Sunday 18 October 2020

JERUSALEM -GRAVEYARD OF JESUS WAS DEMOLISHED CALIPHA AL -HAKKEEM 1099 OCTOBER 18

 


JERUSALEM -GRAVEYARD OF JESUS

 WAS DEMOLISHED  CALIPHA 

AL -HAKKEEM 1099 OCTOBER 18



.திருக்கல்லறைத் தேவாலயம் அல்லது திருக்கல்லறை பேராலயம் அல்லது கிழக்குச் சபையினால் உயிர்ப்புத் தேவாலயம் என்று அழைக்கப்படும் இது, மதிலாலான பழைய நகரின் கிறிஸ்தவப் பகுதியினுள் உள்ள ஓர் தேவாலயமாகும்.


இப்பகுதி கொல்கொத்தா (கல்வாரி மலை) மதிப்புக்குரியதாகியது.[1] ஏனென்றால் இங்கேதான் இயேசு சிலுவையிலறையப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[2] பல கிறிஸ்தவர்களுக்கு, குறிப்பாக நான்காம் நூற்றாண்டிலிருந்து யாத்திரிகர்களுக்கு, இயேசு இந்த இடத்தில் உயிர்த்தெழுந்த காரணத்தினால் இத்தேவாலயம் மிக முதன்மையான இடமாகும். இன்றும் இது எருசலேமின் கிரேக்க சபை தலைமைக்குருவின் தலைமைப்பீடமும், சில கிறிஸ்தவ சபைகளுக்கிடையே பங்கிடப்பட்ட கட்டடங்கள் பொறுப்பிலுள்ளது. நூற்றாண்டுகளாக மாற்றமடையாத சிக்கலான ஏற்பாடுகளும் காணப்படுகின்றது. இன்று கிழக்கு சபை, கீழ்த்திசை சபை, உரோமன் கத்தோலிக்கம் என்பனவற்றின்


வீடாகவுள்ளது. அங்கிலிக்கன், ஒருமைக்கோட்பாட்டுச் சபை, புரட்டஸ்தாந்து சபை என்பனவற்றிற்கு இத்தேவாலயத்தில் நிரந்தர பிரசன்னம் இல்லை.[3] இவர்கள் எருசலேமிலுள்ள தோட்டக் கல்லறையினை உண்மையான இயேசுவின் சிலுவை மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் மதிற்பிக்குரிய இடமாக பேணுகின்றார்கள்.


வரலாறு

கட்டுமானம்


இந்த ஆலயம் தற்போது அமைந்துள்ள இடம் இரண்டாம் நூற்றாண்டில் அப்ரடைட்டின் கோவிலாகக் காணப்பட்டது. சில புராதன எழுத்தாளர்கள் வீனஸ் கோவிலாக இருந்தது என்கின்றனர். எசேபியஸ் கொன்ஸ்டான்டைனின் வாழ்வு எனும் தன் நூலில் இந்த இடம் கிறிஸ்தவர்களின் மதிப்புக்குரிய இடமாகவே இருந்தது,[4], ஆனால் காட்ரியன் கிறிஸ்தவம் மீது கொண்ட வெறுப்பினால், இதன் மீது தன் சொந்த கோவிலைக் கட்டி, வேண்டுமென்றே மறைத்தான் என்கிறார்.[5] எசேபியஸ் இதுபற்றி அதிகம் கூறாதபோதும், அப்ரடைட்டின் கோவில் காட்ரியனின் எருசலேம் மீள் கட்டமைப்பின் பகுதியாகவே கட்டப்பட்டிருக்க வாய்ப்பிருக்கின்றது. கி.பி. 70 யூதப் புரட்சி மற்றும் கோக்பா புரட்சிகளின் (கி.பி 132-135) பின் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து, 135 இல் ஆலியா கபிடோனியா அபிவிருத்தியின் பகுதியாக இது இடம்


இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கும் பெயர் ஜெரூசலேம். மூன்று மதங்களின் புனிதத் தலமாக விளங்கும் இந்த நகரம், மிக மோசமான மோதல்களை சந்தித்திருப்பது மட்டுமன்றி, உலகின் மிகுந் சர்ச்சைக்குரிய பிராந்தியமாக பார்க்கப்படுவது ஏன் என்று நோக்கும்போது, பல சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

உலகின் புராதன நகரங்களில் ஒன்றான ஜெரூசலேம், இஸ்லாம், கிறித்துவம் மற்றும் யூத மதத்தினரின் புனித தலமாக கருதப்படுகிறது


ஜெரூசலேத்தில் திங்கள்கிழமையன்று தனது புதிய தூதரகத்தை அமெரிக்கா திறந்துள்ளது. தூதரக திறப்பு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்கவில்லை என்றாலும், அவரது மகள் இவாங்கா டிரம்ப், தனது கணவர் ஜாரெட் குஷ்னெர் மற்றும் மூத்த அமெரிக்க அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இஸ்ரேல் நாடு உருவாகிய 70ஆம் ஆண்டு நிறைவு நாளன்று புதிய தூதரகத்தைத் திறக்கும் விதமாக அமெரிக்கா தூதரக திறப்பு விழா தேதியை அமைத்துள்ளது.


இந்த நிலையில், ஜெரூசலேம் ஏன் உலகிலேயே சர்ச்சை மிகுந்த பகுதியாகப் பார்க்கப்படுகிறது என்று விரிவாகப் பார்க்கலாம்.


ஒன்றுபட்ட ஜெரூசலேம் தனது தலைநகர் என்று இஸ்ரேல் கூறுகிறது. அரபு-இஸ்ரேல் போரில் 1967இல் கிழக்கு ஜெரூசலேமை தனது கட்டுப்பாட்டிற்கு இஸ்ரேல் கொண்டு வந்தது. எதிர்காலத்தில் உருவாக்கப்படும் தன்னுரிமைகொண்ட பாலத்தீன நாட்டின் தலைநகராக ஜெரூசலேம் இருக்கும் என்பது பாலத்தீனர்களின் வாதம்.இஸ்ரேலியர்களுக்கும், பாலத்தீனர்களுக்கும் புனித நகராக திகழும் ஜெரூசலேம் நகர் மட்டும் மிகவும் புராதனமானது அல்ல அதைப் பற்றிய சர்ச்சைகளும் பழமையானவையே.இஸ்லாம், கிறித்துவம், யூதம் ஆகிய மூன்று மதங்களுக்கும் புனித்ததலம் ஜெரூசலேம்.இதனாலேயே பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள், யூதர்கள் மற்றும் கிறித்துவர்கள் ஜெரூசலேமிற்கு உரிமை கொண்டாடுகின்றனர்.


5,000 ஆண்டு வரலாற்றைக் கொண்ட ஜெரூசலேம் பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகி, முற்றுகையிடப்பட்டுள்ளது. தரைமட்டமாக்கப்பட்டு மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது. எனவேதான் இந்த நகரின் மண்ணில் சரித்திரத்தின் சுவடுகள் பொதிந்துள்ளதாக கருதப்படுகிறது. உலகின் பழம்பெரும் நகரங்களில் ஒன்றாக ஜெரூசலேம் கருதப்படுகிறது.நான்கு பாகங்கள் எவை?

பல்வேறு மதங்களின் மக்களிடையே ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் மோதல் காரணமாக இன்று ஜெரூசலேம் உலக மக்களின் கவனத்தை பெற்றிருக்கலாம். ஆனால் இந்த நகரத்தின் வரலாறோ மக்களை ஒன்றிணைப்பது.


நகரின் மையப் பகுதியில் பழைய ஜெரூசலேம் என்று அழைக்கப்படும் புராதன நகரம் அமைந்திருக்கிறது. இது, உலகப் பாரம்பரியச் சொத்தாக (World Heritage) வகைப்படுத்தப்பட்டுள்ளது. அர்மீனியக் குடியிருப்பு, கிறித்தவக் குடியிருப்பு, யூத குடியிருப்பு, முஸ்லிம் குடியிருப்பு என நான்கு குடியிருப்புகளை உள்ளடக்கியது பழைய ஜெரூசலேம்.உலகின் மிக புனிதமாக கருதப்படும் இந்த நகரின் நான்கு குடியிருப்புகளும் கோட்டை போன்ற பாதுகாப்பு சுவரால் வலுப்படுத்த ப்பட்டுள்ளது.இரண்டு பகுதிகள் கிறித்துவர்களுக்கு சொந்தமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் அர்மீனியர்களும் கிறித்துவர்களே. நான்கு பகுதிகளிலும் மிகவும் பழமையானது அர்மீனியக் குடியிருப்பு பகுதிதான்.மேலும், உலகின் மிகப் பழமையான அர்மீனிய மையம் இங்கிருக்கும் அவர்களது குடியிருப்பு பகுதியே. செயிண்ட் ஜேம்ஸ் தேவாலயம் மற்றும் மடாலயத்தில், ஆர்மீனியர்கள் தங்கள் வரலாறு மற்றும் கலாசாரத்தை பாதுகாத்து வருகின்றனர்.


முதல் தேவாலயத்தின் கதை

கிறித்துவர்களின் பகுதியில் திருக்கல்லறை தேவாலயம் (The Church of the Holy Seppelker) அமைந்துள்ளது. இது இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை மையமாக கொண்டதாக நம்பப்படுவதால், உலகெங்கிலும் உள்ள கிறித்தவர்களின் நம்பிக்கைக்கு உரிய இடமாக இருக்கிறது.


பைபிளின் புதிய ஏற்பாட்டின்படி, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது, இறந்தது, உயிருண்டு எழுந்தது அனைத்துமே ஜெரூசலேமில்தான்.


கிறித்துவ மரபுகளின்படி, இந்த இடம் கல்வாரி மலை என்று கூறப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்ட கல்லறை இங்குதான் இருக்கிறது. அவர் கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்ததும் இங்கிருந்துதான் என்று நம்பப்படுகிறது.


கிறித்துவ சமூகத்தினர், குறிப்பாக கிரேக்க பழமைவாத பேட்ரியார்ச்செட், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பிரான்சிஸ்கன் ஃபிரையர்ஸ், ஆர்மீனிய பேட்ரியார்ச்சார்ட் போன்றவற்றை தவிர, எத்தியோப்பியன், காப்டிக் மற்றும் சிரியாவின் பழமைவாத தேவாலயங்கள் அதோடு தொடர்புடைய போதகர்கள் என இந்த தேவாலயம் கிறிஸ்தவ சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளால் நிர்வகிக்கப்படுகிறது


உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான கிறித்துவர்களின் புனித மையம் இது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கிறிஸ்துவின் கல்லறைக்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர். இங்கு வந்து பிரார்த்திப்பதும், பாவமன்னிப்பு பெறுவதும் கிறித்துவர்களுக்கு மனநிறைவு தருவதாக கருதப்படுகிறது.


மசூதியின் கதை என்ன?



ஜெருசலேம்

பட மூலாதாரம்,BBC WORLD SERVICE

ஜெரூசலேமின் நான்கு குடியிருப்புகளில் மிகப்பெரிய குடியிருப்பு பகுதி இஸ்லாமியர்களுடையதுதான். பாறைக் குவிமாடம் மற்றும் அல் அக்ஸா மசூதி இங்கு அமைந்துள்ளது.


ஹரம் அல் ஷரீஃப் (புனித இடம்) என்று அழைக்கப்படும் இடமும் ஜெரூசலேமில் அமைந்துள்ளது.


இஸ்லாமியர்களின் மிகவும் புனிதமான இடங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பெற்றிருக்கும் அல்-அக்ஸா மசூதி வக்ஃப் என்ற இஸ்லாமிய அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது.


நபிகள் நாயகம் மெக்காவில் இருந்து ஒரே இரவு பயணத்தில் இங்கு வந்ததாகவும், அவர் இங்கிருந்து தீர்க்கதரிசிகளின் ஆவிகளுடன் பேசியதாகவும் முஸ்லிம் மக்கள் நம்புகின்றனர்.


இதன் அருகிலேயே பாறைக் குவிமாடம் அமைந்துள்ளது. முகமது நபி ஜெரூசலேமிலிருந்து விண்ணகப் பயணம் சென்றதாக இஸ்லாமியர்கள் நம்புகின்றனர்.


ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் நாள்தோறும் இந்த புனித இடத்திற்கு வந்து தொழுகை நடத்துகின்றனர். ரம்ஜான் மாதத்தின் வெள்ளிக்கிழமை நாட்களில், இங்கு தொழுகை நடத்துபவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கும்.


ஜெருசலேம்

புனிதச்சுவர்

யூதர்களின் பகுதியில்தான், கோட்டை அல்லது மேற்கு சுவர் அமைந்துள்ளது. அல் அக்ஸா மசூதியின் சுற்றுமதிலின் ஒருபகுதியாக அமைந்திருக்கும் மேற்கு சுவர், சிதைந்துபோன நீண்ட சுவரின் எஞ்சியிருக்கும் பகுதியாகும். இந்த இடத்தில் யூதர்களின் புனித கோயில் இருந்ததாக நம்பப்படுகிறது.


இந்த புனித தலத்திற்குள் பரிசுத்தமான புனிதப் பகுதி (The Holy of the Holy) அல்லது யூதர்களின் மிகவும் புனிதமான இடம் அமைந்திருந்தது.


ஜெரூசலேம்: உலகின் சர்ச்சை மிக்க பிராந்தியமாக இருப்பது ஏன்?

பின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்களின் திகில் நினைவுகள்!

ஒசாமாவுடன் ஹிலரி கிளின்டன் புகைப்படம் எடுத்துக்கொண்டாரா ?

''ஒசாமா பின்லேடனை மூன்றுமுறை துப்பாக்கியால் சுட்டேன்''

ஜெரூசலேம்: உலகின் சர்ச்சை மிக்க பிராந்தியமாக இருப்பது ஏன்?

உலகமே இந்த இடத்தில் இருந்துதான் உருவானது என்றும், நபி இப்ராஹீம் தனது மகன் இஷாக்கை தியாகம் செய்யத் தயாராக இருந்த இடம் என்றும் யூதர்கள் நம்புகின்றனர். பரிசுத்தமான புனிதப் பகுதி (The Holy of the Holy) என்பதே பாறைக் குவிமாடம் (Dome of the Rock) என்று யூதர்கள் நம்புகின்றனர்.


தற்போது மேற்கு சுவரின் அருகில் உள்ள பரிசுத்தமான புனிதப் பகுதியில் (The Holy of the Holy) யூதர்கள் வழிபாடு செய்கின்றனர். தங்கள் பாரம்பரியத்துடன் தொடர்புடையதாக கருதும் யூதர்கள் இங்கு ஆண்டுதோறும் வருகின்றனர் .


ஜெருசலேம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பதற்றத்துக்கு காரணம் என்ன?

ஜெரூசலேமின் நிலைமையில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் வன்முறை மோதல்கள் வெடிக்கின்றன


புராதன நகரமான ஜெரூசலேம் தொடர்பாக பாலத்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே சர்ச்சைகள் தொடர்கதையாக நீள்கின்றன.


ஜெரூசலேமின் நிலைமையில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் வன்முறை மோதல்கள் வெடிக்கின்றன. இதனால் இங்கு நடைபெறும் சிறிய அசைவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிரது.


யூதர்களின் குடியிருப்பில் இருந்து கிழக்குபுறமாக எடுக்கப்பட்ட புகைப்படம்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,

யூதர்களின் குடியிருப்பில் இருந்து கிழக்குபுறமாக எடுக்கப்பட்ட புகைப்படம்


இந்த புராதான நகரம், யூதர்கள், கிறித்துவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு மதரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதோடு, அரசாங்க ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.


1948இல் இஸ்ரேல் நிறுவப்பட்டதும், அந்நாட்டு நாடாளுமன்றம் நகரின் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டது.


1967ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இஸ்ரேல் கிழக்கு ஜெரூசலேமை கைப்பற்றியது. புராதான நகரம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும், அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை.


ஜெரூசலேமின் மீதான இஸ்ரேலின் முழு இறையாண்மையும் ஒருபோதும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதால், இஸ்ரேலிய தலைவர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.


ஜெரூசலேமின் மக்கள்தொகை


பாலத்தீனர்கள் கிழக்கு ஜெரூசலேமை தங்கள் தலைநகர் என்று உரிமை கோருகின்றனர்.


இஸ்ரேல்-பாலத்தீன சர்ச்சையில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


ट्रंप

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜெரூசலேம் இரு நாடுகளின் தீர்வு என்றும் அறியப்படுகிறது. 1967-க்கு முன்னர் இஸ்ரேல் எல்லைப் பகுதியில் சுதந்திர பாலத்தீன நாட்டை உருவாக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது, அது ஐ.நா. தீர்மானத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஜெரூசலேம் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் பாலத்தீன வழித்தோன்றல்கள். இவர்கள் பல நூற்றாண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகின்றனர்.


நகரத்தின் கிழக்கில் அமைந்துள்ள யூத குடியேற்றப் பகுதி விரிவாக்கப்படுவதும் சர்ச்சைக்கு முக்கிய காரணம். இங்கு விரிவாக்கம் செய்வதும், கட்டுமானங்கள் கட்டப்படுவதும் சர்வதேச சட்டத்திற்கு விரோதமானவை. ஆனால் இஸ்ரேல் அதை மறுக்கின்றது.


ஜெரூசலேமின் நிலைமையில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் சமாதான பேச்சுவார்த்தைகள் மூலமாகவே வரக்கூடும் என்று சர்வதேச சமூகம் பல தசாப்தங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.


ஜெரூசலேம்: உலகின் சர்ச்சை மிக்க பிராந்தியமாக இருப்பது ஏன்?

பாலியல் தொழிலில் இருந்து மீண்டு இல்லத்தரசியான ஒரு பெண்ணின் நிஜக்கதை

இந்தியாவில் பாலியல் வல்லுறவு குறைவதற்கான அறிகுறி இல்லாதது ஏன்?

உங்கள் குழந்தையிடம் பாலியல் வல்லுறவு பற்றி எப்படி பேசுவீர்கள்?

ஜெரூசலேம்: உலகின் சர்ச்சை மிக்க பிராந்தியமாக இருப்பது ஏன்?

அதனால்தான் இஸ்ரேலுடன் தூதரக உறவு கொண்ட நாடுகளின் தூதரகங்கள் டெல் அவிவ் நகரில் அமைக்கப்பட்டுள்ளன, ஜெரூசலேமில் துணைத் தூதரகங்கள் மட்டுமே உள்ளன.


ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையில் சமாதானத்திற்கான இறுதி உடன்படிக்கையாக, அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலேமுக்கு மாற்றியிருப்பதாக கூறுகிறார்.இரு நாடுகள் என்ற கருத்தை நிராகரிக்கும் டிரம்ப், இரு தரப்பினரும் ஒத்துப் போகும் ஒரே நாட்டை விரும்புவதாக கூறுகிறார்.


முதலடி எடுத்த அமெரிக்கா


ஜெரூசலேத்தில் நடந்த அமெரிக்க தூதரக தொடக்க விழாவில், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் டேவிட் ப்ரீட்மன் அமெரிக்க தூதரகம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக முறைப்படி அறிவித்தார்.''இன்று இஸ்ரேலில், ஜெரூசலேம் நகரில் அமெரிக்க தூதரகத்தை நாங்கள் தொடங்கி வைத்துள்ளோம். முதல் நாடாக தங்கள் தூதரகத்தை திறந்து வைத்ததன் மூலம், மீண்டும் உலகுக்கு வழிகாட்டும் விதமாக அமெரிக்கா செயல்பட்டுள்ளது'' என்று டேவிட் ப்ரீட்மன் கூறினார்.


ஜெரூசலேத்தில் நடந்த தொடக்க விழாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செல்லவில்லை. ஆனால், அவர் இந்நிகழ்வு தொடர்பாக பேசிய காணொளி ஒன்று தொடக்க விழாவின்போது ஒரு பெரிய திரையில் திரையிடப்பட்டது.''சரியாக 70 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலை உலகில் முதன்முதலில் அங்கீகரித்தது அதிபர் ஹாரி ட்ரூமேன் தலைமையிலான அமெரிக்க அரசுதான். இன்று நாம் ஜெரூசலேம் நகரில் அமெரிக்க தூதரகத்தை திறந்துள்ளோம். இது ஒரு நீண்டகால காத்திருப்பு'' என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.''இறையாண்மை கொண்ட மற்ற எந்த நாட்டையும் போல தனது தலைநகர் எதுவென்பதை தீர்மானிக்க இறையாண்மை மிக்க நாடான இஸ்ரேலுக்கும் அதிகாரமுள்ளது'' என்று டிரம்ப் தனது காணொளியில் குறிப்பிட்டார்.


ஜெருசலேம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

''ஆனாலும், இந்த உண்மையை நாம் பல ஆண்டுகளாக ஏற்றுக்கொள்ள தவறிவிட்டோம். மிக சாதாரண உண்மை என்னவென்றால் இஸ்ரேலின் தலைநகரம் ஜெரூசலேம்தான்'' என்று டிரம்ப் குறிப்பிட்டார்.


இதற்கிடையே, காஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது 55 பாலத்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இஸ்ரேல்-காஸா எல்லையில் கொல்லப்பட்ட பாலத்தீனர்களின் மரணத்துக்கு துக்கம் செலுத்தும் விதமாக செவ்வாய்க்கிழமை பொது வேலைநிறுத்ததிற்கு பாலத்தீன விடுதலை இயக்கம் (பிஎல்ஓ) அழைப்பு விடுத்துள்ளது.


ஜெரூசலேத்தில் அமெரிக்க தூதரகம் தொடங்கப்பட்டதற்கும், காஸா எல்லையில் எதிர்ப்பு தெரிவித்த பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதற்கும் எகிப்து, பாலத்தீனம் மற்றும் லெபனான் போன்ற நாடுகள் கண்டனத்தையும், தங்கள் கவலைகளையும் பகிர்ந்துள்ளனர்.


காஸா எல்லையில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக வரும் செய்திகள் பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பின் (ஐ.நா.) பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார்.


.இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்கு பிறகு, அவரது கொலைக்கு பயன்படுத்தப்பட்ட திருச்சிலுவையை நிலத்தடி குகை ஒன்றில் எறிந்து விட்டனர். இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை, அவர் உயிர்த்து எழுந்த பிறகு கிறிஸ்தவர்களின் புனித இடமாக மாறியது. கிறிஸ்தவர்களை அடக்கி ஒடுக்கிய ரோம பேரரசு, கி.பி.125ஆம் ஆண்டளவில் இயேசுவின் கல்லறை இருந்த இடத்தின் மீது வீனஸ் தேவதைக்கு கோயில் கட்டியது. கிறிஸ்தவர்களுக்கு சமய சுதந்திரம் வழங்கிய ரோம பேரரசர் கொன்ஸ்தாந்தீனின் தாய் ஹெலெனா, கி.பி.326ல் இயேசுவின் கல்லறை மற்றும் அவர் அறையப்பட்ட திருச்சிலுவையைக் கண்டுபிடித்தார்.


இயேசு கிறிஸ்து அறையப்பட்ட திருச்சிலுவையுடன் மேலும் இரு சிலுவைகளும் கிடைத்தன. இதனால், சரியான சிலுவையைக் கண்டறிய எருசலேம் ஆயர் மக்காரியுசுக்கு ஒரு யோசனை வந்தது. அதன்படி, நீண்ட நாட்களாக தீராத நோயால் துன்புற்ற ஒரு பெண்மணியை அந்த சிலுவைகளைத் தொடுமாறு அவர் கூறினார். ஒரு சிலுவையைத் தொட்டதும் அந்த பெண்மணி முழுமையாக நலமடைந்தார். உடனே, அதுதான் இயேசு கிறிஸ்து அறையப்பட்ட சிலுவை என்று முடிவு செய்தனர். இதையடுத்து, இயேசுவின் கல்லறை இருந்த இடத்தில் ஓர் ஆலயம் கட்டப்பட்டு, அவரது திருச்சிலுவை கிறிஸ்தவர்களின் வணக்கத்திற்காக அங்கு நிறுவப்பட்டது. இந்த நிகழ்வுக்கு பிறகே, சிலுவை கிறிஸ்தவர்களின் புனிதச் சின்னமாக மாறியது.


கி.பி.614ல் எருசலேம் மீது படையெடுத்த பெர்சியர்கள், இயேசுவின் திருச்சிலுவையை அபகரித்து கொண்டு சென்று விட்டனர். 630ஆம் ஆண்டு திருச்சிலுவையை மீட்ட பைசாந்திய பேரரசர் ஹெராக்ளியுஸ், செப்டம்பர் 14ந்தேதி எருசலேம் ஆலயத்தில் நிறுவினார். இதுவே, திருச்சிலுவையின் மகிமை விழாவாக கொண்டாடப்படுகிறது. பின்னர், 10ஆம் நூற்றாண்டு முடிய திருச்சிலுவை மக்களின் பொது வணக்கத்தைப் பெற்றது.


1009ஆம் ஆண்டில், இயேசுவின் கல்லறை ஆலயத்தை இடிக்க பாத்திமித் கலீபா உத்தரவிட்டதால், திருச்சிலுவை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டது. இக்காலத்தில், திருச்சிலுவையில் இருந்து வெட்டப்பட்ட சில துண்டுகள் கொன்ஸ்தாந்திநோபிள் மற்றும் ரோமுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மீண்டும் கட்டப்பட்ட எருசலேம் திருக்கல்லறை ஆலயத்தில், இயேசுவின் திருச்சிலுவை 1099ஆம் ஆண்டு பொது மக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது.


 எருசலேமின் திருக்கல்லறைத் தேவாலயம் என்ற கிறித்தவத் தேவாலயம் கலீபா அல்-அக்கீம் அல்லா என்பவரால் முற்றாக அழிக்கப்பட்டது.

From 1007 to 1012 "there was a notably tolerant attitude toward the Sunnis and less zeal for Shiite Islam, while the attitude with regard to the 'People of the Book' was hostile."[34] On 18 October 1009, al-Hakim ordered the destruction of the Holy Sepulchre and its associated buildings, apparently outraged by what he regarded as the fraud practiced by the monks in the "miraculous" Descent of the Holy Fire, celebrated annually at the church during the Easter Vigil. The chronicler Yahia noted that "only those things that were too difficult to demolish were spared." Processions were prohibited, and a few years later all of the convents and churches in Palestine were said to have been destroyed or confiscated.[36] It was only in 1042 that the Byzantine Emperor Constantine IX undertook to reconstruct the Holy Sepulchre with the permission of Al-Hakim's successor.

இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த எருசலேம் உள்ளிட்ட இடங்களை தங்கள் வசம் கொண்டு வர நினைத்து, கிறிஸ்தவர்கள் சிலுவைப் போரை நடத்தினர். அவ்வாறு ஹாத்தின் என்ற இடத்தில் 1187ஆம் ஆண்டு நடைபெற்ற போருக்கு, இயேசுவின் திருச்சிலுவை கொண்டு செல்லப்பட்டது. அந்த போரின் முடிவில், இயேசுவின் திருச்சிலுவை எதிரிகளின் கரங்களில் சிக்கி மாயமானது. அதன்பிறகு, ரோம் மற்றும் கொன்ஸ்தாந்திநோபிளில் இருந்த திருச்சிலுவை துண்டுகளின் பகுதிகள் உலகின் பல ஆலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் சில துண்டுகள் தமிழக ஆலயங்களிலும் உள்ளன.

No comments:

Post a Comment