளையில் இருந்த நாடுகளை மீட்டெழுப்பும் யதார்த்தம் ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளன. இந்தியத் திரைப்படங்கள், ஒரு புதிய தலைமுறைக்கான கலாசாரத்தை அவர்கள் சித்தாந்த ரீதியாக "மேற்கத்தியராகி விடாத" வண்ணம் அனுமத்தித்தன.[67]

இஸ்லாமிய நீதிமன்ற கூட்டமைப்பு இரண்டாவது அதிகார பீடமாகி வரும் சோமாலியா மற்றும் சிறு அளவில் சோமாலியாவிற்குப் புலம் பெயர்ந்தவர்கள் குழு ஆகிய இடங்களிலும் பாலிவுட் பிரபலமாகி வருகிறது.[83] இத்திரைப்படங்களில் ஷாட் மற்றும் எதியோப்பியா ஆகியவையும் ஆர்வம் காட்டியுள்ளன.[84]

பல பாலிவுட் நட்சத்திரங்களும் இந்தக் கண்டத்திற்கு படப்பிடிப்பிற்காகவும், படப்பிடிப்பு தவிர இதர திட்டங்களுக்காகவும் குழுமுகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் படமாக்கப்பட்ட பல திரைப்படங்களில் பத்மஸ்ரீ லாலு பிரசாத் யாதவ் (2005) படமும் ஒன்று.[85] தில் ஜோ பி கஹே (2005) ஏறத்தாழ முழுவதுமே மொரிஷியஸ் நாட்டில் படமாக்கப்பட்டது. இது மிக அளவில் இந்தியப் பூர்வ குடியினரைக் கொண்டுள்ளது.

இந்தக் கண்டத்தில் பழைய பாலிவுட்டிற்கு இருந்த அளவு பிரபலமும் செல்வாக்கும் தற்போதைய பாலிவுட்டிற்கு குறைந்து கொண்டு வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன பாலிவுட்டின் மாறி வரும் நாகரிகப் போக்கு இங்கு அது ஏற்கப்படுவதைக் கேள்விக்கிடமாக்கியுள்ளது. புதிய கால கட்டத்திலான திரைப்படங்கள் வெளிப்படையான பாலியல் மற்றும் வன்முறைக் காட்சிகளைக் கொண்டுள்ளன. புதிதாக வரும், மேற்கத்திய பாணி படமாக்கத்தைப் போல் போல் அல்லாது 1950 மற்றும் 1960களிலான பழைய திரைப்படங்கள் கலாசாரம் சார்ந்து இருந்தன என்று நைஜீரியர்கள் கூறுகின்றனர்.[67] பழைய நாட்களில் இந்தியா ஆர்வத்துடன் பறையறிவித்து வந்த, "அடிமைத்தனத்தை ஒழித்தெறிவது... மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இன வேறுபாடுகளின் அடிப்படையில் பாகுபடுத்துவதை ஒழிப்பது போன்றவற்றில் ஒரு சமூக மேம்பாட்டுப் பேராவல்" ஆகியவற்றைப் புதிய நிதர்சனங்கள் அகற்றி விட்டன.[86] ஆப்பிரிக்காவின் சொந்தத் திரைப்படத் தொழிலான நோலிவுட் என்பதன் உருவாக்கமும், பாலிவுட் படங்கள் அங்கே மதிப்பிழந்து கொண்டு வருவதற்கு ஒரு காரணமாகும். அமெரிக்கப் படங்களைப் போல், உலகமயமான திரையுலகுடன் இணைந்து பாலியல்படுத்தப்பட்ட இந்தியத் திரைப்படங்கள், பழைய பாலிவுட்டின் விரும்பத்தக்க மதிப்பீடுகளை விலக்கி விட்டு இந்தியாவின் மென் அதிகாரம் குறைவதற்கு காரணமாகி விட்டன.

ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பா
முந்தைய சோவியத் யூனியன் நாட்டில் பாலிவுட் படங்கள் குறிப்பிடும் அளவில் பிரபலம் பெற்றுள்ளன. பாலிவுட் திரைப்படங்கள் ரஷ்ய மொழியில் மாற்று ஒலிப்பதிவு செய்யப்பட்டு மாஸ்ஃபிலிம் மற்றும் லென்ஃபிலிம் போன்ற பிரதான திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளன.

தமது அரசியல் தூதுப் பணிக் காலத்தில், மூன்று முறை காமன்வெல்த் ஆஃப் இண்டிபெண்டண்ட் நேஷன்ஸ் அமைப்பில் பணியற்றியுள்ள, சுரினேம் நாட்டிற்கான இந்திய அரசுத் தூதுவரான, அஷோக் ஷர்மா கூறினார்:

The popularity of Bollywood in the CIS dates back to the Soviet days when the films from Hollywood and other Western countries were banned in the Soviet Union. As there was no means of other cheap entertainment, the films from Bollywood provided the Soviets a cheap source of entertainment as they were supposed to be non-controversial and non-political. In addition, the Soviet Union was recovering from the onslaught of the Second World War. The films from India, which were also recovering from the disaster of partition and the struggle for freedom from colonial rule, were found to be a good source of providing hope with entertainment to the struggling masses. The aspirations and needs of the people of both countries matched to a great extent. These films were dubbed in Russian and shown in theatres throughout the Soviet Union. The films from Bollywood also strengthened family values, which was a big factor for their popularity with the government authorities in the Soviet Union.[87]

அத்தகைய ஒரு ஈர்ப்பை அளிப்பதற்காகத்தான், ரஷ்யாவில் ராஜ் கபூர் பெற்றிருந்த செல்வாக்கை மிகவும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு ரஷ்ய நடிகையான க்சென்னியா ரையாபிங்கினாவை நடிக்க வைத்து மேரா நாம் ஜோக்கர் திரைப்படம் உருவாக்கப்பட்டது. சமகாலத்தில், Lucky: No Time for Love முழுவதுமாக ரஷ்யாவிலேயே படமாக்கப்பட்டது. சோவியத் திரைப்பட விநியோக முறை சிதைந்ததும், ரஷ்ய திரைப்படச் சந்தை உருவாக்கிய வெற்றிடத்தை ஹாலிவுட் நிரப்பி விட்டது. ஹாலிவுட்டிற்கான சந்தைப் பங்கை இதன் மூலம் இழக்க நேரிட்டதால், பாலிவுட்டிற்கு இது மிகுந்த சிரமம் உண்டாக்கியது. இருப்பினும், ரஷ்யாவின் இளைய தலைமுறையினரிடம் பாலிவுட் திரைப்படங்களுக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்ட ஒரு ஆர்வம் உருவாகியிருப்பதாக ரஷ்ய செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன.[88]

===மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா

வட அமெரிக்கச் சந்தைகளில் பாலிவுட் குறிப்பிடத் தக்க அளவில் வருமான வளர்ச்சியை அனுபவித்திருக்கிறது. சிகாகோ, டொரண்டோ மற்றும் நியூயார்க் சிட்டி போன்ற தென்னாசிய சமூகங்கள் நிறைந்த பகுதிகளில் இது குறிப்பான அளவில் பிரபலம் அடைந்துள்ளது.[34] இந்தியாவின் மிகப் பெரும் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றான யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் பாலிவுட் திரைப்படங்கள் அமெரிக்க நாடுகளில் திரையிடப்படுவதன் மூலமாகவும், மற்றும் திரைப்படத்தின் ஒளிப்பேழை மற்றும் ஒலித்தடங்களின் விற்பனை மூலமாகவும் ஒரு வருடத்தில் $100 மில்லியன் வருமானம் பெறுவதாக 2005 செப்டம்பரில் அறிவித்தது.[34] அதாவது, வேறு எந்த ஆங்கிலம்-பேசப்படாத நாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களையும் விட, இந்தியாவின் திரைப்படங்கள் யுனைடட் ஸ்டேட்ஸில் அதிக அளவு வணிகமாகின்றன.[34] 1990களின் இடைக் காலம் தொடங்கி எண்ணற்ற திரைப்படங்கள் முழுவதுமாகவோ அல்லது அவற்றின் பெரும்பகுதியோ, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், வாங்குவார் மற்றும் டொரன்டோ ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. பாராம்பரிய ஹாலிவுட் எல்லைப் பரப்புகளில் பாலிவுட் அமிழ்கிற செயற்பாடானது, பாலிவுட் கதைக் கருவை ஹாலிவுட்டில் பிரபலப்படுத்திய தி குரு (2002) மற்றும் Marigold: An Adventure in India (2007) போன்ற திரைப்படங்களினால் மேலும் இறுக்கமுற்றுள்ளது.

ஹிந்தித் திரைப்படம் பற்றிய அறிவு, ஐக்கிய இராச்சியத்தில்[89] மேலும் பரவலாக உள்ளது. இங்கே ஹிந்தித் திரைப்படங்கள் அடிக்கடி யூகே முதல் பத்து பட்டியலில் இடம் பிடிக்கின்றன. கபி குஷி கபி கம் (2001) போன்ற பல படங்கள் லண்டன் நகரில் அமைக்கப்பட்டவை. ஜெர்மனி, பிரான்சு மற்றும் ஸ்கான்டினேவியா நாடுகளிலும் பாலிவுட் பாராட்டுப் பெற்று வருகிறது. பல்வேறு பாலிவுட் திரைப்படங்களும் ஜெர்மன் மொழியில் மாற்று ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஆர்டிஎல் II என்னும் ஜெர்மன் தொலைக்காட்சில் நிரந்தர அடிப்படையில் ஒளிபரப்பப்படுகின்றன.[90] மேற்கு ஐரோப்பாவிலும், குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டில், தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே துவங்கி கணிசமான அளவில் ஹிந்தித் திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலம் பேசப்படாத தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலிவுட் திரைப்படங்கள் அவ்வளவாகப் பிரபலமாகாவிட்டாலும், பாலிவுட் கலாசாரமும் நடனங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டு தூம் 2 ரியோ டி ஜெனிரோ மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் பாலிவுட் திரைப்படமானது.[91] இந்த உணர்வுக்கு லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரும் திரையரங்கு வரிசையான மெக்சிகோவின் சினிபோலிஸ் மறுபதிலிறுத்தது. இது பாலிவுட் சந்தைக்காகவே தனது பரப்பெல்லையை ஸ்பானிஷ் மொழி பேசப்படும் பகுதிகளுக்கு வெளியிலும் விரிவுபடுத்திக் கொள்ள யோசித்து வருகிறது.[92]

ஓஷியானா
நியூ கினியா போன்ற ஓஷியானிக் நாடுகள் மற்றும் பசிஃபிக் தீவுகள் ஆகியவற்றில் பாலிவுட் அவ்வளவாக வெற்றியடையவில்லை. இருப்பினும், இது ஃபிஜி போன்று இந்திய சிறுபான்மையினர் மிகுந்துள்ள ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஹாலிவுட்டிற்கு அடுத்த நிலையில் உள்ளது.[93]

மிகப் பெரும் அளவில் புலம் பெயர்ந்த தென்னாசியர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்று ஆஸ்திரேலியா. இந்த நாட்டின் ஆசியரல்லாதவரிடமும் பாலிவுட் பிரபலமாக உள்ளது.[93] 1997 துவங்கி, பல பாலிவுட் திரைப்படங்களுக்கு இந்த நாடு பின்புலமாக இருந்து வந்துள்ளது.[93] ஆஸ்திரேலியாவின் பல்வேறு பட்ட இயற்கை எழில் மிகுந்த பகுதிகளால் இந்தியத் திரைப்பட உருவாக்குனர்கள் ஈர்க்கப்படுகின்றனர். துவக்கத்தில், இத்தகைய இடங்கள் மதிப்பீடுகளுக்கு இடையிலான வேறுபாட்டை வெளிக்கொணரும் வகையில் பாடல்-மற்றும்-நடனக் காட்சிகளுக்கே பயன்படுத்தப்பட்டன.[93] இருப்பினும், தற்போது பாலிவுட் திரைப்படங்களின் கதைக் கருவிலும் ஆஸ்திரேலியப் பகுதிகள் மிகுந்த முக்கியத்துவம் அடைந்து வருகின்றன.[93] ஆஸ்திரேலியாவில் படமாக்கப்படும் ஹிந்தித் திரைப்படங்கள் பொதுவாக ஆஸ்திரேலிய வாழ்க்கை முறையின் அம்சங்களை உட்கொள்வதாக இருக்ககின்றன. யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்த சலாம் நமஸ்தே (2005) முழுவதும் ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம். அந்த நாட்டில் 2005ஆம் ஆண்டின் மிகவும் வெற்றிகரமான பாலிவுட் திரைப்படமாக இது திகழ்ந்தது.[94] இதைத் தொடர்ந்து ஹே பேபி (2007), சக் தே இந்தியா (2007), சிங் ஈஸ் கிங் (2008) ஆகியவையும் வசூலில் வெற்றி பெற்ற படங்களாயின.[93] சலாம் நமஸ்தே யின் வெளியீட்டைத் தொடர்ந்து, அப்போதைய ஆஸ்திரேலியப் பிரதம மந்திரியான ஜான் ஹோவார்ட் தாம் அந்தப் படத்தைப் பார்த்திருந்தமையால், அந்த நாட்டில் மேலும் இந்தியத் திரைப்படங்கள் படமாக்கப்பட்டு , சுற்றுலா ஊக்கம் பெற வேண்டும் என்று கோரினார். ஸ்டீவ் வாக் இந்தியாவுக்கான சுற்றுலாத் தூதராக நியமனமான பிறகு, இந்நாட்டில் பாலிவுட் மற்றும் கிரிக்கெட் ஆகியற்றிற்கு இடையிலான பிணைப்பு மேலும் இறுக்கமுற்றது.[95] மற்ற பாலிவுட் படங்களுடன், சலாம் நமஸ்தே யிலும் இணைக் கதாபாத்திரத்தில் நடித்த ஆஸ்திரேலிய நடிகையான டானியா ஜேயட்டா பாலிவுட்டில் தமது நடிப்புத் தொழிலை மேலும் விரிவு படுத்தும் ஆர்வத்தை வெளியிட்டுள்ளார்.[96]

அறிவுத்திருட்டு
விரைவான கதியில் அமையும் தயாரிப்பு அட்டவணைகள், சிறிய பொருட்செலவில் தயாரிக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஆகியவற்றால், பாலிவுட் எழுத்தாளர்களும் இசையமைப்பாளர்களும் பிற படைப்புக்களிலிருந்து கள்ளத்தனமாக உருவிக் கையாளுவதற்கும் பெயர் பெற்றுள்ளனர். கருத்துக்கள், கதைக் கரு, மெட்டுக்கள் அல்லது சிறு இசைக் குறிப்புகள் ஆகியவை இதர இந்தியத் திரைத் தொழில்கள் அல்லது ஹாலிவுட் உள்ளிட்ட வெளி நாட்டு திரைப்படங்கள் மற்றும் இதர ஆசியத் திரைப்படங்கள் ஆகியவற்றிலிருந்து களவாடிக் கையாளைப்படுகின்றன. இதன் காரணமாக திரைப்படத் தொழிலை எதிர்த்து விமர்சனம் எழுந்துள்ளது.[97]

பழைய காலத்தில் தண்டனை எதுவும் இல்லாது இவ்வாறு செய்ய முடிந்தது. காப்புரிமை அமலாக்கம் என்பது இந்தியாவில் மிகவும் தளர்வாக இருந்தது மற்றும் அதிகாரபூர்வமான ஒப்பந்தம் என்பதை மிகச் சில இயக்குனர்களும் நடிகர்களுமே கண்டிருந்தனர்.[98] ஹிந்தித் திரைப்படத் தொழில் (சோவியத் மாநிலங்களைத் தவிர) ஹிந்தி-அறியாத பார்வையாளர்களிடம் அதிகமாக அறியப்படாமல் இருந்தது. இதன் காரணமாக, அவர்கள் தங்களது படைப்பு திருடப்பட்டுள்ளது என்பதைக் கூட அறியாது இருந்தார்கள். பார்வையாளர்களும் இத்தகைய களவு பற்றி அறியாதவர்களாக இருந்திருக்கக் கூடும். ஏனெனில், இந்தியப் பார்வையாளர்களில் பலர் வெளி நாட்டுத் திரைப்படங்கள் மற்றும் இசை பற்றி பரிச்சயம் அற்றவர்களாகவே இருந்தனர். இந்தியாவில் காப்புரிமை அமலாக்கம் என்பது இன்னும் தளர்வாகவே இருப்பினும், பாலிவுட்டும் இதர திரைத் தொழில்களும் தற்போது ஒன்றை ஒன்று நன்கு அறிந்து கொண்டு விட்டன; மேலும் இந்தியப் பார்வையாளர்கள் தற்போது வெளி நாட்டுத்திரைப்படங்களிலும் இசையிலும் அதிக அளவில் பரிச்சயம் கொண்டுள்ளனர். ஈயு ஃபிலிம் இனிஷியேடிவ் போன்ற நிறுவனங்கள் இந்தியாவிலும் ஈயூவிலும் உள்ள திரைப்பட உருவாக்குனர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் ஆகியோரிடையே பரஸ்பர உறவை விரைவுபடுத்துவதில் முனைந்துள்ளன.[97]

இவ்வாறு களவு செய்து கையாள்வதற்குச் சொல்லப்படும் ஒரு பொதுவான நியாயப்படுத்துதல், பிரபல ஹாலிவுட் திரைப்படங்களை இந்திய சமூகத்திற்கு ஏற்றவாறு தயாரித்து தயாரிப்பாளர்கள் தங்கள் நிலையைக் காத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதாகும்.

திரைக்கதை எழுத்தாளர்கள் பொதுவாக மூலப்படிவத்தையே உருவாக்குகிறார்கள். ஆனால், நிதி சார்ந்த நிச்சயமின்மை மற்றும் ஒரு படம் வெற்றியடைவது தொடர்பான பாதுகாப்பின்மை ஆகியவை காரணமாக இவற்றில் பல நிராகரிக்கப்படுகின்றன.[97] படைப்பாற்றல் இன்மைக்காக திரைக் கதாசிரியர்களும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர். மிகவும் நெருக்கமான படப்பிடிப்பு அட்டவணை மற்றும் மிகக் குறைந்த அளவிலான நிதி வசதி போன்ற சூழ்நிலைகளில், சிறந்த திரைக்கதாசிரியர்களை நியமிக்க இயலாதபோது இவ்வாறு நிகழ்கிறது.[99] உலகமயமாக்கலின் ஊடாக அமெரிக்க மற்றும் மேற்கத்திய கலாசாரங்கள் இந்திய கலாசாரத்தில் தம்மை அழுத்தமாக நிலை நாட்டிக் கொள்ளும் இந்த வேளையில், பாலிவுட் இவ்வாறு களவாடிக் கையாள்வதானது அத்தகைய உலகமயமாக்கலின் மையமான ஒரு பகுதியே என்றும், வேறு பல ஊடகங்களைப் போலவே திரை ஊடகத்திலும் இது நிகழ்கிறது என்றும் சில திரைப்பட உருவாக்குனர்கள் கூறுகின்றனர்.[99] வாட் லைஸ் பினீத் என்ற படத்தின் மறுவாக்கமான ராஸ் , ஜேக்ட் எட்ஜ் என்ற படத்தின் மறுவாக்கமான கசூர் ஆகிய திரைப்படங்களின் இயக்குனரான விக்ரம் பட் வலிமையான அமெரிக்க பாதிப்பைப் பற்றியும், அந்தப் படங்களைப் போன்றே வெற்றிகரமாக பாலிவுட் படங்களைத் தயாரிக்கும் ஆர்வம் பற்றியும் பேசியுள்ளார்: "ஒரு குறிப்பிட்ட வேலைப்பாடு முன்னரே வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அறியும்போது, நிதி சார்ந்த முறையில் நான் பாதுகாப்பு உணர்வு கொண்டிருப்பேன். இந்தியாவில் நகலெடுப்பது என்பது ஒரு கொள்ளை நோய் போல எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. நமது தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் அமெரிக்க நிகழ்ச்சிகளின் தழுவல்கள்தான். நமக்கு அவர்களது திரைப்படங்கள், அவர்களது வாகனங்கள், அவர்களது விமான ஊர்திகள், அவர்களது டயட் கோக்குகள் மற்றும் அவர்களது எண்ணப்போக்கு அனைத்தும் வேண்டும். அமெரிக்க வாழ்வு முறை நமது கலாசாரத்தில் ஊடுருவி வருகிறது."[99] மஹேஷ் பட் கூறுகிறார்:"மூலம் எதுவென்று தெரியாமல் மறைத்து விட்டால், நீதான் அறிவாளி. ஆக்கபூர்வமான கோளத்தில் அசல் என்று எதுவும் இல்லை."[99]

சட்ட பூர்வமான நடவடிக்கைகள் மிகுந்த அளவில் தாமதம் ஆவதாலும், ஒரு வழக்கில் முடிவை அறிவிக்க மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளப்படுவதாலும், திரைப்படக் காப்புரிமை மீறல் தொடர்பாக மிகச் சில வழக்குகளே நீதி மன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.[97] இருப்பினும் குறிப்பிடும்படியான சில சலசலப்புகள் இருந்ததுண்டு. பார்ட்னர் (2007) மற்றும் ஜிந்தா (2005) ஆகிய திரைப்பட உருவாக்குனர்களை, அவற்றின் மூலத் திரைப்படங்களான ஹிச் மற்றும் ஓல்ட்பாய் ஆகியவற்றின் உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் இலக்காக்கினர்.[100][101] அமெரிக்க படப்பிடிப்பு நிறுவனமான ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ், மும்பயில் மூலதளம் கொண்டுள்ள பி.ஆர்.ஃபிலிம்ஸை அதன் வரவிருக்கும் திரைப்படமான பந்தா ஏ பிந்தாஸ் ஹை தொடர்பாக, அது தனது 1992ம் வருடத்து திரைப்படமான மை கசின் வின்னி யின் சட்ட விரோதமான மறுவாக்கம் என்று குற்றம் சாட்டி, நீதி மன்றத்திற்கு கொண்டு வந்தது. இறுதியில் பி.ஆர்.ஃபிலிம்ஸ் நீதி மன்றத்திற்கு வெளியில் அந்தப் படப்பிடிப்பு நிறுவனத்திற்கு சுமார் $200,000 அளித்து தனது படம் வெளியிடப்பட வழி வகுத்துக் கொண்டது.[102] இதற்கு மறுபுறம் சிலர் காப்புரிமை சட்டத்தைக் கடைப்பிடிப்பதும் உண்டு. அண்மையில் ஹாலிவுட்டின் வெட்டிங் க்ராஷர்ஸ் திரைப்படத்தை மறுவாக்கம் செய்வதற்கான அதன் உரிமைகளை ஓரியன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளனர்.[103]

No comments:

Post a Comment