Tuesday 8 September 2020

KALKI RAA.KRISHAMURTHY WRITER BORN 1899 SEPTEMBER 9 - 1954 DECEMBER 5




KALKI  RAA.KRISHAMURTHY WRITER 
BORN 1899 SEPTEMBER 9 - 1954 DECEMBER 5




.கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு
கல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1921-ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். 1923-ல் அவர் நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் ஏட்டிக்குப் போட்டி 1927-ல் வெளியானது.

‘கல்கி’யின் படைப்புகள் நாட்டுடைமை ஆகிவிட்டமையால், அவருடைய பல படைப்புகள் இணையத்தில் பல தளங்களில் கிடைக்கின்றன.

தமிழிசை வளர்ச்சிக்கு பங்கு
சமஸ்கிருதமும் தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளும் பிரபலமாக இருந்து வந்த அக்காலகட்டத்தில் தமிழிசைக்காக கல்கி சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து பாடுபட்டார் கல்கி. தமிழ் இசை குறித்த கல்கியின் சிந்தனைகளை "தரம் குறையுமா" எனும் புத்தக வடிவில் வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


“கல்கி” ரா.கிருஷ்ணமூர்த்தி.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சரித்திரப் பாடங்களைப் படிக்க அலுத்துக் கொள்ளும் மாணவர்கள்கூட மிகவும் ஆர்வத்தோடும், கவனத்தோடும் படித்து கடைச்சோழர்களான விஜயாலயனுடைய வம்சத்தைப் பற்றியும், காஞ்சி மாநகரைக் கட்டியாண்ட மகேந்திர பல்லவன், நரசிம்ம பல்லவன், வாதாபியை ஆண்ட புலிகேசி ஆகியோரைப் பற்றியும், உறையூரையாண்ட சோழர்கள் பற்றியும் விரும்பிப் படிக்க வைத்த வரலாற்றுக் கதையாசிரியர் “கல்கி” ரா.கிருஷ்ணமூர்த்தியாவார். அதுமட்டுமா? இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது நடைபெற்ற மதக் கலவரங்களின் தீவிரத்தை நாம் பிறர் சொல்லக் கேட்டிருக்கலாமே தவிர பார்த்ததில்லை அல்லவா? “அலை ஓசை” எனும் நாவலைப் படித்தால் நாம் அதை அப்படியே உணரலாம். அமரர் கல்கியின் “பொன்னியின் செல்வன்”, “சிவகாமியின் சபதம்”, “பார்த்திபன் கனவு”, “அலை ஓசை”, இன்ன பிற நூல்கள் ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய சாகா வரம் பெற்ற அமர காவியங்களாகும். இவற்றையெல்லாம் படைத்த இந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், ஒரு விடுதலைப் போராட்ட வீரரும்கூட. இவரது அந்த முகத்தைச் சற்று இங்கே பார்க்கலாம்.

தஞ்சாவூர் மாவட்டம் மாயவரத்தை அடுத்த புத்தமங்கலம் எனும் கிராமத்தில் 1899இல் பிறந்தார் கிருஷ்ணமூர்த்தி. மாயூரம் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பிறகு திருச்சி தேசியக் கல்லூரியில் படிக்கச் சென்றார். 1920இல் நடந்த நாகபுரி காங்கிரஸ் தீர்மானத்தின்படி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது. மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும், கிருஷ்ணமூர்த்தியும் கல்லூரியை விட்டு வெளியேறினார். இவருக்கு மகாத்மா காந்தி, ராஜாஜி, டாக்டர் ராஜன் ஆகியோர் ஆதர்ச தலைவர்களாக விளங்கினர். 1922இல் முதன்முதல் ராஜத்துவேஷப் பேச்சுக்காக கைது செய்யப்பட்டார். வயதில் குறைந்தவர் என்பதற்காக இவரை எச்சரித்து விட்டுவிட நினைத்த நீதிபதியிடமே, இவர் தான் தெரிந்தே ராஜ துவேஷப் பேச்சு பேசுவதாக இவர் தெரிவித்ததும், ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.

திருச்சியில் அப்போது தமிழ்நாடு காங்கிரசின் தலைமையகம் இருந்தது, விடுதலையானதும் கிருஷ்ணமூர்த்தி அங்கு வேலையில் சேர்ந்தார். 1921இல் மகாத்மா காந்தி தமிழகம் வந்தபோது இவர் டாக்டர் ராஜனுடன் சேர்ந்து வரவேற்பு, கூட்டம் ஆகிய ஏற்பாடுகளில் ஈடுபட்டு, மகாத்மாவால் ‘அச்சா தேஷ் சேவக்” என்று பாராட்டப் பெற்றார். கரூரில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை அவர்கள் தலைமையில் கூட்டத்தில் பேசிய பேச்சிற்காக கைது செய்யப்பட்டார். திருச்சி சிறையில் இருந்தபோது மதுரையைச் சேர்ந்த இளைஞர் சதாசிவம் என்பவரின் நட்பு கிடைத்தது. இந்த நட்பு வாழ்நாளெல்லாம் தொடர்ந்தது. “கல்கி” பத்திரிகை தோன்றவும் காரணமாக இருந்தது. இவரது முதல் நாவல் வ.ரா. ஆசிரியராக இருந்த நடத்திய “சுதந்திரன்” எனும் பத்திரிகையில் வெளிவந்தது.

பள்ளிக்கூடத்தில் படித்த நாட்களிலேயே ராஜாஜியைப் பற்றி தெரிந்து கொண்டு அவரிடம் பக்தி கொண்டார். திருச்சி காங்கிரஸ் அலுவலக வேலையைத் தொடர்ந்து, இவர் சிலகாலம் ஈரோடு கதர் அலுவலகத்தில் வேலை செய்தார். டாக்டர் ராஜனின் வேண்டுகோளின்படி இவர் திரு வி.க.வைச் சந்தித்தார். அவர் நடத்தி வந்த “நவசக்தி” இதழில் வேலை செய்தார். மகாத்மா காந்தி “யங் இந்தியா”வில் எழுதி வந்த சுயசரிதையை இவர் மொழிபெயர்த்து “நவசக்தி”யில் வெளியிட்டார். இவர் ராஜாஜியின் திருச்செங்கோடு ஆசிரமத்தில் இருந்து அங்கிருந்து வெளியான “விமோசனம்” எனும் மதுவிலக்குப் பிரச்சார இதழிலும் எழுதி வந்தார். 1930இல் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் இவரது ஆரோக்கியம் கருதியும், ஏற்கனவே ஓராண்டு சிறையில் தவமிருந்ததாலும் ராஜாஜி இவரைத் தன் படையில் சேர்ந்துக் கொள்ளவில்லை. உப்பு சத்தியாக்கிரகத்தில் இவர் கலந்து கொண்டு சிறை செல்லவில்லையாயினும், இவரது எழுத்துக்கள் ஆயிரமாயிரம் தொண்டர்களை உசுப்பி இந்தப் போரில் கலந்து கொள்ளத் தூண்டுதலாயிருந்தது என்பது உண்மை. இவர் எழுதி வெளியிட்ட துண்டு பிரசுரங்களுக்காக இவருக்கு மறுபடியும் ஒரு ஆறுமாத சிறை தண்டனை கிடைத்தது.

விடுதலையான பிறகு “ஆனந்த விகடனில்” தொடர்ந்து எழுதிவரலானார். அதில் இவர் எழுதிய “தியாக பூமி” நாவல் தமிழ்நாட்டை மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் எல்லா இடங்களிலும் ஓர் புதிய எழுச்சியையும், தேச பக்தியையும் தூண்டியது. அந்த காலகட்டத்தில் அந்த நாவலில் வந்த ‘சரோஜா’ எனும் குழந்தையின் பெயரைப் பலர் தங்கள் குழந்தைகளுக்கும் வைத்தனர் என்பது ஒரு சுவையான செய்தி. “ஆனந்த விகடனில்” ஒன்பது ஆண்டுகள் வேலை பார்த்த பின் “கல்கி” எனும் பெயரில், இவரும் சதாசிவமும் இணைந்து ஒரு புதிய பத்திரிகையை வெளியிட்டனர். அதில் வெளியான இவரது வரலாற்றுப் புதினங்கள், கட்டுரைகள், இசை விமரிசனங்கள், தலையங்கங்கள் ஆகியவை வரலாற்றுப் புகழ் மிக்கன. அவையெல்லாம் மீண்டும் நூல் வடிவம் பெற்று இப்போது விற்பனையாகின்றன. இப்போதும்கூட அவை படிப்பதர்கு சுவையும், சூடும் நிறைந்திருப்பதைக் காண முடியும்.

மகாகவி பாரதியாரின் பால் மிகவும் ஈடுபாடு கொண்டு, அவர் நினைவாக எட்டயபுரத்தில் ஓர் மணிமண்டபம் கட்டுவதர்கு முன்முயற்சி எடுத்து, கட்டி முடித்து அதனை கவர்னர் ஜெனரல் ராஜாஜியினால் திறந்து வைத்த சேவையைத் தமிழகம் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றும். இவருக்கு நாட்டு நன்மை என்பதுதான் தாரக மந்திரம் இதை அவர் பாணியில் கூறுவதென்றால், அவருக்கு இருந்த மூன்று நோக்கங்கள் முதலாவது தேச நன்மை, இரண்டாவது தேச நன்மை, மூன்றாவது தேச நன்மை.

இந்த வரலாற்று ஆசிரியர், சுவாரசியமான எழுத்தாளர், இசை ரசிகர், பாரதி அன்பர், தேச பக்தர், தமிழ் நாவல்களைப் படிக்கத் தூண்டிய அபூர்வமான கதாசிரியர் 1954ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 5ஆம் நாள் தனது 55ஆம் வயதில் காலமானார். தமிழ் நாட்டில் ஓர் சகாப்தம் நிறைவடைந்தது. வாழ்க கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி புகழ்!

.சரித்திர நாவல்கள் மற்றும் சமூக நாவல்கள் என்று இரண்டு துறையிலும் இயங்கிய அவரின் நூல்கள் இன்றைக்கும் பெருமளவில் வாசிக்கப்படுகின்றன.

புத்தமங்கலத்தில் பிறந்த அவர் எஸ் எஸ் எல் சி படிக்கும் பொழுது காந்தியின் அழைப்பை ஏற்று ஒத்துழையாமை போரில் பங்குபெற தன்னுடைய படிப்பை துறந்து சிறை சென்றார்.

கல்கி முதலில் திரு விகவின் நவசக்தி இதழில் பணிபுரிந்தார். பின் ராஜாஜி அவர்களின் விமோசனம் பத்திரிக்கையை எடிட் செய்யும் பணியில் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் இருந்து ஈடுபட்டார். பின்னர் ஆனந்த விகடன் இதழில் இணைந்தார்.

அவரின் மனைவி கல்யாணி மற்றும் தன் பெயரை இணைத்து விஷ்ணுவின் அவதாரமான கல்கி என்பதை தன் புனைப்பெயராக சூடினார் அவர். கல்கியின் கையெழுத்து ஒரு காலத்துக்கு பிறகு எக்கச்சக்கமாக எழுதி எழுதி புரியாமல் போகிற நிலைக்கு போனது. அதனால் நகைச்சுவையாக ,”என் கையெழுத்து போகப்போக கம்போசிடருக்கும்,கடவுளுக்கும் மட்டும் புரியும் படி ஆகி விட்டது !” என்பார்

எக்கச்சக்க முடிச்சுகள்,ஆழ்வார்க்கடியான்,நந்தினி,சேந்தன் அமுதன் என்று கற்பனை கதாபாத்திரங்கள் இவற்றையெல்லாம் சேர்த்து அவர் தீட்டிய பொன்னியின் செல்வன் நாவல் இன்றைக்கும் புகழ் பெற்றதாக திகழ்கிறது. சமீபத்தில் நாடகமாக ஆக்கப்பட்ட பொழுது அதை பல்லாயிரம் ரசிகர்கள் கண்டு களித்தார்கள்.

சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு ஆகிய இரண்டு நாவல்களும் டி.கே.சி அவர்களுடன் மாமல்லபுரம் போன பொழுது மன ஓட்டத்தில் எழுந்த தாக்கத்தில் கல்கி வரைந்தார். உண்மையில் சிவகாமியின் சபதம் வானொலிக்கு நாடகமாக எழுதப்பட்டு பின்னர் நாவலானது. பார்த்திபன் கனவில் வரும் சோழ நாட்டு வீரர்களை இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை மனதில் கொண்டே கல்கி தீட்டினார். அவரின் பார்த்திபன் கனவே வரலாற்று நாவல்களில் அவர் எடுத்த முதல் படி.
பாரதிக்கு மணிமண்டபம் எழுப்ப அவர் எடுத்த முயற்சிகள் இன்றும் மறக்க முடியாதவை.

சமூக நாவல்களிலும் தனி முத்திரை பதித்தவர் அவர். அவரின் தியாக பூமி கதை திரைப்படமாக வந்த பொழுது எக்கச்சக்க எதிர்ப்பை சந்தித்தது. படத்தில் இடம் பெற்றிருந்த தேச பக்திப் பாடல்கள், சுதந்திரப் போராட்ட காட்சிகள் காரணமாக, இந்தப் படத்துக்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது. தடை உத்தரவு வரப்போகிறது என்பது முந்தின நாள் தெரிந்து விட்டதால், படத்தை விடிய விடிய மக்களுக்கு இலவசமாகக் காண்பிக்க, டைரக்டர் சுப்பிரமணியமும், எஸ்.எஸ்.வாசனும் ஏற்பாடு செய்தனர். தியேட்டர் முழுவதும் கூட்டம் நிறைந்து வழிய, படம் இடைவிடாமல் காட்டப்பட்டது.

கல்கி கர்நாடகம் என்கிற பெயரில் எழுதிய இசை விமர்சனங்கள் புகழ்பெற்றவை. கல்கி ஆனந்த விகடன் இதழை விட்டு விலகி விடுதலைப்போரில் ஈடுபட்டு சிறை சென்றார். பின் கல்கி பத்திரிக்கையை துவங்க முடிவு செய்த பொழுது சதாசிவம் அவர்களின் மனைவி எம்.எஸ். அவர்கள் நடித்ததே மீரா திரைப்படம். அப்படத்தில் கல்கி எழுதிய பாடல் தான் காற்றினிலே வரும் கீதம் . கல்கி இதழில் அவர் தீட்டிய சரித்திர நாவல்கள் கல்கி இதழின் விற்பனையை இந்தியாவிலேயே சாதனை அளவாக எழுபதாயிரம் பிரதிகள் வரை அன்றைக்கு கொண்டு சேர்த்தது.

மது விலக்கு,சாதி ஒழிப்பு,காந்திய கொள்கைகள் என்று தன்னுடைய நாவலில் பிரசாரத்தை சேர்த்தே செய்த அவரை இன்றைக்கு இலக்கியவாதியே இல்லை என்று சொல்வோரும் உண்டு. ஆனாலும்,தமிழ் நாட்டில் எல்லாரின் வாசிப்பு பட்டியலில் பொன்னியின் செல்வன் கண்டிப்பாக இல்லாமல் போகவே போகாது. எழுதப்பட்டு அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்னமும் அதன் வசீகரம் அப்படியே இருப்பதே கல்கியின் வெற்றி தான். இன்னமும் அதை படமாக்கும் முயற்சியும் சாத்தியமாகவில்லை என்பதே அவரின் கதை சொல்லும் பாணிக்கு சான்று. கல்கி இறந்த பின் அவரின் அலையோசை நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

- பூ.கொ.சரவணன்

கல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புட்டமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.


கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி.

35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.

எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார்.

தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். இவரது பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சோலைமலை இளவரசி போன்ற புதினங்கள் வாசகர்களின் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளது.

இவரது புதினங்களில் அன்றைய காலத்திய வாழ்க்கைமுறைகள், அரசியல் போன்றவற்றை மிகத்தெளிவாகக் காண இயலும்.


குடும்ப வாழ்க்கை:
இவரது தந்தை பெயர் ராமசாமி அய்யர் தாயார் தையல்நாயகி. மனைவி பெயர் ருக்மணி.


கல்வி:
ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.


பொது வாழ்க்கை:
1921-ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். சிறையில் இருந்தபோது "விமலா" என்ற தமது முதல் நாவலை எழுதினார். இந்த நாவல் பிறகு "வ.ரா" நடத்திய "சுதந்திரன்" பத்திரிகையில் வெளியாகியது

1923-ல் அவர் நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

சமஸ்கிருதமும் தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளும் பிரபலமாக இருந்து வந்த அக்காலக்கட்டத்தில் தமிழிசைக்காக கல்கி சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து பாடுபட்டார்

கல்கி. தமிழ் இசை குறித்த கல்கியின் சிந்தனைகளை "தரம் குறையுமா" எனும் புத்தக வடிவில் வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


முக்கிய நிகழ்வுகள்:
1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார்.



1941 இல் கல்கி என்ற வார இதழை ஆரம்பித்தார்.

இவருக்குப் பின்னர் டி. சதாசிவம், கல்கியின் புதல்வர் கி. ராஜேந்திரன் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.

தற்போது ஆசிரியராக இருப்பவர் கி.ரா. வின் மகளும், கல்கியின் பேத்தியுமான சீதா ரவி ஆவார்.

இவரது தியாகபூமி புதினம் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
Last edited: Sep 7, 2015
selvipandiyan
selvipandiyan
Silver Ruler's of Penmai
Registered User
Blogger
JoinedNov 2, 2011
Messages39,320
LocationChennai
Sep 9, 2015
#4
புகழ்பெற்ற எழுத்தாளரும், தமிழில் சரித்திரக் கதைகளின் முன்னோடியுமான ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி (Kalki R.Krishnamurthy) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த புத்தமங்கலத்தில் (1899) பிறந்தார். அங்கு ஆரம்பக் கல்வி பயின்ற பிறகு, திருச்சி இ.ஆர். உயர்நிலைப் பள்ளியிலும், தேசியக் கல்லூரியிலும் படிப்பைத் தொடர்ந்தார்.
# காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட இவர், படிப்பை விட்டுவிட்டு கரூரில் நாமக்கல் கவிஞர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசி கைதானார். சிறையில் இவர் எழுதிய ‘விமலா’ என்ற முதல் நாவல், ‘சுதந்தரன்’ பத்திரிகையில் வெளியானது.
# விடுதலையான பிறகு, திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வேலை செய்தார். இவர் எழுதிய பிரச்சார துண்டுப் பிரசுரங்களைப் பார்த்த காங்கிரஸ் தலைவர் டிஎஸ்எஸ் ராஜன், ‘நீ எழுத்துலகில் சாதிக்கவேண்டியவன்’ என்றார். அவரது ஆலோசனைப்படி ‘நவசக்தி’ பத்திரிகையில் சேர்ந்தார்.
# புதிதாக தொடங்கப்பட்ட ‘ஆனந்தவிகடன்’ இதழுக்கு ‘ஏட்டிக்குப் போட்டி’ என்ற நகைச்சுவைக் கட்டுரையை அனுப்பினார். பொறுப்பாசிரியர் எஸ்.எஸ்.வாசனுக்கு அது பிடித்ததால், விகடனில் தொடர்ந்து எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ‘கல்கி’ என்ற புனைப்பெயரில் எழுதினார். தமிழ்த்தேனீ, அகஸ்தியன், லாங்கூலன், ராது, தமிழ்மகன், விவசாயி என்ற பெயர்களிலும் எழுதிவந்தார்.
# ராஜாஜியின் ‘விமோசனம்’ பத்திரிகையின் துணை ஆசிரியரானார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்றார். விடுதலையானதும், ஆனந்த விகடன் பொறுப்பாசிரியரானார். இவரது முதல் தொடர்கதையான ‘கள்வனின் காதலி’, திரைப்படத்துக்காகவே இவர் எழுதிய ‘தியாகபூமி’ நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றன.
# நண்பர் டி.சதாசிவத்துடன் சேர்ந்து சொந்தமாக பத்திரிகை தொடங்க விரும்பினார். சதாசிவத்தின் மனைவி எம்.எஸ்.சுப்புலட்சுமி வழங்கிய நிதியுடன் ‘கல்கி’ பத்திரிகை தொடங்கப்பட்டது. இவரது படைப்பாற்றலால் பத்திரிகை விரைவிலேயே அபார வெற்றி பெற்றது.
# ‘மீரா’ திரைப்படத்துக்கு கதை, வசனத்துடன், ‘காற்றினிலே வரும் கீதம்’ உள்ளிட்ட பாடல்களையும் எழுதினார். தமிழ் இசைக்காக சதாசிவம் - எம்.எஸ். தம்பதியுடன் இணைந்து பாடுபட்டார்.
# 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவரது ‘பார்த்திபன் கனவு’, தமிழின் முதல் சரித்திர நாவல். அடுத்து வந்த வரலாற்றுப் புதினமான ‘சிவகாமியின் சபதம்’, சமூகப் புதினமான ‘அலைஓசை’ ஆகியவையும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
# 1952-ல் எழுதத் தொடங்கி 3 ஆண்டுகள் தொடராக வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ நாவல், கல்கியின் பெயருக்கு வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றுத் தந்தது. அது இன்றுவரை பலமுறை மறுபதிப்பு செய்யப்படுகிறது. ‘கல்கி’ இதழில் மீண்டும் மீண்டும் தொடராக வெளிவருகிறது.
# முன்னோடி பத்திரிகையாளர், புனைகதை எழுத்தாளர், கலை விமர்சகர், கட்டுரையாளர், பாடல் ஆசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்ட கல்கி 55-வது வயதில் (1954) மறைந்தார். இவரது படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment