Posts

Showing posts with the label 1954

ANITHA RATNAM ,DANCER BORN 1954 MAY 21

Image
  ANITHA RATNAM ,DANCER  BORN 1954 MAY 21 அனிதா ரத்னம் (பிறப்பு: மே 21,  1954)  தமிழகத்தைச்  சேர்ந்த  இந்தியப்  பாரம்பரிய நடனக் கலைஞர், நடன ஆசிரியர். பரத நாட்டியத்தில் முதன்மை பயிற்சி பெற்ற இவர்,  கதகளி ,  மோகினியாட்டம் ,  களரிப்பயிற்று  எனும் நடன மற்றும் போர்க் கலைகளிலும் முறையான பயிற்சி பெற்றுள்ளார். இக்கலைகள் ஒருங்கிணைந்த ஒரு தனிப்பட்ட நடன பாணியை உருவாக்கி,  நியோ பாரத் நாட்டியம்  எனப் பெயரிட்டுள்ளார்.  [1] [2] [3] . இவர் 40 ஆண்டுகளாக 15 நாடுகளில் தனது நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.  கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்  (2000),  பாய்ஸ்  (2003) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரின் பணி நடனம், நாடகம், பேசும் சொல், சடங்கு, தொல்லியல், நாடகவியல் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் போன்ற பல பிரிவுகளை எடுத்தாழ்கிறது. 1992 இல் சென்னையில் அமைக்கப்பட்ட "அரங்கம்" என்ற அறக்கட்டளையின் நிறுவனரும் மற்றும் இயக்குனரும் ஆவார். இவர் 1993 ஆம் ஆண்டில் "அரங்கம் நடன அரங்கம்" செயல்திறன் நிறுவனத்தையும் நிறுவின...

KAVIMANI DESIYA VINAYAGAM PILLAI , POET BORN 1876 JULY 27 -1954 SEPTEMBER 26

Image
  KAVIMANI DESIYA VINAYAGAM PILLAI , POET  BORN 1876 JULY 27 -1954 SEPTEMBER 26 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை  (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954)  20ம் நூற்றாண்டில்   குமரி மாவட்டத்திலுள்ள   தேரூரில்  வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற  கவிஞர் . பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர். வாழ்க்கைக் குறிப்பு [ தொகு ] சிவதாணுப்பிள்ளை -ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் மகவுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம். ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை  1901  இல் மணம் முடித்தார்.  நாஞ்சில...

ANURADHA PAUDWAL ,PLAY BACK SINGER BORN 1954 OCTOBER 27

Image
  ANURADHA PAUDWAL ,PLAY BACK SINGER  BORN 1954 OCTOBER 27 .அனுராதா பாட்வால்; (Anuradha Paudwal, 27 அக்டோபர், 1954) இந்தியப் பின்னணிப் பாடகியாக பாலிவுட் திரையுலகில் பணிசெய்பவர் ஆவார்.[2][3] இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதினை 2017 ஆம் ஆண்டு பெற்றவர்.[4][5] தேசியத் திரைப்பட விருதினையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் பெறுள்ளார்.[6][7] குடும்பம் அனுராதா, கர்நாடக மாநிலத்தில் (முந்தைய பாம்பே மாகாணம்),உத்திர கன்னடாவில், கார்வார் என்ற இடத்தில், அக்டோபர் 27, 1954 இல் பிறந்தார். கொங்கணிக் குடும்பத்தைச் சேந்த இவர் மும்பையில் வளர்ந்தார்.[8] சிறு வயது முதலே லதா மங்கேஷ்கரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு பள்ளியில் படிக்கும் காலத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய மீரா பஜனைகள் பாடிப் பரிசு பெற்றார்.[8] அருண் பாட்வால் என்ற இசையமைப்பாளரைக் காதலித்து மணந்துகொண்ட இவருக்கு ஆதித்யா பாட்வால் என்ற மகனும், கவிதா பாட்வால் என்ற மகளும் உள்ளனர். கவிதா பாட்வாலும் ஒரு பாடகியாவார்.[9][10] விருதுகளும் அங்கீகாரமும் மார்ச் 30, 2017 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, புதுடில்லி, கு...

TRANSISTER RADIO INTRODUCED 1954 OCTOBER 18,IN TEXAS

Image
  TRANSISTER RADIO INTRODUCED  1954 OCTOBER 18,IN TEXAS டிரான்சிஸ்டர் வானொலி ( transistor radio ) என்பது சிறிய  திரிதடையம் - கொண்டு உருவாக்கப்பட்ட  வானொலிக் கருவி  ஆகும். இது பொதுவாக, 540–1600 கிலோசைக்கில்  ஏ.எம்  அலைவீச்சில் அலைகளைப் பெறவல்லதாகும்  [1] . வரலாறு [ தொகு ] ஐக்கிய அமெரிக்காவின்   டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்  என்ற நிறுவனம்  1952  ஆம் ஆண்டளவில் அனைத்து  திரிதடையங்களால்  ஆன ஏ.எம். வானொலியை பரிசோதித்துக் காட்டியது. ஆனாலும், இது வால்வ்-வானொலிகளை விட திறன் குறைந்தவையாகக் காணப்பட்டன. முழுமையான டிரான்சிஸ்டர் வானொலியை  ஜெர்மனியின்  இண்டெர்மெட்டால் என்ற நிறுவனம் ஆகஸ்ட்  1953  இல் பரிசோதித்துக் காட்டியது. ஆனாலும் இது வர்த்தக ரீதியில் வெளியிடப்படவில்லை. மே  1954  ஆம் ஆண்டில் டெக்சாஸ் நிறுவனம்  1954  ஆம் ஆண்டு  அக்டோபர் 18  ஆம் நாள், "ரீஜென்சி TR-1" என்ற டிரான்சிஸ்டர் வானொலியைத் தாம் தயாரித்திருப்பதாக அறிவித்து, அதனை அதே ஆண்டு நவம்பரில் விற்பனைக்கு விட்டது. இதற்கா...

KALKI RAA.KRISHAMURTHY WRITER BORN 1899 SEPTEMBER 9 - 1954 DECEMBER 5

Image
KALKI  RAA.KRISHAMURTHY WRITER  BORN 1899 SEPTEMBER 9 - 1954 DECEMBER 5 .கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. வாழ்க்கைக் குறிப்பு கல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1921-ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்...