Monday 26 October 2020

INDIA TO CEYLON TRAIN BOAT MAIL BEGINS RUN 1876 OCTOBER 26

 


INDIA TO CEYLON TRAIN BOAT MAIL

BEGINS RUN 1876 OCTOBER 26


.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான முடிவு பிரித்தானிய அரசரால் எடுக்கப்பட்டது.1876 OCTOBER 26



இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஆங்கிலேயர் காலத்தில் ரயில் போக்குவரத்து இருந்தது. இப்பயணத்தில் சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை, "போட் மெயில்' என்று மக்களால் அழைக்கப்பட்ட இந்தியா - இலங்கை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது.


இந்த ரயிலில் சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை பயணம் செய்து, அங்கிருந்து கப்பலில் இலங்கை தலைமன்னார் செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்த ரயில் மூலம் இலங்கை தலைநகர் கொழும்பு செல்லலாம். இப்பயணத்தில் ஒரே டிக்கெட்டில் ரயில் மற்றும் கப்பலில் பயணம் செய்யும் வசதி இருந்தது.




சென்னையிலிருந்து தனுஷ்கோடியில் கப்பல் நிறுத்தும் இடம் வரை இந்த ரயில் சென்றதால் இதை, "போட் மெயில்' என்று மக்கள் கூறுவர். 1920ம் ஆண்டு துவங்கிய இந்த, "போட் மெயில்' 44 ஆண்டுகள் இயக்கப்பட்டது.




1964ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி அடித்த புயலில் தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. கடல் கொந்தளிப்பில் ரயில் நிலையமும் கடலில் மூழ்கி சிதைந்தது. கப்பல் தளமும் அழிந்துவிட்டது. இத்துடன் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment