Sunday 18 October 2020

TRANSISTER RADIO INTRODUCED 1954 OCTOBER 18,IN TEXAS

 

TRANSISTER RADIO INTRODUCED

 1954 OCTOBER 18,IN TEXAS



டிரான்சிஸ்டர் வானொலி (transistor radio) என்பது சிறிய திரிதடையம்- கொண்டு உருவாக்கப்பட்ட வானொலிக் கருவி ஆகும். இது பொதுவாக, 540–1600 கிலோசைக்கில் ஏ.எம் அலைவீச்சில் அலைகளைப் பெறவல்லதாகும் [1].

வரலாறு[தொகு]

ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் என்ற நிறுவனம் 1952 ஆம் ஆண்டளவில் அனைத்து திரிதடையங்களால் ஆன ஏ.எம். வானொலியை பரிசோதித்துக் காட்டியது. ஆனாலும், இது வால்வ்-வானொலிகளை விட திறன் குறைந்தவையாகக் காணப்பட்டன. முழுமையான டிரான்சிஸ்டர் வானொலியை ஜெர்மனியின் இண்டெர்மெட்டால் என்ற நிறுவனம் ஆகஸ்ட் 1953 இல் பரிசோதித்துக் காட்டியது. ஆனாலும் இது வர்த்தக ரீதியில் வெளியிடப்படவில்லை.

மே 1954 ஆம் ஆண்டில் டெக்சாஸ் நிறுவனம் 1954 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் நாள், "ரீஜென்சி TR-1" என்ற டிரான்சிஸ்டர் வானொலியைத் தாம் தயாரித்திருப்பதாக அறிவித்து, அதனை அதே ஆண்டு நவம்பரில் விற்பனைக்கு விட்டது. இதற்கான காப்புரிமத்தை அந்நிறுவனத்தில் பணி புரிந்த ஹைன்ஸ் டி கொஸ்டர் என்ற டச்சு இயற்பியலாளர் பெற்றார். இதன் விலை $49.95 ஆகும். கிட்டத்தட்ட 150,000 வானொலிகள் விற்பனை செய்யப்பட்டன. அதன் பின்னர் ரேத்தோன், செனித் டிரான்சிஸ்டர் வானொலிக் கருவிகள் விற்பனைக்கு வந்தன. சொனி நிறுவனம் ஆகஸ்ட் 1955 இல் தனது வானொலிகளைத் தயாரிக்க ஆரம்பித்தது. 1957 இல் ஜாப்பானிய வானொலிகள் அமெரிக்காவுக்கு விற்பனைக்கு வந்தன. டிரான்சிஸ்டர் வானொலிகள் 1960களின் ஆரம்பம் வரையில் அவ்வளவு பெயர் பெற்றிருக்கவில்லை. சில வானொலிகளின் விலைகள் $20 வரை குறைந்தன. 1960களின் பிற்பகுதியில் ஹொங்கொங் போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்ட வானொலிகள் $10 இற்கும் குறைவாக விற்பனைக்கு வந்தன.

No comments:

Post a Comment