RAMARAJAN ,ACTOR BORN 1960 OCTOBER 18
.ராமராஜன் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர், அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். இவர் 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[1]திரைப்படத் துறை பங்களிப்புகள்
எண்பதுகளின் இறுதியில் உச்சத்தில் இருந்தவர். முதலில் உதவி இயக்குனராகவும் மற்றும் இயக்குனராகவும் இருந்து பிறகு முழுநேர நடிகரானார். இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரையில் ஒரு திரையரங்கில் ஒரு வருடம் ஓடி சாதனைப் படைத்தது.
கங்கை அமரன், ரங்கராஜன் ஆகியோர் இவரது இயக்குனர்களாக இருந்தனர்.
இவர் நடித்த புகழ்பெற்ற ஏனைய திரைப்படங்கள் - எங்க ஊரு பாட்டுக்காரன், தங்கமான ராசா, ஊருவிட்டு ஊருவந்து, வில்லுபாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, ரயிலுக்கு நேரமாச்சு போன்ற பல திரைப்படங்கள் ஆகும்.
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் திரைப்பட நடிகை நளினியை 1987ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருண், அருணா என இரண்டு பிள்ளைகள் உள்ளன. பின்பு 2000 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்துப் பெற்றுக்கொண்டனர்.
அரசியல் வாழ்க்கை
திசம்பர் 12, 2010 அன்று அதிமுக பரப்புரைக்காகத் திருநெல்வேலி செல்லும் போது மதுரை அருகே நல்லம்ம நாயக்கன் பட்டியில் சாலை ஓரப் பேருந்து நிறுத்தத்தில் மோதி இவர் சென்ற மகிழுந்து விபத்துக்குள்ளானதில் இவருக்குத் தலையிலும் காலிலும் கடுமையான காயம் ஏற்பட்டது. மகிழுந்து ஓட்டுநர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்தார்.[3][4]
இந்தியாவில் தற்போது குரானா வைரஸ் மிக அதிக அளவு பரவி வருகிறது. நாளுக்கு நாள் எண்ணிக்கையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்திருக்கும் நிலையில் அதில் நான்கு மில்லியன் பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். பலி எண்ணிக்கையும் 83 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. சினிமா துறையினர் பலரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். பிரபல பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனை கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வருகிறார், தற்போது தான் அவருடன் நிலை படிப்படியாக சீராகி வருகிறது.
.
இந்நிலையில் தற்போது பிரபல நடிகரான ராமராஜன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு ஒரு டெஸ்ட் எடுக்கப்பட்டது. ராமராஜன் வீட்டிற்கு ஏசி மெக்கானிக் ஒருவர் சமீபத்தில் வந்து ஏசியை சரி செய்திருக்கிறார். இந்நிலையில் தற்போது ராமராஜன் மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதனால் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். தன் உடல்நிலை முழுமையாக சீராகும் வரை மருத்துவமனையிலேயே அட்மிட் ஆகி இருக்க ராமராஜன் முடிவெடுத்திருக்கிறார். கொரோனா டெஸ்ட் தற்போது எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன் முடிவு நாளை தான் வரும் என்று தெரிகிறது. டெஸ்ட் ரிசல்ட் வந்த பிறகு தான் ராமராஜனுக்கு அடுத்து வழங்கப்பட வேண்டிய சிகிச்சை பற்றி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.எழுபதுகளில் தமிழ் சினிமாவில் அறிமுகமான ராமராஜன் தன்னுடைய திரைப்பட கெரியரை இயக்குனர் ஆகத்தான் துவங்கினார். மண்ணுக்கேத்த பொண்ணு, மருதாணி உள்ளிட்ட பல படங்களை அவர் இயக்கி இருக்கிறார். அதன் பிறகு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ராமராஜன். அதன் பிறகு அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகி இருக்கின்றன. இவர் கடைசியாக 2012ல் வெளிவந்த மேதை என்ற படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமின்றி அரசியலிலும் அவர் கவனம் செலுத்தி வந்தார்.
மேலும் அவர் விரைவில் மீண்டும் இயக்குனராக களம் இறங்க இருக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இந்த படத்தில் விஜய்சேதுபதி தான் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.
ராமராஜன் சிறந்த நடிகரா இல்லையா என்பது வேறு விஷயம்.
அவருக்கு டான்ஸ் ஆட வருமா, வராதா என்பதும் வேறு விஷயம்... ஆனால் அவரது படங்கள், குறிப்பாக இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து கொடுத்த அத்தனை படங்களுமே மக்களின் மனதை மயக்கிப் போட்ட மாயாஜாலப் படங்கள் என்பது மட்டும் உண்மை.
மன பாரமா.. மனக் கஷ்டமா.. சந்தோஷமாக கிராமத்து நினைவுகளில் மூழ்க வேண்டுமா.. எடுத்துப் போட்டு ஒரே ஒரு ராமராஜன் பாட்டைக் கேட்டுப் பாருங்கள்.. முடிஞ்சா கரகாட்டக்காரன் படத்தைப் பாருங்கள்.. அத்தனையும் நொடிப் பொழுதில் பறந்து போவதை உணர்வீர்கள்.
சரி வாங்க ராமராஜனைப் பத்தி ஒரு ரவுண்டு பார்த்துவிட்டு வருவோம்...
மக்கள் நாயகனான மதுரைக்கார ராசா...
ஆரம்பத்தில், யாருமே பெரிதாக அறிந்திராத இயக்குநராக வலம் வந்தவர்தான் ராமராஜன்.
ஆனால் மக்கள் நாயகன் என்ற இமேஜ் அவர் மீது குறுகிய காலத்திற்குள் வந்து சேர்ந்தது பெரிய சாதனைதான்.
முன்னணி நடிகர்களைப் பின்னுக்குத் தள்ளி...
நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்ததும் அந்தக் காலத்தில் மிகப் பெரிய சாதனைதான்.
கோடி வாங்கிய முதல் நடிகர்
தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகப் பெரிய சாதனை இதுதான்.
ஒரு நடிகர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது ராமராஜன் காலத்தில்தான் முதல் முறையாக நடந்தது.
அந்த சாதனைக்குரியவர் ராமராஜன்தான்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட அப்போது அந்த அளவுக்கு சம்பளம் வாங்கவில்லை என்று அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.
கிராமப்புற வசூல் ராஜா
ராமராஜன் படங்கள் அன்று மிகப் பெரிய ஹிட் படங்களாகவே அமைந்தன.
குறிப்பாக கிராமப்புறங்களில் ராமராஜன் படங்கள்தான் சூப்பர் ஹிட்டாக ஓடி வசூலில் சாதனை படைத்தன.
இந்த சாதனையை வேறு எந்த நடிகரும் நிகழ்த்தினரா என்பது தெரியவில்லை - எம்.ஜி.ஆரை இந்த லிஸ்ட்டில் சேர்க்க முடியாது.. காரணம், அவர் தனி சகாப்தம்.
பாட்டும் - பட்டையைக் கிளப்பிய சட்டையும்
ராமராஜன் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது இளையாராஜவும், ராமராஜன் போட்ட கலர் கலரான சட்டைகளும்தான்.
பாட்டுக்காகவே ஓடிய படங்கள் அவருடையது... அதேபோல அவர் போட்ட பச்சை, மஞ்சள், சிவப்பு, கருப்பு, நீலம் என விதம் விதமான கலர் சட்டைகளும் அப்போது டிரெண்ட் செட்டாக அமைந்தன.
'காடி' காஸ்ட்யூமாக இருந்தாலும் கலெக்ஷன் சூப்பரப்பு...
ராமராஜன் படங்களில் அவர் போட்ட டிரஸ்கள் படு காமெடியாக தெரிந்தாலும், ஓவர் மேக்கப் வெகுவாக நக்கல் செய்யப்பட்டாலும் கிராமப்புற மக்களை மட்டுமல்லாமல் நகர்ப்புறத்து மக்களிடமும் கிராமப்புறத்தின் தாக்கத்தை கொண்டு வந்து சேர்த்தது நிச்சயம் சாதனையான விஷயம்தான்.
கெட்ட வாடையே இல்லாத படம்
அதை விட ராமராஜன் படங்களின் ஸ்பெஷாலிட்டி என்று சொல்ல வேண்டுமானால், கெட்ட பழக்கங்களை, கெட்ட நடத்தைகளைக் கற்றுக் கொடுக்கும் படங்களாக இல்லாமல், நல்ல விஷயங்களைச் சொல்லும் பாடமாக அமைந்திருக்கின்றன என்பதுதான்.
உண்மையிலேயே இது பாராட்ட வேண்டிய விஷயம்.. இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று ராமராஜனை தாராளமாக சொல்லலாம்.
கரகாட்ட ராஜா...
டான்ஸே ஆடத் தெரியாதவர் ராமராஜன் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் ஒரு கால் தேர்நத கரகாட்டக்கார நிபுணராக நடித்த படம்தான் கரகாட்டக்காரன்.
அந்தப் படம் தமிழ் சினிமாவின் வரலாற்றில் இடம் பெற்ற படம்.
படத்தின் வசனம், கேரக்டர்களின் அணிவகுப்பு, கதை சொன்ன விதம், அருமையான நடிப்பு .. முத்தாய்ப்பாக ராஜா இசை.
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சிரிப்புக் களஞ்சியம் இது.. தில்லானா மோகனாம்பாள் போல.
கிராமங்களுக்கு கெளரவம் கொடுத்தவர்
எல்லாவற்றையும் விட ராமராஜனை நாம் பாராட்டியே ஆக வேண்டிய விஷயம் என்ன தெரியுமா.. கிராமங்களுக்கும், அந்த கிராமத்து மக்களின் வெள்ளந்தி வாழ்க்கைக்கும், அதன் பசுமையான சூழலுக்கும் கொடுத்த கெளரவம்தான்.
ராமராஜன் நடித்துக் கொண்டிருந்த காலம் வரை கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் பல படங்கள் கிராமங்களைத்தான் சுற்றிச் சுற்றி வந்தன.
கிராமத்து வாழ்க்கையை மிக அழகாக வெளிக்காட்டிய பல படங்களை நம் மக்கள் அந்தக் காலகட்டத்தில் காண முடிந்தது.
கை கொடுக்காத அரசியல்
ராமராஜனுக்கு சினிமா எந்த அளவுக்கு தூக்கி விட்டதோ அதை விடவேகமாக இறக்கி விட்டது இந்த அரசியல்தான்.
புகழேணியின் உச்சியில் இருந்த அவர் அதிமுகவுக்குப் போனார்.
போன வேகத்தில் எம்.பியானார். அது அவரது வாழ்க்கையில் நிச்சயம் சாதனைதான். ஆனால் அதே வேகத்தி்ல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் மாஜி எம்.பியானார்.
சினிமாவில் அவரது காலம் எப்படி குறுகியதாக இருந்ததோ, அதேபோல அரசியல் வாழ்க்கையும் குறுகியதாகப் போனது.
நிச்சயம் மறக்க முடியாது
ராமராஜனின் திரையுலக வாழ்க்கையும், அரசியல் வாழ்க்கையும் மிகக் குறுகியதாக இருந்தாலும் கூட எங்க ஊரு பாட்டுக்காரன்... கிராமத்து மின்னல்... செண்பகமே செண்பகமே... எங்க ஊரு காவக்காரன்... ராசாவே உன்னை நம்பி... பொங்கி வரும் காவேரி... கரகாட்டக்காரன்.. வில்லுப்பாட்டுக்காரன்... ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்.. இதுபோன்ற படங்களை நினைக்கும்போது கண்டிப்பாக ராமராஜனும் ஒரு சாதனையாளர்தான் என்று எண்ணவே தோன்றுகிறது.
நேரம் அக்டோபர் 08, 2018
அந்த வீடியோ காட்சியில் இயேசுவின் சமாதானம் என்ற நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, என்னடா கரக்காட்டக்காரன்ல மாங்குயிலே பூங்குயிலேன்னு பாடிக்கிட்டு இருந்தவன், கோயம்பத்தூரில் வந்து இயேசுன்னு பேசுறான்னு நினைப்பீங்க. வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை சொல்வது பெரிய பாக்கியம். எனக்கு சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர். அங்கே பிறந்து வளர்ந்து திரையரங்கில் வேலை பார்த்து மெட்ராஸ் வந்து எல்லோருக்கும் தெரியும் விதமாக நடிகராக ஆனேன். அரசியலில் ஈடுபட்டு எம்பி ஆகி நல்லா வந்துகிட்டு இருந்த நேரத்தில் சோதனை வந்தது. எல்லோருக்கும் சோதனை வரும். அப்படித்தான். 2010ல் ஒரு இடத்திற்கு காரில் போய்க்கொண்டிருந்தபோது மிகப்பெரிய கார் விபத்து. அந்த விபத்தில் எனது நண்பர் ஸ்பாட்டிலேயே இறந்துவிட்டார். என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கிட்டதட்ட 15 நாள் சுயநினைவு இல்லாமல் இருந்தேன். இவர் பிழைப்பாரா பேசுவாரா, பழைய நினைவு வருமா என்று என்று எல்லோரும் பேசியது எனக்கு பிறகுதான் தெரியும்
அப்போது எனது நண்பர் பால் தங்கராஜ் இயேசுவை வழிபடக்கூடியவர். அவர் என்னை ஆஸ்பத்திரியில் பார்த்துக்கொண்டார். நான் என்னவே புலம்பிக்கொண்டிருந்தேன். அப்ப அவர் சொன்னார், தைரியமாக இருங்க. உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. நான் ஒரு பாஸ்டரை கூட்டிட்டு வரேன்னு சொல்லி, அப்புறம் ஒரு பாஸ்டர் என் தலையில் கை வைத்து ஜபம் பண்ணும்போது எனக்கு இயேசுவே என் தலையில் கையை வைத்து பார்த்த மாதிரி தோன்றியது. இன்றைக்கு நான் நல்லா இருக்கேன். எல்லா இடத்திற்கும் போறேன் என்றால் அது இயேசுவின் கருணைதான். மனசார நினைத்து இயேசுவே என்று சொன்னால் குணமாகும் என்பதை நன்றாக புரிந்து கொண்டேன். எந்த பிரச்சனையானாலும் நம்முடன் இருப்பவர் கர்த்தர் என்றார்.
நடிகர் ராமராஜன் கிருத்துவ மதத்திற்கு மாறிவிட்டார் என்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது ஒரு வீடியோ. அந்த வீடியோ கிட்டதட்ட 10 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதில் ராமராஜன் என்பதற்கு பதில் நாமராஜன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment