THE POWER OF GOD
மனிதா!!!... மனிதா...!!!!
ஒருநாள் ஒருவன் ஒரு புதிய கட்டிடத்தின் கீழே வேலை செய்து கொண்டிருந்தான். அந்தக் கட்டுமானம் பல மாடிகளை கொண்டது. ஆறாவது மாடியின் உச்சியில் நின்று கொண்டிருந்தவர் ஒரு ஐந்து ரூபாய் நோட்டை கீழே போட்டார். அது வேலையாளின் பக்கத்தில் வந்து விழுந்தது. அந்த நோட்டைப் பார்த்ததும், அவன் அதை வெகு வேகமாக எடுத்து தன் பைக்குள் வைத்துக் கொண்டு மும்முரமாகத் தனது வேலையைத் தொடர்ந்தான்.
மேலே நின்று கொண்டிருந்தவர் அடுத்ததாக ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து கீழே போட்டார். அதே போலவே அவன் அதை எடுத்து வைத்துக் கொண்டு எதுவும் நடக்காதது போல வேலையை கவனித்துக் கொண்டிருந்தான்.
மேலே நின்று கொண்டிருந்தவர் இப்போது ஒரு உடைந்த செங்கல் துண்டை எடுத்து அவன் மேல் படும்படியாக போட்டார். அது நேராக அவன் தலையில் இறங்கியது. மண்டையில் ஒரு சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வழிய, அவன் ஓ என்று கத்திக் கொண்டே மேலே பார்த்து அவரிடம் உரத்த குரலில் "யோவ்! எதுக்குய்யா ஏன் மேலே கல்லைப் போட்டே? ஒரு மனுஷன் கஷ்டப்பட்டு வேலை செய்யறது உன் கண்ணில்படலையா?" என்று சண்டை இட்டான்.
மேலே இருந்தவர் சிரித்தார்: "ஏம்ப்பா! நான் உன் பக்கமா பணம் போட்டபோதல்லாம் ஒரு முறை கூட மேலே நிற்கிற என்னைப் பார்த்து ஒரு தேங்க்ஸ் வேண்டாம், புன்முறுவல் கூட செய்யலே. ஆனா சின்னக் கல்லு மேல பட்டதும், சண்டைக்கு வர ஆரம்பிச்சுட்டயே!" என்றார்.
மேலே இருப்பவர்: கடவுள்.
கீழே இருப்பவன் நம்மைப் போன்ற ஒரு மனிதன்.
கடவுள் நல்லது செய்யும் போதெல்லாம் நாம் அவருக்கு சிறிய நன்றி கூட சொல்வதில்லை. ஆனால் ஒரு சின்னக் கஷ்டம் வரும் போது இறைவனிடம் சண்டை போடுகிறோம். குறை சொல்கிறோம்
No comments:
Post a Comment