KASHMIR JOINED WITH INDIA
1947 OCTOBER 26
காஷ்மீர் இந்தியாவுடன் இணைப்பு
1947 OCTOBER 26
ரன்பீர் சிங்கின் பேரன் ஹரி சிங் 1925 ஆம் ஆண்டு அரியணை ஏறினார். 1947இல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், தனது ஜம்மு காஷ்மீர் இராச்சியமானது, ஆங்கிலேயரின் மேலாண்மையில் இருந்து விடுபட்டது. இந்நிலையில் மன்னரின் அடக்குமுறை வரிவிதிப்புக்கு எதிராக பூஞ்ச் பகுதியில் கலகம் தொடங்கியது, ஆகத்து மாதத்தில், பாக்கித்தானோடு காஷ்மீரை இணைக்கவேண்டுமென்று நடந்த ஆர்பாட்டக்காரர்கள் மீது மகாராஜாவின் படைகள், சுட்டன, பல கிராமங்களை முழுமையாக எரித்தனர், பல அப்பாவி மக்களும் படுகொலை செய்யப்பட்டனர்.[60] அக்டோபர் 24 அன்று பூஞ்ச் போராளிகள் "ஆசாத்" காஷ்மீர் என்ற சுயாதீனமான அரசாங்கத்தை அறிவித்தனர்.[61] புவியியல் நெருக்கம் போன்றவற்றை கருதாது, மக்கள் விருப்பத்தை கணக்கில் கொண்டு, மன்னராட்சி இராச்சியங்கள் இந்தியா அல்லது பாக்கிஸ்தான்
ஒன்றியங்களில் தங்கள் பகுதிகளை இணைக்க ஊக்குவிக்கப்பட்டனர். 1947 இல், காசுமீர் அரசின் மக்கள்தொகையில் சுமார் "77% முஸ்லீம் மற்றும் 20% இந்து சமயத்தவர்" என்ற எண்ணிக்கையில் இருந்தனர். [62] மகாராஜா அவசர அவசரமாக, இரண்டு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், பயணம் போன்ற சேவைகளை உறுதி செய்யும்விதமாக பாக்கிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்தியாவுடனான இத்தகைய ஒப்பந்தம் நிலுவையில் வைக்கப்பட்டது.[63] 1947 அக்டோபரில் ஜம்முவில் பெரும் கலவரங்கள் துவங்கின, பூஞ்ச் போராளிகள் பாக்கிஸ்தானின் வட-மேற்கு எல்லைப் புற மாகாணத்தைச் சேர்ந்த பஷ்டூன்களை கலகத்துக்கு அமர்த்தினார், இவர்கள் காஷ்மீர்மீது படையெடுத்தனர், இவர்கள் பூஞ்ச் போராளிகளுடன் இணைந்து, படையெடுப்பின்போது சக பூஞ்ச் மற்றும் ஜம்மு முஸ்லிம்களுக்கு
எதிராகவே அட்டூழியங்களில் ஈடுபட்டனர். இப்பழங்குடிகள் வழியெங்கும் கொலைகள், சூறையாடல் ஆகியவற்றைச் செய்தபடி வந்தனர்.[64][65] இந்த கொரில்லா இயக்கமும் அதன் நோக்கமும் ஹரி சிங்கை பேரளவு அச்சுறுத்துவதாக இருந்தது. இதனால் மகாராஜா உதவிவேண்டி இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார், அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரலான லார்டு மவுண்ட்பேட்டன் பிரபு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பது என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஒப்புக் கொண்டார். [62]
1947 OCTOBER 26
மகாராஜா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின், இந்திய வீரர்கள் காஷ்மீருக்குள் நுழைந்து பாக்கிஸ்தான் ஆதரவு கொரில்லா போராளிகளை ஒடுக்கினர். காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பது தொடர்பான ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்த்த்தில் இது ஒரு இடைக்கால ஏற்பாடு என்றும்,[66] மக்களின் விருப்பமே இறுதியானது என்றும் கூறப்பட்டது. காஷ்மீர் தலைவர் சேக் அப்துல்லாவை காஷ்மீரின் நிர்வாகத் தலைவராக மகாராஜா நியமித்தார்.[67] இதற்கிடையில் இந்தியா இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் அவைக்கு கொண்டு சென்றது. ஐநா தீர்மானத்தில், பாக்கிஸ்தான் தாம் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேறவும், இந்தியா, மக்கள் எந்த நாட்டுடன் வாழ விரும்புகிறார்கள் என்பதை அறியும் வகையில் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வழி கூறப்பட்டது.
பாக்கிஸ்தான் தான் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேற மறுத்து விடவே, இந்தியாவும் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்த விழையவில்லை.அப்போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இருந்தால் காஷ்மீர் பாகிஸ்தானுக்கே சொந்தமாயிருக்கும் ( 77%MUSLIMS) ,ஆனால் முட்டாள்கள் பிடித்து வைத்த காஷ்மீரை விட மறுத்துவிட இந்தியா மெல்ல மெல்ல தன் பிடியை இறுக்கி கொண்டது .
No comments:
Post a Comment